மொத்தப் பக்கக்காட்சிகள்

7/25/2012

கவியரசர் கண்ணதாசன் - டி.எம்.எஸ்.



'வானம்பாடி' படத்தில்...ஒரு பாடல்...

'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...
அவன் காதலித்தே வேதனையில்
சாக வேண்டும்...'

என்று கவியரசர் கண்ணதாசன் எழுத...'திரை இசைத் திலகம் 'கே.வி.மகாதேவன் இசையமைக்கிறார்.

அந்தப் பாடலை...டி.எம்.எஸ் அவர்களிடம்...கே.வி.மகாதேவனின் உதவியாளர் பாடிக் காட்டுகிறார்.

பாடலைக் கேட்டுப் பார்த்த டி.எம்.எஸ்...

'இந்தப் பாடலின் பல்லவியில் கடவுளை சாக வேண்டும் என்று வரும் வரியை நான் எப்படிப் பாடுவது?

மனிதனுக்குத் தான் மரணம் உண்டு...

கடவுள் சாகா வரம் பெற்றவர்...

எனவே அவரை சாக வேண்டும் என்று வரும் வரிகளை...

கடவுளை சதா புகழ்ந்து பாடிய என் வாயினாலேயே பாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.

டி.எம்.எஸ் இப்படிச் சொல்லும் போது...கவியரசர் கண்ணதாசனும் அருகில் இருந்தார்.

'கடவுளை சாடுவதற்காக அப்படி எழுதவில்லை.

கதாபாத்திரம்...காதல் தோல்வியில் அப்படி பாடுவதாக...கதையின் போக்கை அனுசரித்து அப்படி எழுதினேன்.'.என்று..கவிஞர், டி.எம்.எஸ்ஸிடம் சமாதானம் சொன்னார்.

உடனே டி.எம்.எஸ்..கதாநாயகன்...முட்டாள் தனமாக காதலித்து..பின்பு அது..கை கூடாமல் போகும் போது..அந்தக் குற்றத்தை...அறிவார்ந்த பொருளான கடவுள் மீது சாட்டுவதற்கு எந்த நியாயமும் இல்லை.

எனவே...கடவுள்..சாக வேண்டும் என்ற வரியை மட்டும் நான் பாட மாட்டேன்...என்றார் மீண்டும் பிடிவாதமாக.

கண்ணதாசன் மட்டுமல்ல..கே.வி.மகா தேவனும்...எவ்வளவோ சமாதானம் செய்தும்...டி.எம்.எஸ் தனது முடிவில் தீர்மானமாக இருந்தார்.

உடனே கண்ணதாசன்...'அவ்வளவு தானே முருக பக்தரே...சாக வேண்டும் என்ற வரியை...'வாட வேண்டும்' என்று மாற்றி எழுதித் தருகிறேன்...' என்று சொல்லி...அதை வாங்கி திருத்தம் செய்து கொடுத்தார்.

கவியரசராக அவர் இருந்த போதிலும்...சக கலைஞனின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் கண்ணதாசன் அன்று பெருந்தன்மையாக நடந்து கொண்ட விதம்...

இன்றும் என்னை வியக்க வைக்கிறது...வணங்க வைக்கிறது என்கிறார் டி.எம்.எஸ்.

7/23/2012

காமராஜர் ஆட்சியின்போது பெரிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அமைப்பு: புதிய அணைகளும் கட்டப்பட்டன


இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பெரிய தொழிற்சாலைகள் பெரும்பாலும் வடநாட்டில் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில், குறிப்பிடத்தக்க கனரகத் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.

இதனால், 'வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது' என்று தி.மு.கழகத்தினர் பிரசாரம் செய்தனர்.இது, மக்களின் மனதில் ஆழப் பதிந்தது. தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.

தி.மு.க. கூறுவதில் உண்மை இருப்பதை காமராஜரும் உணர்ந்து கொண்டார். எனவே, தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகளையும், அணைகளையும் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

மத்திய அரசிடம் வற்புறுத்தி, ஐந்தாண்டு திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு கணிசமான தொகை ஒதுக்கும்படி செய்தார். சென்னை பெரம்பூரில், சுவிட்சர்லாந்து நாட்டு உதவியுடன் ரெயில் பெட்டி தொழிற்சாலை ரூ.12 கோடி செலவில் தொடங்கப்பட்டது.இந்த தொழிற்சாலை மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது.

நீலகிரியில் ரூ.11 கோடி மதிப்பில் பிலிம் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கான தொழில் நுட்ப உதவியை பிரான்சு வழங்கியது. சென்னை கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

தென் ஆற்காடு மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் என்று கண்டறியப்பட்டதும், 1956-ல் ரூ.160 கோடி மதிப்பீட்டில் நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக அங்கு 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டது.

சென்னை ஆவடியில் ராணுவ டாங்கி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ரஷிய உதவியுடன் அமைக்கப்பட்டது.

திருச்சியை அடுத்த திருவெறும்பூரில், 1800 ஏக்கர் நிலத்தில் பாய்லர் தொழிற்சாலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையும் திருச்சியில் அமைக்கப்பட்டது.

சென்னை கிண்டி, மதுரை, விருதுநகர், திருச்சி உள்பட 9 நகரங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் மேலும் 13 தொழிற்பேட்டைகளை அமைக்க அரசு முடிவு செய்தது. அப்போது அம்பத்தூரில் 1,200 ஏக்கர் நிலத்தில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது.பெரிய, நடுத்தர, சிறிய தொழிற்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டன. இதேபோன்ற தொழிற்பேட்டை, ராணிப்பேட்டையிலும் அமைக்கப்பட்டது.

கி.பி. 2-ம் நூற்றாண்டில் காவிரி ஆறு குறுக்கே சோழ மன்னன் கட்டிய கல்லணை தான் உலகின் முதல் அணை. வெள்ளையர் ஆட்சியில், 1934-ம் ஆண்டில் மேட்டூரில் கட்டப்பட்ட அணைதான், இந்தியாவில் சிமெண்ட்டை பயன்படுத்தி கட்டப்பட்ட முதல் அணையாகும்.

காமராஜர் ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் பல அணைகள் கட்டப்பட்டன. அவற்றில் சிறந்தது, பரம்பிக்குளம்-ஆளியாறு அணைக் கட்டு ஆகும். தமிழ்நாட்டில் ஆனைமலையில் உற்பத்தியாகும் நதிகளின் நீர்,கேரளத்தின் வழியாக ஓடி வீணாக அரபிக் கடலில் கலந்தது. அதைத்தடுத்து, அந்த நீரை நீர்ப்பாசனத்திற்கும், மின்சார உற்பத்திக்கும் பயன்படும் விதத்தில் சென்னை மாநில அரசும், கேரள அரசும் பேச்சு நடத்தி, இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

கீழ்பவானி நீர்த்தேக்க திட்டம், சாத்தனூர் நீர்த்தேக்க திட்டம், வைகை அணைக்கட்டுத் திட்டம், மணிமுத்தாறு திட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்டம், புள்ளம் பாடி கால்வாய் திட்டம் ஆகியவையும் காமராஜர் ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டவைதான்.

1962-ம் ஆண்டில், தென்னாட்டில் பெரிய தொழிற்சாலை ஒன்றை, செக்க-சுலோ-வக்கியா நாட்டு உதவியுடன் அமைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இடத்தை தேர்வு செய்ய 'செக்' நாட்டு நிபுணர் குழுவினர் இந்தியா வந்தனர். முதலில் ஆந்திரா சென்று சில இடங்களைப் பார்வையிட்டனர். சில இடங்கள் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள்.பிறகு சென்னை வந்தனர். சென்னையில் சில இடங்களை நிபுணர்கள் பார்வையிட்டனர்.

இங்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. பெரிய இயந்திரங்களைத் தாங்கக்கூடிய வகையில், தரையும் கடினமாக இல்லை. எனவே, இங்கு இந்த தொழிற்சாலையை அமைக்க இயலாது என்று கூறினர்.

அப்போது முதல்-அமைச்சராக காமராஜர் இருந்தார். அவர் அமைச்சர் ராமையாவை அழைத்து, திருச்சிக்குப் பக்கத்தில், கடினமான தரையுள்ள நிலம் நிறைய இருக்கிறது. தண்ணீரும் தாராளமாக கிடைக்கும். நீங்கள் உடனே நிபுணர் குழுவை திருச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

உடனே அமைச்சர் ராமையா, நிபுணர் குழுவினரை திருச்சிக்கு அழைத்துச் சென்றார். அப்போது திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் ஏராளமான நிலம் காடு போல் கிடந்தது. அந்த இடத்தின் மண் வளத்தையும், தண்ணீர் வசதியையும் பரிசோதித்த நிபுணர்கள், தொழிற்சாலை அமைக்க இந்த இடம் பிரமாதமாக இருக்கிறது என்று அறிவித்தனர்.

இந்தச் செய்தி வெளியானதும், ஆந்திராவில் பயங்கர கலவரம் மூண்டது. தொழிற்சாலையை ஆந்திராவில்தான் அமைக்க வேண்டும். திருச்சியில் அமைக்கக் கூடாது என்று ஆந்திரர்கள் கிளர்ச்சி செய்தனர்.இதனால் மத்திய அரசு, அமைய இருக்கும் தொழிற்சாலையை இரண்டாகப் பிரிக்கத் தீர்மானித்தது. டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலையை ஆந்திராவிலும், பாய்லர் தொழிற்சாலையை திருச்சியிலும் அமைக்க முடிவு செய்தது.

பாய்லர் தொழிற்சாலைக்கும், அதன் விரிவாக்கத்துக்கும், குடியிருப்புகள் அமைக்கவும், மற்ற வசதிகள் செய்யவும் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியது.

1965-ம் ஆண்டில், பாய்லர் தொழிற்சாலையை அன்றைய ஜனாதிபதி ஜாகிர் உசேன் தொடங்கி வைத்தார். இன்று, பாய்லர் தொழிற்சாலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருப்பதுடன், அந்தப்பகுதியே நவீன நகரமாக காட்சி அளிக்கிறது. 

Thanks to malaimalar.com

1962 தேர்தல்: 50 இடங்களில் தி.மு.க. வெற்றி - காஞ்சீபுரத்தில் அண்ணா அதிர்ச்சி தோல்வி


 
1962 ல் நடைபெற்ற மூன்றாவது பொதுத்தேர்தலில், காங்கிரசுக்கு "மெஜாரிட்டி" கிடைத்தது. என்றாலும், தி.மு.கழகம் 50 இடங்களில் வெற்றி பெற்றது காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.1957 தேர்தலில் தி.மு.கழகம் முதன் முதலாக போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றது அல்லவா? அந்த 15 தொகுதிகளிலும் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று காமராஜர் திட்டமிட்டு வேலை செய்தார்.
 
அந்த 15 தொகுதிகளிலும் தி.மு.க. தோற்றது. 1957 ல் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதி, 1962 தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரிடம் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடார்.
 
15 தொகுதிகளில் தி.மு.க.வை தோற்கடிப்பதில் காமராஜர் வெற்றி பெற்றார் என்றாலும், தி.மு.கழகம் புதிதாக 50 இடங்களில் வெற்றி பெற்றது அவருக்கும், மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. தி.மு.கழகம் 50 இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், அக்கட்சி மகிழ்ச்சி அடையமுடியவில்லை.
 
காரணம், கட்சித் தலைவர் அண்ணா, தன் சொந்தத் தொகுதியான காஞ்சீபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளரும், பஸ் அதிபருமான நடேச முதலியாரிடம் தோல்வி அடைந்தது தான். தேர்தல் தோல்வியைக்கண்டு அண்ணா துவண்டு போய்விடவில்லை. "என் தம்பிமார்கள் 50 பேரின் உருவத்தில் நான் சட்ட சபைக்குச் செல்கிறேன்" என்று கூறினார்.  
 
மொத்தம் உள்ள 206 தொகுதிகளில் 139 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. காமராஜர் மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் ஆனார். முந்திய மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களில் எம். பக்தவச்சலம், ஆர்.வெங்கடராமன், பி.கக்கன், வி.ராமையா ஆகியோர் மீண்டும் மந்திரிகளானார்கள்.
 
ஜோதி அம்மாள், நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார், பூவராகன், அப்துல் மஜீத் ஆகியோர் புதிதாக இடம் பெற்றார்கள். இவர்களுக்கு கவர்னர் விஷ்ணுராம்மேதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். (சி.சுப்பிரமணியம் இம்முறை பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று, நேரு மந்திரி சபையில் இடம் பெற்றார்.) 
 
சட்டசபை தேர்தலில் அண்ணா தோல்வி அடைந்தது, ஒருவிதத்தில் அவருக்கு நன்மையாய் முடிந்தது. தி.மு.கழக எம்.பி.க்கள், அவரை பாராளுமன்றத்தின் ஓர் அங்கமான டெல்லி மேல் சபைக்கு ("ராஜ்ய சபை") தேர்ந்தெடுத்தார்கள்.
 
ராஜ்ய சபையில் அவர் முதன் முதலாகப் பேசிய பேச்சை இந்தியாவே கூர்ந்து கவனித்தது. அன்றைய கூட்டத்துக்கு மேல் சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.கழகத்தின் லட்சியங்களையும், கொள்கைகளையும் விளக்கிய அண்ணா, "திராவிட நாடுதான் எங்களுடைய லட்சியம். நாட்டைப் பிரித்துக் கொடுங்கள்" என்று கூறினார்.
 
இந்திய பாராளுமன்றத்தில், பிரிவினை கோரிக்கை ஒலித்தது அதுதான் முதல் தடவை. அதற்கு முன் தி.மு.கழக எம்.பி.க்களாக இருவர் இருந்தும் அவர்கள் பிரிவினை பற்றிப் பேசவில்லை. அண்ணாவின் பேச்சு, பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாக இடம் பெற்றது.
 
பிரிவினை கோரிக்கையை அண்ணா வலியுறுத்தியது வட இந்தியத் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்த போதிலும், அண்ணாவின் பேச்சு வன்மையை வியந்து போற்றினர். அண்ணா பேசியபோது, பிரதமர் நேரு ராஜ்யசபையில் இல்லை.
 
ஆனால் பின்னர் அவர் விவாதத்துக்கு பதிலளிக்கும் போது, அண்ணாவின் பேச்சு பற்றி குறிப்பிட்டார். "ஏற்கனவே ஒரு பிரிவினை (பாகிஸ்தான்) நடந்தது போதும். இனி பிரிவினை வேண்டாம். பிரிவினைக்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம்" என்று கூறினார். 
 
Thanks to Malaimalar

அதிவேக ரெயில் - கி.பி.2050

சீனாவில் அதிவேக ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி பெய்ஜிங்- தியான்ஷின் நகரங்களுக்கு இடையே மணிக்கு 394.3 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே அதிவேக ரெயில் என்ற சாதனையை படைத்தது. தற்போது, அதை விட அதிக வேகமாக இயங்க கூடிய ரெயிலை சீனா உருவாக்கியுள்ளது.
இந்த ரெயில் ஷாங்காய்- ஹாங்ஹீ  நகரங்களுக்கு இடையே பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது மணிக்கு 416.6 கி.மீட்டர் மின்னல் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது.
இந்த ரெயில் மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் அளவு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது ஷாங்காய்- ஹாங்ஹீ  நகரங்களுக்கு இடையே 202 கி.மீட்டர் தூரத்தை 40 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு இந்த தூரத்தை ரெயில்கள் 2 மணி நேரத்தில் கடந்து சென்றன. தற்போது மிக குறைந்த நேரத்தில் சென்றதன் மூலம் உலகிலேயே மிக நீளமான அதிவேக விரைவு ரெயில் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
இதன்மூலம் நவீன ரெயில்வே தொழில் நுட்பத்தை சீனா பெற்றுள்ளது என்று சீன ரெயில்வே அமைச்சகத்தின் தலைமை என்ஜினீயர் கிகுவாவூ தெரிவித்துள்ளா 

இந்தியாவில் மணிக்கு 400 கீ.மீ. வேகம் வரும் நாள்  எபபொழுது. --  நடக்கலாம்- கி.பி.2050ல் ?

7/20/2012

M.R.ராதா


சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டி னால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா… எவருக்கும் அஞ்சாத ராஜா!
மதராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்பதன் சுருக்கம்… எம்.ஆர்.ராதா. ஜெர்மன் போர்க்கப்பலான எம்டன் சென்னை யில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்ப தால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடி ச்சம்பவங்கள் நிறைய!

அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத் தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியான வர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாக வைத்து இருப்பார் ராதா!

சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. நான் ஓர் அநாதை என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத் தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம் ‘நாடகத்தில் நடிக்கச் சொல்லிக் கொடுத்தது ஜெகநாதய்யர் தான் என்பார்!

எம்.ஆர். ராதா நடித்த முதல் படம் ‘ராஜ சேகரன்ய (1937), கடைசிப் படம் பஞ்சாமிர்தம்(1979), சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடு வார்கள். ஆனால், சினிமா – நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!

உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லி, அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்பகால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டி விட்டுத் தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!

ரத்தக்கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்ட து. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட்சுமி காந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டு ள்ளன!

ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப்பல கார்களை வைத்திருந்தார். இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப்பலரும் ஆச்சர்யப் பட்டார்கள்.

‘நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப்போக முடியும்? என்று கேட்டார்!

நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பா ர். ‘நேற்று பேடிகள் விட்டுச் சென்ற சாமான்கள் என்று அதில் எழுதிவைப்பார்!

எம்.ஜி.ஆரை ‘ராமச்சந்திரா என்றும், சிவாஜியை ‘கணேசா என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!
இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத் துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு சபை வளா கத்துக்குப் போய் விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!

என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர் பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, ‘நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும்’

என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டு வைக்கப் போய் வெடி மருந்தைக் காயவைத்து, அது வெடித்துச் சிறு விபத்தான சம்ப வமும் உண்டு!
எம்.ஜி.ஆரை அவரது ராமா வரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது.

‘நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக் கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை… ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது? என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!
நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக் கொண்ட கைதி ஒருவர், ஒரு நாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பிட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போ னது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந்தது!

‘அடியே காந்தா… ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்… நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்கயா!
‘ஊருக்கு ஒரு லீடர்… அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம்…. நான்சென்ஸ் இப்படி ராதாவின் வார்த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்!

ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடித்தவர். ‘கீமாயணம் என்று நாடகம் போட்டார். ராமன் வேடத்தில் இருக்கும் போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். மனம் புண்படு பவர்கள் யாரும் வர வேண்டாம்’

என்று விளம்பரம் கொடுத்தார்! ‘நீங்கள் எதில் அதிக இன்பம் காண் கிறீர்கள்? என்று கேட்டபோது. எதிர்ப்பில்தான்,

மக்கள் எதை விரும்புகிறார்களோ… அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம் ‘என்றார்!

ராதாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எவ்வளவு நீளமான வசனங்களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்கு ள் ஏற்றிக்கொள்வார். அவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டவை சிறு சிறு வெளியீடு களாக அந்தக் காலத்தில் வெளிவந்தன.

‘அண்ணாவின் அவசரம், ‘ராமாயணமா? கீமாயணமா?ய என்ற இரண்டும் அதிக சர்ச் சையைக் கிளப்பிவை!

ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும்,  தாய் சொல்லைத் தட்டாதே,  படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப்பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்துகாட்டிய படங்கள், 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்!

மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை ‘கலைஞர் கருணாநிதி என்று அழைத்துப்பட்டம் கொடுத்தவர்.
‘நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும் என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்!

”திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதா தான் கலைத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா, 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்! தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்க ள் வந்தால் விரட்டுவார்.

”போய்ப் படிங்கடா… நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடாய் என்பது அவரது அழுத்தமான கருத்து!

விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும் தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார்.
‘ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர்… அதனால ஏத்துக்கிறேன். என்று அங்கும் கர்ஜித்தார் ராதா! 

‘மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது.  ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை என்று சொன்னவர். விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்! ”சுட்டாள்….

சுட்டான்.. சுட்டேன் என்ற தலைப்பில் நாடகமும் சினிமாவும் எடுக்கத் திட்டமிட்டார்.                   வி.என். ஜானகி சுட்டாள், எம்.ஜி.ஆர்.சுட்டான், நான் சுட்டேன்… என்று விஷயம் அறிந்தவர்களால் விளக்கம் சொல்லப்பட்டது!
”தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும் என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்!
****
ராமாயணமா? கீமாயணமா? எம்,ஆர். ராதா அவர்கள் எழுதிய நூல் பற்றிய விவரங்களும் அதுபற்றிய‌ பிரபலங்களின் கருத்தும் ராமாயணமா? கீமாயணமா? என்ற நூல் எம். ஆர். ராதாவால் எழுதப்பட்டது. இது டிசம்பர், 1954ம் ஆண்டு பாரதி அச்சகம், குடந்தை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் புதிய பதிப்பை அன்பு அச்சகம், மதுரை 2008ம் ஆண்டு வெளியிட்ட து.
 
முன்னுரை 

அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரி, சர்மாக்களின் மூல (சமசுகிருத) மொழி பெயர்ப் புக்கள் அறிஞர்களின் சொல்லோவியங்கள், ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள், இத்தகை ய அடிப்ப டையிலேயே எழுந்ததுதான் என் ராமாயண நாடகம். வினா விடு த்தவர்களுக்கும் விடைபகரும், நோக்கமே உருவானது இச்சிறு நூல். ஐயப்பாடுடைய அக்ரகாரங் களுக்கு ஆதாரம். வேதனைப்படும் ஆத்தீக நன்பர்களுக்கு விளக் கம். விருப்பு வெறுப்பின்றி நடுநிலைமை வகித்து இதைப்படிக்கின்ற வாசகர்கள் கூறட்டும் இது ராமாயணமா? கீமாயணமா என்று? முடிவை மக்களிடம் விட்டு விடுகின்றேன்.
 
இந்நூலை பற்றிய தந்தை பெரியார்

நடிகவேள் எம்.ஆர் இராதா அவர்களால் நாட கரூபமாய் நடிக்கப்ப டும் இராமாயணம் என்னும் நாடகத் தைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சியடை ந்தேன்.அவர் நாடகத்தில் நடிக்கும் பாகங்கள் குறிப்புகள் அவ்வளவும் அனேகமாக வால் மீகி இராமாயணம் என்னும் நூலில் காணப்படும் உண்மை களை. இந்த உண்மைகளை மக்கள் அறியாமல் இருக்க வேண்டும்மென்றே பலர் மறைத்தும், திரித்தும், அடியோடு புது வடயங்களை புகுத்தியும் வந்ததி னால் பெரும் பாலான மக்களுக்கு ராமா யண உண்மைத் தத்துவம் தெரி யாமல் போய்விட்டது. நான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிரு ந்தே இரா மாயண ஆராய்ச்சி செய்து அதன் தன்மையையும் உண் மையை யும் சொற் பொழிவாலும் பத்திரிக்கையாலும் ஆராய்ச்சி நூல் என் பதினாலும் மக்களுக்கு வெளியிட்டு வந்த்தினாலும் அவை மக்க ளிடையில் சாதாரணமாக பரவுவதற்கு முடியாமல் போய்விட்டது. இப்போது நடகவேள் ராதா அவர்கள் பெரும்பாலும் எனது ஆராய்ச் சிக் கருத்துக்களையே தழுவி நாடகரூபமாக்கி நடிக்க முன் வந்தி ருப்பதா னது மிகவும் பாராட்டத்தக்கதாகம் என்பதோடு இரு வரை யும் யாரும் செய்யமுடியாத இக்காரியத்தை இவரே முதலாக நடிக்க முன்வந்த இவரது துணிவையும் நான் பாராட்டுகின்றேன்.

இந்நூலைப் பற்றி அறிஞர் அண்ணா

நடிகவேள் இராதா நடத்தும் இராமாயணம் நாட்டிலே இன்று ஏற் பட்டிருக்கும் இன எழுச்சிக்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. வால்மீகியி ன் ராமாயணத்தை மெருகளிப்பதாக கூறி க் கொ ண்டு கம்பன் தமிழகத்தாருக்கு ஓர் கரைபடிந்த காவியத்தைத் தந்து சென்றா ன். அதன் பயனாக இராமாயணம் கலாச் சாரபோரின் விளைவாக ஆரிய காவியங் களின் உண்மைகளும், தன்மைகளும் விள க்கப்பட்டு வருகின்றன. இதற்கு உறுது ணையாக ராதாவின் ராமாயணம் அமை ந்திருக்கிறது. இன எழுச்சியும் மனத் துணி வும் நடிப்புத் திறனும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகவேள் இராதா அவர்கள், இந்த நாடகம் மூலம் நாட்டு விடுதலைக் கிளர்ச் சிக்கு சிறந்த தொண்டாற்றுகிறார் என்று மகிழ்ந்து பாராட்டுகிறேன்.