மொத்தப் பக்கக்காட்சிகள்

11/19/2011

சூரிய ஒளி பேருந்து

பெருகி வரும் வாகனங்களும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் நாம் எல்லாரும் அறிந்த விசயம்தான். அதிக வாகனங்கள் இயக்க ப்படுவதால் ஏற்படும் எரிபொருள் இழப்பு மிகவும் ஈடுகட்ட முடியாத ஓன்று.இயற்கை வளமான எரிபொருட்கள் குறைந்து கொண்டே வருவதால் அதற்கும் முடிவு காணவேண்டிய நிலையில் இந்த உலகம் உள்ளது.
 
இவைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் உலகமெல்லாம் ஈடுபட்டிருக்க ,  சீனாவை சேர்ந்த  யூசா சாங்  என்பவர் ஒரு புதிய நவீன வடிவமைப்பை கண்டுபிடித்துள்ளார்.இந்த நவீன தொழில் நுட்பம் செயல்பட ஆரம்பித்துவிட்டால்சீனாவின் போக்குவரத்து நெரிசலும் சுற்றுப்புற சீர்கேட்டை கொண்டுவரும் புகையும்  (வாகனங்களால் வெளியிட படுபவை )  கணிசமாக குறைந்துவிட வாய்ப்புகள் உள்ளது. 
 

இதுதான் அந்த நவீன தொழில் நுட்பம் .  Straddling  Bus  என்று அழைக்கபடுகிறது.  18  அடி உயரமும் 25  அடி அகலமுமான ஒரு பேருந்து.     பிரத்தியேகமாக  வடிவமைக்கப்பட்ட  ஓடு பாதை பயன் படுத்தப்பட போகிறது.     இந்த பேருந்தின் மேல்தட்டில் மாத்திரம் பயணிகள் இருப்பார்கள்.   மேல் தட்டிற்கு கீழ் இருக்கும் சாலையில் மற்ற சிறு வாகனங்கள் சென்று வரும்.  படத்தை கூர்ந்து பாருங்கள்.  பேருந்தின் சக்கரங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றும் எப்படி அதன் கீழ் வாகனங்கள் சென்று வருகிறது என்பதையும்.  இதனால் இந்த பேருந்தின் நிமித்தம் எந்த போக்குவரத்து இடைஞ்சலும் இருக்காது.  சுமார் 1200  பேர் இதில் பயணிக்கும் சக்தி இருப்பதால் மற்ற பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.  சுமார் 40 கிமீ  வேகத்தில் செல்லும் இந்த பேருந்து 25  முதல் 30  சதவீத நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
 
 

இந்த பேருந்தை இயக்குவதற்க்கான சக்தி முழுவதும் பேருந்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் சூரிய ஒளி தகடுகள் மூலம் பெறப்படும்.  பேருந்து நிறுத்தத்தின் கூரையிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டு அந்த சக்தியும் பேருந்துக்கு மாற்றப்படும்.   இந்த பேருந்தின் மூலம் சுமார் 40  சாதாரண பேருந்துகளை ஈடுகட்ட முடியும்.  எனவே வருடத்திற்கு சுமார் 860000 கிலோ எரிபொருள் சேமிக்கப்படும் என்றும் சுமார் 2640000  கிலோ கார்பன் நச்சு பொருட்களை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.   ( நன்றி : நியூயார்க் டைம்ஸ் )

தீ பற்றி கொண்டால் ... என்ன செய்ய வேண்டும் ..?

நெருப்பு /  தீ பயன்படுத்தாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம் .  வீடுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் பல விபத்துகள் நெருப்பு மூலம் ஏற்ப்படுகிறது .  அப்படி ஏற்ப்பட்டால் என்ன எப்படி அந்த நெருப்பை அணைக்கவேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சம் ..



நெருப்பு என்றால் என்ன .?
வேகமாக ஆக்சிஜனேற்றம் பெற்று வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடும் தொடர் வேதி வினை தான் நெருப்பு என்று அழைக்கப்படுகிறது .   நெருப்பு என்பது நான்கு காரணிகள் உள்ளடக்கியது . 
  1. வெப்பம்
  2. ஆக்சிஜென்
  3. எரிபொருள்
  4. தொடர்வினை
மேற்கண்ட இந்த நான்கு காரணிகள் தான் நெருப்பை உண்டாக்குகின்றன .  அதனால் நெருப்பினால் ஆபத்துகள் உண்டாகும் போது இந்த காரணிகளை நாம் கட்டுபடுத்தினால் நெருப்பை கட்டுப்படுத்தலாம் .


இந்த நெருப்பு 4  வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவையாவன
  1. Class A நெருப்பு
  2. Class B நெருப்பு
  3. Class C நெருப்பு
  4. Class D நெருப்பு


 Class A தீ / நெருப்பு :

சாதாரணமாக பேப்பர்  ,  மரம் , துணி  போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது .  இந்த நெருப்பை அணைப்பதற்கு அந்த நெருப்பின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நெருப்பின் மீது நன்கு தண்ணீர் ஊற்றவேண்டும் .   தண்ணீர் வெப்பம் என்ற காரணியை எரிபொருளில் இருந்து நீக்கி விடுவதால் தொடர்வினை கட்டுக்குள் வருகிறது .  எனவே நெருப்பு அணைக்கப்படுகிறது .   இந்த மாதிரி நெருப்பை அணைப்பதற்கு Class A தீ அனைப்பான்களை ( Class A Fire Extinguishers )  பயன்படுத்தலாம் .


Class B தீ / நெருப்பு : 

எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது .   இந்த மாதிரி நெருப்பு ஏற்ப்படும் பொழுது சில சமயங்களில் முதல வகுப்பு தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தினது போல அநேகர் செய்கின்றனர் .  ஆனால் அது தவறான நடவடிக்கை 


 இந்த மாதிரி தருணங்களில் தண்ணீரை பயன்படுத்தினால் தண்ணீரை விட அடர்த்தி குறைந்த எண்ணெய் தண்ணீரின் மேல் வந்து விடும் காரணத்தாலும்  , வெப்பத்தினால் தண்ணீர் ( H2O ) பிரிந்து ஆக்சிஜென் மூலக்கூறுகள் பிரிவதினாலும் ,  நெருப்பு அதிகமாகும் .   எனவே இந்த வகையான நெருப்பை அணைக்க  CO2 கியாஸ் அல்லது சோப்பு நுரை அதிக அளவில் பயன்படுத்தினால் , நெருப்பிற்கு தேவையான ஆக்சிஜென் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்வினை நிறுத்தப்படும் 


Class C தீ / நெருப்பு : 

 மின்சார தீ இந்த வகையில் வருகிறது .  இப்படி தீ ஏற்ப்பட்டால் முதலாவது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் .  அதற்கு பிறகு எரிகிற பொருளை பொருத்து அது Class A தீயா அல்லாத B தீயா எனபதை அறிந்து அதற்கேற்ற தீ அனைப்பானை பயன்படுத்த வேண்டும் .

Class D தீ / நெருப்பு :  


தொழிற்சாலைகளில் உள்ள சோடியம்  , பொட்டாசியம் ,  டைட்டானியம் போன்ற உலோகங்களில் ஏற்ப்படும் தீ இந்த வகையை சேர்ந்தது .   சோடியம் க்ளோரைட்  எனப்படும் உப்பு மற்றும் Dry Chemical Powder போன்ற அனைப்பான்களை பயன்படுத்தலாம் . 

ஊழலுக்கு தீர்வு தான் என்ன?



1 . தனி மனித உணர்வு : லஞ்சம் வாங்கும் எல்லாரும் திருந்த வேண்டும். இது எப்படியும் நடக்காத காரியம் என்பது நாம் எல்லாரும் அறிவோம். திருட்டு மாங்காய் தின்றவனுக்கு அதை விட முடியாது என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரியும்.

2 . தனி மனித எதிர்ப்பு : இது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு தனி மனிதனும் ஊழலுக்கு எதிராய் ஒத்துழையாமை இயக்கம் நடத்தனும். உதாரணதிற்கு ஒரு மரண சான்று வாங்குவதற்கு நாம் 100 ருபாய் செலவழிக்க தயங்குவதில்லை . அப்படியெனில் ஊழலை வளர்ப்பது நாம் தான் என்றால் கொஞ்சம் அதிர்ச்சி அல்லவா?


தனி மனிதனை அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தூண்டுபவன் தலைவன் அல்ல. தனிமனிதனை ஊழலுக்கு எதிராக உணர வைப்பவனே தலைவன். இது கொஞ்சம் வித்தியாசம் அல்லவா. நீ எதுவும் லஞ்சமாக கொடுக்காதே , லஞ்சத்தை ஊக்குவியாதே ! லஞ்சம் தானாக அழியும்.

நண்பனே ...! ஊழல் ஒழிப்பு யார் கையில் ? அன்னா ஹசாரே கையிலா ? கட்சிகளின் கையிலா ? இல்லை .... அது நம் என் கையில்.

LPG பயன்படுத்துபவரா கொஞ்சம் கவனியுங்கள்

விறகு வைத்து சமையல் செய்த காலம் மாறி போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் .   அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( லிஃஉஎபிஎட் Petroleum Gas )  தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது .   அப்படி LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை நாம் பார்க்கலாம் .



LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே  ,  அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் .  சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு .   கீழ் உள்ள படத்தை பாருங்கள் .



LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே  ,  அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் .  சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு .   கீழ் உள்ள படத்தை பாருங்கள் .

சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி  எழுதப்பட்டிருக்கும் .  இதில் 4  ஆங்கில எழுத்துகள் ( A , B , C , D ) என்று வரும் .  இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு ( மார்ச் வரை )  ,  இரண்டாம்  காலாண்டு ( ஜூன் வரை ) , மூன்றாம் காலாண்டு ( செப்டம்பர் வரை ) ,  நான்காம் காலாண்டு ( டிசம்பர் வரை ) என்று பொருள்படும் .  தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .

மேற்கண்ட படத்தின் படி , இந்த சிலிண்டர் டிசம்பர் 2013வரை பயன் படுத்த முடியும் .

பொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது .  ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டுபண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது .  அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது .  ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .

பொதுவாக LPG ,  சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால்  , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் .   அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் ( கசிவு ஏற்பட்டால் )  திறந்து வைப்பது நல்லது .


சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக ( vertically ) தான் வைக்க வேண்டும் .  படுக்க ( Horizontally ) வைக்க கூடாது .  அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி ( Like Rocket ) தள்ளப்படும் .  அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது

விலை வாசி

விலை வாசி குறையுமா ...? வாய்ப்பிருக்கிறதா ...?


இப்பொழுது எங்கே பார்த்தாலும் , எதை எடுத்தாலும் விலை அதிகமாகி கொண்டே தான் போகிறது .   எந்த பொருளும் விலை குறைந்த மாதிரி இல்லை என புலம்பும் அநேகரில் நானும் ஒருவன் .   ஒவ்வொரு முறை விலை கூடும் போதும், விலைவாசியை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது என குற்றம் சொல்லுவோரும் உள்ளனர் உண்மையில் விலைவாசி குறையுமா ....? அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது டஜன் கேள்வி .

 ஒரு பொருளின் விலை எதை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் , அதன் தேவை ( Demand ) மற்றும் உற்பத்தியை ( Supply ) பொருத்தே.  ஒரு சின்ன உதாரணம் காண்போம் ..

10  பேருக்கு ஒரு நாள் அரிசி தேவை   -  10  கிலோ என்று வைத்து கொள்ளுவோம் .   ஆனால் 30  கிலோ அரிசி உற்பத்தி செய்கிறோம் என்றால் உற்பத்தியான அரிசி விற்பனை ஆகவேண்டும் ( விற்பனை ஆனால் தான் விற்றவனும் , உருவாக்கியவனும் சாப்பிடமுடியும் )  என்பதற்காக அதனுடைய விலை சற்றே குறைத்து விற்பனை செய்யப்படும் . 

ஆனால் அதே நேரத்தில் உற்பத்தி 5கிலோ தான் என்று வைத்துக் கொள்ளுங்கள் . அதனுடைய தேவை அதிகரிப்பதாலும் ,  உற்பத்தி குறைந்து இருப்பதினாலும் விலை அதிகமாகி விடும் . 


 இது ஒரு சின்ன உதாரணம் தான் .  மிக முக்கியமாக தேவை அதிகரிக்கிறது ஆனால் உற்பத்தி குறைகிறது .   இது தான் சாராம்சம் ...  சரி .. இதற்க்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போமே ..!

 மக்கள் தொகை பெருக்கம் :   


 இது ஒரு முக்கியமான காரணம் .   ஒவ்வொரு ஆண்டிலும் மக்கள் தொகை இந்தியாவில் பெருகி வருகிறது .  தற்பொழுது 121  கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை வெகு விரைவில் சீனாவை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .  ஒவ்வொரு குழந்தை பிறக்க பிறக்க தேவை அதிகமாகிறது என்று அர்த்தம் .  அதனால் தான் குழந்தை கட்டுப்பாட்டு முறைகள் அரசால் மக்கள் மத்தியில் போதிக்கப்பட்டு வருகிறது .  ஆனால் வழக்கம் போல நாம் அதை கண்டுகொள்வதில்லை என்பது வேறு விஷயம் .... 

 விவசாயத்தின் தேக்கம்  :  


நாட்டின் பல இடங்களில் விவசாயம் அழிந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் .  ஏன் எனில் விவசாயத்தினால் கிடைக்கும் வருமானம் போதாத காரணத்தினால் வேறு வேலைகளை தேடி விவசாயிகள் பயணமாகிறார்கள்.  அதனால் தான் அரசும் இயன்ற வரையில் இலவச மின்சாரம் ,உர மானியம் என்றெல்லாம் பல கொடுக்கிறது .  காரணம் அப்படியாவது விவசாயம் அழியாமல் இருந்தால் உற்பத்தி பெருகுமே ...


ரியல் எஸ்டேட் மோகம்  :


தற்பொழுது நாட்டை பிடித்திருக்கும் மிகப் பெரிய பகைமை இது தான் .   வீடு கட்ட இடம் என்ற நிலை போய் , நிலம் வாங்கி விற்பது ஒரு தொழிலாய் மாறின பிறகு , என்னமோ அழிவது எல்லாம் விளை நிலங்கள் தான் .   அதில் தான் நல்ல தண்ணீர் , பசுமை இருப்பதால் விளை நிலங்கள் அழிக்கப்படுகின்றன.  மறைமுகமாக உற்பத்தி அழிக்கப்படுகின்றன ...  


 சர்வதேச சந்தையில் எரிபொருளின் ஏற்ற / இறக்கங்கள் :
நமது எரிபொருள் தேவை சர்வதேச சந்தையை நம்பி இருக்கிற படியால் , எரிபொருள் விலை உயருகிற பொழுது , அதனோடு கூட சேர்ந்து அது சம்பந்தப்பட்ட விலையும் உயர்கிறது . 

நாம் என்ன செய்யலாம்  :-
  1. கூடுமானவரை ..... நாம் இருவர் ...நமக்கு ஒருவர் .....! சரி பரவாயில்லை நமக்கு இருவர் ....
  2. விவசாய நிலம் இருக்குமானால் தலையே போனாலும் விற்பனை செய்ய வேண்டாமே ... ஏதாவது விவசாயம் நடக்கட்டும் .
  3. ரியல் எஸ்டேட் தொழிலை ஆதரிக்கும் வகையில் அதிக நிலங்கள் வேண்டாமே ...