இயற்கை மற்றும் மறு சுழற்சி மின்சக்தி பற்றிய கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இதில் இங்கிலாந்து பிரபல ஆராய்ச்சியாளரும், பனிக்கட்டி உருகுவது தொடர்பாக ஆய்வு நடத்தி வருபவருமான ராபர்ட் சவான் கலந்து கொண்டார்.
இவருக்கு பனிக்கட்டி மனிதர் என்ற பட்டப்பெயரும் உண்டு.
இவருக்கு பனிக்கட்டி மனிதர் என்ற பட்டப்பெயரும் உண்டு.
கருத்தரங்கில் அவர் பேசும் போது கூறியதா வது:-
பூமி கோளின் வட துரு வம், தென்துருவத்தில் உள்ள பனிக்கட்டிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். மைனஸ்-73 டிகிரி வெப்ப நிலை உள்ள இடங்களிலும் ஆய்வு நடத்தி இருக்கிறேன். அந்த இடத்தில் நின்றால் நமது கண்கள் அப்படியே உறைந்து விடும். பற்கள் வெடித்து விடும்.
இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதை காணமுடிகிறது.
அதில் அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டம் பெரு மளவு உயரும் நிலை உருவாகி உள்ளது.
அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் இதே போன்று தொடர்ந்தால் இன்னும் 80 ஆண்டுகளில் சென்னை நகரம் கடலில் மூழ்கி விடும்.
நாம் ஓட்டும் மோட்டார் சைக்கிள் கார்கள் வெளியேறும் புகை, அனல் மின் நிலையம் வெளியிடும் புகைதான் இதற்கு காரணம். அவை இயற்கை பாதுகாப்பை அழித்து அண்டார்டிகாவை உருக வைத்து கொண்டிருக்கிறது. இதை நாம் தடுத்தே ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.