மொத்தப் பக்கக்காட்சிகள்

11/16/2011

செங்கல் சூளையில் வேலை பார்த்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்


தோன்றிப் புகழோடு தோன்றுக“ என்ற வள்ளுவரின் வாக்கியத்தை உண்மையாக்கும் விதமாக இடைப்பாடி அருகே உள்ள ஓர் குக்கிராமத்தில் பிறந்து தனது படிப்பு செலவிற்காக அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்தபடி இடைப்பாடி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர் கோவிந்தராஜூ.
 
தனது கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளார்.
 
பிளஸ்2 பொது தேர்வில் 194.75 கட்டாப்மதிபெண் பெற்று மருத்துவ படிப்பிற்காக (எம்.பி.பி.எஸ்) தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் கோவிந்தராஜுக்கு இடம் கிடைத்துள்ளது .இந்த நிலையில் மேற்கொண்டு படிப்பதற்கு என்ன செய்வதென்று வழி தெரியாமல் தவிக்கும் கோவிந்தராஜு கூறியதாவது:-
 
எனக்கு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு இடம் கிடைத்ததை மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன். இதற்காக எனது ஆசிரியர்களுக்கும், கடவுளுக்கும் எனது பெற்றோர்களுக்கும் நான் நன்றி சொல்கிறேன்.

இடைப்பாடி அருகே உள்ள மல்லிபாளையம் எனது சொந்த ஊர். எனது தந்தை சித்தையன், தாய் மாரியம்மாள் இருவரும் படிப்பறிவு இல்லாத சாதாரண விவசாய கூலிகள், இந்நிலையில் என்னையும் எனது சகோதரன் செல்வராஜையும் நன்றாக
படிக்க வைக்க எனது பெற்றோர்கள் கடினமாக உழைத்தனர்.

அவர்களின் வருமானம் போதாத நிலையில் எனது குடும்ப நிலையை உணர்ந்து அருகில் உள்ள செங்கல் சூளையில் காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் வேலை பார்த்தபடி படித்துவந்தேன்.

எனது படிப்பு ஆர்வத்தை பார்த்து இடைப்பாடி பகுதியில் சிறப்பு வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் பிரகாஷ் என்னை ஊக்கப்படுத்தினர். செங்கல் சூளையில் வேலைபார்த்து கொண்டே படிப்பது சற்று கடினமாகத்தான் இருந்தது. இருந்த போதும்¢ எதிர்காலத்தில் வரும் நன்மையை மனதில் கொண்டு விடா முயற்சியுடன் படித்ததால் இன்று மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது.
 
கடந்த கோடை விடுமுறையில் தினசரி பள்ளிப்பாளையத்தில் உள்ள நூல் மில்லுக்கு வேலைக்கு சென்றதில் சேர்த்த பணம் ரூ. 7 ஆயிரம் மட்டும் வைத் துள்ளேன். இருந்தும் எப்படியும் சிறப்பாக மருத்துவ படிப்பை முடித்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து நீதிபதியானவரின் கதையை நினைவுபடுத்தும் கோவிந்தராஜு வின் தன்னம்பிக்கைக்கு வெற்றி கிடைத்து அவர் ஓர் சிறந்த மருத்துவராக வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்பாக உள்ளது.

"நீங்கள் லாட்டரி winner என்று யாராவது சொல்லுவார்களேயானால் எச்சரிக்கையாக இருக்கவும்

என்னிடமும் அதைப்போல கூறி ஐநூறு டாலர் முன்பணமாக செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். நான் அவர்களிடம் என்னை எப்படி தேர்ந்து எடுத்தீர்கள்? நான் ஒன்றும் லோட்டேரி சீட் வாங்கவில்லை என்று தெரிவித்தேன். ஆனால் அவர்கள் தெரிவித்தது என்னவென்றால், யாஹூ மற்றும் ஹாட்மெயில் அக்கௌன்ட் வைத்து உள்ளவர்களை கணக்கெடுத்து குலுக்கலில் தேர்ந்து எடுத்ததாக தெரிவித்து இருந்தார்கள். எனக்கு இரண்டிலும் ID உள்ளதால் நம்பினேன்!. நானோ தமிழ் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு வந்த பொருளாதார அகதி, தமிழ் நாட்டில் இருந்து முகவர் மூலமாக வெளிநாட்டில் வேலை பார்கிறேன். அந்த முகவர் மூலியமாக தான் ஒவொரு மாதமும் சம்பளம் கிடைக்கும். அவனிடம் ஒவொரு மாதமும் சம்பளம் வாங்க நான் படும் துன்பத்தை அளவிடமுடியாது. அப்படி இருக்கையில் என் காதில் இப்படி ஒரு மகிழ்ச்சியான செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அவன் பணம் அனுப்ப சொன்ன நாடோ நைஜீரியா. நானும் பணம் அனுப்ப western union வங்கிக்கு அவர்கள் சொன்ன வங்கிக்கு அனுப்ப சென்றேன். அங்கே சிறிது கூட்டமாக இருந்ததால் அங்கு போடப்பட்டுள்ள நாற்காலியில் அமர்தேன். அங்கு எழுதப்பட்டுள்ள வாசகங்களை படிக்கும் போது அதில் கூறப்பட்டுள்ள வாசகம் "நீங்கள் லாட்டரி winner என்று யாராவது சொல்லுவார்களேயானால் எச்சரிக்கையாக இருக்கவும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. என் பணமும் தப்பித்தது. உழைத்து சம்பாதித்த பணம் நிலைத்து நிற்கும்!.
 
பேர் ஆசை பெரும் நஷ்டம் அது இது தான

எஸ்.எம்.எஸ். மூலம் கோடிக்கணக்கில் பரிசு மோசடி; ரூ.57 லட்சத்தை இழந்த சென்னை பெண்

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் மீனா (57) (பெயர் மாற்றம்) இவரது செல்போனுக்கு கடந்த மாதம் ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் “உலககோப்பை கால்பந்து போட்டியையொட்டி நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில் உங்களுக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. பரிசுத் தொகையைப் பெற கீழ்கண்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
 
இதைப் பார்த்ததும் மீனா குஷி அடைந்தார். உடனே அந்த எஸ்.எம்.எஸ்.சில் குறிப்பிடப்பட்டிருந்த இ- மெயிலுக்கு தனது முகவரியை அனுப்பினார். அதன் பிறகு அவருக்கு வந்த இ-மெயிலில், “உங்கள் பரிசுப் பணத்தை ஒப்படைக்க இங்கிலாந்தில் சில சட்ட விதிகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது.
 
இதே போல் இந்தியாவில் சுங்கத் துறைக்கும் பணம் செவழிக்க வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இதையடுத்து மீனா மொத்தம் ரூ.57 லட்சம் வரை இ-மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் பணம் செலுத்தி ஒரு மாதம் ஆகியும் குலுக்கல் பரிசு பணம் வந்து சேர வில்லை.
 
இதனால் தன்னை மோசடி கும்பல் ஒன்று ஏமாற்றி விட்டதை அறிந்தார். இது பற்றி அவர் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார். கமிஷனர் இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றினார்.
 
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மீனா ஜல்பிகார், ஜரியார், ஜாவித்கான், இம்ரான் ஜாரி ஆகியோர் பெயரில் உள்ள தனியார் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்த மர்ம நபர்கள் பற்றிய விவரங்களை வங்கி அதிகாரிகளிடம் சேகரித்து வருகிறார்கள்.
 
ரூ.57 லட்சம் பணத்தை பரிசு குலுக்கல் கும்பல் டெல்லி, மும்பையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் எடுத்துள்ளனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் உள்ள ரகசிய கேமராவில் பதிவான படங்களை பார்க்க போலீசார் திட்ட மிட்டுள்ளனர். இதன் மூலம் எளிதில் மோசடி கும்பலை கண்டுபிடித்து விடலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
 
மோசடி கும்பல் போலி பெயர்களில் கணக்கு தொடங்கி இருந்தால் அவர்களை கண்டு பிடிப்பது கடினம் ஏ.டி.எம். மையங்களில் வேறு நபர்களை வைத்து பணம் எடுத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.
 
போலீசாருக்கு கடும் சவாலாக திகழும் இந்த எஸ்.எம்.எஸ். பரிசு குலுக்கல் மோசடி கும்பலை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பெண்கள் தினம் எதற்காக மார்ச் 8 கொண்டாடப்பட்டது

மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். இந்த தினம் எப்படித் தோன்றியது?பிரெஞ்சுப் புரட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. 1789 ஜூன் 14 ம் தேதி சுதந்திரம், சமத்துவம், பிரநிதிநித்துவம் தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பாரிஸில் உள்ள பெண்கள் போராட்டத்தை தொடங்கினர்.



இந்தப் போராட்டம் பாரீஸ் முழுவதும் தீயாகப் பரவியது. ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று அனைத்துத் தரப்பு பெண்களும் பாரீஸ் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.




பாரீஸ் மன்னராட்சி இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என மிரட்டியது. அதற்கு அஞ்சாத பெண்கள் ஆயிரக்கணக்கான அளவில் கொட்டும் மழையில் அரச மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றனர். அவர்களை உடனடியாக கைது செய்ய அரசு உத்தரவிட்டது. அவர்களை கைது செய்ய வீரர்கள் வந்தனர்.

 
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அரண்மனைக்குள் புகுந்த பெண்கள் அரசரின் மெய்க்காப்பாளர் இருவரை சுட்டுக் கொன்றனர். அரசன் வேறு வழியின்றி அவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் சொல்ல வேண்டியாயிற்று.

 
அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

 
இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்தான். இந்த செய்தி உலகெங்கும் பரவியது. தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலி நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர்.

 
ஆனாலும் பெண்களுக்கு அரசியல் ரீதியாக உரிமைகள் கிடைக்காத நிலையே வருடக்கணக்காக தொடர்ந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கிளாரா ஜெட்கின். பாரீஸில் உள்ள உலக சோஷலிச பார்டி என்ற கட்சியில் முக்கிய பங்கு வகித்தவர் கிளாரா.





உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கான பிரச்சனைகளை பேசுவதற்காக பெர்லினின் ஒரு மாநாட்டை 1915 ம் ஆண்டில் துவக்கினார். அதற்காகப் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரஷ்யத் தலைவர் லெனினை சந்தித்து பெண்களுக்கான பிரச்சனைகள் குறித்தும், அதற்கு தீர்வுகள் குறித்தும் பேசினார். பெண்களுக்கென தனியாக ஒரு தினம் தேவை என்பதை வலியுறுத்தினார்.




அதன் விளைவாக 1911 ம் ஆண்டு மார்ச் 8 ம் தேதி முதன் முதலாக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது

Way to reduce Tension - மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்

 
* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்
 
* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
 
* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
 
* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
 
* வேலைகளைத் தள்ளி வைபபது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.
 
* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
 
* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலம். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.
 
* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
 
* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்
 
* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்என்பது போன்றவை.
 
* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
 
* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
 
* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
 
* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.
 
* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால்மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாதுஎன்று சொல்லப் பழகுங்கள்.
 
* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
 
* எளிமையாக வாழுங்கள்.
 
* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.
 
* நன்றாகத் தூங்குங்கள். டிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.
 
* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.
 
* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.
 
* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.
 
* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.
 
* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இலலாவிட்டாலும் கூட.
 
* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள்செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.
 
* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
 
* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
 
* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.
 
* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகசசெலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.
 
* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
 
* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.
 
* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.
இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை