மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

பேய்



மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவனின் மனைவி, தன் கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த எண்ணினாள்.


ஒரு நடு இராத்திரிப் பொழுதில் பேய்போன்று உடைகளை அணிந்து முகமெல்லாம் பயங்கரமான தோற்றத்தை அளிப்பது போன்று தன்னை அலங்கரித்தாள்.
...
பேய் போன்று தன்னை உருவகப் படுத்திக் கொண்ட மனைவியானவள் தன் கணவன் வரும் வழியிலுள்ள ஒரு மரத்தின்பின்னே ஒழிந்திருந்தாள்.


கணவன் வரும் பொழுதில் திடீரென்று அவன் முன்னிலையில் தனது பயங்கரமான தோற்றத்துடன் பாய்ந்து நின்றாள்.


எந்தவிதப் பயமும் இன்றிக் கணவன், "நீ யார்" என்று கேட்டான்.
"நான் தான் பேய்!!" என்று மனைவியானவள் பதிலளித்தாள்.








"நல்லது... என்னுடன் நீயும் எனது வீட்டிற்கு வா....உன்னுடைய சகோதரியைத்தான் நான் திருமணம் முடித்துள்ளேன்" என்று கணவன் அவளிற்குப் பதிலளித்தான்.

Corporate குடிகாரன்


மது-நாட்டுக்கு,வீட்டுக்கு,உயிருக்கு கேடு 

முற்காலத்தில், இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரைமுறை இல்லாதபொழுது அவர்களிடையே மது அருந்துவது ஒரு பழக்கமாக இருந்தது, பின்னர் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரைமுறை வந்தபின்னர், பலர் குடியை ஒதுக்கிவைத்தனர், இது அனைவரும் அறிந்ததே.
...
பெண் பார்க்கும் பேச்சு எடுத்தாலே, மாப்பிளையைப் பற்றிய முதல் கேள்வி, புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் இருப்பவரா என்றுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வாலிபர்கள் அவ்வளவு சுலபமாக மது அருந்திவிட முடியாது. மது அங்காடியில் விற்பனையாளர் வயதில் இளையோர் குடிக்க வந்தால், அவர்களை அதட்டி அனுப்புவார்கள் என்று கேள்வி. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இளைய சமுதாயத்தினர் பெரும்பாலும் உள்ளூரிலேயே கல்லூரிப் படிப்பையும் படித்துவந்தனர்.

ஆனால், இன்று நிலைமை வேறு. 

பெரும் விழுக்காட்டினர் வெளியூர் சென்றுதான் படிக்கின்றனர். அதிலும் கல்லூரி விடுதியில் தங்குவதும், வெளி விடுதியில் தங்குவதும்தான் வாடிக்கை. இதனால் கேட்பாறற்று பல பழக்கங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். கல்லூரி வாழ்க்கைக்கு வந்துவிட்டாலே ஏதோ கட்டவிழ்த்து விட்டது போல நினைப்பு வந்துவிடுகிறது. பக்கத்து வீட்டு ஆயா செத்தாலும் சோகம் என்று சொல்லி குடிப்பது, நண்பனை ஒரு பெண் பார்க்கிறாள் என்றாலும் குஷி என்று சொல்லி குடிப்பது என்று இப்பொழுது தொட்டதிற்கெல்லாம் குடி. போதாக்குறைக்கு அவ்வபோது அரசு நடத்தும் மதுபானக்கடைகிளில் புதியவகைகளை வேறு அறிமுகப்படுத்துகின்றனர்.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. [பொருட்பால்: கள்ளுண்ணாமை]

கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

பொங்கல் தினத்தன்று மட்டும் தமிழகத்தில் 90 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து சாதனை படைத்தது முந்தய தி.மு.க ஆட்சி.
இதில் எந்த ஆட்சியையும் விதிவிலக்கல்ல...
இதில் ஒரு கொடுமை என்னவென்றால் பண்டிகை தினத்தன்றும், பிரபல அணிகள் களமிறங்கும் கிரிக்கெட் தினத்தன்றும், அரசு மதுபானக்கடைகளில் ஒரு 'இலக்கு வைத்து விடுகிறார்கள்', குறைந்த பட்சம் 50 கோடி, 100 கோடிக்கு விற்பனை செய்யவேண்டுமென்று. அந்த அளவிற்கு நமது சமுதாயத்தினரை அரசாங்கம் புரிந்து வைத்திருக்கிறது.

கல்லூரி முடித்து பணிக்கு சேர்ந்ததும், உடன் பணிபுரிபவரிடம் கேட்கும் முதல் கேள்வி... அடிக்கடி party எல்லாம் உண்டா? பெற்றோர் பணத்தில் படித்த போதே கேட்பாறற்று மாதம் ஒரு முறை குடிக்கப் பழகியவனுக்கு, பணியிர்சேர்ந்தவுடன் கேட்கவும் வேண்டுமா?

கம்பனிகளிளெல்லாம் இப்பொழுது குடிக்காதவனைத்தான் தீண்டத்தகாதவனைப்போல பார்கிறார்கள் இப்பொழுது.

அவன் குடிகாரன் என்று ஒதுங்கிய காலம் சென்று இப்பொழுது, அவன் 'குடிக்காதவன்' என்று சொல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதெல்லாம் பார்க்கும் போது வள்ளுவரின் 'குர(ல்)ள்' தான் நினைவிற்கு வருகிறது

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. [பொருட்பால்: கள்ளுண்ணாமை]

அதாவது, ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?

குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது Corporate குடிகாரனுக்கு


கண்டுபிடி



செய்தி : கொசுவை விரட்ட புதிய வகை கியாஸ்; இந்திய வம்சாவழி விஞ்ஞானி கண்டு பிடித்தார்.

செய்தி படித்தவர் : ஐயா எங்க நாட்டு அரசியல் வியாபாரிகளையும் ஊழல்வாதிகளையும்,லஞ்ச அத்காரிகளையும் விரட்ட ஏதாவது கண்டுபிடியுங்களேன்

லஞ்சம் முதல் பரிசு நமக்கு தான்.


லஞ்சம் இல்லாத நாடு உலகில் எங்கேனும் இருக்கிறதா? தோண்டி துறவி தேடிப் பார்த்தாலும் அப்படி ஒரு நாடு கிடைவே கிடையாது. வளர்ந்த நாடுகள் பணக்கார நாடுகளில் கூட அதிகாரிகள், அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள், என்று இருக்கும் கும்பல்கள் சர்வசாதாரணமாக லஞ்சம் வாங்கி குவித்து இருக்கிறார்கள், ஏழை நாடுகளை பற்றி கேட்கவே வேண்டாம், லஞ்சம் கொடுக்காமல் மழை கூட வானத்திலிருந்து கிழே இறங்காது, லஞ்சத்தை அடிப்படை மூலதனமாக வ...ைத்தே பல தொழில்கள் அங்கு நடைபெற்று வருகின்றன, லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் நின்று விட்டால் அந்நாடுகளில் தொழில் துறை கூட முடங்கி விடும்.

நமது இந்தியாவை பொறத்தவரை லஞ்சம் என்பது கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றியது என்றே சொல்லலாம்

இதில் கூட நம் பாணி அலாதியானது தான். மற்ற நாடுகளில் லஞ்சம் கடமையை செய்யாமல் இருப்பதற்கும் அல்லது கடமையை மீறி செயல்படுவதற்கும் தான் கொடுக்கப்படுகிறது. நம் நாட்டிலோ கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இவ்ளவு அற்புதமான நிர்வாகிகளை உலகத்தில் எந்த மூலையில் தேடினாலும் காண்பது கடினம், இந்த அதிசய பிறவிகளை நிர்வாகிகளாக பெற்றதற்கு இந்திய மக்கள் அனைவரும் பலநூறு வருஷம் தவமிருந்திருக்க வேண்டும். லஞ்சம் வாங்குவதில் திறமைசாலிகள் யாரென்று போட்டி நடத்தினால் உலகளவில் முதல் பரிசு நமக்கு தான்.

அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்



ரோமாபுரி நாட்டின் சட்டங்களின் அடிப்படையில்தான் இன்றைய சட்டங்கள் உள்ளன. அந்தச் சட்டங்கள் ஆதிக்கத்தை, சொத்துகளைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை.

மதவாதிகள்தான் தூக்குத் தண்டனை போன்ற கொடூரத் தண்டனைகளைத் தொடங்கிவைத்தவர்கள். தனி மனிதன் கோபத்தால் செய்யும் கொலைகளுக்கு விசாரணை நடத்தப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், போர் மூலம் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கு எந்த விசாரணையும் இல்லை.

இலங்கை போன்ற சில அரசுகள் சொந்த நாட்டு மக்களையே போர் என்ற பெயரில் கொன்று குவிக்கின்றன. காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு குறித்தும் விசாரிக்கப்படுவதில்லை.

ஆனால், தனி மனிதன் கோபப்பட்டு செய்யும் கொலையை நீதிபதி விசாரித்து தீர்ப்புக் கூறுகிறார். இது நீதி வழங்குவதில் உள்ள இரட்டை மனப்பான்மையைக் காண்பிக்கிறது.

ஒருவன் நிதானமிழந்து கொலை செய்கிறான். அரசு நிதானத்தோடு விசாரித்து தூக்குத் தண்டனை விதிக்கிறது.

தனி மனிதன் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செயலை, அரசு செய்யக் கூடாது என்ற கருத்தில் நியாயம் உள்ளது.

இதுபோன்ற காரணங்களால் தூக்குத் தண்டனை சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாகத் திருத்தப்பட வேண்டும். இது மிகவும் அவசியமானதாகும்.

நாடாளுமன்ற அரசியல் நிர்ணய சபையைக் கூட்டி, 60 ஆண்டு கால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏன் திருத்தக் கூடாது என்று யோசிக்க வேண்டும் என்றார்

தா. பாண்டியன்