மொத்தப் பக்கக்காட்சிகள்

11/08/2011

'ப்ளூம் பாக்ஸ்' -மின்சாரம் தயார்



கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ்லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பதுபற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியைமேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டுகண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி,அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல்நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப்,அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்டமுதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாகஇருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.

எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்

அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன்விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார். சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர்உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கைஎரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல்இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்''என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும்400 கிலோ வாட் மின்சாரமும் அதன்

ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.



100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தைசேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.

ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நல்லவர்கள் பட்டதாரிகள்அரசியலுக்கு வரவேண்டும்'


"இவர் நல்லவராயிற்றே, இவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்' என அவர்கள் கேட்கின்றனர். இதில் இருந்து , அரசியலில் நல்லவர்கள் இருக்க முடியாது என அர்த்தமா ?. இதே போன்ற எண்ணம், தமிழகத்தில் உள்ள மாணவர்கள், பட்டதாரிகள், ஓய்வு பெற்றவர்கள், முதியோர் என, பலதரப்பட்டவர்களின் மனதிலும் ஏற்பட்டுள்ளது.

அரசியல் ஒரு சாக்கடை, அது அசுத்தம் நிறைந்தது என்றும் அவர்கள் கருதுகின்றனர். படித்தவர்கள் அரசியலில் இருந்தால் தான், நம் நாடு முன்னேறும். தகுதியும், திறமையும் மிக்கவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசும் படித்தவர்கள் அதிக உடல் உழைப்பில்லாத நாகரிகமான சூழ்நிலை இருக்க கூடிய,தன்னை பிறர் மதிக்க கூடிய இடத்தில்தான் பணிபுரிய விரும்புவார்கள்.அரசியலில் அப்படி ஒரு நிலையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அரசியல் என்பது கடின உழைப்பைக்கொண்டது.அதில் நுழையும் வழி நேர்வழியாகவும் இருக்கலாம்.தவறான வழியாகவும் இருக்கலாம்.ஆனால் அதற்கும் பல சிரமங்களை கடந்தாக வேண்டும்.பல கீழ்த்தர விமர்சனங்களை கூட சகித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். படித்தவர்களிடம் இந்த சகிப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே,அதெற்கெல்லாம் துணிந்தவர்கள் மட்டும்தான் அரசியலில் தலைதூக்க முடியும்.

ஒருவேளை அரசியல் என்பது பன்னாட்டு நிறுவன வேலை போலவோ, அலுவலக உத்தியோகம் போலவோ ஆக்கப்பட்டால் படித்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடும். படித்தவர்கள் தங்கள் வேலை, குடும்பம் இதற்கு கட்டுப்பட்டு அரசியலுக்கு வர பயப்படுகிறார்கள். படிக்காதவர்களை ஒப்பிட்டு பார்க்கையில் படித்தவர்கள் இந்த காலத்தில் சற்று பயந்தாகொள்ளியாகத் தான் இருக்கிறார்கள்.

இன்னோரு விசியம் நம்மை வளர்க்கு பொற்றொர் இஞ்சினியர்,டாக்டர் ஆக வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள் யாரும் அரசியல் வாதியாக வர வேண்டும் என்று விரும்புவதில்லை. சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று அக்கறை உள்ளவர்கள் அரசியலுக்கு அதிகமாக வரும் வரையில் அது நாற்றமடித்துக்கொண்டுதான் இருக்கும். கால்வாயில் கலந்த சாக்கடை நீர் வெளியேற வேண்டுமானால் அதில் நல்ல நீர் வெள்ளமாய்ப் பாய்ந்தால்தான் நடக்கும். நாறுகிறதே என்று மூக்கைக் பொத்திக்கொண்டு நல்லநீருக்கு அணைபோட்டுத் தடுத்துவைத்திருக்கும் வரையில் சாக்கடை நாற்றத்தை மாற்ற முடியாது என்றார் குமரேசன் அசாக்.

அறிவும்,ஆற்றலும் மிக்க இளைய தலை முறையில் பெரும்பாலனவர்கள் வெளிநாட்டு மோகம் கொண்டு வேறு நாடுகளுக்குப் பறந்து விடுகிறார்கள்... செலவு செய்தது தரமான கல்வியைக் கொடுப்பது தாய் நாடு என்பது அவர்களுக்குக்கு மறந்து விடுகிறது..

அரசியல் சாக்கடையாய்க் கிடக்கிறது என்று குற்றம் சொல்ல மட்டும் இந்தியாவில் ஆயிரம்,ஆயிரம் ஆட்களுண்டு...ஆனால் அதில் இறங்கி சுத்தம் செய்யும் துணிவு வராத வரையில் என்ன பயன்?

அரசியலா அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் இன்றைய மாணவர்கள் நினைத்து அதை விட்டு விலகி நிற்கின்றனர்.சமுதாயத்தில் உள்ள பெண்களும் அரசியல் என்றால் ஆபத்து என்று நினைத்து விலகி நிற்கின்றனர்.

பெரியாரும் ,அண்ணாவும் நமக்கு அரசியலை கற்று தரவில்லையா? அதற்கான முன் மாதிரி திராவிடம் இல்லையா? அப்படியானால் நம் முன்னோர் எப்படி ஆட்சி செய்தார்கள்?

அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள்.(சிலர் அதையும் செய்வதில்லை ) இது சாக்கடை என்று பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்.ஒரு முக்கியமான உண்மையை நாம் எல்லோரும் மறந்துவிடுகிறோம். சாக்கடை என்றும் மானங்கெட்டது என்றும் நாம் பேசும் அரசியல் எவ்வளவு புனிதமானது என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.

இந்த நிலையில், 'சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என்று சொல்ப்பவர்கள் எத்தனை பேர் ?

குழந்தை தொழிலாளர்-சிறுகதை




ஐயா, உங்களைப் பார்க்க ஒரு அம்மாவும் அவங்களோட சின்ன பையனும் வந்திருக்காங்க"--அலுவலக உதவியாளர் கூற...


"உள்ளே வரச் சொல்!" என்றார் தொழிலாளர் ஆய்வாளர் சந்திரஹரி.
...
"ஐயா இது உங்களுக்கே நியாயமாயிருக்கா? குடிச்சே காசையெல்லாம் அழிக்கும் தகப்பனுக்குப் பிள்ளையாய் பிறந்ததைத் தவிர இந்தப் பையன் செய்த பாவம்தான் என்ன? இவன் சேட்டு கடையில் வேலை பார்த்து கொண்டு வந்த ஐநூறு ரூபாய்லதான் கஞ்சியோ கூழோ கால் வயிறு கழுவிக்கிட்டு இருக்கோம். அதுக்கும் வேட்டு வச்சிட்டீங்களேய்யா! குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வச்சிக்கக்கூடாதுன்னு நீங்க போட்ட உத்தரவுனால சேட்டு இவனை நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டார். நீங்க நல்லா இருக்கணும்!" என்று புலம்பியும் வாழ்த்தியும் நின்றவளை "என்கூட வாங்க" என்று தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சந்திரஹரி.

கதவைத் திறந்த அந்த வயதான பெண்மணியைப் பார்த்த மாத்திரத்தில் மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தாள் அந்த சிறுவனின் தாய்.

சந்திரஹரி தொடர்ந்தார்.

"என்னோட அப்பாவும் ஒரு குடிகாரர், சீட்டாட்டக்காரர், ரேஸ் பத்தியம். அவரோட மரணத்துக்குப் பிறகு என்னோட அம்மா ஒரு விபத்தில் தன்னோட வலது காலை இழந்தும் தன்னம்பிக்கையை இழக்காம ஊன்றுகோலின் துணையுடன் ரெண்டு வீட்ல சமையல் செய்து போட்டு என்னைப் படிக்க வச்சு இந்த வேலையில் அமர்த்துவதற்குள் எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டாங்க. இப்படி நாலு வீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சாவது உங்க மகனைப் படிக்க வைக்கக் கூடாதா?"

" எப்பாடு பட்டாவது இவனைப் படிக்க வச்சு காட்டறேன் சார்!". சொன்ன அந்த தாயைப் பெருமிதத்துடன் பார்த்தார் சந்திரஹரி.

வேலையில்லா திண்டாட்டம்



சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்ல...ாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான்.

சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.
உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது.

கார் டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது சரியா?

Nitrogen Filled Tyre
சென்னை: கார் டயர்களுக்கு நைட்ரஜன் வாயுவை நிரப்புவது சரியா என்பது குறித்து பலருக்கும் பெருத்த சந்தேகமும், தயக்கமும் இருக்கிறது.

ஆனால், நைட்ரஜன் வாயுவை நிரப்பினால், டயர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதோடு, நமது பாதுகாப்பையும் அது உறுதி செய்வதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கையாகவே நைட்ரஜன் (N2) தீப்பிடிக்காத தன்மையும், எளிதில் விரிவடையாத தன்மையையும் கொண்டது.

எனவே, நைட்ரஜன் வாயு நிரப்பும்போது, டயர்கள் சூடாவதை தவிர்ப்பதோடு மட்டுமின்றி, எந்தவொரு தட்பவெப்ப நிலையிலும் டயர்களை விரிவடைய செய்யாது.

இதனால், டயர்கள் வெடிப்பதை 90 சதவீதம் தவிர்க்க முடியும் என்று அடித்து கூறுகின்றனர் ஆட்டோ எஞ்சினியர்கள். நீண்டதூரம் பயணம் மேற்கொள்ளும்போதும், அதிக வேகத்தில் செல்லும்போதும் நைட்ரஜன் நிரப்பப்பட்ட டயர்களில் சூடாகாது.

மேலும், டயர்களில் வெப்பம் அதிகரிக்காமல் சீரான குளிர்ச்சியை தக்கவைக்கும் குணமும் நைட்ரஜனுக்கு உண்டு.

இதனால், விபத்துக்களை வெகுவாக தவிர்க்க முடியும் என்பதோடு, டயர்களின் ஆயுட்காலமும் அதிகரிக்கும் என்கின்றனர்.

நைட்ரஜன் வாயு டயர்களில் நிரப்புவதற்கு செலவு கூடுதல் என்றாலும், அது நம் பாதுகாப்பை உறுதி செய்வதையும் கருத்தில்கொள்ளவேண்டும் என்பதே நமது விருப்பம்.