மொத்தப் பக்கக்காட்சிகள்

6/18/2012

பணச்சுரண்டல்

மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை

அதிகாரம் உள்ளவன் அதட்டியும் ...
ஆணவம் பிடித்தவன் மிரட்டியும் ...
இதயமில்லாதவன் பறித்தும்
ஈனமானவன் இழித்தும்
உணர்வற்றவன் ஏய்த்தும்
ஊக்கமானவன் அடித்தும்
எமாளியனவன் அழித்தும்
ஏடானவன் பொய்யுரைத்தும்
ஐயம்கொண்டவர் மாய்த்தும்
ஒடுங்கியவன் எதிர்த்தும்
ஓங்கிநிற்பவர் ஒடுக்கியும்
ஔரங்கசீப் போல மிரட்டியும் ....
அஃறிணை என்பவர் பேசியும்

பதவியில் இருப்பவன் பயந்தும் ...
வெறி பிடித்தவன்
செயல் ஜாலத்திலும் ...
சுயநலமிக்கவன்
சுரண்டுவதிலும் ...
சுக போக வாழ்விற்காய்
இயற்கையை காயப்படுத்தியும் .

மனச்சுரண்டல்
பணச்சுரண்டல்
பதவிச்சுரண்டல்
வியாபாரச்சுரண்டல்
கல்விச்சுரண்டல்
மருத்துவச் சுரண்டல்
ஜனனத்தில் சுரண்டல்
மரணத்திலும் சுரண்டல்

அடுத்தவரை சுரண்டும் நாம்

நம்மை அடுத்தவர்
சுரண்டுவதறியாமல்
உலகை, ஊரை
உறவை ,இனிமையை
பசுமையை, பண்பை ,அன்பை
வாழ்கையை சுரண்டும தீமையாய்!

Thanks to Sasikala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக