மொத்தப் பக்கக்காட்சிகள்

6/21/2012

ஜூன் 20 சர்வதேச அகதிகள்



இன்று சர்வதேச அகதிகள் (ஜூன் 20) தினமாகும். அரசியல், சமூக, சமய சூழ்நிலைகள் காரணமாக ஓர் நாட்டிலிருந்து மற்றுமொரு நாட்டிற்கு பாதுகாப்பு தேடி மக்கள் தஞ்சமடையும் போது அவர்கள் அகதிகளாகின்றனர்.
அகதிகள் தினத்தையொட்டி ஐ.நா விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2011 ஆண்டு உலக முழுவதும் 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் இலங்கை, திபெத் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறுபவர்கள் மாத்திரம் இரண்டு இலட்சத்தை தாண்டுகிறது. இதேவேளை பாகிஸ்தானில் அகதிகளாக தஞ்சம் கோரிய 150,000 ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு உதவ போவதாக UNHCR அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க படைகளின் ஆக்ரமிப்பால், இதுவரை 1.7 மில்லியனுக்கு அதிகமானோர் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்க்ளில் 70,000 பேர் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் புகலிடம் கோரியுள்ள வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை அரசு திருப்பி அனுப்ப கூடாது எனவும் UNHCR அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இலங்கையில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் முறைப்படி ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிலையத்தில் தங்களை பதிவு செய்து கொண்டவர்கள். எனினும் ஐ.நா அகதிகள் தொடர்பான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த அகதிகளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அவர்களை திருப்பி அனுப்பும் பட்சத்தில் இலங்கை பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவு UNHCR எச்சரித்துள்ளது.

இம்முறை அகதிகள் தினத்திற்கான Refugees have No Choice. You do எனும் Theme ஐ ஐ.நா அறிவித்துள்ளது. 1951ம் ஆண்டு அகதிகள் தொடர்பான முதலாவது சர்வதேச பிரகடனம் உத்தியோகபூர்வமாக அமலுக்கு வந்தது. அகதிகள் தினத்தை முன்னிட்டு UNHCR அகதிகள் தொடர்பில் பொதுமக்களிடம் சில கேள்விகளை முன்னெடுத்துள்ளது. இவற்றில் நீங்களும் பங்குபெறலாம். இணைப்பு :

<http://takeaction.unhcr.org/>

thanks to tamilmedia
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக