மொத்தப் பக்கக்காட்சிகள்

3/09/2012

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு




ஒருவர் தனக்கு நடந்த நல்லவற்றை கூறினால், நமது மனது அதை ஏனோதானோ என்றுதான் பார்க்கிறது. பல நேரம் பொறாமைப் படுகிறது. அதே சமயம் அவருக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் அதை நமது மனது கொண்டாடுகிறது. உள்ளூர மகிழ்ச்சியடைகிறோம். 

அடுத்தவர் துன்பத்தில் இன்புறும் குரங்குப் புத்தி நமது மனது. ஒரு சிலரே /லட்சத்தில் ஒருவரே, அடுத்தவர் துன்பத்தில் தானும் துன்புறுவர். இதிலிருந்து நாம் கற்பது என்ன
? மனித மனம் ஒரு குரங்கு..மனம் சொன்னபடி நாம் கேட்கக் கூடாது. அது உங்களது சுய லாபத்திற்கே பார்க்கும். அடுத்தவர்  துன்பத்திலும் இன்பம் கானும் உங்களது மனம், உங்களுக்கு நல்லது செய்யப் போகிறதா? சற்று யோசியுங்கள். எனவே சற்று மாத்தி யோசி.. மனம் ஒன்று சொன்னால் நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். இதில் நீங்கள் என்பது யாது? உடலா அல்லது உயிரா? அது தான் ஆழ்மனம். அதாவது [SOLE] என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுதான். இரண்டு மனம் வேண்டும் என்று பாடினார் அன்று. ஆனால் நீங்கள் உங்களது வெளிப்படையான சிந்தனை செய்யும் வெளி மனசைக் கேட்காதீர்கள். உங்களது ஆழ்மனத்தைக் கேளுங்கள். அதற்குத்தான் எது நல்லது, எது கெட்டது, எது உங்கள் பலம், எது உங்கள் பலவீனம், நீங்கள் இதுவரை செய்த மோசமான தவறு என்ன என்பதெல்லாம் இந்த ஆழ்மனத்திற்கே தெரியும். வெளி மனசானது அந்த நிமிடத்திற்கு நிமிடம் யோசிக்கும். பல சிந்தனைகளை அசைபோடும். இறந்தகால மற்றும் எதிர்கால சிந்தனைகள், தற்சமயம், அந்த நொடியில் நடப்பது நமது மனத்திற்கு தெரியாது அல்லது புரியாது. நிகழ்வு நடந்தவுடன் அது இறந்த காலமாகிறது. அதாவது பிரசண்ட், பாஸ்ட் ஆகிறது. பிறகுதான் அது மனதின் ஆளுமைக்கு வருகிறது. எனவே மனத்தைப் பொருத்தவரை இறந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள், கவலைகள், கொண்டாட்டங்கள் ஆகியவையே. 






நிகழ்காலம் அதாவது இந்த நொடி நமது கையில் உள்ளது. நாம் அதை செவ்வனே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நமது ஆழ்மனது என்ன சொல்கிறதோ அதன்படி செய்ய வேண்டும்.

அந்த நொடியில் நடக்கும் தவறான வழிகாட்டு.இதை வழிகாட்டுபவர் வெளிமனது. பின்னர் அதை எண்ணி வருந்துகிறோம். அதைக்  கற்று த்தருவது ஆழ்மனம். 

ஆழ்மனச் சிந்தனைகளை வளர்த்தெடுப்பது எப்படி? இந்த ஆள் மனத்தையே சில மதங்களில் நம்முள் இருக்கும் கடவுள் என்கின்றனர். இதை வளர்த்தெடுப்பது எனப்தைவிட இதை உனருதல் அவசியம். ஒவ்வொரு சமயமும், ஒவ்வொரு முடிவையும் நாம் ஆழ்மனத்தைக் கேட்டே செய்ய வேண்டும். அது நிச்சயம் நம்மைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லாது. வெளிமனது சொல்லும் ஆசை, கவலை போன்றவற்றை ஆழ்மனது கொண்டு உதறித் தள்ளிவிட முடியும். இதற்கு ஆன்மீக வழி முயற்சி தேவை. 

நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அது சொல்லும் செய்தியை உற்று கவனியுங்கள். அதன்படி நடங்கள். எந்த மதமும் தீமையை போதிக்க வில்லை. நன்மையையும் உலக அமைதியையுமே போதிக்கின்றன. நீங்கள் மத நம்பிக்கையற்றவராக இருந்தால் நாம் இதுவரை சொன்னபடி நீங்கள் ஏற்று, பிராக்டிகல் சைக்காலஜி படி நடக்கலாம். உங்களுக்கு நீங்கள் தான் கடவுள். உங்கள் ஆழ்மனம் சொல்லும் செய்தியே உங்கள் மதம். எனவே மதம், கடவுள் எல்லாம் நமது ஆழ்மனத்தின்படியே புரிதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக