மொத்தப் பக்கக்காட்சிகள்

7/08/2016

குமரிக்கண்டம் !.ஏழுதெங்க நாடு !ஏழுமதுரை நாடு !


கன்னியாகுமரி

மூழ்கிப் போன உண்மைகள் வெளி வர தொடங்கியுள்ளது .  (((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்))) நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்க ு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்" நாவலன் தீவு"என்றுழைக்கப்பட்ட"குமரிக்கண்டம்.
 
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கி கொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்  "குமரிக்கண்டம்" .ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! 
 
பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.

தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்ட மான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார்
அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன்  39 மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .
 
இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம்
தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களடன்" அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப் பட்டது .

இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில"கி.மு1850இல்449 புலவர்கள் களுடன் "அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!
 
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம்!

தோழர்களே !முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம் ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்

7/05/2016

எதிர்க்கட்சித் தலைவர்

  
திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்:

"இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு முதல் மந்திரி உங்க மாமனார்தான். அவர்தான் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்துறை எல்லாம் கவனிச்சுக்குவார்.

"இங்க நான்தான் துணை முதல்வர். உள்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும்.

"என் மகன் அதாவது உன் வீட்டுக்காரன்தான் தொழில் துறை, போக்குவரத்துத் துறை, வீட்டு வசதித்துறை எல்லாம் பாத்துக்குவான்.

"என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறையையும், விளையாட்டுத் துறையையும் பாத்துக்குவா.

"நீ எதைப் பாத்துக்கறே சொல்லு? உனக்கு உணவுத்துறை, சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்; சரிதானா?"

சிரித்துக்கொண்டே மருமகள் சொன்னாள்: "ஐயோ அத்தை; பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு? நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க. நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

6/30/2016

படித்ததும் வலித்தது...** யதார்த்தங்கள் **

படித்ததும் வலித்தது...
〰〰〰〰〰〰〰〰


** யதார்த்தங்கள் **

இன்றைய சூழ்நிலையில்
வீரம் என்பது
பயப்படாத மாதிரி
நடிக்கிறது.

புத்திசாலி என்பது
அடுத்தவனை
முட்டாளாக்குவது.

சந்தோஷம் என்பது
பணம் இருப்பதாய்
காட்டி கொள்வது.

அமைதி எனப்படுவது
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது.

குற்றம் என்பது
அடுத்தவர் செய்யும்
போது தெரிவது.

தன்னிலை விளக்கம்
என்பது தன் தவறுக்கு
சால்ஜாப்பு சொல்வது.

பொதுசனம் என்பது
கூடி நின்று
வேடிக்கை பார்ப்பது.

தலைவர் என்பது
ஊரை அடித்து
உலையில் போடுவது.

தானம் என்பது
வீட்டில் உள்ள
பழையதை கொடுப்பது.

பணிவு என்பது
மரியாதை இருப்பது
போல் நடிப்பது.

காதல் என்பது
இரண்டு பேரும் சேர்ந்து
பொய் சொல்வது.

கல்வி என்பது
காப்பி பேஸ்ட்
செய்வது.

நேர்மை என்பது
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது.

நல்லவன் என்பது
கஷ்டப் பட்டு
நடிப்பது.

எதார்த்தம் என்பது
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக்கொள்வது.

மனிதம் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது.

சிரிப்பு என்பது
அடுத்தவன் விழும்
போது வருவது.

Thanks to C.Malathi

6/15/2016

உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம் !

 
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்கச் சென்றனர்.

அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளர்ச்சிக்கும் இடையூறாக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.

இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கும் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது. 

பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அறிந்துகொள்ள அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும், நல்லவேளை அவன் இறந்து விட்டான் என்று நினைத்த படியே முன்னோக்கிச் சென்றனர்.

இறுதியாக,சவப்பெட்டியினுள் எட்டிப் பார்த்த வர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.

அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.

கண்ணாடி அருகில் இவ்வாறு ஒரு வாசகம் எழுதி இருந்தது; ”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம், நீங்கள் வளர வேண்டும் 

என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களைத் தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.

உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது. உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும்.

6/14/2016

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.....!!!

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.....!!!

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.

"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.

பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,

வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.........!!!