மொத்தப் பக்கக்காட்சிகள்

11/07/2015

தினமும் பழச்சாறு அருந்தினால் !

 கெஜ்ரிவால் கூறியுள்ள செய்தி .....


 இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி அருந்தினால் 3600 கோடி தோராயமாக !!!!!!

நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.

நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம் விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் நாம் பழச் சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும். ₹ 10 கிடைக்கும் பழச்சாறு நாளடைவில் ₹ 5 கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும் (இந்த செய்தியை குறைந்தது 3 பேருக்கு அனுப்பவும் )கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி. இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் கோல்கேட் இல்லாத போது கணவன் மனைவி சந்தோஷமாகக் குடும்பம் நடத்த வில்லையா நாட்டை காப்பாற்ற! 

அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும். 

வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு ₹ 2 1 டாலருக்கு💵 சமமாக இருக்கும்.

 நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும். நாம் இவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்கிறோம்

அது போல இதையும் இந்தியர்கள் அனைவரும் அடையும் படி அனுப்புகவோம்.

11/06/2015

விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்... !

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செயயும் தவறு...

விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-

வாங்கவும்:-
LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-
COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-

வாங்கவும்:-
CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-

வாங்கவும்:-
NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-

வாங்கவும்:-
PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-

வாங்கவும்:-
GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-

வாங்கவும்:-
SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-

வாங்கவும்:-
SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-

வாங்கவும்:-
INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-

வாங்கவும்:-
NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-
HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-
BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
VODAFONE.

Food Items:-

வாங்கவும்:-
Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-
KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..


 Thanks to Ranikrishna

10/31/2015

ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது...

இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!....

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.

இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

உதாரணமாக :-

PDS 01 BE014

என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

10/26/2015

கருவேல மரங்களை ஒழிக்க மருந்து

 
கருவேல மரங்களை ஒழிக்க மருந்து

மதுரை :
 
கருவேல மரங்களை அடியோடு ஒழிக்கும் 'அக்ரோ கேர்' என்ற புதிய மருந்தை மதுரை 'சத்யகிரஹா பவுண்டேஷன்' அமைப்பினர்  அறிமுகப் படுத்தியுள்ளனர்.
.
இதன் நிறுவனர் ரமணன் கூறியதாவது:
 
கருவலே மரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் இந்தியாவில் இல்லை. வியட்நாமில் டாக்டர் டாம் என்பவர், இதுதொடர்பாக 15 ஆண்டுகள் ஆய்வு செய்து இம்மருந்தை கண்டுபிடித்துள்ளார். 
 
எங்கள் பவுண்டேஷனும் கருவேல மரங்களை அழிக்கும் முயற்சிகளை எடுத்து வந்தது.
.
அவரது மருந்தை இங்கு சோதித்து பார்த்த போது, கருவேல மரம் 7 நாட்களில் கருக ஆரம்பித்தது.'அக்ரோ கேர்' என்ற இம்மருந்து, ஒரு ஏக்கரில் பயன்படுத்த ரூ.4 ஆயிரம் செலவாகும். இதை பயன்படுத்தினால் முற்றிலுமாக ஒழித்து விடலாம். கருவேல மரங்கள் பாதித்த மாவட்டங்களுக்கு இந்த மருந்து ஒரு வரப்பிரசாதம், என்றார்.தொடர்புக்கு 98658 78142.
 

10/17/2015

"ஆச்சி " மனோரமா வாழ்க்கை வரலாறு !

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கோபிசாந்தா. தென்னிந்தியாவில் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமாராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார்.


"ஆச்சி' மனோரமா

தமிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு "ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா, தமிழ்ப்பட உலகில் தனி முத்திரை பதித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்து பிரிவுகளில் தனது பெயரை நிலைநாட்டியவர். இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை என கூறுமளவுக்கு நடிகை, அம்மா, ஆச்சி, வில்லி, காமெடி, பாடல் என அனைத்து கேரக்டர்களிலும் கொடிகட்டி பறந்தவர். நடிப்பில் 50 ஆண்டுகளை கடந்து "பொன்விழா' கொண்டாடியவர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1937, மே 26ல் கோபிசாந்தா காசி குலோகுடையார் - ராமாமிதம் ஆகிய தம்பதிகளுக்கு மகளாக மனோரமா பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். பின் இவரது குடும்பம் வறுமை காரணமாக காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் என்ற இடத்துக்கு குடிபெயர்ந்தனர். மனோரமா தனது 12 வயதில் நாடகத்தில் நடிக்க தொடங்கினார். "யார் மகன்' என்பது தான் இவரின் முதல் நாடகம். "அந்தமான் கைதி' என்ற நாடகம் இவர் நடித்ததில் புகழ்பெற்ற நாடகம்.

நாடகங்களில் நடிப்பு மட்டுமல்லாமல் பாடவும் தொடங்கினார். நாடக இயக்குநர் திருவேங்கடம் என்பவர் இவருக்கு "மனோரமா' என்று பெயர் வைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய "வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய "உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும், மனோரமா கதாநாயகியாகவும் நடித்தனர். ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

வெள்ளித்திரைக்கு பயணம்

நாடகத்தில் நடித்து வந்த மனோரமா 1958ல் "மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். இவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கண்ணதாசன். முதல் படத்தில் காமெடி ரோலில் இவர் நடித்தார். ஆரம்பக்காலத்தில் காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தினர். முன்னணி காமெடி நடிகர் நாகேஷ் - மனோரமாவும் பல படங்களில் ஜோடியாக காமெடியில் கலக்கினர். இவர்கள் இருவரும் திரையில் தோன்றினாலே திரையங்களில் சிரிப்பு மழை பொழிய ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு இருவரும் காமெடியில் கலக்கினர்.

பாடல்

"மகளே உன் சமத்து' என்ற படத்தில் முதன்முதலாக பாடினார். தயாரிப்பாளர் குமார் என்பவர் இந்த வாய்ப்பினை வழங்கினார். "தாத்தா தாத்தா பிடி கொடு... இந்த தள்ளாத வயசில சடுகுடி' என்று இந்த பாடல் தொடங்கும். இருப்பினும் இவர் பாடிய "வா வாத்தியாரே வுட்டான்ட' என்ற பாடல் மனோரமாவின் முதல் ஹிட் பாடலாக அமைந்தது. "டில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லை தட்டாதே' , "நாட்டு புற பாட்டு ஒன்னு...' , "மெட்ராச சுத்தி பாக்க போறேன்...' , உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

ஆறு மொழிகளில்

மனோரமா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும். ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே, நச்சென்று பேசிவிடக்கூடிய ஆற்றல் பெற்றவர்.

ஜில் ஜில் ரமாமணி

"தில்லானா மோகனம்பாள்', மனோரமாவின் நடிப்பில் ஒரு மணி மகுடம். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் "ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டரில் வரும் மனோரமாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. டி.எஸ்.பாலையா, சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு முன் நடிப்பதால் முதலில் இப்படத்தில் நடிப்பதற்கு மனோரமா தயங்கியுள்ளார். பின் இயக்குநர் தைரியம் ஊட்டி இவரை நடிக்க வைத்தார்.

விருதுகள்

1989ம் ஆண்டு "புதிய பாதை' என்ற படத்தில் நடித்தற்காக, "சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்ம ஸ்ரீ' விருதை மனோரமா பெற்றார். தமிழக அரசின் "கலைமாமணி' விருது ஆகியவற்றை மனோரமா பெற்றுள்ளார். ஆச்சியின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு "கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. அதிக படத்தில் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார்.

முக்கிய நிகழ்வுகள்

* 1963ல் வெளிவந்த "கொஞ்சும் குமரி' என்ற படத்தில் நடிகையாக மனோரமா அறிமுகமானார்.

* "கண் திறந்தது' படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனுடன் மனோராமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

* "குன்வர பாப்' என்ற இந்தி படத்தில் மெகமூத் என்ற பாலிவுட் காமெடி நடிகருடன் நடித்துள்ளார்.

* "நடிகன்' என்ற படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் 50 வயது திருமணமாகாத பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் மனோரமாவுக்கு பிடித்த படங்களில் ஒன்று.

* அதிகளவில் "அம்மா' கேரக்டர்களில் மனோரமா நடித்துள்ளார்.

* இவரது இளமை பற்றி மனோரமாவிடம் கேட்டபோது, "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என தெரிவித்தார்.

* ஒரு "டிவி' நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் "சோ', இவரை "பெண் சிவாஜி' என்று குறிப்பிட்டார்.

* மனோரமா கடைசியாக சிவாஜியை (இறப்பதற்கு முன்) சந்தித்த போது, சிவாஜி தன் மனைவியிடம் "தமிழ் மொழியில் மனோரமாவைத் தவிர, எவராலும் இந்தளவுக்கு நடிக்க முடியாது' என தெரிவித்தார். இது தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என மனோரமா தெரிவித்தார்.

* "உனக்கும் வாழ்வு வரும்' என்ற படத்தில், மனோரமா ஊமையாக நடித்திருப்பார்.

* "மஞ்சள் குங்குமம்' என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை "கட்டுவிரியன்' பாம்பு கடித்து விட்டது. பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பின், அடுத்ததாக நடித்த "ஆடி விரதம்' படத்தில் பாம்பு சிலையை குளிப்பாட்டி தாலாட்டும் பாட்டு சீன் ஒன்றில் நடித்தார்.

* இவர் கடைசியாக நடித்த படம் "பொன்னர் சங்கர்'.

நடித்த சில முக்கியபடங்கள்:

5 தலைமுறை நடிகை

*மாலையிட்ட மங்கை (முதல் திரைப்படம் )
*தில்லானா மேகனம்பாள்
*களத்தூர் கண்ணம்மா
*திருவிளையாடல்
*அன்பேவா
*கந்தன் கருணை
*கலாட்டா கல்யாணம்
*காசேதான் கடவுளடா
*முகமது பின் துக்ளக்
*அனுபவி ராஜா அனுபவி
*பாட்டி சொல்லை தட்டாதே
*சம்சாரம் அது மின்சாரம்
*சின்னக்கவுண்டர்
*அபூர்வ சகேதாரர்கள்
*எஜமான்
*மன்னன்
*அண்ணாமலை
*ரசிகன்
*சின்னதம்பி
*சூரியன்
*கிழக்கு வாசல்


பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 நேற்று(10-10-15) இரவு 11 மணியளவில் மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று இரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது தனது திரைப்பட வாழக்கையில்.வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ ,தேசிய விருதுஉள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையி்ல் அவரது உடல் வீ்ட்டில் வைக்கப்பட்டுள்ளது

"பெண் நடிகர் திலகம்' என்று மனோரமாவுக்கு முதல்வர் ஜெயலலிதா புகழாரம் சூட்டினார்.

  சென்னை தியாகராய நகரில் உள்ள மனோரமாவின் இல்லத்தில், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறியது:

  எனது மூத்த சகோதரி மனோரமா இயற்கை எய்திவிட்டார். எனக்கு ஏற்பட்ட துக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஏராளமான திரைப்படங்களில் மனோரமாவும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம். அவர் என்னை "அம்மு' என்று அழைப்பார். நான் என்றுமே "மனோரமா' என்று தான் அழைப்பேன். படப்பிடிப்பு இல்லாத நாள்களில் பல முறை அவரது இல்லத்துக்கு நான் சென்றிருக்கிறேன்.

"சாப்பிடுகிறாயா அம்மு?' என்று கேட்பார். "சரி' என்பேன். அவர் கையாலே எனக்கு உணவு பரிமாறுவார். அதேபோல பல முறை எனது இல்லத்துக்கு வந்திருக்கிறார். என்னுடன் அமர்ந்து உணவு அருந்தியிருக்கிறார். அந்த நாள்களை மறக்க முடியாது. எனக்கும், மனோரமாவுக்கும் இருந்த ஒரு பந்தத்தை என்றைக்கும் யாராலும் பிரிக்க முடியாது.

  மனோரமா மீது எம்.ஜி.ஆருக்கு ஒரு அலாதி பிரியம் எப்போதும் உண்டு. அதேபோன்று நடிகர் திலகமும் என்னிடம் மனோரமா பற்றி பேசும்போது, நடிப்பில் "மனோரமா ஒரு ஜீனியஸ்' என்று பலமுறை கூறியிருக்கிறார். உண்மையிலேயே, அவர் நடிப்பில் ஒரு மேதை தான்.
  நடிகர் திலகம் சிவாஜிகணேசன் போல், மனோரமாவும் "நடிகையர் திலகம்' அல்லது "பெண் நடிகர் திலகம்' என்றே சொல்லலாம்.

  மனோரமாவை போல், ஒரு சாதனையாளர் தமிழ் திரையுலகில் இதற்கு முன்பு எவரும் இருந்ததில்லை. இனி எவரும் பிறக்கப் போவதில்லை. அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இனி எந்த காலத்திலும் எவராலும் நிரப்ப முடியாது.

  அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டும். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றார்.