மொத்தப் பக்கக்காட்சிகள்

10/26/2015

கருவேல மரங்களை ஒழிக்க மருந்து

 
கருவேல மரங்களை ஒழிக்க மருந்து

மதுரை :
 
கருவேல மரங்களை அடியோடு ஒழிக்கும் 'அக்ரோ கேர்' என்ற புதிய மருந்தை மதுரை 'சத்யகிரஹா பவுண்டேஷன்' அமைப்பினர்  அறிமுகப் படுத்தியுள்ளனர்.
.
இதன் நிறுவனர் ரமணன் கூறியதாவது:
 
கருவலே மரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் இந்தியாவில் இல்லை. வியட்நாமில் டாக்டர் டாம் என்பவர், இதுதொடர்பாக 15 ஆண்டுகள் ஆய்வு செய்து இம்மருந்தை கண்டுபிடித்துள்ளார். 
 
எங்கள் பவுண்டேஷனும் கருவேல மரங்களை அழிக்கும் முயற்சிகளை எடுத்து வந்தது.
.
அவரது மருந்தை இங்கு சோதித்து பார்த்த போது, கருவேல மரம் 7 நாட்களில் கருக ஆரம்பித்தது.'அக்ரோ கேர்' என்ற இம்மருந்து, ஒரு ஏக்கரில் பயன்படுத்த ரூ.4 ஆயிரம் செலவாகும். இதை பயன்படுத்தினால் முற்றிலுமாக ஒழித்து விடலாம். கருவேல மரங்கள் பாதித்த மாவட்டங்களுக்கு இந்த மருந்து ஒரு வரப்பிரசாதம், என்றார்.தொடர்புக்கு 98658 78142.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக