மொத்தப் பக்கக்காட்சிகள்

2/20/2015

தந்தை



தன் தந்தையைப் பற்றி ஒரு மகனின் கண்ணோட்டம்.

5 ஆவது வயதில் - எங்கப்பாவால முடியாத காரியம் எதுவுமே கிடையாது, அவரால் எதுவும் செய்ய முடியும், அவர் மிகவும் கெட்டிக்காரர்.

10 ஆவது வயதில் - ஏனோ எங்கப்பாவிற்க்கு சில விசயங்கள் புரியவே மாட்டேங்குது, விளையாடவே விடமாட்டேங்குறார், எப்போதும் படி படி என்கிறார்.

15 ஆவது வயதில் - அப்பா இருந்த காலம் வேறு, இப்ப காலம் எவ்வளவோ மாறிப் போச்சு, அவருக்கு வயசாயிட்டதால ஒண்ணுமே புரிய மாட்டேங்குது, பழசையே நினைத்துக் கொண்டு பேசுகிறார்.

18 ஆவது வயதில் - போயும் போயும் அப்பாகிட்ட போய் இதை ஏன் கேட்டேன், நல்லா குழப்பி விட்டுட்டார்.

21 ஆவது வயதில் - ஐயோ எங்கப்பாவா ? ஒரு நிமிஷம் கூட உட்கார்ந்து பேச முடியாது, சரியான அறுவைக் கேசு, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவார்.

30 ஆவது வயதில் - என்னதான் இருந்தாலும் அப்பாவுக்கு அனுபவம்ன்னு ஒன்னு இருக்குல்ல, அவர் யோசனையும் கொஞ்சம் கேட்டுக்கலாம்.

35 ஆவது வயதில் - சாரி ! எதற்கும் அப்பாவிடமும் ஒரு வாரத்தை கேட்டுக்கிறேன், அவரிடம் கேட்க்காமல் எதையும் நான் செய்வதில்லை.

40 ஆவது வயதில் - ஹூம்... !! இப்ப மட்டும் அப்பா இருந்திருந்தால், எவ்ளோ நல்ல ஐடியா கொடுத்திருப்பார், அவருடைய முன் யோசனையும் புத்திசாலித்தனமும் தைரியமும் இனி யாருக்கு வரும்...? எல்லாமே அவருக்கு தனி.

50 ஆவது வயதில் - ஐய்யோ... கடவுளே.... அப்பா இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லையே...
எத்தனையோ விசயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கலாம், அலட்சியமாக இருந்து விட்டேனே...
இப்போ நினைச்சாலும் தாங்க முடியவில்லையே...

உயிரோடு இருக்கும் போது தந்தையின் மதிப்பு தெரியாது.

நம் அனைவரின் மதிப்பு மிகுந்த தந்தைகள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். நன்றி....


Thanks to Malaimalar.com

2/17/2015

இந்திய உலகக் கோப்பை 1983

லண்டன் லார்ட்ஸ் மைதானம். இலக்கு 184. ஆடுவது மேற்கிந்தியத் தீவுகள் அணி. மூன்று நாட்களுக்கு முன்புதான் கிட்டத்தட்ட இதே அளவு இலக்கைச் சர்வசாதாரணமாக அடித்து தூள் கிளப்பியிருந்தது அந்த அணி. இறுதிப் போட்டியில் இந்தியாவை 183 ரன்களுக்குள் சுருட்டியதுமே மே.இ. அணிக்குக் கோப்பை கைக்கு வந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது.

மே.இ. தீவுகள் அணியின் ஓய்வறையில் இருந்த மனநிலையைப் பற்றி உறுதிப்படுத்தப்படாத சம்பவம் ஒன்று சொல்லப்படுவதுண்டு. 184 ரன்தானே, ஹெய்ன்ஸும் கிரீனிட்ஜும் அடித்துவிடுவார்கள், அவர்கள் மிச்சம் வைத்தால் அடுத்து ரிச்சர்ட்ஸும் கோம்ஸும் பார்த்துக்கொள்வார்கள், நான் ஷாப்பிங் போகிறேன் என்று பந்து வீச்சாளர் மால்கம் மார்ஷல் சொன்னாராம்.

இந்த ரன்னுக்கெல்லாம் தான் களம் இறங்க வேண்டியிருக்காது என்று நினைத்தது மார்ஷலின் தவறு அல்ல. அவரை இறங்கவைத்தது முன்னணி மட்டையாளர்களின் தவறு. 

ஸ்ரீகாந்தின் அதிரடி
 
டாஸ் வென்ற லாயிட்ஸ் இந்தியாவை பேட்டிங் செய்யப் பணித்தார். கவாஸ்கர் விரைவில் ஆட்டமிழந்தாலும் ஸ்ரீகாந்த் ஆக்ரோஷமாக ஆடி 38 ரன் எடுத்தார். ஆன்டி ராபர்ட்ஸின் பவுன்சர்களில் அவர் பவுண்டரியும் சிக்சரும் அடித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

ஆனால் மற்றவர்கள் சரியாக ஆடவில்லை. பந்து வீச்சின் உக்கிரம் யாரையும் நிற்கவிடவில்லை. அமர்நாத்தும் (28) சந்தீப் பாட்டீலும் (27) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார்கள். அவர்களுக்கு அடுத்து அதிக ரன்கள் (20) வந்தது உபரிகள் மூலமாகத்தான். 

54.4 ஓவர்களில் 183க்கு இந்தியா ஆட்டமிழந்த பிறகு மே.இ. அணியின் உற்சகம் கரைபுரண்டது. ஹெய்ன்ஸும் கிரீனிட்ஜும் பதற்றமில்லாமல் ஆடத் தொடங்கினர். ரன்கள் குறைவாக இருந்ததால் விக்கெட்களை வீழ்த்தினால்தான் விமோசனம் என்பதால் டெஸ்ட் போட்டியைப் போலத் தாக்குதல் வியூகம் அமைத்தார் கபில்.
ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே பல்வீந்தர் சிங் சந்து வீசிய ஒரு ஒரு பந்தை ஆட விரும்பாமல் கிரீனிட்ஜ் மட்டையை உயர்த்தினார். அது இன்ஸ்விங்கர் என்பதை அவர் கணிக்கவில்லை. கிரீனிட்ஜின் கை உயர்த்தியிருக்க, பந்து உள்ளே புகுந்து ஆஃப் ஸ்டெம்பைச் சாய்த்தது. இந்தியாவின் நம்பிக்கை துளிர்த்தது. ஸ்கோர் 5-1.
மறக்க முடியாத கேட்ச்

ஆனால் 50 ரன்களை எட்டும்வரை அடுத்த விக்கெட் விழவில்லை. ரிச்சர்ட்ஸும் ஹெய்ன்ஸும் அலட்டிக்கொள்ளாமல் ஆடிக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக ரிச்சர்ட்ஸ் வழக்கமான அதிரடியை மேற்கொண்டார். 28 பந்துகளில் 33 ரன் அடித்தார். ரிச்சர்ட்ஸ் ஆடிய ஆட்டம் இந்திய அணியினரின் ஊக்கத்தை அடித்துத் துரத்துவதுபோல இருந்தது. ஸ்கோர் 50ஆக இருக்கும்போது ஹெயின்ஸ் (13) ஆட்டமிழந்தாலும் ரிச்சர்ட்ஸின் தாண்டவத்தைப் பார்க்கும்போது ஆட்டம் முடிந்தது என்றே தோன்றியது.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. மதன்லாலின் பந்து ஒன்றை ரிச்சர்ட்ஸ் புல் ஷாட் அடித்தார். பந்தின் தையல் பகுதி தரையில் பட்டதில் பந்து எழும்பியதும் சற்றுத் திசை மாறியது. மட்டையின் மத்தியில் படாமல் சற்றே மேலே பட்டு உயர எழும்பியது. மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த கபில் தலையை அண்ணாந்து பந்தைப் பார்த்தபடி பின்னால் ஓடினார். பந்து பறந்த திசையைக் கணித்தபடி ஓடினார். பந்து விழும் இடத்தைச் சரியாகக் கணித்து கேட்ச் பிடித்தார். அப்போது ஸ்கோர் 57-3. இந்திய அணியினரின் நம்பிக்கை புத்துயிர் பெற்றது.

ஸ்கோர் 66 ஆக இருக்கும்போது கோம்ஸும் லாயிடும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து பேச்சஸ் ஆட்டமிழந்தார். ஸ்கோர் 76-6. அடுத்து ஜோடி சேர்ந்த ஜெஃப் துஜோனும் மார்ஷலும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பொறுமை காட்டினார்கள். இவர்கள் இருவரும் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினார்கள். மே.இ. அணி 100 ரன்களைக் கடந்தது. நெருக்கடியையும் அது கடந்துவிடும் என்று தோன்றியது.

அப்போது மீண்டும் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. அமர்நாத்தின் புதிரான பந்து வீச்சு துஜோனின் ஸ்டெம்பைத் தட்டிச் சென்றது. துஜோன் நொந்துபோனார். அணியின் நிலை மீள முடியாத கட்டத்தை எட்டிவிட்டது என்பதை உணர்ந்த அவர் பெரும் வேதனையுடன் பெவிலியன் திரும்பியதை அவரது உடல் மொழி உணர்த்தியது. அதைவிட வேதனையான தருணம் அவருக்குக் களத்தில் வாய்த்திருக்காது என்று சொல்லலாம்.

ஸ்கோர் 119-7. ஷாப்பிங் போக ஆசைப்பட்ட மார்ஷலும் அமர்நாத்தின் வீச்சில் கவாஸ்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்கோர் 125-8. அடுத்து ராபர்ட்ஸ் விக்கெட்டை கபில் சாய்க்க, ஹோல்டிங்கை அமர்நாத் வெளியேற்றினார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்.

இந்திய ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது. இந்திய அணியினர் பொங்கி வந்த ஷாம்பெயின் நுரையில் மிதந்தார்கள். கோப்பையைக் கையில் ஏந்தியபடி கபில் நிற்கும் காட்சி இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சித்திரங்களில் ஒன்றாக நிலைபெற்றுவிட்டது.
அந்தக் கோப்பை இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை மாற்றியது. இந்தியாவில் கிரிக்கெட்டின் வீச்சைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்தது. ஒரு விதத்தில் கிரிக்கெட் இன்று இருக்கும் நிலைக்கு அஸ்திவாரம் என்றுகூட அந்த வெற்றியைச் சொல்லலாம். வேறு எந்த வெற்றியும் கிரிக்கெட் வரலாற்றை இந்த அளவுக்கு மாற்றி எழுதவில்லை.

கூட்டாகப் பெற்ற வெற்றி

கோப்பையை வென்ற பெருமையில் கபிலுக்கே முதல் மரியாதை. மட்டையிலும் பந்து வீச்சிலும் வியூகம் அமைப்பதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். ஆனால் மற்றவர்களின் பங்கும் முக்கியமானதுதான். குறிப்பாகப் பந்து வீச்சாளர்கள்.

தொடர் முழுவதும் முன்னணிப் பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஒரு ஓவருக்கு 4 ரன்னுக்கும் குறைவாகவே தந்தார்கள். ஸ்ரீகாந்த், சந்தீப் பாட்டீலின் அதிரடி, அமர்நாத், யாஷ்பாலின் ஸ்திரமான ரன் குவிப்பு, கிர்மானியின் விக்கெட் கீப்பிங் என அனைத்தும் சிறப்பாக அமைந்த தொடர் அது. அனைவரும் சிறப்பாக ஃபீல்டிங் செய்தார்கள்.

மதியூக வியூகம்

இறுதிப் போட்டி பற்றிப் பேசும்போது பின்னாளில் ஸ்ரீகாந்த் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். கிளைவ் லாயிடுக்குக் காலில் அடிபட்டிருந்தது. அவர் முன் காலில் வந்து ஆடுவதற்குச் சிரமப்பட்டார். அதைக் கவனித்த இந்திய வீச்சாளர்கள் அவர் முன்னால் வந்து ஆடும் விதமாகவே பந்து வீசினார்கள். ரிச்சர்ட்ஸ் அவுட் ஆன நிலையில் சற்றே நெருக்கடிக்குள்ளான லாயிட் சிரமப்பட்டு ஆடிக்கொண்டிருந்தார்.

பின்னி வீசிய பந்தை முன்னால் வந்து அவர் அடித்த ஒரு ட்ரைவ் அவர் எதிர்பார்த்தபடி அமையாமல் மிட் ஆஃப் திசையில் இருந்த கபிலின் கையில் கேட்சாக மாறியது. லாயிட் ரிச்சர்ட்ஸைப் போன்ற மட்டையாளர் அல்ல என்றாலும் மிகவும் ஸ்திரமாக நின்று ஆடக்கூடியவர். அவரை வீழ்த்தத் தாமதமாகியிருந்தால் போட்டியை அவர் திசைதிருப்பியிருப்பார் என்பதால் இதுவும் முக்கியமான திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.

11/08/2014

கடவுள் !

 
 
அண்டம் காக்கும்
கடவுளைப் பார்க்க
காத்திருக்கிறேன்
தரிசன
வரிசையில்!





 
எனக்கு மட்டும்
காட்சி தருகிறார்
என் கடவுள்
விஷேச கட்டணத்தில் !


என் கடவுள்
காக்கும் கடவுள்
என் மதத்தினரை
மட்டும்!




இது உண்டியல்
அல்ல
நான் தெரிந்தேசெய்த
தவறுகளை
அங்கீகரிக்க
நான் கடவுளுக்கு
அளிக்கும்
தூண்டில்!



தெய்வம்
எனக்குச் சொந்தமா
தெரியாது
ஆனால்
எனக்குச் சொந்தமாக
குலதெய்வமே
இருக்கிறது!






கடவுளைத்தேடி
சென்ற
இடமெல்லாம்
நான்
இருந்தேன்
கடவுள் மட்டும் இல்லை!



என் கடவுள்
மட்டுமே
உயர்ந்தவர்
என்று
தாழ்ந்தவர்கள்
சண்டையிட்டுக்கொள்கிறார்கள் !




மதம் மனிதனை
பிடித்தது
மனிதனுக்கு மதம்
பிடித்தது
பிறகு மனிதனுக்கு
மனிதனையே
பிடிக்கவில்லை !



என்னைக் காப்பாற்ற
வேண்டிய கடவுளுக்கு
திருடர்களிடம்
தன்னைக் காப்பாற்ற
இயலவில்லை !



அந்நியர்கள்
யாரும்
உட்பிரவேசிக்கக்கூடாது
என கடவுளின்
சந்நிதானத்தில்
கடவுளுக்கு
அந்நியமானவர்கள்
எழுதிவைத்திருக்கிறார்கள் !



தாயுள்ளம் கொண்ட
கடவுள்
தாயார்கள் தொட்டாலே
தீட்டாகிவிடும்
மாயம் என்ன ?



தீண்டாமை நன்று
கடவுளின் பெயரால்
சக மனிதனின்
உணர்வுகளை
தீண்டாமை நன்று!
 
 
Thanks to 
 http://naveenprakash.blogspot.in

தாயுள்ளம் !




புலம்பும் தாய்

புலம்ப மறுக்கும் தந்தை..
 

புடவை பின்னால் ஒளிந்து கொண்ட மகன்...
 

மறந்து போனான்..
 

தான்  பெற்றதும் மகன் என்பதை...

*************

10 மாதம் கருவறையில் சுமந்த எனக்கு

என் மகன் வீட்டில் ஒரு சிறு அறை கூட கிடைக்கவில்லை!


**************

மார்பிலே தவழவிட்டு
மகனோடு கொஞ்சுகிறான்
என் மகன்!
இப்படித்தான் அவனை
ஈரமுடன் நான் வளர்த்தேன்!
எப்படித்தான் மறந்தானோ…
என்னை இன்று துரத்திவிட்டான்!
முதுமையில் தனிமையாய்
வறுமையின் கொடுமையோடு
தள்ளாடித் தவித்தபோதும்
விழிகள் பரபரக்கும்
தூரத்தில் நின்றேனும்
ஒருமுறை என் மகனைக் காண!
பிரார்த்தனை
வேறொன்றுமில்லை
கடைசிவரை கைவிடாமல்
பேரனாவது காக்க வேண்டும்
என் மகனை!
 
Thanks to tamilparents.com
 

11/01/2014

ஏற்றுமதி செய்வது எப்படி? - How to Export products



நீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா? "ஆம்" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் IEC என்ற Code யைப் பெற வேண்டும். IEC என்றால் Importer Exporter Code என்று பொருள். இந்த IEC code இல்லாத எந்த ஒரு நிறுவனமோ அல்லது ஒரு தனி நபரோ இந்தியாவிலிருந்து ஏற்றுமதி/இறக்குமதி முடியாது. அதாவது நாம் ஏற்றுமதி/இறக்குமதியைச் செய்வதற்கு இந்திய அரசு வழங்கும் உரிமம் (license) தான் IEC code ஆகும். இந்திய வாணிப அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் (Director General of Foreign Trade, Ministry of Commerce, Govt. of India) இதனை வழங்குகிறார்.

மதுரை அலுவலக முகவரி :

The Joint Director General of Foreign Trade,
Plot No.117, Ist Main Road, K.K. Nagar,
Madurai - 625 020
Tel:  0452-2586485

நீங்கள் ஏற்றுமதி செய்ய முடிவெடுத்தபின் முதலில் செய்ய வேண்டியது, அது எந்த வகையான ஏற்றுமதி நிறுவனம் என்பதை தேர்ந்தெடுப்பதுதான்.

பொதுவாக நிறுவனங்கள் என்றுஎடுத்து கொண்டால்,
1.Proprieter, (தனி ஒரு நபராக செயல் படுவது)
2.Partnership, (சிலர் கூட்டாக சேர்ந்து செயல் படுவது)
3.Private limited (பலர்கூட்டாக சேர்ந்து செயல் படுவது)

எனும் இந்த மூன்று வகைகளில்தான் இருக்கும். இதில் எந்த வகை சிறந்தது என்றால்,அது Proprietor ஆகத்தான் இருக்கும். இதில் நீங்கள்தான் முதலாளி. உலகில் என்பது சதவிகிதம் பேர் இந்த வகை ஏற்றுமதியாளர்களே.

இந்த மூன்றில் நீங்கள் எந்த வகையான நிறுவனத்தை தொடங்கபோகிறீர்கள் என்பதை முடிவெடுத்த பின், அடுத்து நீங்கள் என்ன வகையான ஏற்றுமதியாளர் என்பதை முடிவெடுக்க வேண்டும். இதில் இரண்டு வகை உண்டு.

1.Merchant exporter
(பொருட்களை பிறரிடமிருந்து      வாங்கி    ஏற்றுமதி செய்வது)

2.Manufacture exporter
(பொருட்களை நீங்களே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது)

இதில், நீங்கள் முதல் வகையான இறக்குமதியாளர் கேட்கும் பொருட்களை, பிறரிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்யும் Merchant exporter - ஆக இருப்பதே சிறந்தது.

காரணம், நீங்கள் Merchant exporter - ஆக இருப்பின் எந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியும். அதுவே, நீங்கள் Manufacturer export - ஆக இருப்பின் நீங்கள் குறிப்பிட்ட பொருட்களை மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழிலின் 17 ரகசிய விவரம் மற்றும் முகவரிகள்

Step 1: ஏற்றுமதிக்கான பொருள் மற்றும் இறக்குமதியாலரை அடையாளம் காணுதல்.
Step 2: ஏற்றுமதி நிறுவனத்தை அமைத்தல்.
Step 3: பான் கார்டு எண் பெறுதல்.
Step:4 I.E. Code விண்ணப்பித்து பெறுதல்.
ஏற்றுமதி-இறக்குமதி லைசென்ஸ்( I.E.CODE) பெறுவது எப்படி?

Step 5: உங்கள் பொருளுக்கு பொருத்தமான ஏற்றுமதி வளர்ச்சி கழகத்தில் உறுபினராதல

ஏற்றுமதி மேம்பாட்டுசபைகள்- ஏற்றுமதி பண்டம் வாரியங்க ள்- EXPORT COMMODITY BOARDS – EXPORT PROMOTION COUNCIL

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வர்த்தகம்
அரசு. தமிழ்நாடு
வேளாண்மை, சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிக துறை
Cipet ரோடு, தொழிற்பேட்டை
கிண்டி, சென்னை - 600 032
தொலைபேசி: +91- 044-22347484
தொலைபேசி: +91- 044-24464959
மின்னஞ்சல்: agrimarkbusiness [AT] rediffmail [dot] com
இந்தியாவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு சபை
பொறியியல் எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: உலக வர்த்தக மையம். 14/IB, எஸ்ரா தெரு, கல்கத்தா 700 001.
தொலைபேசி. : (91) 33-263080/81/82/83/84/85
தொலைநகல்: (91) 33-2258968
E-Mail:
eepc-ho@eepc.ho.cmc.net.in
இணையத்தளம்:
http://www.eepc.gov.in
இந்தியா வெளிநாட்டு கட்டுமான COUNCIL
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: H-118, இமயமலை ஹவுஸ், 11 மாடி, 23, கஸ்தூர்பா காந்தி மார்க், புது தில்லி 110 001
தொலைபேசி. : (91) 11-3312936/3327550
தொலைநகல்: (91) 11-3312936
இணையத்தளம்:
http://www.occi.org
BASIC CHEMICALS, மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: ஜான்சி கோட்டை, 4 வது மாடி, 7-Cooperage ரோடு, மும்பை 400 039
தொலைபேசி. : (91) 22-2021288/2021330/2026549
தொலைநகல்: (91) 22-2026684
இணையத்தளம்:
http://www.chemexcil.com
ரசாயனம் மற்றும் ALLIED PRODUCTS எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: உலக வர்த்தக மையம், 14/IB, எஸ்ரா தெரு, கல்கத்தா 700 001.
தொலைபேசி. : (91) 33-267733/34/35, 267082
தொலைநகல்: (91) 33-2255070

PLASTICS & LINOLEUMS எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: மையம், நான், 11 வது மாடி, உலக வர்த்தக மையம், Cuffee பரேடு, கொலாபா, மும்பை -400 005
தொலைபேசி. : (91) 22-2184474/2184569
தொலைநகல்: (91) 22-2184810
E-Mail:
plexcon@giasbm01.vsnl.net.in
plexho@bom3.vsnl.net.in
இணையத்தளம்:
http://www.plexcon.com
LEATHER ஏற்றுமதி கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: தோல் மையம், (3 மாடி மற்றும் 4 வது தளம்) 53, Sydenhams, சாலை, Periameret, சென்னை -600 003
தொலைபேசி. : (91) 44-589098/582041
தொலைநகல்: (91) 44-588713/587083
E-Mail:
cle@giasmdo1.vsnl.net.in
இணையத்தளம்:
http://www.leatherindia.com
விளையாட்டு பொருள்களை எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: 1-மின் / 6, சுவாமி ராம் Tirth நகர், Jhandewalan Extn. புது தில்லி-100 055
தொலைபேசி. : (91) 11-525695/529255
தொலைநகல்: (91) 11-7532147
இணையத்தளம்:
http://www.sportsgeepc.com
GEM மற்றும் ஜூவல்லரி EXPOR கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: டயமண்ட் பஜார், 5 வது மாடி, 391-A, Dr.D.Bhadkamkar மார்க், மும்பை -400 004
தொலைபேசி. : (91) 22-3871135/3888004
தொலைநகல்: (91) 22-3868752

அரக்கு எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: உலக வர்த்தக மையம், 14/IB எஸ்ரா தெரு, கல்கத்தா 700 001
தொலைபேசி. : (91) 33-2482070
தொலைநகல்: (91) 33-2484046

முந்திரி எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: போஸ்ட் பாக்ஸ் No.1709, சித்தூர் சாலை, தெற்கு எர்ணாகுளம், கொச்சி-682 016.
தொலைபேசி. : (91) 484-351973/361459
தொலைநகல்: (91) 484-370973

மின்னணு மற்றும் கணினி மென்பொருள் எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: டி-ஹவுஸ், நிலை, இரண்டாம், 3 வது மாடி, எதிரில், ஆசிய விளையாட்டு கிராமம், புது தில்லி 110 0 16..
தொலைபேசி. : (91) 11-696103/696206/654463
தொலைநகல்: (91) 11-6853412
E-Mail:
esc@giasdl01.vsnl.net.in
இணையத்தளம்:
http://www.indiansources.com
· ஜவுளி துறை:
ஆடை எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: NBCC டவர்ஸ், 15 Bhikaji காமா பிளேஸ், புது தில்லி – 110 066.
தொலைபேசி. : (91) 11-883351 / 6888505/6888656/6888300/6884578
தொலைநகல்: (91) 11-6168584
இணையத்தளம்:
http://www.aepc.com
CARPET எக்ஸ்போர்ட் கவுன்சில்
நிர்வாக இயக்குநர்: நபர் தொடர்பு
முகவரி: 101-A / 1, கிருஷ்ணா நகர், (அரசு பின்னால் சீனியர் பதிவாளர் பள்ளி..), சப்தர்ஜங் என்கிளேவ், புது தில்லி 110029.
தொலைபேசி. : (91) 11-602742/601024
தொலைநகல்: (91) 11-6115299/6847903.

பருத்தி ஜவுளி எக்ஸ்போர்ட் கவுன்சில்
தலைவர் முகவரி: – 400 004 பொறியியல் மையம், 5 வது மாடி, பம்பாய் நபர் தொடர்பு.
தொலைபேசி. : (91) 22-3632910/11/12/13
தொலைநகல்: (91) 22-3932914
இணையத்தளம்:
http://www.texprocil.com
கைவினை பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு COUNCIL
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: 6, சமூக மையம், IInd மாடி, பசந்த் லோக், வசந்த் விகார், புது தில்லி – 110 057.
தொலைபேசி. : (91) 11-6875377/60087
தொலைநகல்: (91) 11-606144
E-Mail: secy.epch @ axcess.net.in
இணையத்தளம்:
http://www.epcd.asiansources.com
கைத்தறி எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: 18, கதீட்ரல் கார்டன் ரோடு, Nunagambakkam, சென்னை 600 034.
தொலைபேசி. : (91) 44-8276043/8278879
தொலைநகல்: (91) 44-8271761

இந்திய பட்டு எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: 62, மிட்டல் சேம்பர்ஸ், 6 வது மாடி, நரிமன் பாயின்ட், மும்பை – 400 021.
தொலைபேசி. : (91) 22-2025866,2027662,2049413,
தொலைநகல்: (91) 22-2874606

செயற்கை & RAYON TEXTILE எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: ரேஷம் பவன், 78, நரிமன் பாயின்ட் சாலை, மும்பை வீர் – 400 020.
தொலைபேசி. : (91) 22-2048797/2048690
தொலைநகல்: (91) 22-2048358

கம்பளம் & WOOLENS எக்ஸ்போர்ட் கவுன்சில்
நபர் தொடர்பு: தலைவர்
முகவரி: 312/714, அசோகா எஸ்டேட், 24, பாரக்கம்பா ரோடு, புது தில்லி – 110 001.
தொலைபேசி. : (91) 11-3315512/3315205
தொலைநகல்: (91) 11-3314626
இணையத்தளம்:
http://www.wwepc.com
இந்தியாவில் ஊக்குவிப்பு சபை ஏற்றுமதிவிவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA)
NCUI கட்டிடம், கட்டிடம், ப்ளாட் # 3, # RD மாடி, இலங்கை நிறுவன ஏரியா, ஆகஸ்ட் கிராந்தி Larg
புது தில்லி-110066

தொலைபேசி: +91-11-26514572, 26513204
தொலைநகல்: +91-11-26195016
மின்னஞ்சல்:
apeda@giasdl01.vsnl.net.in
ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்
15, NBCC டவர், Bhikaji காமா பிளேஸ்,
புது தில்லி-110 066

தொலைபேசி: +91-11-26183351, 26169352, 26169357
தொலைநகல்: +91-11-26188584, 26188300


அடிப்படை கெமிக்கல்ஸ் மருந்துத்துறை & ஒப்பனை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்
ஜான்சி கோட்டை, 4 வது மாடி, மற்றும், Cooperage சாலை
மும்பை 400 029

தொலைபேசி: +91-22-2021330 / 22021288
தொலைநகல்: +91-22-22026684

மின்னணு & கணினி மென்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்
டி வீடு (3 வது மாடி), எதிரில் ஆசிய விளையாட்டு கிராமம்,
புது தில்லி-110 016

தொலைபேசி: +91-11-26965103 / 26964463
தொலைநகல்: +91-11-26853412
மின்னஞ்சல்:
esc@nda.vsnl.net.in; esc@vsnl.com

Powerloom அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்
16, 1t மாடி, மிட்டல் சேம்பர்ஸ்,
நரிமன் பாயின்ட், மும்பை – 400 021

தொலைபேசி: +91-22-2284 6518/9
தொலைநகல்: +91-22-22846517
மின்னஞ்சல்: pdexcil.pdepc @ gems.vsnl.net.in

கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்
MPEDA ஹவுஸ், பெட்டி எண் 4272,
Panampilly நகர் அவென்யூ, கொச்சி – 682 036
தொலைபேசி: +91-484-2311979 / 2311803 தொலைநகல்: +91-484-2313361
மின்னஞ்சல்:
mpeda@vsnl.com mpeda@mpeda.nic.in mpeda@asianetonline.net
பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்
படிக டவர், தரைத்தளம்,
படிக கூட்டுறவு. வீட்டு சங்கம்,
Gundowli சாலை, ஐயா, எம்.வி. இனிய இல்லை 3. சாலை,
அந்தேரி (மின்), மும்பை – 400 069

தொலைபேசி: +91-22-2831 3951/52
தொலைநகல்: +91-22-2832 7860
மின்னஞ்சல்:
plexconcil@vsnl.com
இந்திய வெளிநாட்டு கட்டுமான கவுன்சில்
H-118, இமயமலை ஹவுஸ், 11 வது மாடி,
23 கஸ்தூர்பா காந்தி மார்க்,
புது தில்லி – 110 001

தொலைபேசி: +91-11-2335 0367/2372 2425
தொலைநகல்: +91-11-2331 2936
மின்னஞ்சல்:
occi@giasdl01.vsnl.net.in

சணல் உற்பத்தியாளர்கள் அபிவிருத்தி சபை
3A, பார்க் பிளாசா
71 பார்க் தெரு
கொல்கத்தா-700 016
தொலைபேசி: 033-22172107/22493825/22263438
தொலைநகல்: 033-22172456
மின்னஞ்சல்:
jmdc@jute.com; jmdcindia@vsnl.com
இணையத்தளம்:
www.jmdcindia.com; www.jute.com
இந்திய திட்டம் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், H-118, இமயமலை ஹவுஸ், 11 மாடி
23, கஸ்தூர்பா காந்தி மார்க்
புது தில்லி-110 001
தொலைபேசி: 011-23722425/23350367
தொலைநகல்: 011-23312936
மின்னஞ்சல்:
info@projectexports.com
இணையத்தளம்:
www.projectexports.com
சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்
சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்,
# 1206, Chiranjiv கோபுரம், 43, நேரு பிளேஸ்,
புது தில்லி-110019.
தொலைபேசி :011-26453668, 26453666
பேக்ஸ் :011-26453667
இணையத்தளம்:-www.servicesepc.com

கம்பளி மற்றும் கம்பளிகளை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்
906, புது தில்லி ஹவுஸ்
27, பாரக்கம்பா சாலை
புது தில்லி-110 001
தொலைபேசி: 011-23315512/23315205
தொலைநகல்: 011-23730182
மின்னஞ்சல்:
wwepc@bol.net.in; headoffice_wwepc@yahoo.co.in
இணையத்தளம்:
www.wwepcindia.com
கம்பளி கைத்தொழில் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்
சர்ச்கேட்டில் சேம்பர், 7 வது மாடி
5, நியூ மரைன் லைன்ஸ்
மும்பை 400 020
தொலைபேசி: 022-22624372
தொலைநகல்: 022-22624675
மின்னஞ்சல்:
mail@wooltexpro.com
இணையத்தளம்:
www.wooltexpro.com

ஏற்றுமதி பண்டம் வாரியம்
காபி வாரியம்
பெட்டி No.5366 பதிவு
எண் .1, டாக்டர் அம்பேத்கர் வீதி
பெங்களூர் 560 001
தொலைபேசி: 080-22266991-94
தொலைநகல்: 080-22255557
மின்னஞ்சல்:
cofboard@vsnl.com
இணையத்தளம்:
www.indiacoffee.org
தென்னை வாரியம்
தென்னை ஹவுஸ்
எம் ஜி ரோடு
கொச்சி-682 016
தொலைபேசி: 0484-2351807
தொலைநகல்: 0484-2354397
மின்னஞ்சல்:
coir@md2.vsnl.net.in
இணையத்தளம்:
www.coirboard.gov.in
ரப்பர் வாரியம்
சாஸ்திரி ரோடு
பி பி No.1122
கோட்டயம்-686 002
தொலைபேசி: 0481-2353790,2571522,2353311
பேக்ஸ்: 0481-2353790,2353121

மசாலா வாரியம்
Sugandha பவன்
என் எச் மூலம், பாஸ், பி பி No.2277
Palarivattom அஞ்சல்
கொச்சி-682 025
தொலைபேசி: 0484-2333610-16
தொலைநகல்: 0484-2331429/2334429
மின்னஞ்சல்:
spicesboard@vsnl.com; mail@indianspices.com
இணையத்தளம்:
www.indianspices.com
புகையிலை வாரியம்
பி பி No.322, கிராண்ட் ட்ரங்க் ரோடு
பி பி No.322, கிராண்ட் ட்ரங்க் ரோடு
குண்டூர்-522 004
ஆந்திர பிரதேசம்
தொலைபேசி: 0863-2358399/2358068
தொலைநகல்: 0863-2354232
மின்னஞ்சல்:
info@indiantobacco.com
இணையத்தளம்:
www.indiantobacco.com
தேயிலை வாரியம்
14, Biplabi Trilokya
மகாராஜ் Sarani
கொல்கத்தா-700 001
தொலைபேசி: 033-22215717/22255134
தொலைநகல்: 033-22215715
மின்னஞ்சல்:
tboardcp@cal3.vsnl.net.in

Step 6: ஏற்றுமதி பொருளுக்கான விலையை குறிபிடுதல்.
FOB; C&F; CIF
விலையை அமெரிக்க டாலர், பவுண்ட், ஸ்டேர்லிங், யூரொ (அ) ஜப்பான் யென்னில் குறிப்பிடவும்.

EXPORT COSTING என்பது ஏற்றுமதி பொருளுக்கான செலவை கணக்கிட்டு விலையை நிர்ணயிப்பது ஆகும். உற்பத்தி செலவைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இதர செலவுகளை கணக்கிட்டு பின்பு லாபத்தை சேர்க்க வேண்டும். வெளிநாட்டுக்கு சரக்கை அனுப்பும் போது சில இடர்பாடுகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதால் இந்த லாபத்தை சற்று கூடுதலாக வைக்க வேண்டும்.
அதாவது உற்பத்தி செலவு அல்லது பொருள் வாங்கும் செலவு, சிப்பத்தில் குறியீடு போடுவது, பிளாஸ்டிக் வயரைக் கொண்டு கட்டுவது, லேபில் ஒட்டுவது கப்பல் துறைமுகத்திலிருந்து உள்நாட்டுக்குள் ரயிலில் சரக்கைக் கொண்டு செல்லும் செலவு, கப்பலிலிருந்து துறைமுகத்திற்கு சரக்கை ஏற்றி இறக்க ஆகும் செலவு, துறைமுக கட்டணம், கடல் கட்டணம்(டாலரில் மட்டும்) என பலவகையான செலவுகள் உண்டு. இவற்றை கவனமாக சேர்த்துக்கொண்டு லாபத்தையும் சேர்த்து இவற்றை எல்லாம் விபரமாக வணிகர்கள் அறிந்துகொண்டு ஏற்றுமதி செய்யப்போகும் சரக்குக்கு விலை விதிக்க வேண்டும்.
  • மூலபோருளின் விலை (Raw Material) (A) ரூ.50000
  • தயாரிப்பு செலவு, ஆள் சம்பளம் பேக்கிங் செலவு (B) ரூ. 20000
  • பொருளுக்கான அடக்க விலை (A+B) ரூ. 70000
  • நமக்கான லாபம் (C) ரூ. 10000
  • பொருளுக்கான தொழிற்சாலை விலை (Ex Factory)  (A+B+C) ரூ. 80000
  • சரகுகளை துறைமுகம் / குடோன் வரை அனுப்ப ஆகும் வாகன கட்டணம் (D) ரூ. 10000
  • இப்போது விலை (A+B+C+D) ரூ. 90000
  • சரக்குகளை வெளிநாட்டு துறைமுகம் / நகரம் வரை அனுப்ப ஆகிற வாகனக் கட்டணம் (E) ரூ. 30000
  • இப்போது  C&F விலை FOB விலை + E ரூ. 120000
  • காப்புறுதி கட்டணம் (F) ரூ. 2000
  • இப்போது CIF விலை (C&F+F) ரூ. 122000
இவ்வாறு விலையை குறிப்பிட வேண்டும்.
Step 7: தொகை செலுத்துவதற்கான நிபந்தனைகளை நிர்ணயித்தல்.
முன்பணமாக பெறுதல்;
கடனுருதி கடிதம் மூலம் பெறுதல்;
ஆவணங்களின் மீது பெறுதல்;
ஆவணகள் பெற்ற பின் பெறுதல்.


Step 8: ஏற்றுமதி உத்திரவு பெறுதல் / கடனுறுதி கடிதம்.
அ) விலை (கப்பல் மூலமா, விமானம் மூலமா, என்று குறுப்பிட வேண்டும்)
ஆ) சரகுகளை அனுப்பிய தேதி.
இ) தொகை செலுத்தும் விதம்.

Step 9: ஏற்றுமதி வங்கியில் கடன் வசதி பெறுதல்.
Step 10: காப்பீடு- எல்லா இடர்களையும் காப்பீடு செய்யும் ECGC பாலிசி இறக்குமதியாளரின் நிதி தகுதி போன்றவற்றை உறுதிபடுத்தும்.
அ) ஸ்பென்செர் டவர்ஸ் 7ஆவது மாடி,
770ஆ, அண்ணா சாலை, சென்னை 600 002.
தொலைபேசி 044-2849 1026

ஆ) முதல் மாடி, காமராஜர் நகர், 2வது தெரு,
OCPM ஸ்கூல் தெரு, சின்ன சொக்கிகுளம்,
மதுரை – 625 002
தொலைபேசி: 0452 – 2520 340

இ) சேரன் பிளாசா (2வது மாடி),
1618, திருச்சி ரோடு, கோயம்புத்தூர் -641 018.
தொலைபேசி : 0422 – 2304 775

Step 11: ஏற்றுமதி பொருளின் தரத்தை சோதிக்கவும். மாதிரியை சேகரிக்கவும், தரத்தை சோதிக்கவும், இறகுமதியாலரால் ஏற்றுக்கொள்ளக் கூடிய பரிசோதனை முகவர்களால் சோதனை மேற்கொள்ள பட வேண்டும்.
Step 12: இறக்குமதியாளரின் தேவைக்கு ஏற்ப பொருள்களை பேக் செய்யவேண்டும்.
Step 13: இன்வாய்ஸ், பேய்கிங் லிஸ்ட் தயாரித்து அதனை ஷிப்பிங் ஏஜெண்டுக்கு அனுபவும்.
Step 14: சரக்கினை துறைமுகத்திலுள்ள சுங்கத்துறை கிடங்கிற்கு ஷிப்பிங் ஏஜென்ட் துணையுடன் அனுபவும்.

Ports & Port Authorities

Bedi Bunder Port Authority
Bedi Port, Jamnagar, Bedi Bunder 361002, Gujarat State
T: +91 288 74445
F:
E:
W: www.gujaratindustry.gov.in

Port of Chennai
1 Rajaji Salai, Chennai – 600 001, Tamil Nadu
T: 25362201 to 25362220, 25360151 to 25360160
F: 25361228
E: info@chennaiport.gov.in
W: www.chennaiport.gov.in


Cochin Port Trust

Willingdon Island, Cochin-682 009
T: +91 484 2666610
F: +91 484 2668163
E: mail@cochinport.com
W: www.cochinport.com


Ennore Port

No.23, First Floor, P.T. Lee Chengalvaraya Naicker Maaligai, Rajaji Salai, Chennai – 600 001
T: +91-44-25251666 (5lines)
F: +91-44-25251665
E: info@epl.gov.in
W: www.ennoreport.gov.in


Gujarat Maritime Board

Sector 10-A, Opp. Air Force Station, Gandhinagar – 382 010. Gujarat
T: 079-23238346-47-48/23238351
F: 079-23234703 / 23234704
E: gmbad1@sancharnet.in
W: www.gmbports.org


Haldia Port

Haldia Dock Complex, Midnapore – 721607
T: 3100, 3151, 3270
F: 03224 3152
E:
W:www.easternclearing.com

Jakhau Port Authority
Sector 10A, Opp. Air Force Centre, B/h. New Sachivalaya, Gandhinagar 382 010, Gujarat
T: 91-79-23238346 / 7 / 8
F: 91-79-23234703 / 4 / 5
E: gmbad1@sancharnet.in
W: www.gmbport.org

Jawaharlal Nehru Port Trust
Administrative Building, Sheva Navi, Mumbai 400707
T: +91 22 2724 2290
F: +91 22 2724 2325
E: jawahar@giasbm01.vsnl.net.in
W: www.jnport.com

Kakinada Seaports Ltd
8 -2-418, Meenakshi house, 3rd floor, Road No:7, Banjara hills, Hyderabad – 500034
T: +91-040-23357733, 23357744
F: +91-40-23357755
E: mailhyd@kakinadaseaports.in
W: www.kakinadaseaports.in/kspl/index.php
Kandla Port Trust

Business Development Cell, P.O. Box 50, Administrative Building, Gandhidham, Kutch, Gujarat
T: 91 (2836) 238055
F: 91 (2836) 239055
E: bdc@kandlaport.com
W: www.kandlaport.gov.in
Kolkata Port Trust

15, Strand Road, Kolkata – 700 001
T: (91-33) 2230-3451(25 Lines)
F: (91-33) 2230-4901
E: calport@vsnl.com, kds_ho@dataone.in,calport@kopt.in
W: www.kolkataporttrust.gov.in
Krishnapatnam Port Co Ltd

1259, Laxmi Towers, Road No.36, Jubilee Hills, Hyderabad – 500 033, Andhra Pradesh
T: +91 40 2355 7196
F: +91 40 2355 7190
E: info@krishnapatnamport.com, kpcl@navayuga.com
W: www.krishnapatnamport.com


Mormugao Port

Headland Sada 403804, Goa
T: +91-(0832) 252 1100, +91-(0832) 252 1200
F: +91-(0832) 252 1105
E: tm.mpt@mptgoa.com
W: www.mptgoa.com
Mumbai Port Trust

Port House, Shoorji Vallabhdas Marg, Ballard Estate, Mumbai 400001
T: +91 22 2261 4345
F: +91 22 2261 2404
E: harbourmaster@yahoo.com
W: www.mumbaiport.gov.in
Mundra Port and SEZ Ltd.(MPSEZ)

Post Box No. 1, Navinal Island, Mundra (Kutch) 370421
T: +91-2838-289248/448
F: +91-2838-289200/440
E: mktg@mundraport.com
W: www.portofmundra.com
Paradip Port

Paradip Port: 754 142 ORISSA
T: (06722) 222242 [Office] F: (06722) 222242
E: proppt@paradipport.gov.in
W: www.paradipport.gov.in
V.O.Chidambaranar Port Trust
Tuticorin-628 004
T: (0461) 2352290 (50 lines)
F: (0461) 2352301
E: info@vocport.gov.in
W: www.vocport.gov.in

Step 15: ஷிப்பிங் ஏஜென்டிடம் இருந்து கீழ்க்கண்ட ஆவணங்களை பெற்றுகொள்ளவும்.
1. இன் வாய்ஸ் – 1
2. பேக்கிங் லிஸ்ட் – 1
3. Bill of Lading (B/L) அசல் 3, நகல் 4
4 சர்டிபிகேட் ஆப் ஆர்ஜின் – 3 காபிகள்,
5 ஏற்றுமதிக்கான ஷிப்பிங் பில்
எற்றுமதியாலரின் பிரதி – 1
வங்கி பிரதி -1
6. இன்சூரன்ஸ் சர்டிபிகேட் – 1

Step 16: தொகையை வசூலிப்பதற்கான ஆவணங்களை உங்கள் வங்கியில் சமர்ப்பித்து வங்கியிடமிருந்து கப்பலில் சரக்கினை ஏற்றிய பிறகு உதவியினை பெறவும்.
Step 17: தேவையான ஆவணங்களை ஏற்றுமதி கழகம் அல்லது முகவரிடம் ஊக்கதொகை, மானியம் பெறுவதற்காக சமர்பிக்கவும்.

வாழ்த்துகள்


Thanks to
http://sivagangaitimes.com/