கமல் நிஜத்தில் நாத்திகம் பேசுவார். ஆனால் படங்களில் ஆன்மீக தலைப்புகள் தான் வைப்பார். உதாரணமாக விஸ்வரூபம், தசாவதாரம், ஹேராம், அன்பே சிவம், என்று தான் பெயர் வைப்பார்.
கமல் வாழ்க்கை மிகவும் வெளிப்படையானவர். அவரது வாழ்வில் தான் எத்தனை கதாநாயகிகள். ஆனால் எதுவுமே கடைசி வரை நிலைக்கவில்லை. புன்னகை மன்னன் கடைசி வரை முரட்டு சிங்கள் தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஏழு சீசன்கள் வரை தொகுத்து வழங்கியுள்ளார். எனக்கு தெரிந்து கமல் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நியாயமாக பேசியது கிடையாது. உதாரணமாக சமீபத்தில் வினுஷா அவர்களை பற்றிய உருவ கேலியை பற்றி கேட்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. அதேபோல் தனக்கு வேண்டிய நபர்கள் சக்தி வாசு, வனிதா விஜயகுமார், காயத்ரி ரகுராம், விக்ரமன், மாயா, போன்ற ஆட்கள் தவறே செய்தாலும், கண்டிக்க மாட்டார். இதே சாமானியர் செய்தால் தண்டனை கொடுப்பார். மய்யம் நியாயமாக இல்லை.
கமல் அவர்கள் சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் சிறந்த அறிவாளி தான். குறிப்பாக அரசியல் களத்தில் தைரியமாக தனித்து நின்றார். ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்தார். கடைசியில் டார்ச்சி லைட் அணைத்து விட்டு திமுகவிற்கு காவடி எடுத்து வருகிறார். இதற்கு பேரு தான் பகுத்தறிவு போல…
ரஜினிகாந்த் அவர்கள், தனது கருத்தை தைரியமாக பேசுவார். பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் பேசுவார். கமல் அவர்களை விட தைரியம் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று அதிகம். உதாரணமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பாராட்டு விழா ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. அதில் பாராட்டு உரை ரஜினிகாந்த் அவர்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை நேரிடையாக விமர்சனம் செய்தார்.
பாட்சா படவிழாவில் ஜெயலலிதா அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார். கலைஞர் கருணாநிதி முன்னிலையில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சனம் செய்தார். பாச தலைவனுக்கு பாராட்டு விழாவில் அஜீத் அவர்களை எழுந்து நின்று ஆதரித்தார். இதைவிட தைரியம் வேண்டுமா?
ரஜினிகாந்த் அரசியலில் வராமல் இருப்பதற்கு ஒரே காரணம். அவர் தமிழர் இல்லாத காரணத்தால் மட்டும் அல்ல. அவரது குடும்பம் அவரது அரசியல் பொது வாழ்க்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள். மேலும் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது தனிப்பட்ட விருப்பம். இதில் கருத்து சொல்ல நமக்கு உரிமை இல்லை.
கமல் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நடிப்பார். ரஜினிகாந்த் திரையில் மட்டும் தான் நடிப்பார். குணத்தில் கமலை விட ரஜினிகாந்த் தான் பன்மடங்கு சிறந்தவர். இது மக்களுக்கே நன்றாக தெரியும். என்னை பொறுத்தவரை மக்கள் திலகமும் நடிகர் திலகமும் ரஜினிகாந்த் ஒருவர் மட்டுமே ஆகும்.