மொத்தப் பக்கக்காட்சிகள்

9/28/2024

எம்.ஜி.ஆர் பற்றிய யாரும் அறிந்திடாத சில சுவாரசியமான தகவல்கள் என்னென்ன?

 

Ⓜ️ எம்.ஜி.ஆர் ஜோடி கீதாஞ்சலி !➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️

எம்ஜிஆர் பற்றி இணையத்தில் இறைந்து கிடக்கும் எல்லா "அறிய தகவலுமே" OLD WINE IN A NEW BOTTLE ரகம் தான்!

சில நடிகைகளோடு அவர் எடுத்த சில படங்கள் அறிதான படமாக இருந்ததால்……

அதே வைத்து, பழைய அரைத்த மாவை புத்தம் புது கிரைண்டரில் அரைக்க போகிறேன் !

⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️

1969 ஆம் ஆண்டு தமிழ் & தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்ட படம் !

தமிழுக்கு எம்ஜிஆர் & தெலுங்கில் என்டிஆர் !

ஹிந்தி படத்தின் தழுவல் !

வழக்கமான எம்ஜிஆருக்கு ஏற்ற ராபின் வுட் கதை !

ஈரான் நாட்டில் வாழ்ந்த இஸ்லாமிய தலைவர் மன்சூர் பற்றிய கதை !

நான்கு பாடல்கள் பதிவு செய்யப்பட்டது !

கலரில் மலர இருந்த இந்த கைகளை ஈரான் நாட்டில் எடுக்க திட்டமிட்டார்கள் !

சித்ரா கிருஷ்ணசாமி அனுமதி பெற ஈரான் நாட்டுக்கும் பறந்தார் !

" WHAT ! இஸ்லாமிய தலைவரை கள்வனாக சித்தரிக்கும் கதையா ? "

Single window முறையில் அனுமதி மறுக்கப்பட்டது !

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுதான் காரணம் !

கீதாஞ்சலி நகைச்சுவை நடிகையானார் !

➡️ விளம்பரத்தோடு முடங்கின படம் ! 🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️

வளர்ந்து, நின்று போன இணைந்த கைகள் படத்தில் எம்ஜிஆர் அண்ணனுக்கு நல்ல கதா பாத்திரம் தரப்பட்டது !

அதை ஏற்க்க மறுத்தார் !

" நான் மன்சூரை வளர்க்கும் வளர்ப்பு தந்தை மூசா வாகத்தான் நடிப்பேன் " என்று முரண்டு பிடித்தார் எம்.ஜி.சக்கரபாணி!

அறிதான எம்ஜிஆர் ஜோடி ஜி.சகுந்தலா !➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️

நாடோடி மன்னன் சுட சுட ஓடும் போதே திட்டமிடப்பட்ட படம் நாடோடி மகன் !

ஜி. சகுந்தலா & சூர்யகலா ஜோடி !

கதை : நம்பியார், நாடோடியை கொன்று அரியணையை பிடிக்க, நாடோடி மகன் வளர்ந்து பழி வாங்குவது !

பிரம்மாண்ட செட் - பயங்கர சண்டை காட்சி - சுமார் 50% எடுத்த பிறகு நின்று போனது !

எம்ஜிஆர் அரசியலும் ஒரு காரணம் !

நடிகை சகுந்தலா , குண சித்திர நடிகை ஆனார் !

இந்த கதை சப்பாத்தி மாவு போல உருட்டப்பட்டு 'அடிமை பெண் ' ஆக வந்தது!

எம்ஜிஆரின் 50 படங்கள் அறிவிப்போடு நின்று போனது !

இதில் 20 படங்கள் 50% முடிந்திருந்தன !

20 படங்கள் விளம்பரத்தோடு நின்றது !

10 படங்கள் பூசை யோடு ஏறக்கட்டப்பட்டது !

நிறுத்தப்பட்ட முதல் எம்ஜிஆர் பட நாயகி !🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️

1941 ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் கெஸ்ட் ஆர்ட்டிஸ்ட் !

நாயகன் வாய்ப்பு 1 டொக் 2 டொக் 3 டொக்!

சாயா பட நாயகன் ஆனார் ராமசந்திரன் !

நாயகி டி.வி குமுதினி !

தயாரிப்பாளர் : NANDAN LAL JASHWANT LAL

எம்ஜிஆர் நடிக்க வந்த நாலே வருடத்தில் நாயகன் வேடம் !

மிகுந்த எதிர்பார்பில் இருந்த எம்ஜிஆருக்கு படம் நின்ற போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள் ஆனார் !

ராசி இல்லாத நடிகர் என்ற பெயர் வந்தது !

ஜமுனா உடன் இணையும் வாய்ப்பு ஸ்வாஹா !

ஆந்திராவிலிருந்து வந்த எல்லா நடிகைகளுடன் எம்ஜிஆர் ஜோடி போட்டாலும், ஜமுனா மட்டும் மிஸ்சிங் !

குமார தேவன் அதை நிரைவேற்றியது !

கலைவாணர் கைதானதும் அவரது நீதிமன்ற செலவுக்காக ஆரம்பிக்கப்பட்ட படம் பையித்திக்காரன் !

சம்பளம் வாங்கமல் நடித்துக்கொடுத்தார் எம்ஜிஆர் !

ஜோடி : டி.எம் மதுரம் - கலைவாணரின் மனைவி !

தமிழ் படத்தின் முதல் கவர்ச்சி நடிகை தவமணி தேவி !

நீச்சல் உடையில் நடித்து பிரபலமானார் !

ராஜகுமாரியில் ராமசந்தரோடு நடித்தார் !

தவமணியை சிறப்பிக்கும் விதமாக மற்றொரு ஸ்டில் !

20000 அடி வரை வளர்ந்த படம் பவானி !

வருடம் 1957 !

கண்ணதாசன் முன் பணம் போட்டு சக்கிரபாணிக்காக தயாரித்தார் !

இந்த படத்திற்க்கான செலவை கவிஞரிடம் கொடுத்து M என்ற MGR வாங்கிக்கொண்டார் !

எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது, அவரை நேரில் பார்த்த ஒரே தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் !

மூன்று படத்திற்கு அட்வானஸ் கொடுத்தார் !

அதில் வெளி வராத படம் இது …

சில அறிய பங்களை ரசித்து வைப்போம் !

பாவேந்தர் மீது M க்கு மரியாதை அதிகம் !

அவரது பாடலை தன் படத்தில் உபயோகித்து இருக்கிறார்!

ஜெயலலிதா சினிமாவில் நடிக்க அவரது சித்தி வேதவதி தான் காரணம் !

வேதவதிக்கு M ஐ நன்றாக தெரியும் !

M மும் வேதவதியும் சேர்ந்து நடித்த படம்…

எம்ஜிஆர் க்கு குரு இருக்கிறார் !

காளி என் ரத்தினம் !

பழைய…..மிக பழைய படங்களில் காமெடி நடிகர் !

M க்கு ஸ்டண்ட் கற்று கொடுத்தது ரத்தினம் !

M க்கு சிரமமான நேரத்தில் உதவியவர்கள் சின்னப்பா தேவர் & சி. டி. ராஜகாந்தம் !

ராஜகாந்தம், எம் க்கே குருநாதரின் மனைவி !

வால்டாக்ஸ் ரோட்டில் M குடியிருந்த போது ராஜகாந்தம் , M இன் கேர் டேக்கர் !

இத்துடன் பகுதி ஒன்று முடிகிறது !

கிழவனை கட்டினாலும் கட்டுவேன் ஆனால் உழவனை கட்டமாட்டேன் என்று பெண்கள் சொல்லுகிறார்களே, ஏன் இப்படி?

கிழவன், உழவன் கேள்வியே கவிதை மாதிரி இருக்கே சார்!

இக்காலத்தில் நடப்பவற்றை சொல்ல வேண்டும் என்றால், பட்டப்படிப்பு முடித்துவிட்டு மாதம் 50000 சம்பளம் வாங்குகின்ற ஆண்களே ஒரு தலை ராகமாக தான் இருக்கிறார்கள், இந்நிலையில் உழவனால் வெறும் உடுக்கை தான் வாசிக்க முடிகிறது, சூரிய வம்சம் படத்திலாவது படிச்சா நான் எங்க படிக்காத நீங்க எங்க னு நாக்கை பிடிங்குற மாதிரி கேள்வி கேட்க ஒரு பொண்ணு இருந்துச்சு,நிகழ்காலத்தில் அதற்குக்கூட வக்கில்லை உழவனுக்கு

உழவனுக்கு பெண் கொடுக்க விரும்பாத பெற்றோர்கள் பெரும்பாலும் விவசாய குடும்பமாக தான் இருக்கிறார்கள் என்பது வேதனையின் உச்சம், கிராமத்தில் வளர்ந்த பெண் பிள்ளைகள் நகரத்திற்கு படிப்பிற்கோ அல்லது வேலைக்கோ சென்ற உடன் Raw Agent போல முகத்தை மூடுவதும், தெருவில் நடக்கும்போது துப்பட்டாவை தலையில் போடுவதும் தான் கிராமத்து இளைஞிகளின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியின் தொடக்கமாக பார்க்க முடிகிறது, இது இப்படியே நீண்டு Cold Coffee ல ஆரம்பித்து KFC அது இது னு நீண்டு கொண்டே செல்கிறது, இப்படி இருக்கையில், 150 ரூபாய் டைரி மில்க் சாக்லேட்டுடன் 5 ரூபாய் கடலை பர்பி போட்டி போட முடியவில்லை

நகரத்தில் உள்ள பெண்களும் பெற்றோரும், விவசாயத்திற்கும் அதை செய்பவர்களுக்கும் நல்ல மரியாதை தருகின்றனர், அதற்காக தாம்பூலம் தட்டை நீட்ட முடியாது, காரணம் நகரத்தில் வாழ்ந்த மக்களுக்கு கிராமத்தை சுற்றி பார்க்க, பொழுதை போக்க, மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் அவர்கள் வாழ்வியல் முறைகளுக்கு கிராமம் மற்றும் விவசாயம் எக்காலமும் ஒத்து வராத ஒன்று, நகரத்தில் வளர்ந்த ஒரு பெண்ணால் கிராமத்தில் வசித்து விவசாய வேலைகளை செய்வது எளிதல்ல, அவர்கள் விரும்பினால் நலம், இல்லையெனில் நாளடைவில் வெறுப்பு உண்டாகும்

இது ஒரு சுழட்சி முறையாக தான் பார்க்க முடிகிறது, முன்னொரு சமயம் வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணம் என்பது கேள்விக்குறியாக பல பெண்களுக்கு இருந்துள்ளது, அதன் வினை பயன், இப்போது பத்து பைசா வேணாமுங்க உங்க பிள்ளையை கொடுத்தால் மட்டும் போதும் காலில் விழுந்து கதற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், பெண்களின் எதிர்பார்ப்புகளை கூட தாங்கி கொள்ளலாம் போல ஆனால் அவர்களின் பெற்றோர் தொடுக்கும் கேள்வி அம்புகள் தான் காதில் ரத்தம் சொட்ட வெய்க்கின்றது, உழவனுக்கு பெண் கிடைப்பதில்லை என்பது உண்மை தான் இதற்கு முதன்மை காரணம் செய்யும் வேலை இரண்டாவது பொருளாதாரம் மூன்றாவது சாதி கட்டுப்பாடுகள், கிராமம் என்றாலே சாதிப்பிரிவினைகள் நகரத்தை விட சற்று மேலோங்கியே இருக்கும், வேற்று சாதியில் அல்லது மதத்தில் பெண் எடுக்க உழவர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் தயாராக இருந்தாலும், ஊர் மக்கள் புறம் பேசுமே என்று அஞ்சி வாழ்க்கை எனும் பயணத்தில் கைவிரல் பிடித்து நடக்க துணை இல்லாமல், கைத்தடி பிடிக்கும் வரை நீண்டு விடுகிறது

உழவனை வேண்டாமென கிழவனை எந்த பெண்ணும் ஏற்று கொண்டதாய் நான் இதுவரை கண்டதில்லை, 27 வயதுக்கு மேல் இருந்தாலே பெண்கள் மற்றும் அவரின் குடும்பத்தார் சற்று யோசிக்க தொடங்குகின்றனர், எல்லா பெண்களும் மற்றும் பெற்றோர்களும் ஒரே மாதிரியான சிந்தனை உடையவர்கள் என்று சொல்ல முடியாது, பணத்தை விட குணத்திற்கு மதிப்பளிக்கும் பெண்களும் பெற்றோரும் உண்டு, அப்படி இல்லையெனில் நானும் செண்பகமே செண்பகமே னு பாட்டு பாடி பால் கறந்திட்டு தான் இருந்திருப்பேன்

ஆணோ, பெண்ணோ பார்த்த உடனே நல்ல இருக்கீங்களா என்று கேட்கலாம் தவறில்லை அதோடு நிற்காமல் அடுத்த கியர் போட்டு என்ன சம்பளம் எப்போது திருமணம், திருமணம் முடிந்துவிட்டது என்று பதில் வந்தவுடன், குழந்தை எப்போது எந்த பள்ளி என்ன மதிப்பெண் இணையவழி கல்வி அவ்வளவு நல்லதல்ல என்று டாப் கியருக்கு போக வேண்டாம், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும் அதை கிளறி வெந்த புண்ணில் அமிலம் ஊற்றி மயில் இறகால் வருடி விட வேண்டாம்

டைரி மில்க்கை விட வேர்க்கடலை மிட்டாய் உடலுக்கு நல்லது அடுத்த முறை கடைக்கு சென்றால் வாங்கி சாப்பிடுங்கள்

பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்!

 பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்.

    நான் பிறந்த போது என்னைத் தூக்கி அரவணைத்தது ஒரு பெண்- என் அம்மா

என் குழந்தைப் பருவத்தில் எனக்காகப் பரிந்து என்னுடன் விளையாடினாள் ஒரு பெண் - என் சகோதரி.

நான் பள்ளிக்கு சென்ற போது அன்புடன் கல்வி கற்பித்தவள் ஒரு பெண் - என் ஆசிரியை

நான் கவலையுடன் இருந்த போது தோள் கொடுத்து ஆறுதல் சொன்னாள் ஒரு பெண் - என் தோழி

எனக்கு உறவாகவும் உயிராகவும் துணையாகவும் இருந்தாள் ஒரு பெண் - என் மனைவி

நான் கோபமாக இருந்தபோது தனது மழலைச் சொற்களால் என்னை மயங்க வைத்தாள் ஒரு பெண் - என் மகள்

நான் இறக்கும் போது என்னைத் தன்னுள் உறங்கச் செய்வாள் ஒரு பெண் - என் தாய்நாடு

ஒரு பெண் வாழ்க்கையில் தனக்கு ஏற்படும் கவலைகளையும் துன்பங்களையும் தனது பிராத்தனைகளாலும் அசையாத நம்பிக்கையாலும் எதிர்கொள்கிறாள்.

நீ ஒரு ஆணாக இருந்தால் ஒவ்வொரு பெண்ணையும் போற்றி வணங்கு!

நீ பெண்ணாக இருந்தால் அதற்காகப் பெருமைப்படு...


ரேவதி !

 கேரளாவினை பூர்வீகமாகக் கொண்ட ஆஷா என்ற இயற்பெயர் கொண்ட நடிகை ரேவதி தமிழில் மண் வாசனை படத்தின் மூலமாக அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரியும். மண் வாசனை படத்தின் ஹிட்டுக்குப் பிறகு அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகொடுக்கும் கை, வைதேகி காத்திருந்தாள் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

தொடர்ந்து ரேவதி நடித்த படங்கள் ஹிட் ஆகவே குறுகிய காலத்திலேயே தமிழின் நம்.1 நடிகையாக மாறினார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறனைக் காட்டினார்.

தன்னுடைய அமைதியான இயல்பான நடிப்பாலும், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம் கொண்டதாலும் குறுகிய காலத்திலேயே சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கவர்ச்சி இல்லாமல், அற்புதமான நடிப்பு, நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து நடித்ததால் 90-களின் தொடக்கம் வரை முன்னனி நடிகையாகத் திகழ்ந்தார் ரேவதி. நடிப்பு மட்டுமல்லாமல் டப்பிங், சமூக சேவை என பல துறைகளிலும் கால்பதித்தார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இவரை ஹீரோயினாக நடிக்க வைத்தது எப்படி தெரியுமா? நடிகை ரேவதி கேரளாவில் மாடலிங் துறையில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது பேஷன் ஷோக்களில் பங்குபெற்று அதனை ஆல்பமாக வைத்திருக்கிறார். பின்னர் ரேவதியின் குடும்பம் சென்னை நந்தனத்திற்குக் குடி பெயர்ந்திருக்கிறது. பாரதிராஜாவின் சகோதரர் வீடு ரேவதியின் வீட்டுக்கு மாடியில் தான் இருந்திருக்கிறது. அப்போது அங்கு அடிக்கடி வரும் பாரதிராஜா எதேச்சையாக ஒருநாள் ரேவதியின் ஆல்பங்களைப் பார்த்திருக்கிறார்.

ஆனால் அப்போது அவர் காதல் ஓவியம் பட வேலைகளில் இருந்தார். ஆனால் இந்தக் கதைக்கு ரேவதி சற்று வயது குறைவானதாக தோற்றம் கொண்டதாக இருந்ததால் காதல் ஓவியம் படத்தில் ரேவதி நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இதனையடுத்து அடுத்ததாக மண் வாசனை படத்தில் ரேவதியை நாயகியாக்கினார் பாரதிராஜா. நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாதே ரேவதிக்கு பாரதிராஜா படிப்படியாக நடிப்பு கற்றுக் கொடுத்து குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவின் நம்.1 நடிகையாக வலம் வரச் செய்ததில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் பாரதிராஜா.

மேலும் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரின் படங்களிலும் ரேவதி கதாநாயகியாக நடித்து சினிமாவில் பெரிய ரவுண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் கதைக்கு முக்கியமான படங்களில் நடித்து வருகிறார்.

டி.எஸ். பாலையா !

 டி.எஸ். பாலையா

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊர். சர்க்கஸில் சேர்ந்து பெரிய கலைஞனாக வேண்டும் என்ற உந்துதலோடு, அப்பா அம்மாவிடம் சொல்லாமல் 14 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தது மதுரை மண்.

அங்கே பிரபலமாக இருந்த ‘பாலமோஹன சபா’வில் இடம் கிடைத்தது.

அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக்கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய ‘சதி லீலாவதி’(1936). அந்தப் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பதுதான் பாலையா திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம்.

எம்.ஜி.ஆர். சுயசரிதையில் பாலையா சதி லீலாவதி எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.

அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ‘சதி லீலாவதி’ தான். அந்தப் படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.

. ஒரு படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போன போது, பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பாத்திரம் பாலையாவுக்குப் போய்விட்டது. எம்.ஜி.ஆருக்குச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. “அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாகச் செய்திருக்க முடியாது” என்று ‘நான் ஏன் பிறந்தேன்?’ சுயசரிதையில் எழுதினார் எம்.ஜி.ஆர்.

மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகி ஆக்ரோஷமாகக் கத்தியை உருவி “இன்று என்ன கிழமை?” என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் “அடடா! இன்று விரதம்” என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.

“அரசே! நாங்கள் ‘பின் தொடர்ந்து’ போனோம்.ஆனால் அவர்கள் ‘முன் தொடர்ந்து’ போய்விட்டார்கள்!” என்பார்.

‘புதுமைப்பித்தன்’ (1957 ) படத்தில் எம்.ஜி.ஆர் “அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்” என்பார். அப்போது, பாலையா குண்டாகக் கொழுகொழுவென்று நடந்து வருவார்.

வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம்.ஆர்.ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது. நகைச்சுவை வில்லனாக அவர் ஏற்படுத்திய தாக்கம் அத்தனை சீக்கிரம் மறையக் கூடியது அல்ல.

புதையல் படத்தில் அவர் “ இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும்” என்ற வரிகளை “ இங்கு சகலவித 'மான' சாமான்களும் விற்கப்படும்” என்று பிரித்து வாசிப்பார். வசன உச்சரிப்பில் அவரது வித்தகத் தன்மை ஒவ்வொரு படத்திலும் பளிச்சிட்டது.

பாகப் பிரிவினை(1959) படத்தில் பாகப் பிரிவினை செய்யும் காட்சியில் பாலையா, வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி. சுப்பையாவிடம் தாய், தந்தையர் போட்டோவைக் காட்டிப் பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.

பாலைய்யாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. நகைச்சுவையின் அதிகபட்ச சாதனை அது.

‘திருவிளையாடலில்’ (1965) வித்துவச் செருக்கை அழகாகக் காட்டி நடித்த ‘ஒரு நாள் போதுமா?’ பாடல் காட்சியும், ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?’ என்று பேசிய வசனமும் இன்றும் பிரபலம். ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும்தான். கர்வம், எகத்தாளம், மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் விசேஷ பரிமாணங்கள்.

தில்லானா மோகனாம்பாள் (1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். ‘தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான். பித்த உடம்பா… தூக்கிடுச்சி!’

- நன்றி : தி இந்து , டி.எஸ்.பாலையாவின்

நூற்றாண்டு நினைவுப் பதிவு