மொத்தப் பக்கக்காட்சிகள்

4/08/2017

புத்தரின் சிந்தனை துளிகள்....

புத்தரின் சிந்தனை துளிகள்....

* மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. எனவே, நல்லதையே சிந்தியுங்கள்.

* பொய் பேச முயலாதீர்கள். வதந்தியைப் பரப்புவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். உண்மை வழியில் நடக்க முயலுங்கள்.

* யாரையும் புறம் பேசாதீர்கள். பேச்சைக் குறைத்து மனதை நிலைப்படுத்துங்கள்.

* மனிதன் பெற வேண்டிய பெரிய பொக்கிஷம் அறிவு மட்டுமே. அழகு, செல்வம் இவை எல்லாம் நிலையற்றவை.

* விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்.

* பிறருக்குப் போதனை செய்வதை விட, தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும்.






திறந்த மனது என்றாலும்கூட அதில் யாருக்கும் திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும்

முற்றுப்புள்ளியை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகி விடும்......

பணம் சம்பாதிக்க நல்லவர் கெட்டவர் எல்லோராலும் முடியும்.

மனிதர்களை சம்பாதிக்க நல்ல மனதுள்ள மனிதனால் மட்டும் தான் முடியும்

எதிலும் குறைகளை காண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது

எதையும் ரசிப்பவருக்கு குறைகளே தெரியாது

மகானைப் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை

மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்

புத்தர்- புத்தர்


3/28/2017

ஒருபெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?


 ஒருபெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

♥1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது!

♥2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வலம் வரும்போது!

♥3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல், படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது…..

♥4.அழகை திமிராகக் காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது……

♥5.யார் மனதையும் புண்படுத்தாமல், தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க ‘எவ்வளவு நாள்?’ என்று கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது……

♥6.அச்சப்பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது!

♥7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது…..

♥8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது……

♥9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது!

♥10.ஆபாசமில்லாத உடையணிந்து, அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது……

♥11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது, ‘நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ’ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது…….

♥12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது!

♥தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்!

மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.

படித்ததில் பிடித்தது
 

1] எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...


2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...



4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.


5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.


6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.



7] ☀சங்கடங்கள் வரும் போது தடுமாற்றம் அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதீர்கள்.



8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி நீங்கள் நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]



9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு நீங்கள் மட்டுமே காரணம்.



10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.



11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.



12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.



13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.



14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை முட்டாள் என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு
நம்பிக்கையையே ஆகும்.



15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.



16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

3/11/2017

பணி நிறைவு !

பணி ஓய்வு !

நாளைய பொழுது
எப்படி விடியப்போகிறதோ?

நாளைய பொழுது
நிச்சயம் சூனியமாகத்தான்
இருக்கப் போகிறது.

ஏன் என்றால்?

இன்று எனக்கு
பணியில் இருந்து
ஓய்வு.

எத்தனையோ பிரிவு
உபசார நிகழ்வுகளில்
பங்குபெற்று உள்ளேன்.

ஆனால் அப்போது
எனக்கு
தெரியவில்லை,

ஓய்வு என்பது
எத்தனை கொடுமையானது
என்று.

நாளை காலை
அவசரமாக படுக்கை
விட்டுஎழ வேண்டியதுஇல்லை

என் மனையாளை
துரிதப்படுத்த வேண்டியதுஇல்லை.

எனது இருக்கை
நாளைவேறு ஒருவருடையது.

ஏனோ இந்தஅலுவல்
ஓய்வு மட்டும்
என் இதயத்தில்
ஒருதீரா ரணத்தை
கொடுக்கிறது.

என் இருக்கை
நான் ஓய்வு
பெறுவதை உணர்ந்து
கொண்டதோ என்னவோ?
இன்றுஎன் காலை
தடுமாற செய்கிறது.

என்கணினி கண்ணீர்
விடுவதை உணர்கிறேன்.

நான்என் வாகனத்தை
நிறுத்தும் மரநிழல்இன்று
ஏனோஎனக்கு சுடுகிறது.

எனது பணிக்காலத்தை
இன்னும் ஒருஇரண்டு
ஆண்டு காலம்
நீட்டித்து இருக்கலாமே!

மனசாட்சிக்கு விரோதமில்லாமல்
பணி செய்ததுக்கு.

மரணத்தை விட
கொடுமையானது பணிஓய்வு !

பணியில் இருக்கும்போது
எத்தனை மாலைகள்,
மரியாதைகள் !

ஆனால் இன்று
மற்றவர்கள் பார்க்கும்பார்வையில்
ஏளனம் ஒளிந்து
இருப்பதை போல்உணர்கிறேன்.

எனக்கு வயதாகிவிட்டதை
நான்இன்று தான்உணர்கிறேன்.

2.jpg

2/18/2017

வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்..



ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.

அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.

அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.
.
இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!
.
இறந்தவரின் மனைவி சொன்னாள்..
”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..?
நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..!
.
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை...
.
கடைசியில் அவர் கேட்டார்
”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.

பின் சொன்னார்..
”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.
இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!
.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.
அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்”

ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?”
.
தந்தை சொன்னார்

”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்”
.
தாயைக் கேட்க அவள் சொன்னாள்
”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?”
.
மனைவி சொன்னாள்
”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்”
.
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்
”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?”
.
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்

”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?”
.
குருஜி சொன்னார்

”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . 

இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..!

”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”

“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”.

எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்...

Thanks to C.Malathi