மொத்தப் பக்கக்காட்சிகள்

7/16/2013

நற்சிந்தனைத்துளிகள்



வணங்கத்தக்கவர்கள் - தாயும் தந்தையும்
வந்தால் போகதாது - புகழ், பழி
போனால் வராதது - மானம், உயிர்
தானாக வருவது - இளமை, முதுமை

நம்முடன் வருவது - பாவம், புண்ணியம்
அடக்க முடியாதது - ஆசை, துக்கம்
நம்மால் பிரிக்கமுடியாதது - பந்தம், பாசம்
அடக்க முடியாதது - ஆசை துக்கம்

அழிவைத்தருவது - பொறாமை, கோபம்
எல்லோருக்கும் சமமானது - பிறப்பு, இறப்பு
கடைத்தேறவழி - உண்மையும், உழைப்பும்
ஒருவன் கெடுவது - பொய்சாட்சி, செய்நன்றி மறப்பது.

வருவதும் போவதும் - இன்பம், துன்பம்
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகப்பெரிய தேலவ - சமயோசித புத்தி

மிகக்கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் - பெறாமை
நம்பக்கூடாதது - வதந்தி

ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்யக்கூடாதது - தவறுகள்
செய்ய வேண்டியது - உதவி
விலக்க வேண்டியது - விவாதம்

உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவக்கூடாதது - வாய்ப்பு

5/28/2013

கடவுளிடம் எளிய பக்தியே போதும்.



கடவுள் மிகவும் எளிமையானவர். பக்தியாலேயே அவனை அடைய முடியும். பக்தியே முக்திக்கு வழி. பக்தி செய்வது மிகவும் சுலபம். தவம், தியானம், பூஜை போன்றவைகளை விட, மனதால் பகவானை துதி செய்வது சுலபம். மனதுக்குள்ளேயே பகவானை வழிபடுவது இன்னும் விசேஷமானது. எளிமையாக இருந்தே, எளியவனான கடவுளிடம் பக்தி வைக்கலாம். 

நம்முடைய பூஜை, பக்தி இவைகளை கண்டு, மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென் பதில்லை; பகவான் பாராட்டினால் போதும். ஒரு கூடை பூவைப் போட்டு, ஆயிரம் நாமாவால் பூஜை செய்ய வேண்டுமென்பதில்லை; ஒரே ஒரு புஷ்பம் போட்டு, ஒரே நாமாவைச் சொன்னாலும் அவன் ஏற்றுக் கொள்வான். பூஜை செய்வதற்கான பொருட்களை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை; மானச பூஜையே போதும். 

வள்ளலார் கூட எளிமையாக வாழ்ந்தவர். எளிய முறையிலேயே ஆண்டவனை பூஜித்தவர். அகல் ஜோதியையே கடவுளாக வழிபட்டார். தெய்வங்கள் ஜோதி வடிவமாகத் தான் சொல் லப்பட்டுள்ளது. "ஜோதி ஸ்வரூபன்’ என்பர். ஜோதி தான் அவனது வடிவம். கடவுள் மன்னிக்கும் குணம் உடையவர். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால், உடனே மன்னித்து விடுவான். 

கடவுள், என்றாலே, ஒரே பரம் பொருள் தான். பல உருவங்களில் வழிபடுகின்றனர். இந்த உணர்வு வேண்டும். தினமும் கோவிலுக்குப் போய்த் தான் தெய்வ வழிபாடு செய்ய வேண்டுமா அல்லது வீட்டில் இருந்து கொண்டே பக்தி செய்ய முடியாதா என்று யோசிக்கலாம். கோவிலுக்கு போனாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, மனம் மட்டும் தெய்வத்திடம் இருக்க வேண்டும். கோவிலுக்குப் போனால், பலவித ஆரவாரங்களுக்கு இடையில், மனதை பகவானிடம் வைக்க முடியுமா என்பதும் கேள்விக் குறிதான். 

அங்கே தான் பல உறவினர், நண்பர்களை சந்திக்க நேரிடும். அவர்களை பார்த்த பின் சும்மா இருக்க முடியுமா? குசலம் விசாரிக்க வேண்டியிருக்கும்… "பெண் கல்யாணம் என்ன ஆயிற்று? பிள்ளை படிப்பு என்ன ஆயிற்று? துபாயில் இருக்கும் பெரிய பையன் பணம் அனுப்புகிறானா?’ இப்படி, பலவித குடும்ப விஷயங்கள் கேள்வி – பதிலாக ஆகிவிடுகிறது. 

அப்புறம் மனதை பகவானிடமே வைப்பது என்பது, எப்படி சாத்தியம். சரி, வீட்டிலேயே இருந்து, மனதை, பகவான் பக்கம் திருப்பலாமே என்றால், இது கூட சிலருக்கு சாத்தியமாவதில்லை. 

அப்போதும் கூட குடும்ப விவகாரம்… "சின்ன பையன் ஸ்கூல் போனானா, பெரிய பெண் டியூஷனுக்கு போனாளா, இந்த வாரம் ரேஷன் வாங்கியாச்சா? ஸ்டோர்ல பாமாயில் வந்திருக்கா…’ என்று எத்தனையோ கேள்வி – பதில்கள். தெய்வ வழிபாடு, பக்தி என்பது ஒரு பகுதி; குடும்பம், குடும்ப விவகாரம் என்பது இன்னொரு பகுதி. இரண்டையும் கலந்தால், பக்திக்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

குக்கிராமத்தில், ஓட்டு வீட்டில் வள்ளலார் தவம் செய்து முக்தி பெற்றார். 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டிகேஸ்வரர், திருவப்பாடி கிராமத்தில் பசுக்களை மேய்த்து, வெட்ட வெளியில் மண்ணால் லிங்கம் செய்து அதன் மீது, பால் கறக்கவிட்டு வணங்கி முக்தி பெற்றார். பூசலார் நாயனார் மனதினாலேயே கோவிலை நிர்ணயம் செய்து, சிவபெருமானை வழிபட்டு சிவ தரிசனம் பெற்றார். இப்படி பல சரித்திரங்கள் உள்ளன. 

ஆக, மனிதனுக்கு தெய்வ பக்தி அவசியம் இருக்க வேண்டும். இப்படி பக்தி செய்து நற்கதி அடையும் பாக்கியம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு பக்தி, பூஜை, வழிபாடு என்பதெல்லாம் தெரியாது; அதனால், அவை இதில் ஈடுபடுவதில்லை. மனிதன், சுலபமான முறையில், தியானத்தின் மூலமே பக்தி செய்து பகவானை அடைய முடியும். இதற்குத் தான் முயற்சி செய்ய வேண்டும்.

5/17/2013

காயமே இது பொய்யடா- வெறும்காற்றடைத்த பையடா!



காயமே இது பொய்யடா- வெறும்
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடா!'


என்று சித்தர் ஒருவர் பாடினார்.

காயம்- இந்த உடல் நிரந்தரமானது என்று நினைத்து, இந்த நிலையற்ற உடலை வளர்க்க என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்!

ஆடம்பர ஆடை- அணிகலன்கள், அலங்காரங்கள், தைலப் பூச்சு, சத்தான- சுவையான உணவு, காயகல்பலேகியங்கள்- இப்படியெல்லாம் கவனம் செலுத்தி நிலையற்ற இவ்வுடலை வளர்க்கிறோம்.

இந்த உலகில் வியப்பான- ஆச்சரியமான விஷயம் எது?''

"மனிதன் அன்றாடம் தன்னைச் சுற்றி இறப்பைப் பார்க்கிறான். ஆனாலும் தான் நிலையாக இருக்கப் போகிறவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானே' .

கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர் பற்றி ஒரு சுவையான கதை உண்டு. உலகையே ஆள நினைத்தான் அலெக்ஸாண்டர். படை யெடுத்தான்; சமர்புரிந்தான்; பல நாடுகளை வென்றான். தான்வென்ற நாடுகள், சம்பாதித்த செல்வம், அடைந்த கீர்த்தி, மதிப்பு எல்லாவற்றையும் பற்றி ஒருமுறை நினைத்துப் பார்த்தான். "இவற்றால் நாம் அடையப் போகும் பயன்தான் என்ன? நான் இறந்து போகும்போது நம்முடன் இதையெல்லாம் எடுத்துச் செல்லப் போகிறோமா' என்ற தத்துவ உணர்வு அவனுக்குத் தோன்றியது.

அலெக்ஸாண்டரின் இறுதிக் காலம் வந்தது. அவன் மரணப் படுக்கையில் கிடக்கும்போது தன் பிரதம சேனைத் தலைவரை அழைத்துக் கூறினான்:

""நான் மரணமடையும் நேரம் வந்துவிட்டது. நான் இறந்து போனவுடன் என்னை அடக்கம் செய்யத் தயாரிக்கும் சவப்பெட்டியில், எனது இரு கரங்களும் வெளியே நீட்டும் வசதியுள்ளபடி இரு துளைகள் அமைப்பாய்'' என்றார்.

இதைக் கேட்ட படைத்தலைவன் திகைப் புற்று அலெக்ஸாண்டரை நோக்கினான். ""எதற்கென்று யோசிக்கிறாயா? நான் என் வாழ் நாளில் வென்ற நாடுகள், சொத்துகள், அரண்மனைகள், உடைமைகள் எதையும் என்னுடன் எடுத்துச் செல்லவில்லை. வெறும் கைகளுடன்தான் போகிறேன் என்பதை உலகுக்குக் காட்டவே இந்த ஏற்பாடு'' என்றான்.

பிறக்கும்போது என்ன கொண்டு வந்தோம்? இறக்கும்போது என்ன எடுத்துச் செல்லப் போகிறோம்? ஏதுமில்லையே! இதை மகான்கள், சித்த புருஷர்கள் எல்லாம் உணர்த்திச் சென்றுள்ளனர்.

இந்த சரீரம் நிலையற்றது என்ற உண்மையை உணர்ந்து, பற்றுகளைத் துறந்து, தெய்வ சிந்தனையுடன் வாழ்வோமாக

5/10/2013

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"




விளக்கம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றால் ஊழ்வினையால் வரும் என்பதல்ல நீ மனத்தாலும் செயலாலும் செயத ம்ற்றும்  செயற்படும் தன்மையால் நீயாகவே தேடிக்கொள்கிறாய் என்பது. எனவே நன்றாக எண்ணித் தெளிந்து செயற்படு என்பதாகும்.

யாதும் ஊரே,யாவரும் கேளிர்;

எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், நாட்டில் உள்ள அனைவரும் எங்கள் உறவுகள் தான்;

தீதும், நன்றும், பிறர் தர வாரா;
- தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை  நாம் பிறருக்கு என்ன செய்கின்றோமோ அதுவே நமக்கு பலாபலனாக திரும்பி வருகின்றது; நல்லது செய்தால் நமக்கு ம்ற்றும் நமது சந்ததிக்கு  நன்மை கிடைக்கின்றது. தீமை இழைத்தால் தீமையே கிடைக்கின்றது

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன - துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.

சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் - செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் - வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.

இன்னாது என்றலும் இலமே! மின்னொடு மாறி, - வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;

வானம் தண் துளி தலைஇ ஆனாது,- வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,

கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று -  கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,

நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர் - அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது

முறைவழிப் படூஉம் என்பது திறவோர் - முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் - அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]

பெரியோரை வியத்தலும் இலமே! - பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! - சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை - துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

5/09/2013

அறிவை பயன்படுத்தி, புத்திசாலித்தனமாக உழைத்தால் வெற்றிபெறலாம்.ரஜினிகாந்த்



நான் மிகவும் மதிக்கும் நடிகர்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதா பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜிபி கார்டன் துவக்க விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அனைவரும் விஜிபி பன்னீர் தாசின் உழைப்பை பாராட்டி பேசினர். எம்.ஆர்.ராதா பேச எழுந்ததும், தனக்கே உரியபாணியில், என்ன எல்லோரும் விஜிபி பன்னீர்தாஸ் மட்டும்தான் உழைத்தது போல அவரை பாராட்டுகிறீர்கள், ஏன் நான் உழைக்கவில்லையா? நீங்கள் உழைக்கவில்லையா? எல்லோரும் தான் உழைக்கிறோம்.

அதேபோல் வி.ஜி.பன்னீர்தாசும் உழைக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம், நாம் மாடுகளை போல உழைக்கிறோம். அவர் மனிதரை போல உழைத்திருக்கிறார். நான் எங்கோ 500 ஏக்கர் வாங்கியிருக்கிறேன். அவர் கடலுக்கு அருகே 100 ஏக்கர் வாங்கியிருக்கிறார். இது அவரது புத்திசாலித்தனம். இவ்வாறு எம்.ஆர்.ராதா பேசினார்.

அவர் கூறியது போல அறிவை பயன்படுத்தி, புத்திசாலித்தனமாக உழைத்தால் வெற்றிபெறலாம்.
   
------ரஜினிகாந்த்