மொத்தப் பக்கக்காட்சிகள்

3/01/2012

மதுரை சுற்றுலா




இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது. மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும். இந்திய துணைகண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட நகரமாகும். பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. இந்த நகரில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக இந்த நகரம் அதிகம் அறியப்படுகிறது. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது. சீனப் பாசி கலந்த ஒரு வகை குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றலாப் பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது.

தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த விசயன் என்ற மன்னன் தன்னுடைய பட்டத்தரசியாக மதுராபுரி (மதுரை) இளவரசியை மணந்ததாக இலங்கையின் பண்டைய வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.

பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன. மதுரை தமிழின் ஐம்பெருங்காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரம் கதையின்படி அதன் நாயகி கண்ணகியால் ஒரு முறை எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சுற்றுலாத் தலங்கள்
அழகர்கோவில்
காந்தி அருங்காட்சியகம்
கீழக்குயில்குடி சமணர் படுகைகள்
குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி
மீனாட்சியம்மன் கோயில்
திருப்பரங்குன்றம்
திருமலை நாயக்கர் மஹால்
தெப்பகுளம்
பழமுதிர்ச்சோலை
பாலமேடு ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், கூடல் அழகர் பெருமாள் கோவில் போன்ற கோவில்களும் இவை தவிர திருமலை நாயக்கர் அரண்மனை, காந்தி அருங்காட்சியகம், குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மற்றும் சமணர் மலை என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள் நிறைய இருக்கின்றன. மதுரைக்கு மிக அருகில் அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களும் இந்து மதத்தின் சிறப்புமிக்க சில தலங்கள் ஆகும்.

குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் சுற்றுலா மையமாக மதுரை விளங்குகிறது. இது தவிர வட இந்தியர்களும், தமிழகத்தின் பிற மாவட்ட பயணிகளும் விரும்பி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதனை சுற்றியில்ல அனைத்து சுற்றல மையங்களுக்கும் உள்ளாட்சி அமைப்பால் அதிக நிதி ஒதுக்கப்பட்டு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. நாயக்கர் மஹால் பல கோடி செலவிடப்பட்டு ஒலி-ஒளி காட்சி போன்ற அம்சங்களுடன் மீண்டும் புதிப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரைக்குப் அருகாமையில் உள்ள மாவட்டங்களான இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம், சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோயில், ஆவுடையார்கோயில், போன்ற நூற்றாண்டுகள் கடந்த கோவில்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், திண்டுக்கல் மலைக்கோட்டை, தேனி மாவட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி,வைகை அணை அருகிலுள்ள கேரள மாநில எல்லையில் உள்ள தேக்கடி, மூணாறு போன்றவையும் சில மணி நேரப் பயணத் தொலைவிலுள்ள சுற்றுலாத் தளங்கள் ஆகும்.

VAT என்றால் என்ன ?


இது வணிக வரிக்காக ஏற்பட்ட சட்டம். முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வருகிறது. அதாவது வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் விற்பனை வரிச் சட்டத்தின் கீழ்வருகின்றார்கள் அல்லவா?  அவர்கள் அனைவரும் இந்த "வாட்" சட்டத்தின் கீழ் வருவார்கள்.  ஒரு வியாபாரி விற்பனை செய்யும் போது விற்பனைவரியையும் சேர்த்து வாங்குபவர்களிடம் வசூல் செய்து அரசாங்கத்திடம் செலுத்துகின்றார்.  இது அரசாங்கத்திற்குக் கிடைக்கும் மிகப் பெரிய வருமானம். சரி!  இதை மத்திய அரசிடம் செலுத்துகின்றார்களா? அல்லது மாநில அரசிடம் செலுத்துகின்றார்களா ?

இது மாநில அரசின் வருமானம்தான். நமது சட்டம் எந்த வருவாய் மத்திய அரசுக்குப் போக வேண்டுமென்றும், எந்த வருவாய் மாநில அரசுக்குப் போக வேண்டுமென்றும் தெளிவாகக் கூறியிருக்கிறது.  அரசியல் சட்டப்படி விற்பனை வரியென்பது மாநில அரசுக்குப் போய்ச் சேர வேண்டிய நிதி ஆதாரம்தான். இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் கிடையாது. விற்பனை வரியில் இரண்டு பிரிவுகள் உண்டு. 1. தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம். 2. மத்திய விற்பனை வரிச் சட்டம்.  இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் முதலில் தெரிந்து கொள்வோம். 

தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம் : இது 1937-38-ம் ஆண்டிலிருந்து அமுலில் இருக்கிறது.ஒருவர் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும் முன் அரசாங்கத்தில் விற்பனை வரிச் சட்டத்தின்  அவர் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  அவ்வாறு பதிவு செய்து கொண்டவர்  Registered Dealer  என்றழைக்கப் படுவார்.  பதிவு செய்து கொண்டதற்கு அவருக்கு ஒரு எண் கொடுக்கப் படும். அதை வைத்துக் கொண்டுதான் அவர் வியாபாரம் செய்ய வேண்டும்..சிறு வியாபாரிகளுக்கு இவ்வாறு பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. பதிவு செய்து கொண்டவர் தமிழ்நாட்டில் வியாபாரம் தொடங்கலாம்.  அவர் செய்யும் விற்பனைகள் தமிழ் நாட்டிற்குள்ளேயே இருக்குமானால் அது உள்ளூர் விற்பனை என்றழைக்கப் படும். அதாவது  Sale within Tamilnadu  என்றழைப்பார்கள்.  விற்பனை செய்யும் பொருளுக்கு எவ்வளவு விற்பனை வரி விதிக்க வேண்டும் என்று பட்டியல் கொடுக்கப் பட்டு இருக்கும். அதன்படி வரியை  பொருள் வாங்குவோரிடமிருந்து வசூலித்து அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும்.  ஒருபொருளுக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டு மென்று மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அதில் மத்திய அரசு தலையிடமுடியாது.  இது மாநில அரசின் நிதி அல்லவா!  ஆகவே இதில் மத்திய அரசு தலையிட முடியாது.  இந்த விற்பனை வரியானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.  உதாரணமாக நாம் உபயோகிக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு தமிழ் நாட்டில் 10 சதவீதம் விற்பனைவரியானால் அண்டை மாநிலமான ஆந்திராவில் இதற்குக் கூடவோ அல்லது குறையவோ இருக்கலாம்.  இதைப்போல்தான் மற்றமாநிலங்களும் தன் வசதிக்கேற்ப விற்பனை வரியை விதிக்க முடியும். ஒரு பொருளுக்கு ஒரே மாதிரியான விற்பனை வரி இந்தியா முழுவதும் கிடையாது.

தமிழ்நாட்டில் ஒருவர் தன் தொழிற்சாலையில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார்.  அதற்கு 10% விற்பனை வரி விதித்து மொத்த கொள்முதலாளருக்கு (Whole sale dealer) விற்பனை செய்கிறார். அவர் வாங்கி சில்லரை விற்பனையாளருக்கு ( Retail seller)  விற்பனை செய்கிறார்.  இந்த விற்பனைக்கு 10% விற்பனை வரி விதிக்க வேண்டுமா வென்றால் இல்லையெண்ற்றுதான் கூற வேண்டும். இது  Second Sale  என்றழைக்கப் படுகிறது. அவர் இதற்கு 1%  வசூலித்தால் போதுமானது. இதற்கு  re-sale tax  என்று பெயர்.  சில்லரை விற்பனையாளர் பொருள் வாங்கும் பொது மக்களுக்கு ( Consumer)  விற்பனை செய்கிறார். அப்போதும் 1% வரி வசூலித்தால் போதுமானது. இவ்வாறு  ஒவ்வொரு விற்பனையின் போதும் வரி வசூல் செய்வதை  “Multi-point Tax”  என்றழைப்பார்கள்.  இவ்வாறு உள்ள தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் சில பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது.  சில பொருள்களுக்கு 1% வரி இருக்கும்; இவ்வாறு பல விதமான வரி விகிதங்கள் இருக்கும்.  அதன்படி வரிவிதித்து அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும். 

இதைத் தவிர  Surcharge, Turnover-tax  என்ற வரி விதிப்பும் தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் உண்டு.  இதைத் ஆண்டுதோறும் இந்த விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வணிகர்கள் தங்கள் கணக்குகளை அரசாங்கத்திடம் தணிக்கை செய்து தணிக்கை உத்தரவு பெறவேண்டும்.

இந்த நிலைதான் 31-12-2006 முடிய இருந்து வந்தது.  இந்த ஆண்டுமுதல் தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு பதில் மதிப்புக் கூட்டு வரி என்ற  V.A.T.  நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதை விளக்குமுன்னர் மத்திய விற்பனை வரிச் சட்டத்தையும் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொள்வோம். இந்த விற்பனை வரிச் சட்டம் இன்னும் அமுலில் இருக்கிறது. மாறவில்லை.

மத்திய விற்பனைச் சட்டம்.( Central Sales-tax Act):-  ஒருமாநிலத்திலிருந்து மற்றொறு மாநிலத்திற்குப் பொருள்கள் வாங்கவும், விற்கவும்போதுதான் இந்தச் சட்டம் அமுலுக்கு வருகிறது. ஒருவியாபாரி மற்றொறு மாநிலத்திற்குப் பொருள்களை விற்கும்போது யாருக்கு விற்கிறார் எனப் பார்க்க வேண்டும். உதாரணமாக வியாபாரி ஒருவர் சென்னையிலிருந்து பெங்களூரில் உள்ள வியாபாரிக்கு விற்பனை செய்கிறார் எனக் கொள்வோம். பெங்களூரில் உள்ள வியாபாரி அம்மாநிலத்தில் பதிவு செய்த வியாபாரியாக ( Registered Dealer)   ஆக இருந்தால்  விற்கும் பொருளுக்கு 4% விற்பனை வரி வசூலித்து அரசாங்கத்திற்குக் கட்டினால் போதுமானது.  அவ்வாறு அவர் பதிவு செய்யாத வியாபாரியாக இருப்பின் உள்ளூரிலே அந்தப் பொருளுக்கு என்ன வரி விகிதமோ அதை வசூலிக்க வேண்டும்.  உதாரணமாக ஒரு பொருளுக்கு 12% உள்ளூர் வரி எனக் கொள்வோம். அதை பெங்களூரிலுள்ள பதிவு பெற்ற வியாபாரிக்கு 4%த்திலும், பதிவு பெறாத வியாபாரிக்கு 12%-த்திலும் விற்பனை செய்ய வேண்டும். 

அதைப் போன்று தமிழ்நாட்டில் உள்ள பதிவு பெற்ற வியாபாரி பெங்களூரில் இருந்து ஒரு பொருளை வாங்கினால் 4% வரி செலுத்தினால் போதுமானது. உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருள் களை மற்ற மாநிலங்களிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்வோம்.  அவர் எந்த மூலப் பொருளாக இருந்தாலும் 4% வரி விகிதத்தில் அவர் பொருள்களை வாங்கி உற்பத்தியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மத்திய விற்பனை வரிச் சட்டத்தில் எந்த மாநிலத்திலிருந்து பொருள்கள் விற்கப் படுகின்றதோ அந்த மாநிலத்திற்குத்தான் விற்பனை வரி போய்ச் சேருகிறது.  இந்த மத்திய விற்பனைவரிச் சட்டம் இன்னும் அமுலில்தான் இருக்கிறது. மாறவில்லை.

சரி! இப்போது மதிப்புக் கூட்டு வரியைப் பற்றிப் பார்ப்போம்.  இது தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு மாற்றாக வந்திருக்கிறது என ஏற்கனவே கூறி இருக்கிறோம்.  இதன் ஷரத்துக்கள் என்ன வென்று பார்ப்போம். இந்த மதிப்புக் கூட்டு வரி ஏற்கனவே சுமார் 130 நாடுகளில் அமுலில் இருக்கிறது. இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தையும், பாண்டிச்சேரியையும் தவிர மற்ற மாநிலங்கள் ஏற்கனவே அமுல் செய்து விட்டன. இந்த இரண்டு மாநிலங்கள் மட்டும் இன்னும் அமுல் செய்ய வில்லை.

இதில் வரி விகிதங்கள் நான்கு மட்டுமே.

1. சில பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது.  அவைகளுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டு இருக்கிறது.

2. மற்ற பொருள்களுக்கு 1%, 4%, 12.5% வரிவிகிதம்தான்.

இந்த மதிப்புக் கூட்டு வரியில் தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்திலிருந்தது போல்  Surcharge, Additional Tax  ஆகியவைகள் எல்லம் கிடையாது. சரி! வரி விதிப்பு எவ்வாறு இருக்கிறது எனப் பார்ப்போம்.

உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் ஒரு பொருளை, மொத்த விற்பனையாளருக்கு விற்பனை செய்கிறார் எனக் கொள்ளுங்கள். அந்தப் பொருளின் விலை ரூபாய் 10,000/- எனவும், அதன் விற்பனை வரி 4% எனவும் கொள்ளுங்கள்.  உற்பத்தியாளர் பொருளின் விலை ரூ. 10,000+ விற்பனை வரி ரூ.400/- ஆக மொத்தம் ரூ. 10,400/-க்கு விற்று விடுகிறார். ரூ.400/-ஐ அரசாங்கத்திடம் விற்பனை வரியாகக் கட்டி விடுகிறார்.

மொத்த விற்பனையாளைர் அதைப் ரூ. 12,000/- க்கு சில்லரை விற்பனையாளருக்கு விற்கிறார் எனக் கொள்ளுங்கள். அவர் ரூ.12,000/-க்கு 4% விற்பனை வரி எனக் கணக்கிட்டு மொத்தம் ரூ. 12480/- விற்கிறார்.  விற்பனை வரியான ரூ. 480/- ல் தான் கொடுத்த விற்பனை வரியான ரூ.400/- க் கழித்துக்கொண்டு மீதித் தொகையான ரூ.80/- அரசாங்கத்திற்குக் கொடுத்து விடுகிறார்.
சில்லரை விற்பனையாளர் பொருள் நுகர்வோருக்கு ரூ. 15,000/- க்கு விற்பனை செய்கிறார் எனக்கொள்ளுங்கள்.  அவர் ரூ. 15,000/- + விற்பனை வரி 4% ரூ. 600/- ஐ நுகர்வோரிடமிருந்து வாங்கி தான் வரி செலுத்திய  ரூ.480/- க் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ. 120/- அராசாங்கத்திற்குச் செலுத்தி விடுகிறார்.

One important aspect in V.A.T is, the material suffers tax at the same rate at every point of sale whereas under T.N.G.S.T, Act the material suffers @1% resale tax at every point of sale other than the first sale.
சரி ! உற்பத்தியாளருக்கு இது எவ்விதத்தில் பயனளிக்கிறது?  தற்போது உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் மூலப் பொருள்களுக்கு 4% வரிகொடுத்து எல்லா மூலப் பொருள்களையும் பெற்றுக்கொள்கிறார்கள்.  தமிழ்நாட்டிலிருந்து வாங்கும் மூலப் பொருள்களுக்கு உற்பத்தியாளர்கள் 4% வரி விகிதத்தில் வாங்கிக் கொள்ளலாம்.  அயல் மாநிலத்திலிருந்து வாங்கும் மூலப் பொருள்களுகளையும் 4% வரி விகிதத்தில்  வாங்கிக் கொள்ளலாம்.  ஆனால் விற்கும் போது தமிழ் நாட்டிலிருந்து வாங்கிய மூலப்பொருள்களுக்குக் கட்டிய வரி மட்டுமே விற்பனை செய்யும் வரியிலிருந்து கழித்துக் கொண்டு மீதத்தை அரசாங்கத்திற்குக் கட்டமுடியும்.  உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருள்களை ரூ. 1000/-க்கு வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்.  அதற்கு 4% வரி கட்டுகிறார். ரூ. 40/- வரித் தொகையா கின்றது. மொத்த அடக்க விலை 1000+40 = 1040.  அதை ரூ.1200/-க்கு விற்கிறார் எனக் கொள்ளுங்கள்.  அதற்கு வரித்தொகையாக ரூ. 48/- வசூல் செய்கிறார்.  அரசிற்குக் கட்டும்போது ரூ. 48/-ல் இருந்து ரூ. 40/- ஐக் கழித்துக் கொண்டு ரூ. 8/- மட்டும் செலுத்தினால் போதும். அதாவது அவர் வாங்கிய பொருள்களின் மீது செலுத்திய வரித் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப் படுகிறது. இது தமிழ்நாட்டிலிருந்து வாங்கிய பொருள்களின் வரித் தொகையையே இவ்விதமாகத் திரும்பிப் பெறமுடியும்.  அயல் மாநிலத்திலிருந்து வாங்கிய பொருள்களுக்குக் கட்டிய வரியினை இவ்விதமாகத் திரும்பிப் பெறமுடியாது.

இந்த மதிப்புக் கூட்டு வரியின் கீழ், தமிழ் நாடு வணிக வரிச் சட்டத்தின் கீழ் இருப்பதைப்போல் ஆண்டுதோறும் அதிகாரிகளால்  Assessment Order  பெற வேண்டிய அவசியம் இல்லை. வணிகர்களே தாங்களாகவே சரியாகக் கணக்கு வைத்துக் கொண்டால் போதும்.மொத்த வணிகர்களில் சுமார் 20% பேர்களைத் தேர்வு செய்து Assessment  செய்வோம் எனக் கூறுகிறது வணிக வரித்துறை.
இந்த மதிப்புக் கூட்டு வரியை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று இப்போது நாம் பார்ப்போம்.



உற்பத்தியாளர்கள் எந்தப் பொருளாக இருந்தாலும் உற்பத்திசெய்வதற்காக 4% வரி விகிதத்தில் அவைகளை வாங்கி உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.  உதாரணமாக ஒருவர் உற்பத்திக்காக ரூ. 1000/-க்குப் மூலப்பொருள்களை வாங்கினால் 4% வரியையும் சேர்த்து ரூ. 1040/-க்கு வாங்குகிறார்.  உற்பத்தி செய்த பொருளை  ரூ.1200/-க்கு அதே 4% வரி விகிதத்தில் விற்றால் அவர் ரூ. 1248/-க்கு விற்பனை செய்து விடுகிறார்.  அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய வரியைக் கட்டும்போது  அவர் வசூல் செய்த ரூ. 48/-ல் இருந்து அவர் கொடுத்த வரித் தொகையான ரூ.40/- ஐக் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ.8/-ஐக் கட்டி விடுவார்.  அவர் கொடுத்த ரூ. 40/- "Input Credit"  என்றழைக்கப் படுகிறது.  இந்த  V.A.T.  சட்டத்தில் அவர் வாங்கிய மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 1000/- ஆகவே இருந்து வருகிறது.  ஆனால் இதற்கு முந்தைய சட்டத்தில் இவ்வாறு கொடுத்த வரிப் பணத்தை திரும்பிப் பெறும் வாய்ப்பு இல்லாததால் அவர் விற்கும் பொருளை ரூ. 1200/- விற்றிருக்க மாட்டார். அதற்கு மேலாக ரூ. 1240/- க்காவது விற்றிருப்பார்.  ஆக பொருள்களின் விலை இதில் குறைய வாய்ப்பிருக்கிறது என்பது இவர்களின் வாதம்.

"Input Credit"  என்பது அந்த மாநிலத்திற்குள்ளேயே வாங்கும் பொருள்களுக்கு மட்டுமே கிடைக்குமென்பதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திற்குள்ளேயே மூலப் பொருள்ளை வாங்க முயற்சி செய்வார்கள்.  உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் தன் உற்பத்திக்கு  Electric Motor - ஐ  பெங்களூரிலிருந்து 4% வரி விகிதத்தில் வாங்குகிறார்  எனக்கொள்ளுங்கள்.  இது வெளி மாநிலத்திலிருந்து வாங்கப் படுவதால் இந்தப் பொருளுக்கு அவர் கொடுக்கும் வரியை  Input Credit  ஆக எடுத்துக் கொள்ள முடியாது.  அதே  Elecatric Motor- ஐ கோயம்புத்தூரிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்; அந்த வரிப் பணத்தை  Input Credit  ஆக எடுத்துக் கொண்டு அந்த மாதம் அவர் செலுத்தும் வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.  இவ்வாறு செய்வதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திலேயே மூலப் பொருள்களை வாங்க முயற்சிப்பார்கள்.  அதனால் அந்த மாநிலத்தின் வர்த்தகம் பெருகும். அதனால் அரசுக்கு அதிக வரி கிடைக்கும்.

உள் மாநிலத்திலேயே பொருள்களை வாங்கி உள் மாநிலத்திலேயே அவற்றை வியாபாரிகள் ரூ. 10,00,000/- வரை விற்றால் அவர்கள் அரசாங்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டாம்.  அவர்கள் சிறு வியாபாரிகள் எனக் கருதப் படுவர். அவர்கள் மாதம் விற்பனை வரி செலுத்துவது,  Assessmentக்குச் செல்வது போன்றவைகள் கடையாது.   V.A.T.  வருவதற்கு முன்பு இந்தச் சலுகை ரூ. 3,00,000/- வரை வியாபாரம் செய்பவர்களுக்கே இருந்து வந்தது.  இப்போது அது கணிசமாக உயர்த்தப் பட்டு விட்டது.

இதில்  Resale Tax, Surcharge, Turn-over- tax  போன்றவைகள் கிடையாது.

இதுபோன்ற சலுகைகள் இருப்பதாக ஒரு தரப்புக் கூறுகின்றது. சரி! அடுத்த தரப்பின் வாதம் என்ன?
இந்த "Input Credit"ஐ கழித்துக் கொள்ளும் வியாபாரிகள் அதற்குண்டான, பில்கள், ரிஜிஸ்டர்கள் ஆகியவற்றை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின்  Assessment  கிடையாது என்று அறிவித்திருந்தாலும், 20% வணிகர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் கணக்குகள் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.  ஆகவே எல்லா வணிகர்களும் சரியான முறையில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
மாதந்தோரும் வரி கட்டும் போது மாதாந்திரக் கணக்குகளையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். கணக்குகளை வைத்துக் கொள்ள கம்ப்யூட்டர் தேவைப்படும். அதை இயக்கத் தெரிந்தவரும் தேவைப்படும். இதெற்கெல்லாம் அதிகச் செலவாகும்.  வணிகர்கள் இந்தச் செலவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும். 
உள் மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குத்தான் வரியைக் கழித்துக் கொள்ள இயலும். வெளி மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குக் கழிக்க முடியாது. ஆகவே பொருள்களின் விலை குறையும்  என்று எதிர்பார்க்க முடியாது.
மதிப்புக் கூடுதல் வரி அறிமுகப் படுத்தபோது இந்தியாவெங்கும் ஒரே சீரான வரி என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் நடை முறையில் வரி சீராக இல்லை; வட மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும்  ஒவ்வொரு விதமான வரி விதிக்கப் படுகிறது. அறிவிக்கப் பட்டபோது "எந்தப் பொருளுக்கும் 12.5%க்கு மேல் வரி விதிக்கப்படமாடடாது" எனக் கூறப்பட்டது. ஆனால் கேரளாவில் பல பொருள்களுக்கு 16%, 20% என விதிக்கப்பட்டுள்ளது.  ஆகவே ஒரே சீரான வரியாக விதிக்கப் பட வில்லை.

அடுத்தது இதில் உள்ள தண்டனைச் சட்டங்கள். விதி எண் 71, 72-ல் கூறப்பட்டுள் ளவை வணிகர்களுக்குக் கடுமையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மாதந்தோறும் கணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறினாலோ, அல்லது வியாபாரத்தைச் சட்டப்படிப் பதிவு செய்யா விட்டாலோ கோர்ட் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.. முதல் தடவை செய்த தவற்றிற்கு அபராதத்துடன் போய்விடும். இரண்டாம் முறை அதே தவற்றைச் செய்தால் சிறைத் தண்டனைக்கும் சட்டத்தில் இடமுண்டு.  இதற்கு முந்தைய T.N.G.S.T. Act-ல் சிறைத் தண்டனைக்கு இடமில்லை. இப்போது அப்படி இல்லை. இது வணிகர்களுக்கு சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2/28/2012

பணம் ஈடடுவது மட்டும் நிம்மதியான வாழ்க்கை அல்ல !


கடல் கடந்து, கண்டம் கடந்து, கண்டெய்னரில் தன் உயிரேயே பணயம் வைத்து பணத்திற்காக, தன்னை சார்ந்து இருப்பவர்களின் நலனுக்காக செல்லும் சகோதரர்களுக்கு ஒரு சிந்தனை கட்டுரை.

பணம் 

பணம் என்றால் பிணமும் வாயைப்பிளக்கும்,பணம் பாதாளம்வரை பாயும், பணமில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற வார்த்தைகள் மூலம் பணம் பணம் என்று நாம் மனமும், அது எங்கு கிடைத்தாலும் ஓட,ஆட வைக்கிறது.பணம் ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் மாயப்பொருள்தான் அதில் சந்தோசம் இல்லை,ஆனாலும் அதிகப்படியான “பணம்” நம்மை மகிழ்ச்சிபடுத்துமா அல்லது நம் மகிழ்ச்சியை குதறுமா என்பதுதான் கேள்வி....அலசிபார்ப்போமே..

தன்னிறைவு 

தன்னிறைவு என்ற வார்த்தையில் உள்ள அர்த்தத்தை நாம் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும், பட்டுக்கோட்டையில் ஒரு நிலமும்,சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு பக்கத்தில் ஒரு பலமாடி கட்டிடமும் இருந்தால்தான் தன்னிறைவு என்று எண்ண கூடாது,ஒருவர் உயிர்வாழ என்ன அடிப்படை தேவைகள் அது எந்த சிரமும் இல்லாமல் பூர்த்தி ஆகுதோ அதனைதான் தன்னிறைவு என்று கொள்ளவேண்டும்.அடிப்படை வசதிகளைப் பெற பணம் முக்கியம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகி விடாது. ஒருவருக்குப் பணம் வந்தவுடனேயே பாதுகாக்க வேண்டிய அவசியமும் வந்து விடுகிறது. அதனால் பல சமயங்களில் நிம்மதி போகிறது. நிம்மதி போய் ஆற்றுப் பாலத்தில் மனதை ஆற விட்டவங்களும் உண்டு 

ஒரு ஊரில் நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவர், ஒரு சிறிய வீட்டைக்கட்டி அமைதியாக வாழ்ந்துவந்தார், நிம்மதியான தூக்கமும் இருந்தது, திடீரென அவருக்கு ஒரு பணக்காரர் வந்து , இறைவன் என் கனவில் வந்து இந்த வைரக்கல்லை உங்களிடம் கொடுக்க சொன்னார், அமானிதத்தை ஒப்படைப்பது என் கடமை எனவே இதை ஏற்றுக்கொள்ளுங்கள்,மனிதனுக்கு தலை,கால் புரியவில்லை சந்தோசமாக பெற்றுக்கொண்டார் ஆனால் அதனை பெற்றுக்கொண்ட நாள் முதல் அதனை எப்படி பாதுகாப்பது என்ற சிந்தனையிலயே அவர் தூக்கம் மறந்து நிம்மதி இழந்து பேயாக மாறிப்போனார்..இவ்வாறுதான் நாம் வாழ்க்கையும் கொடுத்ததை கொண்டு நிறைவடையாமல், மேலும் எடுத்து கொள்ள நினைக்கிறது, நிம்மதியை அணைக்கின்றது,ஆகையால் தன்னிறைவு தன்னம்பிக்கை தரும் வாழ்க்கையை செழிப்பாக்கும். 

வாழ்நாள் சாதனை 

வாழ்க்கையில் நாம் என்ன சாதித்து இருக்கிறோம் என்பதற்க்கு நம் அக்கவுண்ட் பேலன்ஸ்/ நிலம் / வீடு வாசல்/ கார் போன்றவற்றைதான் அளவு கோளாக எடுத்து இருக்கின்றோம், யாரவது நாம் செய்துள்ள நற்காரியங்கள், உறவுகள், நண்பர்கள், பொதுநலப் பணிகள் போன்றவற்றை அளந்து வாய் பிளந்து இருப்போமென்றால் மிகக்குறைவுதான் மனிதனுடைய வாழ்க்கை என்னவோ அதிகபட்சமாக 65 வயதுவரைதான், அதுவும் இப்போதெல்லாம் 35 வயசுக்கு பிறகு படுக்கையில் எழுப்பிவிடுவதற்க்குட ஒர் ஆள் தேவைபடும் அளவிற்க்கு நோய்கள் மொய்க்கின்றன,வாலிபத்தை தொலைப்பதும் வாழ்வின் தோல்வியே

பணம் என்ற உப்புத் தண்ணிரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் எடுத்துக் கொண்டேதான் இருக்கும். தாகம் தீரும் வரை காத்திராமல் மற்ற மகிழ்ச்சி தரும் விசயங்களில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வைத் தொடரப் பழக வேண்டும். அதற்க்காக தேடலை நிறுத்திவிட்டு ஊரில் வெட்டியாக சுற்றவேண்டும் என்பதில்லை..எதற்க்கும் ஒரு எல்லையை வரையறை செய்து கொள்ளவேண்டும்,உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது என்பதை கண்டெறிய வேண்டும்..அதுவே நம் இலக்காக இருக்கவேண்டும்.

நாம் எது அதிக மகிழ்ச்சி என்பதில் தெளிவாக இருந்தால் நமக்குப் பணத்தின் மீதிருக்கிற பற்று குறையும், பொருள் தேடல் என்ற கடலில் நம்மையும் தொலைத்துவிட்டு, வாழ்க்கையும் தொலைத்து விடுகிறோம்.. ஒருவர் பொருள் தேட ஜப்பானுக்கு சென்று 8 வருடங்கள் கழித்து வந்தார்.. பணம் அவரிடம் வந்தது..ஆனால் வாழ்க்கை விலகி ஓடிவிட்டது...…ஆனால் அந்த பணம் அவரின் இழந்த வாழ்க்கையை திருப்பி தர முடியவில்லை

ஆகையால் இந்த போரை நடத்தி கொண்டிருக்கவேண்டியதுதான், அந்த போரில் வெற்றிபெற உதவுவது உழைப்பு ..உழைப்பால் பணம் வரவு மட்டும் இல்லை, உடலும் ஆரோக்கியமடைகிறது....உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் மன ஆரோக்கியம் முக்கியம் ,அந்த மன ஆரோக்கியத்திற்க்கு மருந்து மகிழ்ச்சி தரும் மற்ற விசயங்கள்தான் பணமல்ல…. 

நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய 9 வழிகள் உள்ளன,





1.    அதிகாலையில் எழுந்து நீராடி 5 நிமிடம் கண்கணை மூடி இஷ்ட தெய்வத்தை புருவமத்தியில் நினைத்து தியானம் செய்யவúண்டும், அவ்வாறு இயலாவிடில் 108 முறையாவது இறைவன் நாமத்தை உச்சரிக்க வேண்டும், நாளடைவில் ஈடுபாடு நிச்சயம் வந்துவிடும்.

2.    தினமும் சிறிது நேரமேனும் நல்ல ஆன்மீக புத்தகங்களைப் படிக்க வேண்டும் () மனதிற்கு இதமளிக்கக் கூடிய பக்திப் பாடல்களை கேட்கவேண்டும்.

3,    நேரம் கிடைக்கும்போது எல்லா ஆலயத்திற்கும் சென்று மனமுருக இறைவனை ஒரு கண நேரமேனும் வழிபடுங்கள், பின்பு கோயில் பரகாரத்தில் அமைதியாக சிறிது நேரம் இருங்கள்
.
4,    ஒரு நாளைக்கு ஒருவருக்காவது சிறு உதவி ஏதேனும் செய்யுங்கள், அன்றாட பணிகளை “இறைபணியாக” நினைத்து கடமையாற்றுங்கள்.

5,    வாரம் ஒரு வேளையாவது உப்பும். சர்க்கரையும் இன்றி சாப்பிடுங்கள், கூடுமான வரை காரம். எண்ணைகளைத் தவிருங்கள், கீரை. காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

6,  மற்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவியை மறந்துவிடுங்கள், மற்றவர்கள் உங்களுக்குச் செய்த உதவியை மறக்காதீர்கள், மற்றவர்கள் செய்த தீமையை மன்னிக்க கற்றுக் கொள்ளுங்டகள். மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள், இதனால் கோபம் என்பதே வாழ்வில் வராது.

7.  முடிந்தவரை உண்மையை பேசுங்கள், எதிராளிகளிடம் பேசும்போது சப்தமின்றி மென்மையாக பேசக்கற்றுகொள்ளுங்கள், “வாரத்தில் 2 மணி ” நேரமாவது மௌன விரதம் இருக்க பழகுங்கள்,

8. சத்துள்ள உணவை உண்ணுங்கள், அதை குறைவாக உண்ணுங்கள், எந்த உணவையும் இறைவன் பிரசாதமாக நினைத்து சந்தோஷமாக சாப்பிடவும்.

9.   கூடுமானவரை திரைப்படம். டி,வியை தவிருங்கள், “மாதத்தில் 2 நாள் தவிர மற்ற நாட்களில் பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள்” திருமணமான ஆணும். பெண்ணும் பாலியல் சிந்தனையில் இருந்து விடுபட குழந்தைகளோடு பழகுங்கள், அவர்கள் செயல்களை ரசியுங்கள், இந்த 9 கருத்துக்களில் சிலவற்றையேனும் நாம் கடைபிடித்தால் ஆன்மீகத்திலும். வாழ்விலும் நாம் முன்னேற முடியும்.

2/18/2012

அரசியல் ஆத்திச்சூடி



அரசியலில் குதி

ஆட்டையைப் போடு

இல்லாள் இரண்டு வை

ஈ என்று இளி

உடன்பிறப்பை தள்ளு

ஊழலை தெரிந்துகொள்

எடுத்திடு ஆயுதம்

ஏமாற்ற கற்றிடு

ஐம்புலன் அவிழ்

ஒழுக்கம் ஒழி

ஒட்டு வேட்டை ஆடு

ஔ என்று முழி

களப்பணி ஆற்று

காக்கா பிடி

கிழவியை அணை

கீழே விழு

குனிந்து கும்பிடு

கூட்டம் சேர்

கெடுதல் தெரிந்து செய்

கேடு விளைத்திடு

கை நீட்டி கேள்

கொலைகள் பல செய்

கோட்டையைப் பிடி

கௌன்சிலர் ஆகு
Thanks to Thanagopal,pondicherry