வயிற்றில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் கொண்டவர்கள் தினமும் ஆஸ்பிரின் மருந்தை உட்கொண்டு வந்தால் அவர்களுக்கு அவ்வகை புற்றுநோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என புதிய ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.
வயிற்றுப் புற்றுநோய் வந்தவர்கள் வழித்தோன்றிய நபர்களுக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் காலகட்டத்துக்கு தினமும் இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளை கொடுத்து வந்ததில் அவர்களுக்கு அவ்வகை புற்றுநோய் வருகின்ற ஆபத்து அறுபது சதவீதம் குறைந்தது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு முடிவுகள் தி லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.
மாரடைப்பு ஆபத்தையும் , இரத்த ஓட்ட பிரச்சினைகளையும் குறைக்க ஆஸ்பிரின் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடச்சொல்லி ஏற்கனவே மருத்துவர்கள் பலர் பரிந்துரைத்து வருகின்றனர்.
ஆஸ்பிரின் மருந்து சிலருக்கு மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதும் மருத்துவர்கள் அறிந்த விடயம்தான்