பெரும்பாலான மக்களுக்கு புகைப்பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது என்பது தெரிந்திருந்த போதும், புகையிலையினால் உண்டாகும் தீமையின் அளவு குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை எனலாம். புகையிலை நிறுவனங்கள், புகையிலைப் பெட்டிகளை, பொட்டலங்களை அழகாக, வசீகரமாகத் தயாரித்து வழங்குவதன் மூலமும் வித்தியாசமான விளம்பர உத்திகள் பலவற்றின் மூலமும் புகையிலை விற்பனையைப் பெருக்கி, உடல்நலத்திற்கு புகையிலை உண்டாக்கும் தீமைகளை மக்கள் அறிந்துக்கொள்ள முடியாதவாறு திசை திருப்புகின்றன. |
புகையிலையைப் பயன்படுத்துவதால் வரும் தீமைகளை மக்கள் உணருமாறு செய்யச் சிறந்த சிக்கனமான, பயனுள்ள வழி, புகையிலைப் பெட்டிகள் / பொட்டலங்களின் மீது புகைப்பதனால் வரும் தீங்கினைக் குறித்த எச்சரிக்கை செய்வதோடு, படங்களோடு கூடிய எச்சரிக்கை வாசகங்கள் பொறிக்கப்படுவது மிகுந்த பலனளிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையாகும். மக்கள், புகைப்பிடிப்பதைக் குறைத்துக் கொள்ளவும் முழுமையாக நிறுத்திக்கொள்ளவும் இந்த எச்சரிக்கைப் படங்களும் வாசகங்களும் பெரிதும் உதவுகின்றன. படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கும் எச்சரிக்கைப் படங்கள், தெளிவான உடனடியான எச்சரிக்கையைத் தருகின்றன எனலாம். இத்தகு எச்சரிக்கைப் படங்களும் வாசகங்களும் புகையிலைப் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்,அதிலிருந்து விடுபடவும் வழிவகுக்கின்றன. எச்சரிக்கை படங்களின் மூலம் எச்சரிக்கை விடுப்பது படிப்பறிவில்லாதவர்களுக்கும் உடனடியாக செய்தியைத் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. புகையிலைப் பெட்டியின் மீது இருக்கும் படமும் வாசகங்களும் புதிய வாடிக்கையாளர்களுக்குப் (குறிப்பாக இளைஞர்களுக்கு) புகையிலையின் மீது ஏற்படும் நாட்டத்தைப் பெரிதும் குறைக்கின்றன. புகைப்பிடிப்பதினால் வரும் பெரும் தீங்கு குறித்த எச்சரிக்கையை தெரிவிக்க வேண்டியிருந்தாலும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தியதாலும். 2009இல் நடத்தப்பட்ட புகையிலை ஒழிப்பு நாள் முகாம் பின்வரும் இன்றியமையாத செய்தியின் மீதுத் தன் கவனத்தைக் குவித்தது. அதாவது, உடல்நலம் குறித்த எச்சரிக்கை வாசகங்களையும் படங்களையும் புகையிலைப் பெட்டியின்மீது அச்சிடுதல் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் புகைப்பிடிப்பதனால் வரக்கூடிய மிகப்பெரிய தீங்கினை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு உண்டாக்குவதற்கும் புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் இந்த எச்சரிக்கை வாசகங்களும் படங்களும் உதவுகின்றன