மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

சந்தோசம்


எந்தவொரு நல்ல யோசனையையும் செயலையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது ஏற்படுகிற சந்தோசம் அலாதியானது. மனபூர்வமாகவும், நேர்மையாகவும் அதை செய்தால் சந்தோசம் இரட்டிப்பாகும்

அறுபதைக் கடந்துவிட்டேன்


ஓ....புரிகிறது....
எது பிடிக்குமோ
அதை மட்டுமே சாப்பிடுவேன் என்ற
பிடிவாதம்
கரைந்துகொண்டிருக்கிறது.
... எது கிடைக்கிறதோ
அதைப் பிடித்ததாக்கிக்கொள்ளும்
பக்குவத்தை
நான் பெற்றுக்கொண்டு வருகிறேன்
இந்த
அருமையான பக்குவம் எப்படி கைவரப்பெற்றேன்?
ஓ ....புரிகிறது....
நான்
அறுபதைக் கடந்துவிட்டேன்

துன்பங்களுக்கு காரணம் நல்லவர்கள்தான்





இன்று,இந்த சமுதாயம்


அனுபவித்துக்கொண்டிருக்கும்


பல துன்பங்களுக்கும்,அநியாயங்களுக்கும்


காரணம்,


கெட்டவர்கள் அல்ல.


அமைதியாக கண்ணை மூடிக்கொண்டிருக்கும்


நல்லவர்கள்தான்


அன்பு


பிரச்சனைக்கும்,
ஒரு வகையில்,
அன்புதான் காரணமாகிறது.
ஆம்,
அன்பு அதிகமாகிறபோது,
... எதிர்பார்ப்பு அதிகமாகிறது.
எதிர்பார்ப்பு அதிகமாகிறபோது,
ஏமாற்றம் அதிகமாகிறது.
ஏமாற்றம் அதிகமாகிறபோது,
கோபம் பெரிதாகிறது.
அந்த கோபம்,
பிரச்சனையைப் பெரிதாக்கி,
பிரிவை ஏற்படுத்தி விடுகிறது

மௌனம் அதிகம் சாதிக்கும்



கணவன்,மனைவியிடமும்

மனைவி,கணவனிடமும்

தோற்றுப் போகத் தயாராக இருந்தால்

அங்கே

குடும்பம் ஜெயிக்கிறது


ஞாபகம் - ஞாபக மறதி

நடந்த நல்ல விஷயகளில்

மிதந்து கொண்டிருப்பதற்காக

"ஞாபக"த்தையும்,

... நடந்த கெட்ட விஷயங்களில்

மூழ்கி விடாமல் இருப்பதற்காக

"மறதி"யையும்

ஆண்டவன் நமக்குத் தந்திருக்கின்றான்

பல நேரங்களில்

பேச்சு சாதிப்பதை விட

மௌனம் அதிகம் சாதிக்கும்

சில நேரங்களில்

பேச்சு காயப்படுத்திவிடவும் கூடும்

... முடிந்தவரை

பிறர் மீதான கோபங்களில்

மௌனம் காத்து

மகிழ்ச்சி சேர்க்க முயலலாமே.