தமிழ்நாட்டில என்ன தப்பு நடந்தாலும் அதற்கு காரணம் யார்தெரியுமா? அது ரஜினியேதான் , இன்னும் கொஞ்ச நாட்களில் இது சட்டமூலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்படலாம். என்னதான் ரஜினியை தலை, வால்களிலிருந்து வாலில் இருக்கும் முடிகள்வரை விமர்சித்தாலும் எதற்கு எந்தப்பதிலும் சொல்லாமல் மௌனத்தையும் புன்னகையையும் பதிலாக கொடுக்கும் ரஜினியை பார்த்தால் வியப்பாக இருக்கும்.
காவிரி, ஒகேனக்கல் பிரச்சனையா? முதலாவதாக ரஜினியை கூப்பிடுவார்கள், வந்தால் குட்டையை கலக்குவது வராவிட்டால் முடிந்தவரை ரஜினியை கேவலப்படுத்துவது . சினிமா சம்பந்தபட்ட நிகழ்வுகளுக்கு ரஜினியை அழைப்பது, வராவிட்டால் திட்டுவது வந்தால் அவரது பேச்சில் குற்றம் கண்டுபிடித்து அதற்க்கு வேறு அர்த்தம் கற்பித்து ரஜினியை விமர்சிப்பது . ஈழப்போராட்டமா ரஜினியை அழைப்பது , வராவிட்டால் ரஜினிக்கு தமிழ் உணர்வில்லை என்று கூறுவது (இங்கு மட்டும்தான் வந்ததல் எந்த விமர்சனமும் வரவில்லை). படம் தோல்விஎன்றால் பழியை தூக்கி ரஜினிமீது போடுவது , ரஜினி காசு திருப்பிகொடுத்தாலும் அதையும் விமர்சிப்பதென்று ஒரே குஷ்டமப்பா சாரி கஷ்டமப்பா. அதுதவிர ரஜினி கர்நாடகாவில் சொத்து வாங்குகிறார், ரஜினி ஓமம் வளர்க்கிறார், யாகம் செய்கிறார் என நரிவெருட்டும் போதெல்லாம் ஏதாவதொரு செய்தியை போட்டு ரஜினியை வம்புக்கிழுப்பது இவர்களுக்கு வடிக்கையாகிப்போய்விட்டது. இந்த வரிசையில் ரஜினி ஜக்குபாய் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதையும் ஒருவழியாக கயிறு திரிச்சாச்சு.
இப்படி இவர்கள் ரஜினியை தாக்கும் நோக்கம் என்ன?
1 ) ரஜினியை பிடிக்காத சில நடிகர்களது வயித்தெரிச்சல்.
2 ) ரஜினியை அரசியலில் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள்
3 ) ரஜினியை பிடிக்காத, மற்றும் ரஜினியை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டு பின்னர் அவரது அசுர வளர்ச்சிகண்டு தமது கருத்து தோற்றுப்போன விரக்தியில் இருக்கும் எழுத்தாளர்கள்.
4 ) ரஜினியிடம் கால்சீற் வாங்கமுடியாது தோற்றுப்போன இயக்குனர்கள்.
5 ) எப்படியென்றாலும் பேரை அடையில் போட்டால் காசு பாக்கலாம் என நினைக்கும் சில பத்திரிகைகள்.
என ஒரு குழுவே ரஜினியை குறிவைத்து கல்லாலடிக்க காத்திருக்கிறது.
இவர்களுக்கு காவரியில் நீர் வருவதைவிட, ஒகேனக்கல் பிரச்சனயைவிட, இலங்கையில் யுத்த நிறுத்தத்தைவிட ரஜினி குறிப்பிட்ட போராட்டங்களுக்கு வருகிறாரா என்பதே முக்கியம். வராவிட்டால் ரஜினியை 'தமிழன்' இல்லை என்று விமர்சிப்பது, வந்தால் அவரது பேச்சில் குற்றம் குறை கண்டுபிடித்து ஊதிப் பெரிதாக்குவதென்று இந்தகுழு இதையொரு வேலையாகவே செய்கிறது. என்ன செய்வது 'காய்த்த மரம்தானே கல்லடி படும் ' , இதனால் இவர்களுக்கு என்ன லாபம் ? வேறொன்றுமில்லை நேரடியாக மோத துணிவில்லாவிட்டாலும் மறைமுகமாக குள்ளநரிகளைப் போலாவது மோதிவிட்டோமே என்றதொரு ஆத்ம திருப்திதான்.
ரசிகர்கள் கொதிப்படையும் இந்த சம்பவங்களை ரஜினி எப்படி இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார் என்பது உண்மையில் ஆச்சரியமே, இதற்கும் ரஜினி ஒரு விழாவில் (சந்திரமுகி வெற்றிவிழாவில் )
ரசிகர்கள் கொதிப்படையும் இந்த சம்பவங்களை ரஜினி எப்படி இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார் என்பது உண்மையில் ஆச்சரியமே, இதற்கும் ரஜினி ஒரு விழாவில் (சந்திரமுகி வெற்றிவிழாவில் )
குட்டிக்கதை மூலம் விளக்கியிருப்பார்.
மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின, அவை மலையேற ஆரம்பிக்கும்போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான் " என்று கூறினார் , உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்திவிட்டது.சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் " மேலே செல்லும் போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்ய ப்போகின்றன " என்றார், உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கி விட்டது. ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர் மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார். அதற்கு அந்தத்தவளை கூறிய பதில் " எனக்கு காது கேட்காது "என்பதாகும். இந்தக் கதையா கூறிமுடித்த ரஜினி "அதே போலத்தான் இந்த ரஜினிகாந்துக்கும் காது கேட்காது " என்றார்.
இந்தக் கதையிலிருந்து ரஜினி எந்தளவுக்கு பக்குவபட்டவர் என்பது புரிகிறதா? இன்று ரசிகர்களுக்கும் இதே பக்குவநிலைதான் வேண்டும். போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் நாம் தலைவர் வழியில் நமது கடமையை சரியாக செய்வோம்.