1982 லேயே ரஜினிக்கு இந்தப் பாடலை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம் தான்.. அந்தப் பாடல் தான்

"பொதுவாக எம்மனசு தங்கம்.. ஒரு
போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்"
இதுமட்டுமல்ல 1977ல் வெளிவந்த "புவனா ஒரு கேள்விக்குறி" தொடங்கி 1994ல் வெளிவந்த "வீரா" வரை ரஜினியின் பெரும்பாலான சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம் தான் என்பது பலரும் அறியாதது... தெளிவான பட்டியல் தயாரித்தால் இன்னும் நிறைய பாடல்கள் இடம்பெறும்.. உதாரணத்திற்காக சில மிக மிக பிரபலமான பாடல்கள் மட்டும்.
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காதலின் தீபம் ஒன்று
விழியிலே மலர்ந்தது
ராஜா என்பார் மந்திரி என்பார்
பொதுவாக எம்மனசு தங்கம்
பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
தென்மதுரை வைகைநதி
முத்தமிழ்க் கவியே வருக முக்கனிச் சுவையும் தருக
மானின் இரு கண்கள் கொண்ட மானே
மாசி மாசம் ஆளான பொண்ணு
ஏய் பாடல் ஒன்று ராகம் ஒன்று
இதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் உண்டு.
தனது நூலில் இளையராஜாவே சொன்னது தான்..
1984ல் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டு படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார் இளையராஜா. ஊட்டியிலிருந்து "ரஜினி சார் கால்ஷீட் 2 நாள் இருக்கு. ராஜா சார்கிட்டேந்து 2 பாட்டு வாங்கி கொடுத்தீங்கன்னா ஷூட் பண்ணிரலாம்" என்று இயக்குனர் ராஜசேகரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது பஞ்சு சாருக்கு..
இளையராஜாவை நேரில் சந்தித்து அவரது உடல் நலனை விசாரித்து விட்டு தயங்கி தயங்கி விஷயத்தை சொல்கிறார்... பாடினால் அடிவயிற்றிலிருந்து காற்று எடுக்க வேண்டி தையல் பிரிந்து விடும் என்பதால், விசிலடித்தே மெட்டை பாடிக்காட்டுகிறார் இளையராஜா. அங்கேயே பஞ்சு அருணாச்சலம் பாடலை எழுதி முடிக்கிறார்.. உடனே ஒளிப்பதிவு செய்யப்பட அந்தப் பாட்டு தான்
"காதலின் தீபம் ஒன்று". அவசரமாக எழுதப்பட்ட பாடலாயிருந்தாலும்.. "என்னை நான் தேடித் தேடி, உன்னிடம் கண்டு கொண்டேன்" என்று ரம்மியமான வரிகளை எழுதி இருப்பார்.
காமம் என்பது திரைப்பாடல்களில் இலைமறைகாயாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர் பஞ்சு சார்.. ஆனால் அதிலும் இலையுதிர்காலங்கள் நேர்ந்த பொழுதுகள் உண்டு..... அவரே
மஞ்சக் குளிக்கையிலே மதிலேறிப் பாத்த மச்சான்
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தான்
மேயிற கோழியெல்லாம் பாயிறது சரியா
என்றெல்லாம் கூட எழுத வேண்டி வந்தது... இவை
"சினிமா என்பது ஒரு வணிகம்.. அதில் நிறைய
யோசிக்காதே" என்று கடந்து போக வேண்டுமோ
என்று எண்ணத் தோன்றுகிறது.
உச்சகட்டமாக, கடல் மீன்கள் படத்தில் "மதனி மதனி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல" என்று இவர் எழுதிய பாடல் கடும் எதிர்ப்புக்களை சம்பாதித்து பிறகு சென்சாரால் "மதனி என்பது மயிலே" என்றும் "கொழுந்தா என்பது குமரா" என்றும் திருத்தப்பட்டது..
இளையராஜா நிறைய பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டது இவரது பாடல்களில் தான்... நானறிந்த சிலவற்றைச் சொல்கிறேன்
"புள்ளிபோட்ட லவுக்காரி புளியம்பூ சீலக்காரி" என்று உத்தமபாளையம் பகுதிகளில் வழங்கி வந்த நாட்டுப்பாடல் தான் "அன்னக்கிளி உன்னைத் தேடுது".. ராஜாவின் இசையில் வந்த இந்த முதல் பாடல்.
திரையிசையில் முதன் முதலாக "ரீதி கௌளை" ராகம் இடம்பெற்ற "சின்னக் கண்ணன் அழைக்கிறான்.
இளையராஜா இசையில் வெளிவந்த முதல் ராகமாலிகை, கவிக்குயில் படத்தில் இடம்பெற்ற
"ஆயிரம் கோடி காலங்களாக" (மாயா மாளவகௌளை, வகுளாபரணம், வாகதீஸ்வரி, வலஜி, சக்ரவாகம், மோஹனம், மோஹன கல்யாணி, சாருகேசி என்று எட்டு ராகங்களில் அமைந்தது)
தமிழ் சினிமாவில் முதல் நேரடி சிலோன் பைலா பாடலான "சுராங்கனி சுராங்கனி"
நாட்டுப்புற மெட்டில் Western Harmony யை இணைத்து உருவான "ஏரியில எலந்தைமரம்"
முதன் முதலாக Stereophonic இசையில் உருவான
ப்ரியா படத்தின் அனைத்து பாடல்களும்
Unconventional Rhythm Pattern ல் உருவான "குரு" படத்தின் "நான் வணங்குகிறேன்"
இசைக்கருவிகள் இல்லாமல் வெறும் குரல்களை மட்டும் வைத்து உருவான பாடலான "மாயா பஜார் 1995" படத்தின் "நான் பொறந்து வந்தது"
இரண்டு கால்களின் Jogging சப்தத்தை தபலா வாசிக்கும் கண்ணையா மற்றும் Percussionist ஜெய்சா ஆகியோரை தொடையில் தட்டி அதன்மூலம் உருவான "பருவமே புதிய பாடல் பாடு"
இந்தப் பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் பஞ்சு சார் அவர்கள் தான்.. இதற்கு என் மனதில் தோன்றிய காரணம் "இந்தப் பையன் நல்லா தான்யா பண்ணுவான்" என்கிற எண்ணம் பஞ்சு சாருக்கும், தன்னை அறிமுகப்படுத்தியவர் என்பதைத் தாண்டி அதீதமாக எழுதுகிறேன் பேர்வழி என்று பாடலைக் காலி பண்ணி விட மாட்டார் என்று இளையராஜாவுக்கும் பரஸ்பர நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்..
நா.காமராசன் அவர்கள் சொன்னதைப் போல, கண்ணதாசன் தமிழுக்கு வழங்கிய கொடைகளில் முக்கியமான ஒன்று "பஞ்சு.அருணாசலம்".
நல்ல தயாரிபாளர் மட்டும் அல்ல..
நல்ல கவிஞர் & சினிமா
ஆல் ரவுண்டர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக