அலுவலகத்தில் வேலை முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போது பலர் தலைவலியால் அவதிப்படுவதைப் பார்க்கலாம். இத்தகையத் தலை வலியை கை மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம்.
இதற்கான எளிய மருத்துவச் சிகிச்சை முறை குறித்து விவரிக்கிறார் டாக்டர் டி. காமராஜ்.
தலைவலி என்பது ஒரு நோயல்ல. ஒரு நோய்க்கான அறிகுறி தான். இத்தகைய தலைவலியைப் போக்க கைவைத்தியம் பலன் தரும்.
கைகளால் தலைமுடியை நன்றாகப் பிடித்து பின் பக்கமாக இழுத்து சுமார் 5 நொடிகள் வைத்திருந்து, நிதானமாக கைகளை எடுத்தால் வலி கொஞ்சம் குறையும்.
இது மட்டுமல்ல, நல்ல இயற்கைக் காற்று படும்படி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் தலைவலியை மட்டுப்படுத்தலாம்.
யோகாசனங்கள் போன்றவைகளைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் தலைவலி ஏற்படும் நேரத்தில் யோகா, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைச் செய்து வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
ஆவி பிடித்தல் மூலம் வியர்வையை வெளியேற்றினால் தலைவலியில் இருந்து தப்பிக்க முடியும்.
சூடா டீயை வெப்பமான அறையில் வைத்து குடித்தால் தலைவலி குறையத் தொடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக