- படையப்பா படத்திற்காக "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ. 1 ,00,00,001(ரூபாய் 1 கோடி மற்றும் ஒரு ரூபாய்) சம்பளமாக வழங்கப்பட்டது.
- நடிப்பிற்காக அவர் வாங்கிய முதல் மற்றும் ஒரே ஒரு கோடி ரூபாய் சம்பளம் இந்த படத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1980 களுக்குப் பிறகு சிவாஜி கணேசன் அவர் நடித்த எந்த படத்திற்கும் தனக்கென சம்பளத்தை நிர்ணயிக்காமல் அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் "உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எனக்கு கொடு" என்று கூறி விடுவாராம்.
- உதாரணத்திற்கு அவர் விஜய்யுடன் நடித்த "ஒன்ஸ்மோர்" படத்திற்காக எஸ்.ஏ சந்திரசேகரிடம் ரூ.100 மட்டுமே முன்பணமாக பெற்றியிருக்கிறார்.
- அதன் பின்னர் மொத்தமாக எஸ்.ஏ சந்திரசேகர் சிவாஜிக்கு 10 லட்சம் சம்பளமாக கொடுத்திருக்கிறார்.
- அதுமட்டுமின்றி 1992 ஆம் ஆண்டு "உலகநாயகன்" கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த "தேவர் மகன்" திரைப்படத்திற்காக 20 லட்சம் சம்பளமாக சிவாஜி பெற்றியிருக்கிறார்.
- அந்த பணத்தை கூட படத்தின் வியாபாரம் முடித்த பிறகு வழங்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார்.
- அதே போல் "படையப்பா" திரைப்படத்திலும் தயாரிப்பாளர் தேனப்பனிடம் மற்றவர்களிடம் சொன்னதை போலவே சம்பளத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.
- இந்த படத்திற்காக 10 முதல் 20 லட்சம் சம்பளமாக தருவார்கள் என்றும் எதிர்பார்த்திருக்கிறார்.
- இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை பார்த்ததும் அதனை 10 லட்சம் என்று முதலில் எண்ணி காசோலையை வாங்கி கொண்டு சென்று விட்டாராம்.
- பிறகு தன் மகன் ராம்குமாரிடம் காசோலையை கொடுத்திருக்கிறார். அப்போது தான் அது ஒரு கோடிக்கான காசோலை என்ற விஷயம் தெரிய வந்திருக்கிறது.
- சிவாஜியோ அதில் குறிப்பிடப்பட்ட தொகையான “1 கோடி” என்பதை பார்த்து தவறுதலாக ஒரு பூஜ்ஜியத்தை காசோலையில் சேர்த்து விட்டார்களோ என்று நினைத்து தயாரிப்பாளரிடம் இந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.
- அப்போது தான் சிவாஜியிடம் நடந்த விஷயத்தை கூறியிருக்கிறார் தயாரிப்பாளர்.
- இந்த படத்தில் நடித்ததற்காக சிவாஜிக்கு 1 கோடி ரூபாய் தருமாறு தயாரிப்பாளரிடம் கூறியது "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் என்பது தெரிந்து ரஜினிகாந்துக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார்.
கூடுதல் தகவலாக இதேபோல் நடந்த இன்னொரு சம்பவத்தை இப்போது பார்க்கலாம்.
- 2009 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளிவந்த "ஆதவன்" படத்திற்காக சரோஜாதேவிக்கு 1 கோடி ரூபாய் வழக்குமாறு உதயநிதியிடம் நடிகர் சூர்யா சொல்லியிருக்கிறார்.
- மேலும் அந்த பணத்தை தனது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளுமாறும் கூறியிருக்கிறார்.
- ஆனால் உதயநிதியோ அதனை மறுத்து சூர்யாவின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் நடிகை சரோஜாதேவிக்கு 1 கோடி ரூபாயை சம்பளமாக கொடுத்திருக்கிறார்.
நன்றி:கூகிள்(படங்கள்)