மொத்தப் பக்கக்காட்சிகள்

7/10/2018

பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :

பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :

1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.
அதிகம் செயல் படுபவனையே கை கூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌ இரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லி கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடா முயற்சியினால்தான்.

11. முன் நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒரு வேளை பின் நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப் படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப் படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தை விட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவை அல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகி விட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது மிக இழிவானது.

5/31/2018

உண்மை !




ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட்டார்.

முதல் கைதி அரசே! நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. என்னைத் தவறுதலாகச் சிறையில் அடைத்து விட்டனர். தாங்கள்தான் அருள் கூர்ந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று வேண்டினான்.

இரண்டாவது கைதி, அரசே! எனக்கும், நீதிபதிக்கும் சிறு தகராறு. அதனால் அவர் எனக்கு வேண்டுமென்றே சிறைத்தண்டனை கொடுத்து விட்டார். நான் எந்தப் பாவமும் செய்யாதவன். என்னை அருள் கூர்ந்து விடுவிக்கும்படி வேண்டினான்.

இப்படியே எல்லாக் கைதிகளும் தாங்கள் எந்தக் குற்றமும் செய்யாத நல்லவர்கள் என்றும், சிறையில் இருந்து கொண்டு துன்புறுவதாகவும் கூறினார்கள்.

அரசர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியாக வந்த கைதி மட்டும் அரசே! இந்த கைகளினால் நான் திருடினேன். அதற்காகச் சிறைத்தண்டனை அனுபவிக்கிறேன் என்றான்.

அவன் கூறியதைக் கேட்டதும் அரசன் கடுங்கோபம் கொண்டார். சிறைக் காவலர்களைப் பார்த்து, நல்லவர்கள் மட்டும் இருக்கக்கூடிய இந்தச் சிறைச்சாலையில் இத்திருடனை யார் கொண்டு வந்து அடைத்தது? 

இவன் இங்கிருக்கும் எல்லோரையும் திருடர்களாக்கி விடுவான். இவனை உடனே வெளியே விரட்டி விடுங்கள் என்று கூறினார்.

அரசனின் குறிப்பை உணர்ந்து கொண்ட அரண்மனைக் காவலர்கள் அவனை விடுதலை செய்தனர்.

தத்துவம் :

உண்மை விலைமதிப்பற்றது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நேர்மையாக உண்மையை சொல்ல வேண்டும். அப்பொழுது தான் உங்கள் நேர்மைக்கான பிரதிபலனை எதிர்ப்பார்க்க முடியும்.

8/30/2017

25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )

25 வருடங்களுக்கு முன் :( படியுங்கள்)

1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..!
.
2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி
அழைப்பாள்..!
.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்..!
.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்
பருகினோம்..!
.
5. எல்லா கல்யாணத்திலும் மதிய உணவு
பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!
.
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..!
.
7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்..!
.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்..!
.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!
.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!
.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும்
கடிதங்கள் எழுதினோம்..!
.
12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ்
கிடைத்தது..!
.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்..!
.
14. காணும் பொங்கலுக்கு உறவுகளை
பார்த்தோம்..!
.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது..!
.
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்..!
.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்..!
.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள்
முன்னரே வந்தனர்..!
.
19. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
சுவாசிக்கவும் யோசிக்கவும்.
.
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை
தொலைத்தோம்..!


"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்..!


அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!


இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது!


இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும்


தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும்

மீட்க முடியாது...


படித்ததில் பிடித்தது. பிடித்திருந்தால் பகிருங்கள்


Thanks to C. Malathi Teacher

8/24/2017

விரும்பவில்லை ! விரும்புவதே இல்லை !



இறப்பு
எல்லோருக்கும் வந்தே தீரும் !
ஆனால் யாரும்
~_இறக்க விரும்புவதில்லை_~!

உணவு
எல்லோருக்கும் வேண்டும் !
ஆனால் யாரும்
~_பயிர் செய்ய விரும்புவதில்லை_~ !

தண்ணீர்
எல்லோருக்கும் வேண்டும் !
ஆனால் யாரும் அதை
~_சேமிக்க விரும்புவதில்லை_~ !

பால்
எல்லோருக்கும் வேண்டும்!
ஆனால் யாரும் ~_பசுவை வளர்க்க விரும்புவதில்லை_~ !

நிழல்
எல்லோருக்கும் வேண்டும் !
ஆனால் யாரும் ~_மரம் வளர்க்க விரும்புவதில்லை_~ !

மருமகள்
எல்லோருக்கும் வேண்டும் ! 
ஆனால் யாரும் மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை_~ !

நல்ல செய்தி
படித்து ஆஹா வென,
புகழ்பவர் அதை ~_மக்களிடம் கொண்டு செல்ல விரும்புவதே இல்லை_~ !

 

நீங்கள் எப்படி?
நல்ல பதிவை
எல்லோருக்கும் படிக்க ஆசை  !
ஆனால் யாரும் அப்படி பதிவு செய்ய விரும்புவதில்லை!

7/28/2017

ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
 
9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.