மொத்தப் பக்கக்காட்சிகள்

10/09/2015

எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்....!!!

யாம் பெற்ற இன்பம், இவ்வையகம் பெறட்டும்.....
*

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.
*
கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.
*
"எலி":- எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.
*
"பல்லி":- உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.
*
"ஈ":- சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

*
"கொசுக்கள்":- கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.
*
"கரப்பான் பூச்சி":- கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.
*
"மூட்டைப்பூச்சி":- மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.




10/08/2015

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து தீர்வு தரும் சில உணவுகள்

 
உடல்நிலை சரியில்லை என மருத்தவரிடம் சென்றால் கண்டிப்பாக நான்கைந்து ஸ்ட்ரிப் மருந்துகளும், டானிக் என்ற பெயரில் ஓரிரு பாட்டில்களும் தருவார். ஆனால், இந்த மருந்துகளைவிட, சாதாரணமாக ஏற்படும் நோய்களுக்கு இரட்டிப்பு மடங்கு சிறந்து தீர்வு தரும் சில உணவுகள் இருக்கின்றன.

அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவமுறை பிரபலமாவதற்கு முன்பு, நம் உணவு முறையினால் தான் நோய்களை விரட்டவும், குணமடையவும் பயன்படுத்தி வந்தனர். அதிலிருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவுகளை பற்றி காணலாம்.....

மலைத் தேன் வறட்டு இருமல் சரியாக மலைத்தேனை பயன்படுத்தலாம். முக்கியமாக குழந்தைகளுக்கு இதுபோன்ற வறட்டு இருமல் ஏற்படும் போது மாத்திரைகளை வாயில் திணிக்காமல், இயற்கை மருந்துகளை தருவது தான் அவர்களது உடல்நலத்திற்கு நல்லது.

ஊறுகாய் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் புளிப்பு உணவுகள் சாப்பிட்டாலே போதுமானது. தயிர், காய்கறி ஊறுகாய்கள் போன்றவை நல்ல தீர்வு தரும். இந்த வகை உணவுகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

இஞ்சி மாதவிடாய் பிடிப்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு இஞ்சி சிறந்த நிவாரணியாக திகழ்கிறது. ஆசியாவின் காரமான மசாலா உணவுப் பொருளில் இஞ்சி இன்றியமயாத மருத்துவ குணங்கள் கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி குமட்டல் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற கோளாறுகளுக்கும் இஞ்சி நல்ல தீர்வளிக்கிறது.

பெப்பர்மிண்ட் குடல் எரிச்சல் சார்ந்த பிரச்சனைகளுக்கு பெப்பர்மிண்ட் நல்ல தீர்வளிக்கிறது. மிட்டாய்கள், சூயிங் கம் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் குடல் எரிச்சல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது.

செம்பருத்தி டீ உயர் இரத்த அழுத்தப் பிரச்சனைக்கு ஓர் சிறந்த நிவாரணமாக திகழ்கிறது செம்பருத்தி டீ. மூலிகை டீ வகைகளில் இது ஓர் சிறந்த டீயாக கருதப்படுகிறது..

மஞ்சள் தென்னிந்தியாவின் சொத்து மஞ்சள். அலர்ஜிகள், நோய் எதிர்ப்பு, ஞாபக மறதி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது மஞ்சள். மற்றும் உடல் செல்களின் இயக்கத்தை ஊக்குவித்து உடலை வலுவாக்க உதவுகிறது.

சியா விதைகள் சியா விதைகள் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஓர் சிறந்த உணவாகும். உடலில் சேரும் எல்.டி.எல் எனப்படும் இதயத்திற்கு தீது விளைவிக்கும் கொழுப்பை உடலில் இருந்து கரைக்க சியா விதைகள் உதவுகின்றன.

பீன்ஸ் குறைந்த இரத்த சர்க்கரை அளவை சரிசெய்ய பீன்ஸ் ஓர் சிறந்த உணவாகும். மற்றும் அதிகப்படியான கொழுப்பை கட்டுப்படுத்தவும் பீன்ஸ் உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை சீறி செய்து, உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

9/28/2015

பெண்_ஒரு_மகாசக்தி‬..!!!

பெண்_ஒரு_மகாசக்தி‬..!!!

எல்லா பெற்றோரும்.. தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில்.. கட்டிக் கொடுக்க வேண்டும் என்ன கனவு நியாயமான ஒன்று தான்..!!
அவளுடைய பெற்றோரும்... அப்படி தான்.. மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!!
படித்த மாப்பிள்ளை.. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன்.. இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!!
இருவரும் தினமும் அலைபேசியில்.. பேசத் தொடங்கினர்..!!
திருமண நாள்.. நெருங்க,, நெருங்க.. அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!!
இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்...
அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!! வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!
தினமும் அவருடன்.. பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்க வில்லை..!!
ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப் போகிறோம்.. என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும்,, தாயையும் பார்த்தாள்.. எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!! விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள்.. கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில்.. நீர் துளி சொட்டியது..!!
அங்கே.. தங்கையின் புது துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள்..!!
அவளை பார்த்ததும்.. " என்னாச்சுக்கா..?"
என்றாள்..!!
பூ வாங்கினால் கூட.. சரிசமமாக.. வெட்ட சொல்லி சண்டை போடும் நான்.. இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு.. நான் செல்ல போகிறேனே.. என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள்.. அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??
அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!!
அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!!
அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து.. " அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!"" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன்.. நீ என் செல்லம் டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!
எச்சிலையும்,, சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு.. அம்மாவை அழைத்து விட்டு.. வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!
எங்கிருந்தோ குரல்.. "அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு.. வெளியே வந்து உட்காராத.. !!" பாட்டியின் குரல் தான் அது..!!
எப்போதும் எதையாவது.. சொல்லிக் கொண்டிருக்கும்.. பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!!
ஆனால் இப்போது முறைக்க தோனவில்லை.. முகம் அப்படியே அழுவது போல.. பொங்கியது.. " என்னாச்சுடி என் ராசாத்தி.." பாட்டி அருகில் வந்து கேட்டவுன்.. அதற்கு மேல் முடியவில்லை.. வீட்டிற்குள் ஓடி சென்று.. கத்தி அழுதாள்.. !!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர்.. அவள் அம்மாவிடம் " அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன்.. உங்களை விட்டு நான் எப்படி செல்வேன்.. அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!
உடனே அப்பாவின் மனம் அழுதது.. அம்மா சமாதானம் செய்தாள்..!!
அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும்.. அப்பாவிற்கும்,, மகளுக்கும் உள்ள பாசம்.. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!
தங்கை குலுங்கி,, குலுங்கி அழுதாள்..
" அழாதே அக்கா மாமா உன்ன நல்லா பாத்துப்பாரு கா.."! என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு...
அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!!
ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!
நாளை திருமணம்.. போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ.. என்றெல்லாம்.. தெரியாது... ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும்.. அவள் செல்ல போகிறாள்.. என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!!
ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!
அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து.. வேரோடு பிடுங்கி எடுத்து.. மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா.. தான் பெண்ணின் திருமணம்..!!
அதில் துளிர்ந்த பெண்களும் உள்ளனர்...
பட்டுப் போன பெண்களும் உள்ளனர்..!!

பத்து கட்டளைகள்:



1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3.இன்சொல் கூறுங்கள். 'நான்', 'எனது' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!

குடும்பத்தில் மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?



பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.