மொத்தப் பக்கக்காட்சிகள்

9/26/2015

இல்லற வாழ்க்கை இனித்திட- குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்.

 
இல்லற வாழ்க்கை இனித்திட- குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்.

1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

3. விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

4. கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

5. உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

6. விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

7. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

8. செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.

9. இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள்.

- சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்- அனுசரித்துப் போகுதல்- மற்றவர்களை மதித்து நடத்தல்.

10வது அறிவுரை.

விவாகரத்து கோரி வரும் தம்பதிகள் இந்த பத்து அறிவுரைகளையும் ஒரு பத்து நிமிடம் ஆற அமர நின்று ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலே போதும், ‘டைவர்ஸ்’ கேட்டு வரும் ஜோடிகள் ‘டைவர்ட்’ ஆகிச் செல்லும் வாய்ப்பு உருவாகும்

9/25/2015

இதுதான் என் தேசம்.......

இது தான் நம் தேசம்"----------------------------

👉சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....

👉பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........

👉சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பலபெண்களிடம் சேலைகள் இல்லை.....

👉ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....

👉சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷசம்பளம்...

👉ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சுபோகஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....

👉சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....

👉சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....

👉சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....

👉நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......

👉பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....

👉கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்..கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்......

தேசம்.......

9/12/2015

ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும்

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட  வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது  எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்..
கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..
 
அவன் வீட்டில் இருக்க..

இவள் ஆபீஸ் போனாள்..

ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..

முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..
வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
வருபவர்களை கண்டித்தாள்..
கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..
மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
நினைத்தபோது,
ஓர் அலுவலரின் மகள் திருமண
வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண
மண்டபத்திற்கு சென்றாள்..
கணவர் வராததற்கு பொய்யான காரணம்
ஒன்றை சொல்லிவிட்டு,
மணமக்களின்
கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
பந்தியில்
உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே..
இலையில் வைத்த
'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்
என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும்
கணவனுக்கும் என பைக்குள்
பதுக்கியதே அதிகம்..
ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்
இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..
இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும்
குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது..
படின்னா படிக்க மாட்டேங்குது..
சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
கெடுத்து வச்சிருக்கே
என்று பாய..
அவளோ,
அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
என்றவாறே
உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..
உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
பிள்ளைகள்..
விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
‘ஏங்க..
இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ ,
அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..
அந்த நிலையில் இருவருக்கும்
ஒன்று புரிந்தது..
இல்லாள் என்றும் ,
மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
தொடங்கி நம் மூதாதையர்கள்
சொல்வது சும்மா இல்லை...
இல்லத்தைப் பராமரிப்பதிலும்
பிள்ளைகளுக்கு வளமான
வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..
அதுபோல,
பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
அளப்பரியது..
ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
இது ஆணுக்கு,
இது பெண்ணுக்கு என்று
குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..
இந்த சூழ்நிலையில்
ஒரு குடும்பம்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
கணவன்மீது மனைவியோ,
மனைவிமீது கணவனோ ஆதிக்கம்
செலுத்தாமல்
அன்பால் சாதிக்கும்
மனநிலையை கொண்டிருந்தால்தான்
எல்லா வளமும்
பெற்று பல்லாண்டு வாழ
முடியும்...
மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்..
 
Thanks to Karthik Devaraj

9/11/2015

கல்யாணம் பண்ணிப்பார்..

 
வைரமுத்துவின் ரீமிக்ஸ்
கல்யாணம் பண்ணிப்பார்...
உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்'
தோன்றும்...
அப்பவே கண்ணைக் கட்டும்
உலகமே உன்னை வெறித்துப்
பார்க்கும்...
ராத்திரியின் நீளம் குறையும்...
அதிகாலையில் கொடூரம் புரியும்...
உனக்கும் சமைக்க வரும்...
சமையலறை உனதாகும்...
ஷாட்ஸ் பனியன் அழுக்காகும்...
பழைய சாம்பார் கூட அமிர்தமாகும்...
ஃபிரிட்ஜ் ,வாசிங் மெசின்,
கிரைண்டர்,மிக்ஸி கண்டுபிடித்தவன் தெய்வமாவான்...
கையிரண்டும் வலிகொள்ளும்...
கண்ணிரண்டும் பீதி கொள்ளும்...
கல்யாணம் பண்ணிப்பார்...
தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம்
துலக்குவாய்...
காத்திருந்தால்...
'வரட்டும்...
இன்னிக்கி வச்சிருக்கேன்'
என்பாய்...
வந்துவிட்டால்...
'வந்திட்டியாடி செல்லம் போலாமா'
என்பாய்...
வீட்டு வேலைக்காரி கூட
உன்னை மதிக்கமாட்டாள் -ஆனால்,
வீடே உன் கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...
கார் வாங்கச்சொல்லி கட்டியவள்
வயிற்றில் மிதிக்க, கடன்
கொடுத்தவன் கழுத்தைப்
பிடிக்க, வயிற்றுக்கும்
தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையன்று உருளக்
காண்பாய்...
கல்யாணம் பண்ணிப்பார்...
இருதயம் அடிக்கடி எதிர்த்துப் பேசத்
துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
மட்டுமே உனது குரல் ஒலிக்கும்...
உன்
நரம்பே நாணேற்றி உனக்குள்ளே வெறியேற்றி விடும்...
எதிரில் எது கிடந்தாலும் கோபத்தில்
உனது கைகள் கிழிக்கும்...
கழுத்து நரம்பு புடைக்கும்...
குருதி் கொதித்து எரிமலையாய்
வெடிக்கக் காத்திருக்கும்...
ஆனால்உதடுகள் மட்டும்
ஃபெவிகாலைவிட அழுத்தமாக
ஒட்டியிருக்கும்...
பிறகு....
"என்ன அங்க சத்தம்..." என்கிற
ஒற்றை
சவுண்டில்
சப்த நாடியும்
அடங்கிவிடும்...
கல்யாணம் பண்ணிப்பார்...
 
Thanks to

Anonymous shooter

4/16/2015

உண்மையில் ஆண்கள் ரெம்ப.. நல்லவர்கள்..!




1 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!

2 )ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோபப்படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!

3 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!

4 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!

5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!

6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.."
என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!

7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..!

8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!

9 ) காதலியை லூசு'னு.. விளையாட்டுக்கு கூட சொன்னது கிடையாது..!

10 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ஜ் செய்து கொள்வோம்..!

11 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திக்காக நிப்பாட்டி விடுவோம்..!

12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!

13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!

14 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!

அதனால் தான் ஆண்கள் ரெம்ப நல்லவங்க..!!!!


Thanks to Mr.P.Thillai