எவ்வளவோ
செய்திகள் எம்.ஜி.ஆர். பற்றி படித்தும் – கேள்விப்பட்டும் இருப்பீர்கள் …!
ஒரு வீட்டு வேலைக்கார சிறுமிக்கும் — அவருக்கும் நடந்த தொலைபேசி உரையாடல்
மிகவும் சுவாரசியமாக இருந்தாலும் — சிறுமியிடம் அவர் பேசும் போதும் அவருடைய
வார்த்தைகளில் உள்ள கண்ணியம் –அக்கறை உற்று நோக்கத்தக்கது … அந்த உரையாடல்
:–
” ஹலோ.. யாருங்க பேசறது?” இது வேலைக்காரச் சிறுமி.
” நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்”
அவர்
எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான்
பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச்
சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!
“அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க”
“நீங்க யார் பேசறது?”
” நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.”
“உங்க பேரு என்ன?”
“லச்சுமி”
“எந்த ஊரு?”
“தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் “
“இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?”
“மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்”
“அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?”
“அதெல்லாம்
எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு
சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக்
கொடுத்துருவாங்க.”
“உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?”
“ம்ம்ம்… நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க”
“சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?”
“ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..”
“உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?”
“ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.”
“எப்ப ஊருக்குப் போகப்போற?”
“எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு
இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..”
“சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு”
“உங்க பேரு என்ன சொன்னீங்க?”
“எம்.ஜி..ராமச்சந்திரன்”
“மறுபடி சொல்லுங்க….”
“எம்.ஜி.ராமச்சந்திரன்”
அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை! …
இந்த உரையாடல் வலம்புரி ஜான் வீட்டு வேலைக்கார சிறுமிக்கும் — எம்.ஜி.ஆருக்கும் நிகழ்ந்தது …
இரவு
வீட்டுக்குத் திரும்பிய வலம்புரி ஜானிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த
போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக்
கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை
அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத்
தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ
ராமச்சந்திரன் ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான்
நினைத்திருக்கிறாள். ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச்
சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம்
சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்து விட்டிருக்கிறார்.
அவ்வளவு
பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று
அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத்
எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.! .. என்று ” தாய் ” வார
இதழில் உதவி ஆசிரியராக பணி புரிந்த திரு . கல்யாண்குமார் பதிவு
செய்த்திருக்கிறார்