மொத்தப் பக்கக்காட்சிகள்

11/27/2024

டி.எம்.சௌந்திரராஜன்!

 

சைக்கிளில் சுற்றிய என் வீட்டு வாசலில் 10 கார்கள் நிற்க காரணம் அந்த நடிகர் தான்: யாரை சொன்னார் டி.எம்.எஸ்?

 

தனது வெண்கல குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் தனது வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு சென்ற நடிகர் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெண்கலகுரல் மன்னன் என்று போற்றப்படும் டி.எம்.சௌந்திரராஜன், சினிமாவில் பாடகராக வாய்ப்பு கிடைத்தாலும், ஒரு சில பாடல்கள் மட்டுமே பாடிக்கொண்டிருந்த சைக்கிளில் சென்றுகொண்டிருந்த என் வீட்டு வாசலில் 10 கார்களை நிறுத்த உதவியர் இந்த நடிகர் என்று கூறியுள்ளார்.

1954-ம் ஆண்டு ஆர்.எம்.கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளியான படம் தூக்கு தூக்கி. சிவாஜி, லலிதா பத்மினி ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு, ஜி.ராமநாதன் இசையமைத்துள்ளார். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கு சீர்காழி கோவிந்தராஜனும், சிவாஜிக்கு சி.எஸ்.ஜெயராமனும் பாடிக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக ஓரிரு பாடல்கள் மட்டுமே டி.எம்.எஸ்க்க்கு கிடைத்துள்ளது.

அதேபோல் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமாக கூண்டுக்கிளி படத்தில் 4 பாடல்கள் பாடியிருந்தார். இதனிடையே தூக்கு தூக்கி படத்தில் பாடுவதற்காக டி.எம்.எஸ்.க்கு வாய்ப்பு கிடைத்து அவரும் பாடல் பதிவுக்காக சென்றுள்ளார். 1952-ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக சிவாஜிக்கு, சி.எஸ்.ஜெயராமன் தான் பாடல்கள் பாடி வந்துள்ளார். ஆனால் இந்த படத்தில் பாடுவதற்காக அவர் அதிக சம்பளம் கேட்டதால், படக்குழு டி.எம்.எஸ்க்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

இந்த பாடலை பாட வந்தபோது, சிவாஜி, எனக்கு சி.எஸ்.ஜெயராமன் தான் பாடிக்கொண்டிருக்கிறார். அவர் பாடினால் தான் நன்றாக இருக்கும் வேறு பாடகர்கள் வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான படக்குழுவினர் இதை டி.எம்.எஸிடம் சொல்ல, இந்த படத்தில் பாட வேண்டும் என்று விதி இருந்தால் பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு, நான் இந்த படத்தில் 3 பாடல்கள் இலவசமாக பாடி தருகிறேன். அதை நீங்கள் சிவாஜியிடம் போட்டு காட்டுங்கள். அவர் சம்மதம் சொன்னால் பாடுகிறேன்.

மாறாக சிவாஜி இந்த பாடல் பிடிக்கவில்லை என்று சொன்னால், எனக்கு தெரிந்த வேலையை பார்த்துக்கொள்கிறேன் பாடமாட்டேன் என்று கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட படக்குழு, டி.எம்.எஸ் குரலில் 3 பாடல்களை பதிவு செய்து அதை சிவாஜிக்கு போட்டு காட்டியுள்ளனர். முதலில் சாதாரணமாக கேட்க தொடங்கிய சிவாஜி பின்னர் பாடலை தாளம் போட்டு பாடலை ரசிக்க தொடங்கியுள்ளார். பாடல் முடிந்த பின் இதை யார் பாடியது என்று கேட்க, மதுரையில் இருந்து வந்திருக்கிறார் பெயர் சௌந்திரராஜன் என்று அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

அப்போது டி.எம்.எஸ்ஐ அழைத்த சிவாஜி, நல்ல பாடியிருக்கீங்க, இந்த படத்தில் மற்ற அனைத்து பாடல்களையும் நீங்களே பாடுங்க என்று கூறியுள்ளார். 11 பாடல்கள் உள்ள இந்த படத்தில் 8 பாடல்களை டி.எம்.எஸ். பாடியிருந்தார். இந்த படம் வெற்றியடைந்து டி.எம்.எஸ்.க்கு நல்ல பெயரை பெற்று தந்த நிலையில், இதுவரை வாடகை சைக்கிளில் சென்றுகொண்டிருந்த டி.எம்.எஸ். வீட்டை நோக்கி தயாரிப்பாளர்கள் கார்கள் படையெடுக்க தொடங்கியுள்ளது.

தனது வாழ்க்கை தூக்கு தூக்கி படத்திற்கு முன் பின் என்று இரண்டாக பிரிக்கலாம் என்று டி.எம்.சௌந்திரராஜன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கமலுக்கும் ரஜினிக்கும் குணத்தில் என்ன வேறுபாடு?



கமல் நிஜத்தில் நாத்திகம் பேசுவார். ஆனால் படங்களில் ஆன்மீக தலைப்புகள் தான் வைப்பார். உதாரணமாக விஸ்வரூபம், தசாவதாரம், ஹேராம், அன்பே சிவம், என்று தான் பெயர் வைப்பார்.

கமல் வாழ்க்கை மிகவும் வெளிப்படையானவர். அவரது வாழ்வில் தான் எத்தனை கதாநாயகிகள். ஆனால் எதுவுமே கடைசி வரை நிலைக்கவில்லை. புன்னகை மன்னன் கடைசி வரை முரட்டு சிங்கள் தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஏழு சீசன்கள் வரை தொகுத்து வழங்கியுள்ளார். எனக்கு தெரிந்து கமல் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நியாயமாக பேசியது கிடையாது. உதாரணமாக சமீபத்தில் வினுஷா அவர்களை பற்றிய உருவ கேலியை பற்றி கேட்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. அதேபோல் தனக்கு வேண்டிய நபர்கள் சக்தி வாசு, வனிதா விஜயகுமார், காயத்ரி ரகுராம், விக்ரமன், மாயா, போன்ற ஆட்கள் தவறே செய்தாலும், கண்டிக்க மாட்டார். இதே சாமானியர் செய்தால் தண்டனை கொடுப்பார். மய்யம் நியாயமாக இல்லை.

கமல் அவர்கள் சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் சிறந்த அறிவாளி தான். குறிப்பாக அரசியல் களத்தில் தைரியமாக தனித்து நின்றார். ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்தார். கடைசியில் டார்ச்சி லைட் அணைத்து விட்டு திமுகவிற்கு காவடி எடுத்து வருகிறார். இதற்கு பேரு தான் பகுத்தறிவு போல…

ரஜினிகாந்த் அவர்கள், தனது கருத்தை தைரியமாக பேசுவார். பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் பேசுவார். கமல் அவர்களை விட தைரியம் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று அதிகம். உதாரணமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பாராட்டு விழா ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. அதில் பாராட்டு உரை ரஜினிகாந்த் அவர்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை நேரிடையாக விமர்சனம் செய்தார்.

பாட்சா படவிழாவில் ஜெயலலிதா அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார். கலைஞர் கருணாநிதி முன்னிலையில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சனம் செய்தார். பாச தலைவனுக்கு பாராட்டு விழாவில் அஜீத் அவர்களை எழுந்து நின்று ஆதரித்தார். இதைவிட தைரியம் வேண்டுமா?

ரஜினிகாந்த் அரசியலில் வராமல் இருப்பதற்கு ஒரே காரணம். அவர் தமிழர் இல்லாத காரணத்தால் மட்டும் அல்ல. அவரது குடும்பம் அவரது அரசியல் பொது வாழ்க்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள். மேலும் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது தனிப்பட்ட விருப்பம். இதில் கருத்து சொல்ல நமக்கு உரிமை இல்லை.

கமல் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நடிப்பார். ரஜினிகாந்த் திரையில் மட்டும் தான் நடிப்பார். குணத்தில் கமலை விட ரஜினிகாந்த் தான் பன்மடங்கு சிறந்தவர். இது மக்களுக்கே நன்றாக தெரியும். என்னை பொறுத்தவரை மக்கள் திலகமும் நடிகர் திலகமும் ரஜினிகாந்த் ஒருவர் மட்டுமே ஆகும்.

நாகேஷும் , பாலச்சந்தரும் - எஸ்.பி.முத்துராமன் சொன்ன தகவல் !

 

“ஒரு நல்ல நண்பன்

நூறு உறவினர்களுக்குச் சமம்.”

இந்த வரிகளை வாசித்தபோது,

மனதுக்குள் ஏனோ

மறைந்து போன நாகேஷும் , பாலச்சந்தரும் வந்து போனார்கள்.

நாகேஷ் தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லையாம்.

பாலச்சந்தர் கேட்டாராம்.

'நாகேஷ்... இன்னும் நீ உன் குழந்தையைப் போய் பார்க்கவில்லையா..?”

“இல்லை” என்று மெல்லிய குரலில் சொன்னாராம் நாகேஷ்.

“ஏன்..?”

சில நொடிகள் அமைதிக்குப் பின், தழுதழுத்த குரலில் நாகேஷ் சொன்னாராம் :

“கொஞ்சம் என் முகத்தைப் பாருங்கள். முழுவதும் அம்மைத் தழும்புகள்... இந்த முகத்தோடு போய் நான் என் குழந்தையைப் பார்த்தால்...

அந்த சின்னஞ்சிறு குழந்தை பயந்து விடாதா ? அதனாலேதான் நான் போய் என் குழந்தையை பார்க்க விரும்பவில்லை.”

கண்ணீர் ததும்பும் கண்களோடு நாகேஷ் இப்படிச் சொல்லவும்

கலங்கிப் போய் விட்டாராம் பாலச்சந்தர் .

கொஞ்ச நேரத்துக்குப் பின், நண்பன் நாகேஷை சமாதானம் செய்தாராம்.

“நாகேஷ்...

உனக்கு உன் நடிப்புத்தான் அழகு...

கவலைப்படாதே !

முதலில் போய் உன் குழந்தையை பார்த்து தூக்கி கொஞ்சி விட்டு,

அப்புறம் ஷூட்டிங்குக்கு வா...” என்று உற்சாகம் கொடுத்து அனுப்பி வைத்தாராம் பாலச்சந்தர்.

(சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு திரைப்பட விழாவில்,

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சொன்ன தகவல் இது)

இவ்வளவு துன்பங்களையும் , துயரங்களையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டுதான்,

நம்மையெல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார் நாகேஷ் !

ஆம்.

“சிரிப்பவர்கள் எல்லோரும் கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை ;

கவலையை மறக்க கற்று கொண்டவர்கள் !”

11/26/2024

கடவுளின் மாபெரும் பரிசு நண்பர்கள்

 கடவுளின் மாபெரும் பரிசு நண்பர்கள் !



பேச்சுத் துணைக்கு சில நண்பர்கள் வேண்டும்

பேசும்போது பேசாமல் இருக்க சில நண்பர்கள் வேண்டும்

துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள சில நண்பர்கள் வேண்டும்

தூங்கும் போதும் காத்திருக்க நல்ல சில நண்பர்கள் வேண்டும்

நடைபயிற்சிக்குதுணையாக  சில நண்பர்கள் வேண்டும்

நல்லது கெட்டது சொல்ல சில நண்பர்கள் வேண்டும்

 பயணங்களின் போது பேசி மகிழ சில நண்பர்கள் வேண்டும்

படித்ததில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள சில நண்பர்கள் வேண்டும்

அறிவுரை சொல்ல சில நண்பர்கள் வேண்டும்

அன்பே உருவான சில நண்பர்கள் வேண்டும்

 ஆற்றல் நிறைந்த சில நண்பர்கள் வேண்டும்

ஆலயங்களுக்கு செல்ல சில நண்பர்கள் வேண்டும்

 அடித்து திருத்த சில நண்பர்கள் வேண்டும்

அணைத்துக் கொள்ள சில நண்பர்கள் வேண்டும்

குடும்ப உறவாக சில நண்பர்கள் வேண்டும்

 குதூகலமாய் இருக்க சில நண்பர்கள் வேண்டும்

 கொடுப்பதற்கு  சில நண்பர்கள் வேண்டும்

 கேட்பதற்கு  _சில நண்பர்கள் வேண்டும்

 தடுத்து நிறுத்த சில நண்பர்கள் வேண்டும்

 தட்டிக்கொடுக்க சில நண்பர்கள் வேண்டும்

 புகழ்ந்து பேச சில நண்பர்கள் வேண்டும்

புரட்சிகள் செய்யும் சில நண்பர்கள் வேண்டும்

 பொறுமை மிகுந்த சில நண்பர்கள் வேண்டும்

பொறுப்பான  சில நண்பர்கள் வேண்டும்

புண்ணியம் செய்கின்ற சில நண்பர்கள் வேண்டும்

புறம் பேசாத நண்பர்கள் வேண்டும்

 படைத்தலைவன் போல் சில நண்பர்கள் வேண்டும்

 படித்ததை சொல்ல சில நண்பர்கள் வேண்டும்

 பாசத்தை கொட்ட சில நண்பர்கள் வேண்டும்

பக்குவமாய் எடுத்துச் சொல்ல சில நண்பர்கள் வேண்டும்

ஓடி விளையாட சில நண்பர்கள் வேண்டும்

 உதவி என்றால் ஓடோடி வர சில நண்பர்கள் வேண்டும்

உயிருக்கு உயிராய பழகிட சில நண்பர்கள் வேண்டும்

 இவை அனைத்தும் கலந்த ஒரு நண்பன் எப்போதும் உடன் வேண்டும்

அது யார் என்று  நீங்கள் அறிய வேண்டும்

அந்த நட்பை எந்நாளும் போற்றி தொடர்ந்திட வேண்டும்🙏


 படித்ததில் பிடித்தது


11/13/2024

மனிதனின் கடைசி கால சிந்தனைகள் எப்படி இருக்கும்?எழுத்தாளர் சுஜாதாவின் கடைசி கால வரிகள்!

 

மனிதனின் கடைசி கால சிந்தனைகள் எப்படி இருக்கும்?

எழுத்தாளர் சுஜாதாவின் கடைசி கால வரிகள்:*

 

*“ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த* *போது ஏரோப்ளேன் ஓட்டவும் கித்தார் வாசித்து உலகை வெல்லவும் நிலவை விலைபேசவும் ஆசைப்பட்டேன்.*

*நாளடைவில்

இந்த இச்சைகள் படிப்படியாகத்

திருத்தப்பட்டு,

எளிமையாக்கப்பட்டு,

எழுபது வயதில்

*காலைஎழுந்தவுடன் சுகமாய் பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகின்றேன்,

வாழ்க்கை இவ்வகையில் ப்ரொக்ரஸீவ் காம்ப்ரமைஸ்

( படிப்படியான* *சமரசங்களால் ஆனது )

இன்றைய தினத்தில் என் டாப் டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால் ,

முதலிடத்தில் உடல்நலம் ,

மனநலம் ,

மற்றவருக்கு தொந்தரவு தராமல் இருப்பது ,

இன்சொல் அனுதாபம்,

நல்ல காபி ,

நகைச்சுவை உணர்வு ,

நான்கு பக்கமாவது படிப்பது

எழுதுவது..

இந்தப் பட்டியலில் பணம்

*"இல்லை”,*

-----

கற்றதும் பெற்றதும் - சுஜாதா...