சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவில் - விரிவான தகவல்கள்.
சென்னையில் நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், G N செட்டி சாலையில் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.
சென்னை, தி.நகரில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில், வரும் 17.03.2023ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயம். இக்கோயிலுக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.
அதே போல் தமிழகத்தின் தலைநகர் சென்னையின், வர்த்தகப் பகுதியான தி நகர், வெங்கட்நாராயணா சாலையிலும் ஒரு வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது.
திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் கூட தி நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசிப்பதுண்டு. திருப்பதியைப் போல் இங்கும் நாள்தோறும் கூட்டம் அலைமோதும். விசேஷ நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்துச் செல்வதுண்டு. இவரை நினைத்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை காஞ்சனா. 1960 - 70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர். திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருபவர். தற்போது இவருக்கு 84 வயதாகிறது.
இவர் திரைப்படங்களில் நடித்து சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை எல்லாம் இவருடைய உறவினர்கள் ஏமாற்றி அபகரித்துக் கொண்டனர்.
உறவினர்கள் ஏமாற்றி அபரித்துக்கொண்ட சொத்துக்களை மீட்க நீதிமன்றப் படியேறினார். அப்போது, தான் வழக்கில் ஜெயித்தால் அனைத்து சொத்துக்களையும் திருப்பதி தேவஸ்தனத்திற்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டார். அவர் வேண்டிக் கொண்டது போலவே, வழக்கில் வெற்றி பெற்று இழந்த சொத்துக்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றார். அவர் பெருமாளிடம் வேண்டிக்கொண்டது போலவே சொத்துக்கள் திரும்பக் கிடைத்ததால், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சொத்துக்கள் அனைத்தையும் திருப்பதி தேவஸ்தனத்திற்கே எழுதிக் கொடுத்துவிட்டார்.
நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், G N செட்டி சாலையில் உள்ள ரூ.40 கோடி மதிப்பிலான காலி இடமும் அடக்கம். இந்த இடத்தில் தான் 14,880 சதுர அடியில், ரூ.7 கோடி மதிப்பீட்டில், பத்மாவதித் தாயாருக்கு கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவெடுத்தது. ராஜகோபுரம், பிரகாரம் மற்றும் முகாம் மண்டபம் என கோயில் மிகப் பிரமாண்டமாகக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, நிதியானது திருப்பதி தேவஸ்தான விதிகளின் படி நடைகொடை பெறப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 22.02.2021அன்று, காஞ்சி காமகோடி பீடாதிபதி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு, கோயில் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 6 கிரவுண்டு நிலத்தில் 3 கிரவுண்டு நிலத்தில் கோயிலும், மீதமுள்ள நிலத்தில் மண்டபம், சுவாமி வாகனங்கள் நிறுத்துமிடம், மடப்பள்ளி உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.
தற்போது கட்டப்படும் கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் உள்ளது போன்று தாயார் சிலையே பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் 17.03.2023 ஆம் தேதி பத்மாவதி தாயார் கோவிலுக்கு கும்பாபிஷேகம்.
கோயிலுக்கு சொந்தமாக புஷ்கரணி, வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தப் பக்கக்காட்சிகள்
3/15/2023
சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவில் - விரிவான தகவல்கள்.
9/18/2020
ஓட்டுநரின் சாமர்த்தியம்!
ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்று இருந்தார்.. இதைக் கண்ட ஓட்டுநர் மிகுந்த அக்கறையுடன் கேட்டார்..
" அய்யா.. இன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாமே..?"
" அது இயலாது டாம்.. ஏகப்பட்ட பேர் காத்துக்கொண்டிருப்பார்கள்.. அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை..!"
இருந்தாலும் ஓட்டுநருக்கு மனசு தாளவில்லை.. ஒரு யோசனை சொன்னார்..
" அய்யா.. ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்களே..? உங்கள் உரைகளை நிறைய கேட்டிருக்கிறேன்.. இன்று உங்களுக்கு பதிலாக, உங்களுடைய இடத்தில் நான் இருந்து உரையாற்றுகிறேனே..?'
ஐன்ஸ்டீனுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. ஓட்டுநரின் தொப்பியை அணிந்துகொண்டு ஐன்ஸ்டீன் கடைசி இருக்கையில் அமர்ந்துகொள்ள, ஒட்டுநர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரை ஆற்றினார்.. கூட்டத்துக்கு ஐன்ஸ்டீன் எப்படியிருப்பார் என்று தெரியாததால் ஓட்டுநர்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் என்று நம்பிற்று. இருந்தாலும் திடீரென்று ஒரு எதிர்பாராத சிக்கல் ஒரு பேராசிரியர் வடிவில் கிளம்பியது. அவர் ஒரு விடயத்தைப் பற்றிய சந்தேகத்தை நீண்ட கேள்வியாக கேட்டு விளக்கமளிக்க வேண்டினார்..திக்கு முக்காடிய ஓட்டுநர் சட்டென சுதாரித்து சொன்னார்..
" இது மிகவும் சிறிய பிரச்னை பேராசிரியரே.. இதற்கான விளக்கத்தை கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் என் ஓட்டுநரே கூட அளிக்க முடியும்..!"
மனதிற்குள் ஓட்டுநரின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்துகொண்டே ஐன்ஸ்டீன் எழுந்து சென்றார் விளக்கமளிக்க...!
5/18/2020
எம்ஜிஆர் படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி!
M.G.R. ஒரு காரியத்தில் இறங்கினார் என்றால் என்ன இடையூறு வந்தாலும் அதை
முடிக்காமல் விடமாட்டார். அதற்கு மிகப் பெரிய உதாரணம் அவர் முதன் முதலில்
தயாரித்து, இயக்கி, நடித்து பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படமான ‘நாடோடி
மன்னன்’.
‘மலைக்கள்ளன்', ‘அலிபாபாவும் 40 திருடர்களும்', ‘மதுரை வீரன்',
‘தாய்க்குப் பின் தாரம்' என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில்
இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன.
ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் ‘நாடோடி மன்னன்’
படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.! அது ஏன் என்பதற்கான விளக்கமும்
கொடுத்தார்.
‘‘நான் சொந்தத்தில் ‘நாடோடி மன்னன்’ படத்தை ஏன் ஆரம்பித்தேன்? எனக்காக
எத்தனையோ படங்கள் காத்திருக்கும் நேரத்தில் அதில் நடித்து முடித் தாலே
வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாம். ஆனால்,
‘நாடோடி மன்னன்’ ஒரு பரி சோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு
மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
‘நாடோடி மன்னன்’ படத்துக்கான கனவு 20 வயதிலேயே எம்.ஜி.ஆரின் மனதில்
கருக்கொண்டது. படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல் கத்தா
சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு ‘இஃப் ஐ வேர் கிங்’ என்ற படத்தைப் பார்த்தார்.
இந்தப் படமே எம்.ஜி.ஆர். மனதில் விதை யாய் விழுந்து விருட்சமாக வளர்ந்தது.
அதன் விளைவுதான் ‘நாடோடி மன்னன்.’
படத்துக்காக பணத்தை பணம் என்று பார்க்காமல் எம்.ஜி.ஆர். செலவழித்தார்.
சில நேரங்களில் அவரது அண் ணன் சக்ரபாணியே கவலைப்படும் அள வுக்கு கடன்
வாங்கி செலவு செய்தார். காட்சி களின் பிரம் மாண்டத்துக்கு மட்டுமல்ல;
படத்தில் பணி யாற்றும் நடிகர்களுக் கும் தொழிலாளர் களுக்கும் தாராள மான
சம்பளமும் வழங்கப்பட்டது.
படப்பிடிப்பு குழுவினர் விரும்புவதை சாப்பிடுவதற் காக படப்பிடிப்
பின்போது மினி ஓட்டலையை எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து விட்டார். அந்தக்
காலத்தில் பணக்காரர் கள் மட்டுமே குடிக்கும் ‘ஓவல்டின்’ என்ற பானம் பெரிய
அண்டாக்களில் வைக்கப்பட் டது. முதன்முதலாக பல தொழிலாளர்கள் ‘ஓவல்டின்’
குடித்ததே அப்போதுதான்.
படம் முடிந்த பிறகு ‘‘வெற்றியோ, தோல்வியோ அது மக்கள் தீர்ப்பைப்
பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி’’ என்று சர்வ
சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர்.
மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில்
புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது ‘நாடோடி மன்னன்’. 19 ஆண்டுகள்
கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே
முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது ‘நாடோடி மன்னன்’.
மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத்
தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் பேரறிஞர் அண்ணா
தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு
வீரவாளை அண்ணா பரிசளித்தார்.
இந்தக் கூட்டத்தில்தான், ‘‘மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா
என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில்
விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை
பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்’’ என்று அண்ணா
பேசினார்.
‘நாடோடி மன்னன்’ பற்றி குறிப்பிடும் போது நடிகை பானுமதி பற்றி சொல்லி
யாக வேண்டும். நடிப்பு, தயாரிப்பு, இசை, இயக்கம் என்ற பன்முகத்திறமை
கொண்டவர் பானுமதி. ‘மலைக்கள்ளன்’, ‘மதுரை வீரன்’ என்று ஏற்கெனவே வெற்றி
பெற்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கு பானுமதியே ஜோடி. ‘நாடோடி மன்னன்’
படத்திலும் அவரையே நாயகியாக நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்தார்.
பானுமதி அந்தக் காலத்திலேயே சுதந்திரமாக செயல்படும் நடிகை. எம்.ஜி.ஆரும்
அப்படியே. தான் விரும்பு கிறபடி காட்சிகள் வரும்வரை எம்.ஜி.ஆர்.
விடமாட்டார். அதனால்தான் இன்றும் அவர் படங்களை ரசிக்க முடிகிறது.
எம்.ஜி.ஆர். மீண்டும் மீண்டும் காட்சி களை எடுப்பது பானுமதிக்கு
பிடிக்கவில்லை. ‘‘எடுத்த காட்சிகளையே எத்தனை முறை எடுப்பீங்க?’’ என்று
எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டார்.
சக நடிகையின் ஒத்துழைப்பு இப்படி இருக்கும்போது கோபம் வந்தாலும்,
எம்.ஜி.ஆர். அமைதியாகவே பதில் சொன்னார், ‘‘படத்தின் தயாரிப்பாளர்
மட்டுமின்றி, இயக்குநரும் நான்தான். என் இயக்கத்தில் நடிக்க விருப்பம்
இருந்தால் நடிங்க. இல்லைன்னா விட்டுடுங்க.’’ இதைத் தொடர்ந்து, படத்தில்
இருந்து விலகிக் கொண்டார் பானுமதி. பிறகு, அவர் இறப்பது போல காட்சிகள்
மாற்றப்பட்டு நடிகை சரோஜா தேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்
எம்.ஜி.ஆர்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரின் திறமையை எம்.ஜி.ஆர்.
மதிப்பார். படத்தில் இருந்து பாதியில் விலகினாலும் சென்னையில் நடந்த வெற்றி
விழாவுக்கு பானுமதியையும் பெருந்தன்மையுடன் அழைத்து, அவருக் கும் விருது
வழங்கினார் எம்.ஜி.ஆர்.
அதன் பின்னரும், எம்.ஜி.ஆர். - பானுமதி நடிப்பில் ‘ராஜா தேசிங்கு’, ‘கலை அரசி’, ‘காஞ்சித் தலைவன்’ ஆகிய படங்கள் வெளியாயின.
பன்முகத் திறமை மிக்க பானுமதிக்கு தமிழக அரசின் சார்பில் அதுவரை
‘கலைமாமணி’ பட்டம் வழங்கப்படாததை அறிந்த எம்.ஜி.ஆர், தான் முதல்வராக
இருந்தபோது ‘கலைமாமணி’ விருதை பானுமதிக்கு வழங்கி கவுரவித்தார்.
எம்.ஜி.ஆர். நல்ல இசை ஞானம் உடை யவர். ‘நாடோடி மன்னன்’ படப்பிடிப்பின்
போது ஒருநாள், இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவுடன் பாடல்
களுக்கான இசையமைப்பு பற்றி எம்.ஜி.ஆர். ஆலோசித்துக் கொண்டிருந் தார்.
அப்போது, ‘‘நீங்கள் இசையமைப் பில் எல்லாம் தலையிட வேண்டுமா?’’ என்று
எம்.ஜி.ஆரிடம் கேட்டார் பானுமதி. இசை பற்றி எம்.ஜி.ஆருக்கு பெரிதாக ஒன்றும்
தெரிந்திருக்காது என்ற எண்ணம் பானுமதிக்கு.
எம்.ஜி.ஆருக்கு நினைவாற்றல் அபா ரம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எதை யும்
மறக்க மாட்டார். பானுமதி கேட்ட கேள்விக்கு, 27 ஆண்டுகளுக்குப் பின்
முதல்வராக இருந்தபோது செயல்வடி வில் அவருக்கு பதிலளித்தார் எம்.ஜி.ஆர்.
தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக பானுமதியை எம்.ஜி.ஆர்.
நியமித்தார். பின்னர், அந்த பதவியின் அந்தஸ்து மேம்படுத்தப்பட்டு இயக்குநர்
மற்றும் முதல்வராக பானுமதி பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு பானுமதி மறைந்த
தினம், எம்.ஜி.ஆர். நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதி.
எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட
33 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. எந்த கருப்பு
வெள்ளை படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. பெங்களூரிலும், இலங்கையிலும்
தலா ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த
முதல் வெள்ளி விழா படம் என்பதோடு, ரூ.1 கோடி வசூல் செய்த முதல் தமிழ்படம்
என்ற பெருமை பெற்றது ‘மதுரை வீரன்.’
-
எம்ஜிஆர் 100 | 42 - ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்!
M.G.R.மீது மக்கள் அன்பை பொழிந்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை
நினைத்ததற்கு வெறும் சினிமாக் கவர்ச்சி மட்டுமே காரணமல்ல; அதையும் தாண்டிய
அவரது மனிதநேய செயல்பாடுகள்தான் காரணம். இதற்கு ஏராளமான ஆதாரங்கள்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘பரிசு’ படம் 1963-ம் ஆண்டு வெளியாகி 100 நாட்கள்
ஓடிய வெற்றிப் படம். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாக நடிகை
சாவித்திரி நடித்திருந்தார். படத்தின் கதையை எழுதிய கே.பி. கொட்டாரக்கரா,
படத்தின் இயக்குநர் டி.யோகானந்த் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். ‘பரிசு’
படத்தின் சில காட் சிகள் தேக்கடியில் படமாக்கப்பட்டன.
தேக்கடியில் நடந்த படப்பிடிப்பின் போது ஒருநாள் 30 வயது மதிக்கத்தக்க
பெண் ஒருவர் திடீரென வேகமாக வந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார். அவரது
இரு பெண் குழந்தைகளும் பரிதாபமாக அருகே நின்றன. அவரை எழுந்திருக்கச் சொன்ன
எம்.ஜி.ஆர்., ‘‘என்ன விஷயம்?” என்று விசாரித்தார்.
அந்தப் பெண்ணின் பெயர் தேவகி. ‘‘என் கணவருக்கு குடிப் பழக்கம் உண்டு.
வனத்துறையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சரியாக போவதில்லை. ஒரு நாள்
குடித்துவிட்டு சென்ற என் கணவர் காட்டு யானை தாக்கி இறந்துவிட்டார். அரசு
நிர்வாகம் நஷ்ட ஈடோ, கருணைத் தொகையோ தரவில்லை. எங்களைக் காப்பாற்ற
வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் அழுதவாறே முறையிட்டார் தேவகி.
அதோடு, ‘‘இரண்டு பெண் குழந்தை களை வைத்துக் கொண்டு தனியாக இருக்கும்
என் குடிசைக்கு இரவு நேரங் களில் சிலர் தவறான நோக்கத்தோடு வந்து வாசலில்
நின்று கலாட்டா செய் கிறார்கள்’’ என்று சொல்லிக் கதறினார். எம்.ஜி.ஆரின்
கண்கள் கலங்கிவிட்டன.
தேவகியிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அழா தேம்மா. உன் கணவர் பணியாற்றிய
வனத்துறையில் உனக்குத் தெரிந்த அதிகாரி யாராவது இருந்தால் நான்
கூப்பிடுவதாக சொல்லி நாளை அழைத்து வா. உன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில்
இருந்து உனக்குத் தெரிந்த டீச்சரையும் கூட்டிக் கொண்டு வா’’ என்று
சொல்லி அனுப்பினார்.
அதேபோல, வனத்துறை அதிகாரி ஒருவரையும் தன் பிள்ளைகள் படிக் கும்
பள்ளியில் இருந்து டீச்சர் ஒரு வரையும் மறுநாள் படப்பிடிப்பு நடக் கும்
இடத்துக்கு தேவகி அழைத்து வந் தார். அவரது அதிர்ஷ்டமோ என் னவோ, அந்த
வனத்துறை அதிகாரி எம்.ஜி.ஆரின் ரசிகர். எம்.ஜி.ஆரை நேரில் பார்த்த
மகிழ்ச்சியில் இருந்து மீளவே அவருக்கு வெகுநேரம் பிடித் தது. அவரிடம்
எம்.ஜி.ஆர். விசாரித்தார்.
‘‘பலமுறை எச்சரித்தும் குடிப் பழக்கத்தால் தேவகியின் கணவர் சரியாக
பணிக்கு வருவதில்லை. அவரது சாவுக்குக் கூட குடிதான் காரணம். தெளிவாக
இருந்திருந்தால் யானையிடம் இருந்து தப்பித்து இருக்கலாம்’’ என்று
எம்.ஜி.ஆரிடம் வனத்துறை அதிகாரி கூறினார்.
அவரிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அது இருக்கட்டும். இப்போது இவர்கள் நிலை ரொம்ப
பரிதாபமாக உள்ளது. உங்கள் அலுவலக விதிமுறைகள்படி இவர்களுக்கு அதிகபட்சமாக
என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நடவடிக்கை எடுங்கள். இது சம்பந்த மாக
உயர் அதிகாரிகள் யாரிடமாவது பேச வேண்டும் என்றாலும் நானே பேசுகிறேன்’’
என்றார்.
அந்த அதிகாரியும், ‘‘நீங்கள் இவ் வளவு தூரம் சொல்லும்போது நான் முடிந்தவரை உதவுகிறேன்’’ என்றார்.
மேலும், ‘‘இப்போது குடிசையில் இருக்கும் இவர்கள் கவுரவமாக தங்கும்
வகையில் வாடகைக்கு சிறிய வீட்டை இவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க
முடியுமா?’’ என்றும் வனத்துறை அதிகாரியிடம் கேட்ட எம்.ஜி.ஆர்., அதோடு
நிற்கவில்லை. ‘‘தேவகிக்கு ஏதாவது வேலை வாங்கித் தர முடியுமா?’ என்றும்
கேட்டார்.
எம்.ஜி.ஆரே கேட்கும்போது அதுவும் அவரது ரசிகரான அதிகாரி மறுப்பாரா?
இரண்டுக்கும் ஒப்புக் கொண்டார். வீடு ஏற்பாடு செய்து தருவதுடன் தனக் குத்
தெரிந்த ஒரு வீட்டில் தேவகியை வீட்டு வேலை செய்ய சேர்த்து விடுவதாகவும்
கூறினார்.
தேவகியைப் பார்த்து, ‘‘என்னம்மா? வீட்டு வேலை செய்ய உனக்கு சம் மதமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தேவகியும் சம்மதித்தார்.
பின்னர், அவரது பிள்ளைகள் படிக் கும் பள்ளியின் டீச்சரை அழைத்து,
எஸ்.எஸ்.எல்.சி. வரை இரண்டு பிள்ளை களும் படிப்பதற்கான செலவுகளை
எம்.ஜி.ஆர். விசாரித்தார். தயாரிப்பாளர் கொட்டாரக்கராவிடம் தனியாகப் பேசி
கணிசமான ஒரு தொகையை வாங்கினார். அதை தனது சம்பளத்தில் கழித்துக்
கொள்ளும்படி கூறிவிட்டு, அந்தத் தொகையை அப்படியே தேவகியிடம் எம்.ஜி.ஆர்.
கொடுத்தார்.
ஒருவாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அந்த
வனத்துறை அதிகாரி வந்தார். உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் அரசு மூலம்
தேவகிக்கு நஷ்ட ஈடாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும் என்றும் இன்னும் ஒரு
மாதத்தில் அந்தப் பணம் கிடைத்துவிடும் எனவும் கூறினார். இதைக் கேட்டு
எம்.ஜி.ஆர். மிகவும் மகிழ்ச்சி அடைந் தார். 1963-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரம்
என்பது பெரிய தொகை.
இப்போதும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழுதார் தேவகி. இந்த முறை
அவரது கண்களில் இருந்து வந்தது, நன்றிப் பெருக்கால் ஏற்பட்ட ஆனந்தக்
கண்ணீர்!
- தொடரும்...
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண் களுக்கு திருமண நிதி
உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங் கும் திட்டம் ஆகியவற்றை செயல்
படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித்
தொகை வழங் கவும் உத்தரவிட்டார்.
http://tamil.thehindu.com/
11/14/2018
"பணம் "
பணம் இல்லாதவனுக்கு வீடு மட்டுமே உலகம்.
பணம் இருப்பவனுக்கு உலகமே வீடு.
"பணம் தான் வாழ்க்கை" என்பான். - பணக்காரன்
"வாழ்க்கை ஒரு போரட்டம்" என்பான். - ஏழை
"வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்"என்பான் - அரசியல்வாதி
"வாழ்க்கை சவால்கள் நிறைந்த பாதை" என்பான். - அறிவாளி
"காதல் தான் வாழ்க்கை" என்பான். - கவிஞன்
"கடவுளை அடையும் வழிதான் வாழ்க்கை" என்பான். - ஆன்மீகவாதி
"கனவுதான் வாழ்க்கை" என்பான். - இலட்சியவாதி
"வாழ்க்கை வெறும் போர்" என்பான். - அவசரக்காரன்
வாழ்க்கையே ஒரு விளையாட்டு ...என்பான். - வெற்றி வீரன்
வாழ்க்கையே வீண் . என்பான். - சராசரி மனிதன்
தங்களுக்கு எப்படியோ இந்த வாழ்க்கை?..................
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)