மொத்தப் பக்கக்காட்சிகள்

1/02/2017

படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு ?




விருந்தாளி :- என்ன பண்ற ?

பையன் :- படிக்கிறேன்

விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ?

பையன் :- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்

விருந்தாளி :- என்னன்னு ?

பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு

விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ?

பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம் !

விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி !

பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம் !

விருந்தாளி :- அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி !

பையன் :- டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 500 லட்சம் !

விருந்தாளி :-அடேயப்பா அப்ப டாக்டருக்கு படி !

பையன் :- ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம் 700 லட்சம் !

விருந்தாளி :- பார்ரா ... நீ நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு !

பையன் :- எதுவுமே படிக்காத ஒரு அரசியல்வாதியின் பத்து வருட வருமானம் 1000  கோடியிலேர்ந்து 40000 கோடி வரை

விருந்தாளி :-.....!!! மயங்கி விழுகிறார் !

பையன் :- -நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு.. ?

இதான் இந்த உலகம்.. 

இது சிரிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்ல.. 

சிந்திக்க வேண்டிய விஷயம்....

Thanks to Karunakaran karuna

12/23/2016

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!

இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்..


இழந்தது எவை என இறைவன் கேட்டான்..


பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்..


பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?


கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்..


கோலம் மாறி அழகையும் இழந்தேன்..


வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்..


எதை என்று சொல்வேன் நான்..


இறைவன் கேட்கையில்?


எதையெல்லாம் இழந்தேனோ


அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.


அழகாகச் சிரித்தான் இறைவன்.


”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"..


"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"..


"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"..


"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"..


சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல..


தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்..


திகைத்தேன்!


இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்..


வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்..


இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்..


இறைவன் மறைந்தான்..

விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

 
 
பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி

Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். - கவியரசு கண்ணதாசன்

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர்

Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்

Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்

Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா

Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.

Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே

Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

11/25/2016

காத்திருக்கப் பழகு !

காத்திருக்கப் பழகு
 
 சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்:
 
 'தியானம் செய். நான் அழைக்கும் வரை காத்திரு' 

நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும்.

பசிக்கும் வரை காத்திரு

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு

சளி வெளியேறும் வரை காத்திரு

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு

பயிர் விளையும் வரை காத்திரு

உலையில் அரிசி வேகும் வரை காத்திரு

கனி கனியும் வரை காத்திரு

எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.

செடி மரமாகும் வரை காத்திரு

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு

தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு

தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு

துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

உணவு தயாராகும் வரை காத்திரு

போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு

நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு

பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

இது உன்னுடைய வாழ்க்கை
ஒட்டப்பந்தையம் அல்ல

ஒடாதே

நில்

விழி

பார்

ரசி

சுவை

உணர்

பேசு

பழகு

விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்,

உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.

உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.

எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.

உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா....???

நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.

காத்திருக்கப் பழகினால்
வாழப் பழகுவாய்.

இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.

எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்

11/02/2016

“ஜாதிகள் இல்லையடி பாப்பா”

படித்ததில் பிடித்தது.

• பள்ளியில் ஜாதிசான்றிதழ் வாங்கிட்டு
“ஜாதிகள் இல்லையடி பாப்பா”
சொல்லும்போதே,
படிப்புக்கும், வாழ்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று புரிகின்றது..

• பூஜையோ, ஜெபமோ, தொழுகையோ..
ஒரு பருக்கை சோற்றைக் கூட தராது..
உழைச்சா தான் சோறு..

• ஒரு பெண் சிரிக்கும்போது, அழகாக இருப்பாள்.. அவளை சிரிக்க வைத்து ரசிக்கும் ஒரு ஆண்
அதை விட அழகாக தெரிவான்..

• ஒரு பெண்
உன்னிடம் தன் பிரச்சனையை சொல்கிறாள் என்றால்,
அதற்காக அவள், அவர்களை குறை கூறுகிறாள் என்று அர்த்தம் இல்லை.. உன்னை முழுமையான நம்புகிறாள் என்று அர்த்தம்..

• ஒருவர் உங்களிடம் ஆறுதல் தேடிவரும் போது,
அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு,
பிறகு அவரை பற்றி மற்றவரிடம் குறை கூறினால்,
அதை விட நம்பிக்கை துரோகம் என்ன இருக்கு..

• எழுதி வைத்துகொள்ளுங்கள்,
பல அடுக்கு மாடி கட்டிடங்களை இடித்து விவசாயம் செய்யும் நாள் வரும் வெகுவிரைவில்..

• உயிரை கொடுத்தாலும் திரும்ப கிடைக்காதது, “நேரம்”..
அந்த நேரத்தை ஒருவருக்காக செலவழிக்கும் முன்
அவர் அதற்கு தகுதியானவரா
என ஆராய்வது நல்லது..

• சுதந்திரம் இல்லாத காலத்தில்,
வெள்ளைக்கார கவர்னர்களையேகூட எதிர்த்து தைரியமாக குரல்கொடுக்க முடிந்த நம்மால்
சுதந்திரம் பெற்ற பிறகு,
ஒரு வார்டு கவுன்சிலரை பார்த்துக்கூட எதிர்த்துக்குரல் கொடுக்க முடியவில்லையே
ஏன்?

• “கவலைப்படாதே” என்பதை விட,
“நான் பார்த்துக்கிறேன்” என்பதே சிறந்த ஆறுதல்..

• இன்று உன்னால் சிரித்தவர்கள், நாளை உனக்காக அழுதால், நீ வாழ்ந்த வாழ்கை அர்த்தமானது..

• இறந்தவருக்கு சிலை வைப்பதற்கு பதிலாக, பசியோடு இருப்பவருக்கு, இலை வையுங்கள்..

•“ஏமாத்திட்டாங்க”ளேன்னு வருத்தப்படாம, “இவர்களைப் போய் ஏமாத்திட்டோ”மேன்னு வருத்தப்பட வைக்கிற மாதிரி வாழனும்..

• நம்ம கூட இருந்த ஒருத்தர், நமக்கு துரோகம் “பண்ணிட்டாங்க”ன்னு
கூட இருக்க மத்த எல்லோரையும் சந்தேகப்பட்டா
வாழ்வில் நிம்மதி இருக்காது..

• குத்திக்காட்டும் மனிதர்க்கும்,
சுட்டிக்காட்டும் மனிதர்க்கும்,
இடையில் சிரித்து செய்து வாழ்ந்தாலே
பெரும் சவால்..

• அடுப்பு கல்லு உள்ளே இருந்தால்,
உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால்,
சாதா ஹோட்டல்..
இவ்வளவு தான் வாழ்கை..

• தெருவில் கிடக்கும் காகிதமாக யாரையும் வெறுக்காதே..
நாளை அது பட்டமாக பறந்தால்,
நீ அவர்களை நிமிர்ந்து பார்க்க நேரிடும்..

• வாழ்க்கையில் எல்லாம் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதே..
சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே நல்லது..

• உறவு என்பது ஒரு கோவில்.
அதற்குள் செல்லும் முன், “ஈகோ” எனும் செருப்பை கழட்டிவைத்தல் நலம்.

• நாம்
தேடிச்செல்வோரை விட,
நம்மை தேடி வருவோர் மீது அதிகம்
அன்பையும் அக்கறையும் செலுத்துங்கள்..

• வேலை செய்பவரின்,
பணம் தான் நம் கண்ணுக்கு தெரிகிறது..
அவர்களின் உழைப்பும், கஷ்டமும் நம் கண்ணுக்கு தெரிவதே இல்லை..

• யாரோ ஒருவரின் நிராகரிப்புக்காக வருந்தாதீகள்..
யாரோ ஒருவரால் நிராகரிப்பு,
ஒருவரால் நேசிக்கப்படுகின்ற
து..