மொத்தப் பக்கக்காட்சிகள்

12/18/2015

விசாலினி




11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்-

அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.


இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான். அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.

தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி, 

ஓர் இந்தியர். அதுவும் தமிழர். 

ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.

HCL நிறுவனம் The Pride of India - Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11. TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார். London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.

Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian - Visalini என அரை மணி நேர Documentry
படத்தை ஒளிபரப்பியது.

நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா, உலகின்
74 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது விசாலினிக்கு
வயது 13 தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது ஒரு Phone Call. Our Prime Minister Mr. Modi wants to meet your Daughter Visalini என்று. பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று
தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம் என்றார் பிரதமர் மோடி.
 பிரதமர் மோடி விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.


திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ, விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார் 

என்று பெருமை பொங்க வாழ்த்தினார். உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.


உங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்.


நண்பர்களே, விசாலினி என்னும் விருட்சத்தின் சாதனைகளை முடிந்தவரை அனைவரும் Facebook, Whatsapp ல் Share செய்யுங்கள். இந்தத் தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள். I

12/15/2015

திருட்டு !




சினிமாவில கதையை திருடுறான்!

கழுத்துல செயினை திருடுறான் !
 

பெண்கள்கிட்ட கற்பை திருடுறான் !
 

பாக்கெட்ல பணத்தை திருடுறான் !
 

கோயில்ல சிலையை திருடுறான் !
 

கோயில் வாசல்ல  செருப்பை திருடுறான் !
 

ரேஷன்ல எடையை திருடுறான் !
 

பேஷன்ல உடையை திருடுறான் !
 

காதல்ல மனசை திருடுறான் !
 

பரீட்சைல பிட்டை திருடுறான் !
 

அரசியல்ல வாக்குறுதிய திருடுறான் !
 

செல்போன்ல பேலன்சை திருடுறான் !
 

அரசாங்கம் விலைவாசில திருடுறான் !

கண்டக்டர் சில்லரைய திருடுறான் !


அமெரிக்கா ஆயுதத்தை திருடுறான் !


ஸ்பெக்ட்ரம்ல காற்றலைய திருடுறான் !


ஒயின்ஷாப்ல ஊறுகாய திருடுறான் !


வட்டிக்காரன் சொத்தை திருடுறான் !


இந்த உலகமே ஒரு திருட்டு பள்ளிக்கூடம் !.


நாமெல்லாம் அதில் பயிலும் மாணவர்கள்.!


வாழ்க திருட்டு!


இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்

(1) வைகறையில் துயில் எழு (அதிகாலையில் எழ வேண்டும்).

(2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

(3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.

(4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)

(5) உணவும் மருந்தும் ஒன்றே.

(6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.

(7) கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான். 

(8) படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.

(9) பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே

(10) சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.

(11) சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.& ஜப்பானிய பொன்மொழி

(12) சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.&ஸ்பெயின் பொன்மொழி

(13) 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை)

5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)

(14) வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும் & ஜெர்மன் பழமொழி.

(15) பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.

(16) சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள்
படக்கூடாது" - இது நல்லதா ?

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி
வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக்
கூடியவை.
அவற்றை வலிமை மற்றும் தைரியம்
ஆகியவற்றின் சின்னமாகக்
கருதுகின்றோம்.
ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச
சக்திகளும், வலிமையும், தைரியமும்
பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை
கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக்
கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக,
பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள்
பலவீனமாகவே இருக்கின்றன.
அவை அப்படியே சுகமாகவும்,
பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால்
வலிமையாகவும், சுதந்திரமாகவும்
மாறுவது சாத்தியமல்ல.

எனவே
குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய
உணவளித்து, பாதுகாப்பாக
வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள்
பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி
விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும்
படுக்கையினைக் கலைத்து சிறு
குச்சிகளின் கூர்மையான பகுதிகள்
வெளிப்படும்படி செய்து கூட்டை
சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து
விடுகின்றது.

பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து
இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத்
தூண்டுகின்றது.

தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத
கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை
வந்து நிற்கின்றது.

அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின்
வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும்
உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து
மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப்
பயணிக்க தைரியமற்று பலவீனமாக
நிற்கின்றது.

அது ஒவ்வொரு குஞ்சும் தன்
வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு
முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.

அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே
தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே
பாதுகாப்பாகத் தங்கி விட
முடிவெடுக்கலாம்.

ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும்
பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய
இடமல்ல.

சுயமாகப் பறப்பதும்
இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப்
பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை
அறியும்.
அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில்
என்ன செய்வதென்று அறியாமல் வெளியே
எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும்

அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக்
குஞ்சின் உணர்வுகளை லட்சியம்
செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து
வெளியே தள்ளி விடுகிறது.

அந்த எதிர்பாராத தருணத்தில்
கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப்
பறக்க முயற்சி செய்கின்றது.

முதல் முறையிலேயே கற்று விடும்
கலையல்ல அது.
குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க
முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும்
நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன்
குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது.

குஞ்சு
மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக
இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது.

அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன்
குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப்
பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக்
கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு
விடுகிறது.
மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப்
பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக்
குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி
விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல
முறை நடக்கும்
இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின்
சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று
வெளியில் பறக்கும் கலையையும்
விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக்
கொள்கிறது.

அது சுதந்திரமாக,
ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப்
பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக
கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின்
பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி
நிற்கும்
அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை
முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த
சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும்,
தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு
தன் வாழ்நாளில் என்றென்றைக்கும்
கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை
விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய
போது அது ஒருவிதக் கொடூரச்
செயலாகத் தோன்றினாலும்
பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும்
யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப்
பேருதவி என்பதை மறுக்க முடியாது
ஒவ்வொரு புதிய சூழ்நிலையும்
யாருக்கும் ஒருவித பதட்டத்தையும்,
பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால்
அந்தக் காரணத்திற்காகவே அந்த
சூழ்நிலைகளையும், அனுபவத்தையும்
மறுப்பது வாழ்வின் பொருளையே
மறுப்பது போலத் தான்.

கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான்
அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம்.

ஆனால் கப்பலை உருவாக்குவது அதை
துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல.
கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி
வைப்பதில் இல்லை.

கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல,
மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில்
முதல் முதலில் தள்ளப்பட்டதை
எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என்
குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப்
பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக்
கொள்வேன்" என்று நினைக்குமானால்
அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே
கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.

ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு
செய்ததாக சரித்திரம் இல்லை
அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல
பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட
கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது"
என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை
இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில்
கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது
பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு
குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம்
இருந்ததில்லை.

அதற்கான அவசியம்
இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு
குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக
நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க
வேண்டும் என்பதில் குறியாக
இருக்கிறார்கள்.

அதில் தவறில்லை. ஆனால்
தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள்
குழந்தைகள் படக்கூடாது என்று
நினைக்கும் போது பாசமிகுதியால்
அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின்
பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத்
தவறி விடுகிறார்கள்.

அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம்
செல்ல பல மைல்கள் நடந்தேன்.

அதனால் நீயும்
நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும்
என்று சொல்லவில்லை. வசதிகளும்,
வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக்
காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத்
தான் இருக்கும்.
இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின்
பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது
அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை
பிள்ளைகள் படத் தேவையில்லைதான்.

ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான
அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது'
என்று நினைப்பது அந்தப் பிள்ளையின்
உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும்
செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில
கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு
அவசியமானவையே.

அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும்
போது தான் அவன் வலிமை அடைகிறான்.
அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப்
பெற்றோர் நினைப்பது அவனுக்கு
வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.

சில கஷ்டங்கள் பிள்ளைகள்படும் போது
பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக
இருக்கலாம்.
ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது
வாழ்க்கை அல்ல !

12/11/2015

என்னவாகலாம்….??

 
என்னவாகலாம்….??
*

எம்.பி.பி.எஸ்.படித்தால் மருத்துவர் ஆகலாம்

பி்.ஈ படித்தால் பொறியாளர் ஆகலாம்
 
பி.எல். படித்தால் வழக்கறிஞர் ஆகலாம்
 
ஐ.ஏ.எஸ். படித்தால் மாவட்டஆட்சியர் ஆகலாம்
 
எதுவுமே படிக்காமல் மந்திரி ஆகலாம்
 
ஆனால், என்ன படித்தால் மனிதர் ஆகலாம்
 
மனிதரைப் படித்தால்தான் நாமும் மனிதராகலாம்.
 
ஆதாரம் : “ முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் 
 
மகளே…! ” நா.முத்துநிலவன் – நூல் – பக்கம் 62.
 
தகவல் : ந.க.துறைவன்
*