மொத்தப் பக்கக்காட்சிகள்

11/01/2014

இது நியாயமா? - எம்.ஆர்.ராதா

எம்.ஆர்.ராதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து....

ஜெயில்லே நானே சமைச்சுக்குவேன். குலாப்ஜாமூன், ஜாங்கிரி, இட்லி எல்லாம் செய்துக்குவேன். என் கூட வெள்ளைக்கார கைதி இருந்தார். இட்லியை மட்டும் அவருக்குக் கொடுப்பேன். நான் செய்து கொடுத்த இட்லியை புகழ்ந்து, அவருடைய சம்சாரத்துக்குக் கூட லெட்டர் போட்டார் அவர்.

என் இட்லிக்குக் கூலியா, திட்டுறதுக்கு சில வார்த்தைகளை மட்டும் அவர்கிட்டே கேட்டு கத்துக்கிட்டேன். அவங்க நாட்டை பத்தியெல்லாம் கேட்கும் போது, பொறுமையா பதில் சொல்வார்.

"வக்கீல்களே ஜட்ஜா வர்றது சரியா?'ன்னு அவர்கிட்டே கேட்டேன்.

"அதுதானே வழக்கம்?' என்றார் அவர்.

"உங்க நாட்டிலேயும் அப்படித்தானா?' என்றேன்.
"ஆமா!'ன்னார்.

"முப்பது வருஷமா பொய் சொல்றதையே பிழைப்பாக கொண்ட ஒரு வக்கீல், பதவி உயர்வுங்கிற பேரிலே ஜட்ஜ் ஆனதும், எல்லாரும் அவரை கடவுளுக்கு சமம்ன்னு சொல்றாங்களே... இது நியாயமா?'ன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் பதில் பேசவேயில்லை.

======ராதா கேட்பதில் நியாயம் இருக்கா
?
Thanks to P.R.Karthik

10/24/2014

இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன்

தமிழ்ச் சினிமா துறையில் ‘இலட்சிய நடிகர்’ என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன்   உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.[24.10.2014] அவருக்கு வயது 86.

எஸ்.எஸ். ராஜேந்திரன் ஆரம்பத்தில் நாடக நடிகராக இருந்து பிறகு சினிமாவுக்கு வந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இவரும் ஒரு முன்னணி கதாநாயகனாகவே இருந்தார்.
ssr-1
1947-ம் ஆண்டு வெளியான ‘பைத்தியக்காரன்’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘ரத்தக் கண்ணீர்’, ‘குல தெய்வம்’, அம்மையப்பன், ‘முதலாளி’, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’, ‘சிவகங்கை சீமை’, ‘ராஜா தேசிங்கு’, ‘குமுதம்’, ‘முத்து மண்டபம்’, ‘ஆலயமணி’, ‘காஞ்சித் தலைவன்’, ‘பூம்புகார்’, ‘மணி மகுடம்’, ‘குங்குமம்’, ‘பச்சை விளக்கு’, ‘சாரதா’, ‘பார் மகளே பார்’, ‘கை கொடுத்த தெய்வம்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘முதலாளி’ படம் சிறந்த படத்துக்கான  தேசிய விருது பெற்றது.

1960-ம் ஆண்டில் ‘தங்கரத்தினம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார்.

மிக நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த எஸ்.எஸ்.ஆர்., 1980-ல் நடிகர் மோகனுடன் ‘அன்பின் முகவரி’ என்ற படத்தில் நடித்தார். இதன் பின்பு டிவி சீரியல்களிலும் நடித்திருந்தார்.

திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டதில் இருந்தே அதில் தீவிரமாகப் பணியாற்றியவர் பேரறிஞர் அண்ணா மீதி மிகுந்த பாசம் வைத்திருந்தவர். 1962-ம் ஆண்டு தி.மு.க.வின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு நடிகர் எம்.எல்.ஏ.வாக தேர்வானார் என்றால் அது எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான். 

பின்னர் 1970-1976 வரையிலும் பாராளுமன்றத்தின் மேல் சபையில் தி.மு.க.வின்  எம்.பி.யாகவும் பணியாற்றினார்.

பின்பு தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். 1981-ல் அ.தி.மு.க. சார்பில் ஆண்டிப்பட்டி  தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ. ஆனார். அப்போது அரசு சிறு சேமிப்பு திட்ட துறையில் துணை தலைவராகவும் பணியாற்றினார்.

பெரியார்  மற்றும் அண்ணாவின் சுயமரியாதை கொள்கைகளில் தீவிர  பற்று கொண்டவர்.  ”தமிழ் மொழியின் உச்சரிப்பை இவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அண்ணா அவர்களே பாராட்டியதுபோல திரைப்படங்களில் இவர் பேசும் தமிழ், அவ்வளவு அழகாக இருக்கும்.

திராவிட இயக்கத்தின் மீது கொண்ட பற்று காரணமாக தான் நடித்தவரையிலும் எந்தப் படத்திலும் கடவுளர் வேடங்களில் நடித்ததே இல்லை எஸ்.எஸ்.ஆர். அது போன்ற வேடங்கள் வந்தபோதெல்லாம் அது தான் கொண்டிருக்கும் கொள்கைக்கு விரோதமானது என்று ஒதுக்கித் தள்ளினார். இதனாலேயே ‘இலட்சிய நடிகர்’ என்ற பட்டப் பெயரோடு அழைக்கப்பட்டார்.

86 வயதாகிய நிலையில் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு சில தினங்களுக்கு முன் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.  உடனடியாக அவரை மயிலாப்பூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருடைய குடலில் நோய் தொற்று மற்றும் சளித் தொல்லைகள் இருந்தன. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்தாலும் நேற்று அவரது  உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. உடனடியாக எஸ்.எஸ்.ஆர். அவசர சிகிச்சை  பிரிவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் பெபருத்தப்பட்டு  தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது.  ஆனாலும்  அந்தச் சிகிச்சைகள் பலனளி்ககாமல் இன்று காலை 11 மணியளவில் அவர் காலமானார்.

எஸ்.எஸ்.ஆர். மூன்று திருமணங்கள் செய்தவர். இவருடைய முதல் மனைவியின் பெயர் பங்கஜம். இரண்டாவதாக தன்னுடன் படங்களில் ஜோடியாக நடித்த விஜயகுமாரியை திருமணம் செய்தார். இவர்களு்ககு ஒரு மகன் உண்டு. சில ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்துவிட்டனர். மூன்றாவதாக தாமரைச்செல்வியை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உண்டு..!

இலட்சிய நடிகரின் மரணத்திற்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர்.

Thanks to tamilcinetalk.com

10/17/2014

பெண் - கம்ப்யூட்டர் - ஒப்பிடு










                                       
பெண்களை கம்ப்யூட்டர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யாரோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு இணையத்தில் பறக்கவிட, அது நம் கண்ணில் மாட்டியதும் 'யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற' மொழியாக்கம் செய்துவிட்டோம்... . 

இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே. 

பெண்கள் ஆண்களை விட அனேக விஷயங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பது வேறு விஷயம்! 

1)இரண்டுமே அதிகம் செலவு பிடிக்கிற சமாச்சாரங்கள், எதிர்பார்த்ததை விட.

2)கம்ப்யூட்டரும் சரி, பெண்ணும் சரி.. நீங்கள் நினைப்பது போல் நடப்பதில்லை.

3)கொஞ்சம் பழகிய பிறகு, “சரி! போ” என்று விட்டு விட முடியாது.

4)ரொம்பப் பழகிய பிறகு, ஒன்று போதாதோ என்று உங்களை சிந்திக்க வைப்பதில்தான் எத்தனை ஒற்றுமை! 

5)சில கம்ப்யூட்டர்கள் சில பெண்களைப் போல நிறைய பேருக்கு சேவை செய்யும்.

6)சரியாக அணுகத் தெரிந்தால், உங்கள் விரல்களாலே அற்புதங்கள் நிகழ்த்தலாம், இரண்டிலும்.

7)ஒரு பதினைந்து நிமிடங்கள் நீங்கள் ‘கண்டு கொள்ளவில்லை’ என்றால் இருவருமே ‘OFF’ ஆகி விடுவார்கள்.

8)திடீரென்று தடங்கல் ஏற்பட்டால், முந்தைய நிலைக்கு மறுபடி மீள்வது ரொம்பக் கடினம்.

9)நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரிதான் எல்லாம் நடக்கப்போகிறது என்று நீங்கள் உறுதியாக நம்பும்போது இருவருமே ‘ரூட்’ மாறி 
விடுவார்கள்.

10)எப்பவுமே எதிர்பாராத முடிவுகளைத் தருவார்கள் என்று மட்டும் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

11)அடுத்தவன் கம்ப்யூட்டரைப் பார்க்கும் போது ‘அடடா! நமக்கு அது போல இல்லையே!’ என்று தோன்றும். அடுத்தவன் மனைவியைப் பார்க்கும் போதும் டிட்டோ.

12)எவ்வளவுதான் மேம்படுத்தினாலும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே போய்விடுவார்கள்.

(நன்றி : இணையம்)

10/16/2014

எப்படியெல்லாம் வீணடிக்கிறோம் நாம்! - தி இந்து

எப்படியெல்லாம் வீணடிக்கிறோம் நாம்! - தி இந்து

வேலைவாய்ப்புகள் முன்னெப்போதையும் விடப் பல மடங்கு பெருகியிருந்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இது, எல்லா நாடுகளிலும் உள்ளதுதான் என்றாலும் இந்தியாவுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. 

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் வேலை தேடுவோர் எண்ணிக்கை சுமார் 11 கோடிக்கும் மேல். வேலை செய்யும் பருவத்தினரில் இந்த அளவு 15%. இந்தியக் குடும்பங்களில் சுமார் 28% வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நேரடியாகப் பாதிக்கப் பட்டுள்ளன. 15 வயது முதல் 60 வயது வரையிலான வேலை செய்யக் கூடிய பருவத்தினரில் வேலை கிடைக்காதோர் எண்ணிக்கை மட்டுமே 7.5 கோடிக்கும் மேல். இவர்கள் மொத்தம் 7 கோடி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். 

மாநிலவாரியாகப் பார்த்தால் மேற்கு வங்கம் (54%), ஜம்மு காஷ்மீர் (47%), ஜார்க்கண்ட் (42%), கேரளம் (42%), ஒடிசா (39%), அசாம் (38%) ஆகியவற்றில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம். குஜராத் (12%), மகாராஷ்டிரம் (14%), கர்நாடகம் (14%), தமிழ்நாடு (18%), ஆந்திரம் (18%) ஆகியவற்றில் குறைவு. இந்தத் தரவுகளெல்லாம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிடப் பட்டிருக்கின்றன. 

2001-ல் இதே போன்ற கணக்கெடுப்பின்போது 23% குடும்பங் களைத்தான் வேலையில்லாத் திண்டாட்டம் பாதித்திருந்தது. 2011 கணக்கெடுப்பின்படி, அந்தப் பிரச்சினை 28% குடும்பங்களைப் பாதித்திருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கவில்லை என்பது ஐமுகூ அரசுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க முக்கியமான காரணங்களுள் ஒன்று. எனவே, மத்திய அரசு உடனடியாக வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். அரசின் செலவைக் குறைக்க ஆள்குறைப்பு செய்வது, காலியிடங்களை நிரப்பாமல் பதவிகளையே காலிசெய்வது, துறை களைக் குறைப்பது, நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை சுருக்குவது போன்ற செயல்களில் இறங்கக் கூடாது. வேலைவாய்ப்பு பெருகினால் நுகர்வும் பெருகும்; அது தொழில்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை வளர்ச்சிக்கு நேரடியாக உதவும். 

கடந்த 3 ஆண்டுகளாக வேலைவாய்ப்பில் முன்னேற்றமே இல்லாமல் இருப்பதால்தான் அரசு எத்தனை சலுகைகள் தந்தாலும் உற்பத்தித்துறை மீட்சி அடையவில்லை. இப்போது விவசாயத்தில் நிரந்தர வருமானம் இல்லை, கிடைக்கும் வருமானமும் போதவில்லை என்பதால் இளைஞர்கள் கிராமங்களை விட்டு வெளியேறவே நினைக்கின்றனர். கிராமப்புறங்களில் 30% வீடுகளில் வேலை கிடைக்காதவர்கள் உள்ளனர். நகரங்களில் இதே அளவு 23% ஆக இருக்கிறது. கிராமப்புற, நகர்ப்புற வேலையில்லாத் திண்டாட்டங்களுக்கு இடையே அதிக வித்தியாசம் இருப்பது சூழலின் பேரபாயத்தை நமக்கு உணர்த்துகிறது. 

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது அந்த 11 கோடி மக்களை மட்டும் பாதிப்பதல்ல; ஒட்டுமொத்த இந்தியாவையும் பல வழிகளில் பாதிப்பது. 

பணத்தையும் தங்க நகைகளையும் வீட்டிலேயே வைத்துப் பூட்டினால் எப்படி யாருக்கும் எந்தப் பலனையும் கொடுப்பதில்லையோ அதே போல, வேலைசெய்யும் உடல் தகுதி/மனநலம் இருந்தும் சுமார் 11 கோடிப் பேருக்கு வேலைகொடுக்காமல் வைத்திருக்கிறோம். தேசத்தின் அரிய செல்வமான மனித வளத்தை எப்படியெல்லாம் வீணாக்கிக்கொண்டிருக்கிறோம் நாம்!

9/06/2014

லஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்! - சகாயம்

"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.


புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.

பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:

* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.

* கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.

* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

* சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.

* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.

* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'

நன்றி :- தினமலர்