- சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது.
- உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.
- உலக வேலைகளைச் செய்த ுகொண்டிருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்க வேண்டும். இக்கலியுகத்தில் சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை. சத்திய விரதம் என்பது சத்தியத்தையே எப்போதும் பேசுதலைக் குறிக்கின்றது. இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதலே சிறந்ததொரு தவம் ஆகிறது. ஒருவன் சத்தியத்தைக் கொண்டே கடவுளை அடையலாம்.
- எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுபவன் படிப்படியாக பாவ காரியங்களைச் செய்யக்கூடிய கீழான மனப்பான்மையைப் பெறுகின்றான்.
- அசுத்தமான மனப்பான்மை உள்ளவர்களுக்கும் ஈசனுடைய அருளுக்கும் வெகுதூரம். எளிமையும் சத்தியமும் உடையவன் ஈசனுடைய அருளை எளிதில் பெறுவான்.
- இறைவனை அடைய முயற்சி செய்யும் ஒருவன் சத்தியத்திலிருந்து சிறிதேனும் பிறழாதிருந்து பழகவேண்டும். சத்தியத்தில் நிலைத்திருப்பவனுக்கு ஈசுவரானுபூதி வாய்க்கிறது.
- முளைத்து வெளியே வந்த யானையின் தந்தம் மறுபடியும் உள்ளே போவதில்லை. ஒருமுறை வெளியே வந்தால் வந்ததுதான். அது போல ஒருவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைக்கவேண்டும். கொடுத்த வாக்கிலிருந்து அவன் விலகிச் செல்லலாகாது.-ராமகிருஷ்ண பரமஹம்சர்
மொத்தப் பக்கக்காட்சிகள்
12/24/2011
ராமகிருஷ்ண பரமஹம்சர்- பொன்மொழிகள்
இயேசுவின் மொழிகள் மனிதனை மாசுபடுத்துபவை
மனிதனை மாசுபடுத்துபவை
மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தி விடுகிறது. கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனதில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை, விபசாரம், சுயநலம், தீயச் செயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை.வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
- ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
- இம்மையில் துக்கம் அடைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தேற்றுவார்.
- பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் வாக்களித்த இடத்தை அவர்கள் பெறுவார்கள்.
- மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முழுத் திருப்தியை தேவன் அளிப்பார்.
- மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.
- தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவனின் அருகாமையிலிருபார்கள்.
- அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார்.
- நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக ராஜ்யம் அவர்களுக்குரியது.
- உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதனிமித்தம் எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கெதிராகச் சொல்வார்கள். ஆனால் மக்கள் உங்களுக்கு அவற்றைச் செய்யும் பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். தேவனுடைய வெகுமதி உங்களுக்கு காத்திருக்கிறது.
தட்டுங்கள் திறக்கப்படும்
தொடர்ந்து கேட்டுக் கொண்டிருங்கள். தேவன் உங்களுக்குக் கொடுப்பார். தேடிக் கொண்டே இருங்கள். நீங்கள் தேடியதைக் கண்டறிவீர்கள். தொடர்ந்து தட்டிக் கொண்டே இருங்கள். கதவு உங்களுக்காகத் திறக்கப்படும். ஆம், ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக் கொள்வான். ஒரு மனிதன் தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான். ஒரு மனிதன் தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.
அனைவரையும் நேசியுங்கள்
உங்களை நேசிக்கிறவர்களை மட்டும் நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களை விட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.
மெய்வாழ்வுக்கான வாசல்
பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில், நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். ஆனால், மெய்யான வாழ்விற்கு வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டறிகிறார்கள்.
காந்தியடிகள் பொன்மொழிகள்
- பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.
- கடமையை முன்னிட்டு செய்தசெயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
- தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
- தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.
- பாமர மக்களுக்குத் தேவையானது உணவு ஒன்று மட்டுமே.
- மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
- கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியானகுருடன்.
- மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.
- உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.
- சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாகஇருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.
- செல்வம், குடும்பம், உடம்முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்குடமில்லாமல்போய்விடுகிறது.
- மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.
- சுதந்திரமாக வாழ்வது மனிதனின் உரிமை. அதுபோலவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்வது அவன் கடமை.
- எல்லாக் கலைகளையும் விட வாழ்வுக்கலை ஒன்றே பெரிது.
- நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.
- தீமை வேறு, தீமை செய்பவன் வேறு என்ற பாகுபாட்டை ஒரு போதும் மறக்கக் கூடாது.
- பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.
- கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.
- ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
- உயர்ந்த எண்ணங்களைய உடையவர் ஒருநாளும் தனித்தவராகார்.
- எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
- மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.
- கோபமோ, குரோதமோ இல்லாமல் துன்பத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வது உதயசூரியனுக்கு ஒப்பாகும்.
- பயத்தினால் பீடிக்கப்பட்ட மனிதன் கடவுளை ஒருநாளும் அறிய முடியாது.
தந்தை பெரியார் பொன்மொழிகள்!
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
விதியை நம்பி மதியை இழக்காதே.
மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
மற்றவர்களிடம் பழகும் வித்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்
வாரியார் சொன்ன கருத்துக்கள்
தருக்கு கூடாது
"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும்.
கடவுளைக் காண
புறப்பற்றும் அகப்பற்றும் நீங்கப் பெறாதவர்கள் எத்தனை கோடி காலம் தவம் கிடந்தாலும் கடவுளைக் காண முடியாது. யான், எனது என்னும் பற்று அறுக்காதவரை ஈன சமயத்தார் என்கின்றார் அருணகிரிநாதர். இந்தப் பற்றுகள் இரண்டும் நீங்குவதற்கு உபாயம் பற்றற்ற பரமனை வழிபடுவதேயாகும்.
பிறவிப் பிணியை அகற்ற
பிறருடைய உடமையோ, உயிருள்ளவையோ நமக்கு எட்டாக்கனி போல் கசக்க வேண்டும். பிறர் பொருளை விரும்புதல் கூடாது. பிறகு தன் பொருளில் வைக்கும் பற்றையும் அறவே அகற்ற வேண்டும். இதுதான் பிறவிப்பிணியை மாற்றும் மார்க்கமாகும்.
மெய்ஞானம் தலைப்பட
நான், நான் என்ற எண்ணம் தான் அகப்பற்று என்பது. நான் செய்தேன், நான் சம்பாதித்தேன், நான் எல்லோரையும் காப்பாற்றினேன், நான் மிகவும் சமர்த்தன் என்ற எண்ணங்களை அடியோடு தொலைக்க வேண்டும். இந்த நான் என்கிற எண்ணம் என்று நீங்குகிறதோ, அன்றே மெஞ்ஞானம் தலைப்படும். நான் என்ற எண்ணம் கெட்டழிந்தவுடனே, துன்பம் முழுவதும் நீங்கப்பெற்று, அருட்பெருஞ்சோதி தரிசனம் உண்டாகும். ஆனந்தம் உண்டாகும். என்றுமழியா இன்பம் தோன்றும்.

அரியதை சாதிக்க
நீ எப்போதும் பெரியோரைத் துணைக்கொள். கல்லின் தன்மை தண்ணீரில் மூழ்கிவிடுவது. கட்டையின் தன்மை தண்ணீரில் மிதப்பது. சிறிய கல்லோ, பெரிய கல்லோ தண்ணீரில் போட்டால் தண்ணீருக்குள் மூழ்கி அமிழ்ந்துவிடும். ஆனால் ஒரு கல்லைப் படகு மேல் வைத்தால் அந்தக் கல் தண்ணீரில் மிதந்து செல்கிறது. அதுபோல் அறிவாற்றலால் ஆன்ற பெரியோர்களை நீ அடுப்பாயானால் உனது அறிவாற்றலுக்கு இயலாத பெரிய கருமங்களை நீ செய்து முடிப்பாய்.
படுக்கும் போது
நீ இரவில் படுக்கும் போது, நான் இன்று காலை கண் விழித்து எழுந்தது முதல் இப்போது கண் உறங்கப் படுக்கும் இதுவரை என்ன என்ன நன்மைகள் புரிந்தேன்? என்னால் இன்று யாருக்கு என்ன பயன் உண்டாகியது? மனதாலே, வாக்காலே, காயத்தாலே நான் இன்று செய்த நலங்கள் யாவை? என்று எண்ணுவாயாக.
பெரிய இன்பம்
இன்பங்களுக்கெல்லாம் பெரிய இன்பமாவது அறிஞர்களோடு பழகுவதேயாகும். அறிஞரோடு பழகும்போது உண்டாகும் இன்பம் இமையவர் உலகத்திலுமில்லை. மொழிக்கு மொழி தித்திக்கும் இனிய அறிவுரைகளும் அறிஞரிடம் உண்டாகின்றன. அவற்றால் உன் உள்ளம், உயிர், உணர்ச்சி ஆகிய அனைத்தும் குளிரும்.
கற்றவாறு ஒழுகு
நிரம்பவும் படிப்பதைவிட படித்தபடி நின்று ஒழுகுவதற்கு முயற்சி செய். படிப்பது உணவு உண்பது போலே, படித்தபடி ஒழுகுவது உணவு செரிப்பது (ஜீரணமாவது) போலே. உணவு நிரம்ப உண்டாலும் செரிக்கவில்லை யானால் என்ன பயன்? செரிக்காத உணவு துன்பம் செய்கின்ற தன்றோ? ஆதலினால் சிறிது கற்றாலும் கற்ற வண்ணம் நிற்க வேண்டும். "ஓதலின் நன்று ஒழுக்கமுடைமை."
ஆன்றோர் துணை
அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த ஆன்றோர்களைத் துணையாகக் கொண்டு ஒழுகு. அதனால் உனது வாழ்வு உயர்ச்சி உறும். துன்பத்தில் அழுந்த மாட்டாய். கொடியானது உயர்ந்த மரத்தைப் பற்றிச் சுற்றிக் கொள்வதனால் வானம் நோக்கி உயர்கிறது. இல்லையேல் மண்ணில் படர்ந்து காலினால் மிதிபடுகிறது.
இன்றே தருமம் செய்
பின்புறத்திலேயே கூற்றுவன் நிற்கிறான். அவன் எந்த நிமிடத்தில் உயிரைப் பற்றுவானோ தெரியாது. வாழ்க்கையோ நிலையற்றது. நீர் மேல் குமிழிக்கு நிகரானது. "இன்றைக்கோ, நாளைக்கோ, இன்னும் அரை நாழிகைக்கோ, என்றைக்கோ ஆவியிழப்பு" என்ற முதுமொழியினை நினைந்து தீயவைகளை விட்டு இயன்ற அளவில் தருமம் புரிதல் வேண்டும்.
இறைவனை நோவாதே
இறைவன் பாராட்சமில்லாதவன். விருப்பு வெறுப்பு இல்லாதவன். தன்னருள் புரியும் தயாநிதி. மாம்பழங்களை அதிகம் உண்டவனுக்கு வயிற்றுவலி உண்டாகும். அவரவர் செய்த வினைகளை அவரவர் அனுபவித்தே தீரவேண்டும். நாம் செய்த வினைப்பயனை நாம் நுகர்வது முறைதானே. துன்பங்கள் நேரும்போது, நாம் செய்த வினையையும் நம்மையும் நோவதன்றி இறைவனையும் பிறரையும் நோவக்கூடாது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)