மொத்தப் பக்கக்காட்சிகள்

11/08/2011

கல்யாணத்துக்கு ஏன் உன் மனைவி வரலை? சிறுகதை

"என்னங்க இது... திடீர்னு இப்படிச் சொன்னா எப்படி? நேத்து வரை ஜனார்த்தனன் பொண்ணு கல்யாணத்துக்கு நாம ரெண்டு பெறும் போகிறதாதானே இருந்தது? இப்ப திடீர்னு நீங்க மட்டும் போறதா சொல்றீங்களே?" ஏமாற்றத்துடன் கணவன் கணேசனிடம் கேட்டாள்.


"இல்ல மீனா, எனக்கு மதுரைல திடீர்னு இன்ஸ்பெக் ஷன் போட்டுட்டாங்க. கல்யாணத்துல தலைய காட்டிட்டு அப்படியே டிரெயின் எறிடறேன்!"


"என்னமோ போங்க. கல்யாணத்துக்குன்னு புதுசா புடவைலேர்ந்து சகலமும் வாங்கியிருந்தேன். ம்... ஏமாற்றத்துடன் சமையலறைக்குள் புகுந்தாள் மீனாட்சி.


திருமண மண்டபத்தில்...


"என்னடா நீ மட்டும் வந்திருக்க? உன் மனைவியையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமே?" கேட்ட ஜனார்த்தனனை ஓரமாக அழைத்துச் சென்றான் கணேசன்.


"பத்து நாளைக்கு முன்னாடி உன் வீட்டுக்கு வந்திருந்தப்ப என்ன சொன்ன? உன் பெண்ணுக்கு சீர் கொடுக்கப் போற பீரோ,கட்டில்,மெத்தை,மைக்ரோவேவ் அவன், கிரைண்டர், வாஷிங்மெஷின், பாத்திரங்கள்,புத்தம் புது கார்... எல்லாத்தையும் கல்யாண மண்டபத்துல காட்சிக்கு வைக்கப் போறேன்னு சொன்னல்ல? அதனாலதான் என் பெண்டாட்டிய கூட்டிட்டு வரலை..."


"என்னடா சொல்ற?"


"பின்னே என்னடா... என் பையனுக்கு வரன் பேசி முடிச்சிருக்கேன். சீர் பத்தி பேச அடுத்த வாரம் அவங்க வீட்டுக்குப் போறோம். இந்த நேரத்துல நீ ஷோவுக்கு வச்சிருக்கற சீரை என் பெண்டாட்டி பார்த்தா, அவளுக்கும் இதெல்லாம் வேணும்னு ஆசை வந்துடாதா? அதனாலதான் அவள கூட்டிட்டு வரலை!" என்றான் கணேசன்.




"சிறியவர்களுடன் பழகினால் மனது இளமையாகும்! பெரியவர்களுடன் பழகினால் அறிவு விருத்தியாகும்

திடம் (சிறுகதை)

 

"மூணாவதும் பெண்ணா? கள்ளிப்பால் கொடுக்கற குருவம்மாவுக்கு சொல்லிவிட்ர வேண்டியதுதான்."

டவுன் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை வந்து பார்த்துவிட்டு மாமியார்க்காரி சொல்லிவிட்டுப் போனது செல்லம்மாவின் காதுகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தது .

பாவி கட்டின புருஷனும் இல்லே இதுக்கு தலையாட்டறான்.

நினைக்க நினைக்க ஆத்திரம் பொங்கியது அவளுக்குள் .
டிஸ்சார்ஜ் ஆகி புருஷனுடன் கிராமத்துக்கு திரும்ப பஸ் ஸ்டாண்டில் நின்றபோது...

ஒரு கடையின் ஓரத்திலிருந்த வண்ண மீன்கள் கண்ணாடித் தொட்டியை கவனித்தாள்.

தன் குட்டிகளுக்கு பின்னால் வாயைத்திறந்துகொண்டே நீந்திக்கொண்டிருந்தது அந்த ஜிலேபி கெண்டை மீன். கெளுத்தி மீன் ஒன்று குட்டிகளை விழுங்க வர, என்ன ஆச்சரியம்! அத்தனை குட்டிகளும் தாயின் வாய்க்குள் புகுந்து கொள்ள டப்பென்று வாயை மூடிவிட்டு ஆபத்து நீங்கியதும் வாயைத் திறக்க குட்டிகள் வெளியேறி மீண்டும் நீந்தத் தொடங்கின.

" சே! ஐந்தறிவுள்ள மீனே தன் குட்டிகளை காப்பாத்திக்க வழிகளை தெரிஞ்சு வச்சிருக்கச்சே ஆறறிவுள்ள தன்னால் குழந்தைகளை காப்பாத்த முடியாதா ?"

புருஷனிடம் சொன்னாள் உறுதியாக. "யோவ் இந்தக் குழந்தையை கொல்லாம வச்சுக் காப்பாத்துவேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்தாத்தான் உன்னோட பஸ்ல வருவேன். இல்லாட்டி என் ஊருக்கு போய்க்கிறேன். ஊர்ல இருக்கற மத்த ரெண்டு பொட்டப் புள்ளைங்களையும் கூட என்னிடமே கொண்டு வந்து விட்டுடு. எப்பாடு பட்டாவது காப்பாதிக்கறேன்."

மறுபக்கம் சிறுகதை

 

" இந்திரா நீ இன்னும் ரெடியாகலியா? நேரம் ஆயிட்டிருக்கு சீக்கிரம் கிளம்பு, கோயில்ல எல்லோரும் காத்துக்கிட்டிருக்காங்க. உன்னை அழைச்சுக்கிட்டுப் போகத்தான் வந்தேன்"... அவசரப்படுத்தினான் மகேஷ்.


கோயிலில் அலங்காரம் முடிந்து கல்யாணப் பெண்ணாக மாறியிருந்த இந்திரா சுவாமி சன்னதியின் எதிரே மணமகனுடன் நின்ற போது தரிசனத்துக்காக வந்திருந்த அனைவரின் கண்களும் இருவரையும் மொய்த்தன. இந்திராவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.


இருவரும் மாலை மாற்றிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்வதை 'மறுபக்கம்' சீரியலுக்காக பல கோணங்களில் பதிவு செய்தார் வீடியோ கேமராமேன். எல்லா ஷாட்டும் முடிந்து பேக்கப் சொன்னதும் இந்திராவை ஆட்டோவில் ஏற்றி ... அவள் கையில் பணத்தை திணித்தான் மகேஷ்.


"உன்னோட கவலை எனக்குப் புரியுது இந்திரா. நடிக்க நீ சான்ஸ் தேடி அலைஞ்சப்பல்லாம் விதவைப் பெண் வேஷம். போன மாசம் உன் கணவர் இறந்த நிலையில் சர்வ அலங்காரத்தோட இன்று மணப்பெண் வேஷம். இன்னிக்கு கிடைச்ச பணம் குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்கு சரியா இருக்கும். நாளைக்கு இதே சீனோட கன்டினியூட்டி இருக்கு, ஆட்டோ பிடிச்சு வந்துடு."


அவளின் அழுகைச் சத்தம் ஆட்டோ சத்தத்தில் கரைந்து போனது.

Politician

¡÷ ¡÷ ±øÄ¡õ «Ãº¢ÂÖìÌ ÅçÅñÎõ?
 
¯Ä¸ò¾¢ø ÁÉ¢¾É¡¸ À¢Èó¾ «¨ÉÅÕõ ÁÉ¢¾÷ «øÄ.
 
±Åý ´ÕÅý ÁüÈÅÕìÌ ¯¼Ä¡Öõ ¯ûÇò¾¡Öõ ¾£íÌ þ¨Ç측Áø þÕ¸¢ýÈ¡§Ã¡ «Å§Ã ¯ñ¨ÁÂ¡É ÁÉ¢¾÷.
 
¿ýÌ ÀÊò¾ÅÕõ, ÁÉ¢¾ ÀñÒ ¯ûÇÅÕõ, §º¨Å ÁÉôÀ¡ý¨Á ¦¸¡ñ¼ÅÕõ, +

°Æø «üÈ  ¦¸¡û¨¸¸¨Ç  ¦¸¡ñ¼ÅÕõ,


¾ýɼì¸õ ¯¨¼ÂÅÕõ, ¾É¢ÁÉ¢¾ ´Æì¸õ ¯¨¼ÂÅÕõ, ÁüÈÅÕ측¸ ÁðΧÁ Å¡Æ           Å¢ÕõÒõ µÕÅ÷, ÍÕí¸ ÜÈ¢ý À¢È÷ ¿Äý §ÀÏÀŧà «Ãº¢ÂÖìÌ ÅçÅñÎõ

தீபாவளி திரைப்படங்கள் - ஸ்பெஷல்

Friday, October 14, 2011

தீபாவளி திரைப்படங்கள் - ஸ்பெஷல்





வருகின்ற 26 ஆம் திகதி தீபாவளி திருநாளில் தமிழ் திரையரங்குகளுக்கு புதிதாக களமிறங்க 7ஆம் அறிவு, வேலாயுதம், ரா-ஒன் திரைப்படங்கள் தயாராக உள்ளன. இவற்றில் ரா-ஒன் மற்றும் 7ஆம் அறிவு திரைப்படங்கள் தீபாவளியன்று வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது; வேலாயுதம் உறுதி செய்யப்படவில்லை ஆயினும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் என்பதால் எப்படியாயினும் வெளிவரும் என்று நம்பப்படுகின்றது. தீபாவளிக்கு வெளிவருமென்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சிம்பு, தரணி கூட்டணியின் 'ஒஸ்தி'யும்; செல்வராகவன், தனுஸ் கூட்டணியில் 'மயக்கம் என்ன'வும் திரையரங்குகளின் போதாமையாலும், மேற்கூறிய திரைப்படங்களின் போட்டிப் பயத்தினாலும் பின்வாங்கியுள்ளன.

இந்த இரு திரைப்படங்களும் (ஒஸ்தி, மயக்கம் என்ன) 11-11-11 என்னும் வரலாற்றுப் புகழ் மிக்க நாளில் வெளிவரப்போவதாக சினிமா செய்திகள் கூறுகின்றன. அப்படி வெளிவரும் பட்சத்தில் 2004 ஆம் ஆண்டிற்கு பின்னர் சிம்பு, தனுஸ் திரைப்படங்கள் ஒன்றாக வெளிவரும் சந்தர்ப்பமாக இது அமையும். இதற்கு முன்னர் கடைசியாக 2004 இல் சிம்புவின் மன்மதனும் தனுஸின் ட்ரீம்ஸ் திரைப்படமும் ஒரே நாளில் வெளிவந்தன ; அந்த போட்டியில் சிம்பு ஜெயித்தற்கான பதிலடியை'மயக்கம் என்ன'மூலம் தனுஷ் சிம்புவுக்கு கொடுப்பாரா? அல்லது சிம்பு மீண்டும் தனது வெற்றியை 'ஒஸ்தி' மூலம் தக்கவைப்பாரா! என்கின்ற சுவாரசியம் 11-11-11 அன்று தெரிந்துவிடும்!!!



தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் திரைப்படங்களை நோக்கினால்; அதிக எதிர்பார்ப்புள்ள படம் என்னவோ 7 ஆம் அறிவுதான். தீனா, ரமணா, கஜினி என மூன்று மெகா ஹிட் திரைப்படங்களுக்கு பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதால் மாபெரும் எதிர்பார்ப்பு 7 ஆம் அறிவுக்கு இருக்கும் அதே நேரத்தில்; இன்றைய முன்னணி நாயகர்களில் அண்மைக்காலத்தில் அதிகளவு வெற்றிப்படங்களை கொடுத்தவர்களில் முன்னணியில் இருக்கும் சூரியாமீதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருப்பது 7 ஆம் அறிவுக்கு மிகப்பெரும் பலம். அத்துடன் உலகநாயகன் புதல்வியின் தமிழ் அறிமுகமாக 7 ஆம் அறிவு இருப்பதுவும் கூடுதல்ப்பலம். இவற்றைவிட படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமையவேண்டிய ஹாரிஸின் பாடல்கள் சொதப்பியது 7 ஆம் அறிவின் எதிர்பார்ப்பில் சிறு பின்னடைவு.

தமிழர்களின் பெருமையை உலகறிய செய்கின்றேன் என முருகதாஸ் கையில் எடுத்திருக்கும் போதிதர்மன் கதை தமிழ் ரசிகர்களுக்கு புதிதுதான் என்றாலும் எந்தளவிற்கு அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். படத்தின் ட்ரெயிலரை பார்க்கும்போது நிறைய இடங்களில் மக்கள் நம்பும்படியாக லாஜிக் இருக்குமா என்கின்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. 7 ஆம் அறிவை பொறுத்தவரை 'படம் விஷுவலாக பக்கா பிரமாதமாக இருக்கும் என்பதை மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும்; ரவி k சந்திரனின் ஒளிப்பதிவு 100% 7 ஆம் அறிவின் விஷுவலை திருப்திப்படுத்தும் என்று நம்பலாம்.



படத்தில் சரக்கு கம்மியாக இருந்தாலும் பிரம்மாண்டம் என்கின்ற விடயத்தை வைத்து எப்படியும் முதலுக்கு சேதாரமில்லாமல் ஓட்டிவிடுவார்கள்; அதேநேரம் படம் பிரம்மாதமாக அமைந்துவிட்டால் வசூலில் அனல் பறக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம் தொலைக்காட்சிகளில் ஏ.ஆர்.முருகதாசும், சூர்யாவும் பண்ணப்போகும் ப்ரோமொஷனை நினைத்தால் இப்பவே கண்ணை கட்டுது; அதிலும் முருகதாஸ் 'அவித்த மீன் துடிக்குது' என்கின்ற ரேஞ்சில விடுற பீலாக்கள் ரொம்ப கொடுமையாய் இருக்கும் (கஜினி ரிலீஸ் சமயம் சண் டிவில முருகதாஸ் பண்ணின அலப்பறைய இப்ப நினைச்சாலும் பீதியாயிருக்கும் :-) )

அடுத்து தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் மற்றுமொரு முக்கிய திரைப்படம் வேலாயுதம்; ஆக்ஷன் ஹீரோவாக ஐந்து தொடர் தோல்விகளுக்கு பின்னர் காவலன் என்கின்ற ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படத்தில் நடித்த பிற்ப்பாடு விஜய் நடிக்கும் ஆக்ஷன் திரைப்படம்தான் வேலாயுதம். முதல் நான்கு ரீ-மேக் திரைப்படங்களையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்த ராஜாவுக்கு இறுதியாக இயக்கிய தில்லாலங்கடி காலை வாரினாலும் வேலாயுதம் முதல் முதலாக நேரடியாக இயக்கும் (?) திரைப்படம் என்பதால் எப்படி இருக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை. படத்தின் ட்ரெயிலரில் சாதாரண தோற்றத்தில் விஜய் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு ஜனரஞ்சகமாகவும், சுப்பர் ஹீரோ தோற்றத்தில் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு செம காமடியாகவும் உள்ளன.



வழக்கமாக விஜய் படங்கள் ரிலீசிர்க்கு முன்னமே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகிவிடும், அதே வரிசையில் வேலாயுதம் பாடல்கள் மிகவும் பிரபலமாகியமை அதன் பிளஸ் பாயின்ட். விஜய் ரசிகர்களின் அமோக ஓப்பினிங் வேலாயுதத்திற்கு மிகப்பெரும் பலமாக அமையும் அதேநேரம், அந்த ஓப்பினிங்கை தக்கவைத்துக் கொள்வது வேலாயுதத்தின் திரைக்கதை கைகளில்த்தான் உள்ளது. ரீ- மேக்குகளை தமிழுக்கு ஏற்றால்ப்போல சூப்பராக திரைக்கதையமைக்கும் ராஜா (தில்லாலங்கடி தவிர்த்து) திரைக்கதையில் மாஜிக் செய்துள்ளாரா! இல்லை லாஜிக் மீறல் செய்துள்ளாரா! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்விரு திரைப்படங்களுக்கும் புதிதாக தோன்றியிருக்கும் தலையிடிதான் ரா-ஒன். நேரடி தமிழ்ப் படமல்லாத ஒரு டப்பிங் படம் முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலையில் ஒரு தீபாவளி என்றால் அது இம்முறைதான். ஷாருக்கான் கரீனா கபூர் நடித்திருக்கும் ரா-ஒன் என்னும் ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் டப்பிங்கை முன்னெப்போது மில்லாதவாறு மிகமிக அதிகளவு திரையரங்குகளில் ரிலீஸ் செய்கிறார்கள். தமிழ் திரைத்துறையின் முன்னணி வினியோகிஸ்தர் அபிராமி ராமநாதன் சென்னையில் மட்டும் 20 திரையரங்குகளில் வெளியிடுகின்றார் (முதல் முதலில் 20 க்கு மேற்ப்பட்ட திரையரங்குகளில் சென்னையில் வெளியான திரைப்படம் சிவாஜி)



அப்படி என்ன ஒரு ஈர்ப்பு ரா-ஒன் மீது ? காரணம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை; ரஜினி ரஜினி ரஜினி....... ரஜினியின் முகத்தை புகைப்படத்தில் காணவே காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ரஜினி ஓரிரு நிமிடங்கள் திரையில் வருகிறார் என்பது தெரிந்தால் சும்மா இருப்பார்களா? சும்மாவே ஆடுவார்கள், இப்போது காலில் சலங்கை வேறு கட்டப்பட்டுள்ளது, விளைவு??? தீபாவளியன்று தெரியும் :-) தெற்கிலே தமிழகம், கர்நாடகா, கேராளாவிற்கு ரஜினி என்னும் மந்திரம் போதும் ஓப்பினிங்கை அள்ளிக்கொட்ட!!! ஆனால் படம் வெற்றி பெறுமா இல்லையா என்பது ரா-ஒன்னின் திரைக்கதையில்த்தான் தங்கியுள்ளது.

இதற்கு முன்னரும் ஒரே சமயத்தில் ஷாருக்ஹான் (நேரேடி), விஜய், சூர்யா படங்கள் மோதியுள்ளன. 2007 தீபாவளிக்கு வெளிவந்த விஜயின் அழகிய தமிழ் மகன், சூர்யாவின் வேல், ஷாருக்கின் ஓம் ஷாந்தி ஓம், தனுஸின் பொல்லாதவன் திரைப்படங்கள் மோதின. இந்த போட்டியில் ஷாருக்கின் ஓம் ஷாந்தி ஓம் தமிழகம் மற்றும் தெற்கில் வசூலில் களை கட்டாவிட்டாலும் ஹிந்தியில் சக்கைபோடு போட்டது. இந்த போட்டியில் தமிழகத்தில் சூர்யாவின் வேலும் தனுஸின் பொல்லாதவனும் வெற்றி பெற்றது. இப்போது மீண்டும் மூவரும் மோதுவதற்கு தயார் (தனுஸ் கடைசி நேரத்தில் மிஸ்ஸிங்) இந்த தடவை விஜய் பழிவாங்குகிறாரா? இல்லை சூர்யா தன் வெற்றியை தக்கவைத்துக் கொள்கிறாரா? ஷாருக்கான் தமிழ் சினிமாவில் தனக்கென(?) ஒரு இடத்தை பெற்றுக் கொள்கிறாரா ? இப்படியான கேள்விகளுக்கான பதில் இன்னும் 10 நாட்களில் தெரிந்து விடும்........



ஐப்பசி 26 & கார்த்திகை 11 இரண்டு நாட்களுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனால் போட்டிபோடும் முன்னணி நடிகர்களுக்கும் அவர்தம் ரசிகர்களுக்கும் சங்கடம்தான் :-) என்னதான் ரஜினி ரா-ஒன்னில் நடித்திருந்தாலும் எனக்கென்னமோ எதிர்பார்ப்பு 'மயக்கம் என்ன' மீதுதான், காரணம் செல்வராகவன் & பாடல்கள். ஆனாலும் ரா-ஒன் மீது எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை, ஒரு நிமிடமோ ஒரு செக்கனோ! தலைவரை காண கசக்குமா என்ன?? அனால் இங்கு (யாழ்ப்பாணம்) எந்த திரையரங்கிலும் ரா-ஒன் திரையிடப்படும் சாத்தியம் இல்லை, ஆகவே ஒரிஜினல் DVDக்காக காத்திருக்க வேண்டியதுதான்