மொத்தப் பக்கக்காட்சிகள்

11/07/2011

சந்தோஷத்திற்குகான வழி.


  வெற்றியை தேட எவ்வளவோ வழிகள் இருக்கிறது ஆனால் சந்தோஷத்தை தேட என்னதான் வழி? அது வெளியில் எங்கும் இல்லை வெளியில் தேடினாலும் கிடைக்காது. அது நமக்குள்தான் இருக்கிறது

 நமக்குள் இருந்துதான் அது மலர வேண்டும். நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக்கொள்ள ஏதேனும் வழிகள் உண்டா? ஆம் இதற்காகவேண்டியே ஒரு புத்தகம் இருக்கிறது, நாமாக சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொள்வது எப்படி என்பதை மிக அழகாக விபரிக்கிறது The way to happiness என்ற புத்தகம். 21 வழிமுறைகளை சொல்லி அவைதான் சந்தோஷத்தின் அடிப்படை வழிகள்,அவற்றை பின்பற்றினால் சந்தோஷம் நிச்சயம் என்கிறது.

இப்புத்தகம் 1980 ம் ஆண்டு Ron Hubbard என்பவரால எழுதப்பட்டது இது உலகம் முழுக்க 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது ( இது கிண்ணஸ் சாதனையும் கூட) அப்படி அந்த புத்தகம் கூறும் 21 வழிமுறைகள் என்னவென்று சுருக்கமாக பார்ப்போம்


1. எப்போதும் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள், சுகாதாரமாக உடல் நலத்தை பேனிக்கொள்ளுங்கள். நேரத்து உணவு,தூக்கம்


2. மனதை கட்டுப்படுத்த பழகுங்கள், உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள் பின் விளைவுகளை சிந்தியுங்கள்


3. உங்கள் மனைவிக்கு அல்லது உறவுகளுக்கு, நண்பர்களுக்கு விசுவாசமாகயிருங்கள்


4. கொஞ்சமாவது குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள். உங்கள் வயசு எதுவானாலும் சரி


5. பெற்றோரை மதியுங்கள் அவர்களுக்குரிய உதவிகளை செய்யுங்கள்.

6. மற்றவர்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஓர் நல்ல முன்னுதாரணமாய் விளங்குங்கள்.


7. உண்மையே பேசுங்கள், அது எவ்வளவு கசப்பானாலும் பரவாயில்லை
8. யாரையும் கொல்லவோ காயப்படுத்தவோ செய்யாதீர்கள், வார்த்தைகளால்கூட!


9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எந்த இலாபம் வந்தாலும் சரி!


10. சமூகத்திற்கு அரசாங்கத்திற்கு நல்ல விடயங்களை செய்யுங்கள், அல்லது முயற்சியாவது எடுங்கள்.


11. ஒரு செய்யும் நல்ல விடயங்களை தட்டிக்கொடுங்கள் கெடுத்துவிடாதீர்கள்
12. உங்கள் சுற்றுச்சூழலை அழகாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருங்கள்.

13. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதீர்கள்,திருடாதீர்கள்!


14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராகயிருங்கள்.

15. ஒப்பந்தங்களை மீறாதீர்கள்,கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள்.

16. சோம்பேறியாக சும்ம இருக்காதீர்கள்,ஏதாவது வேலை செய்யுங்கள்


17. கல்வி என்பது முடிவில்லாதது எப்போதும் கற்றுக்கொண்டேயிருங்கள்.

18. மற்றவர்களின் மத உணர்வுகளை மதியுங்கள் கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று
நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்கு செய்யதீர்கள்


20. அதேபோன்று, அவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் அவர்களையும் நடத்துங்கள்.


21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது எதுவுமில்லையென்று கவலைப்படாதீர்கள்.

அண்டைவீட்டுக்காரர்கள்



சிரிப்பு
ஏழைகளின்
மறந்து போன
சின்ன வயசு ஞாபகம்!

மழை
வானிலிருந்து விழும்
விவசாயிகளின்
உணவுப்பருக்கை!

ஊழல்
தினமும்
பழகிப்போன
பத்திரிகைச்செய்தி!

பொம்மை
குழந்தைக்கு கொடுக்காமல்
அலமாரியில் வைக்கப்படும்
காட்சிப்பொருள்!

வரலாறு
இடப்பற்றாக்குறையால்
தூக்கியெறியப்படும்
பழைய புத்தகங்கள்!

கனவு
வெறுப்பவனுக்கும்
தினிக்கப்படும்
இலவச சினிமா!

அண்டைவீட்டுக்காரர்கள்
உயர்ந்த மதில்களால்
மறைக்கப்பட்ட
முகம் தெரியாதோர்!

தாய்மடி
சொர்க்கத்தில்
வாழ்ந்து வந்த
பொற்காலம்!

பணம்
மனிதனை அழிக்க
கண்டுபிடிக்கப்பட்ட
முதல் ஆயுதம்!

ஆசை
மனித இனத்தின்
அழிவின்
ஆரம்பம்!

தந்தையே உன்னை போற்றுகிறோம்...!

 



தந்தையே
உன் வயிற்றில்
சுமக்காவிட்டாலும்
காலமெல்லாம்
சுமந்தாய்
உன் நெஞ்சினில்..
கருவறை
மட்டும்தான்
உனக்கில்லை
தாயென்று சொல்ல
உன்னை..
உன்னை மறந்தாய்
உறக்கம் தொலைத்தாய்
உழைத்தாய்
கலைத்தாய்
வேர்வையில்
குளித்தாய்
நாங்கள் வாழவே
நலமாய்...
வலிகள்
எம்மைத்தாக்கினால்
வலிப்பதென்னவோ
உனக்கல்லவா..
துயரங்களால்
எம் விழி
நனைந்தால்
துடைப்பது
உன் விரல்களல்லவா..
சோதனையானாலும்
வேதனையானாலும்
தோல் கொடுக்கும்
தோழன்
நீயல்லவா...
உன்னைப்போற்ற
ஓர் நாள்
மட்டும் போதுமா...
அனுதினமும்
போற்றப்படவேண்டும்
உன் புகழ்
பூவுலகம்
வாழும் காலம் வரை...!

அலைபாயும் மனது...!!

அமைதி வேண்டி

அமர்ந்து செய்த
 

அய்ந்து நிமிட தியானத்தில்...
 

அலைபாயும் மனது...!!

பையன் நல்லா பரிட்சை எழுதுவானா..?
 

பஸ்சுல உக்கார எடம் கெடைக்குமா...?
 

பாஸு தாளிக்காம இருப்பாரா...?
 

பெண்டிங் வேலைய முடிச்சு போடணும்..!
 

மழை வரும்போல இருக்கே...!
 

வெங்காய வாசன தூக்குதே...!
 

என்ன கவிதை எழுதுறது ...?
 

வீக் எண்ட் எங்க போலாம்...?
 

அம்மாடி, மணியாச்சே!

 

அமைதி வேண்டி
 

அமர்ந்து செய்த
 

அய்ந்து நிமிட தியானத்தில்...
 

அலைபாயும் மனது...!!

ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?
ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.
ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.
ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.
ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.
கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?
கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.
ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?
நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.
ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?
வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.
யார் ரத்த தானம் செய்யக்கூடாது?
உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.
மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?
இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.
தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?
புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.
ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?
நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.
ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?
ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.