மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

கண்ணிவெடி தாக்குதலிருந்து சேதாரமின்றி தப்பிக்கும் மஹிந்திரா ராணுவ டிரக்

ராஞ்சி: கண்ணிவெடி தாக்குதலிருந்து சிறிதும் சேதாரம் இல்லாமல் தப்பிக்கும், புதிய ராணுவ கவச வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் தயாரித்துள்ளது. விசேஷம் அம்சங்கள் கொண்ட கவச வாகனம் சமீபத்தில் ஜார்கண்ட் போலீசார் வசம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராக திகழும் மஹிந்திரா நிறுவனமும், ராணுவத்திற்கான பாதுகாப்பு கருவிகள் தயாரிப்பில் சர்வதேச புகழ்பெற்ற பிஏஇ நிறுவனமும் இணைந்து டிஃபென்ஸ் லேண்ட் சிஸ்ட்ம்ஸ் இண்டியா(டிஎல்எஸ்ஐ) என்ற பெயரில் கூட்டுகுழுமத்தை ஏற்படுத்தியுள்ளன.

கண்ணிவெடி தாக்குதல் உள்பட அனைத்து விதமான தாக்தல்களிலிருந்தும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரின் உயிரை காக்கும் விதத்தில, அதிநவீன தொழில்நுட்பமும், வடிவமைப்பும் கொண்ட புதிய கவச வாகனத்தை டிஎல்எஸ்ஐ தயாரித்துள்ளது. v- வடிவ பிரத்யேக சேஸிஸ் கொண்ட இந்த கவச வாகனம் கண்ணிவெடி தாக்குதலிருந்து சிறிதும் சேதாரம் இல்லாமல் தப்பிக்கும் வசதிகொண்டது.

எம்பிவி-1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கவச வாகனம் பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. பரீதாபாத், பல்வாலிலுள்ள நவீன தொழிற்சாலையில் இந்த டிரக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 6 எம்பிவி வாகனங்களை தயாரித்து வழங்குமாறு ஜார்கண்ட போலீசார் ஆர்டர் கொடுத்திருந்தனர்.

இதில், முதலாவதாக தயாரிக்கப்பட்ட எம்பிவி-1 கவச வாகனம் சமீபத்தில் ஜார்கண்ட் போலீசார் வசம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. டிஎல்எஸ்ஐ தலைவர் பிரிக் குதூப் ஹாய் எம்பிவி-1 கவச வாகனத்தை ஜார்கண்ட் போலீஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரல் பிபி. பிரதான் வசம் ஒப்படைத்தார்.

டிஎல்எஸ்ஐ நிறுவனத்தின் ஆலையில் தற்போது ஆண்டுக்கு 100 எம்பிவி-1 வாகனங்களை உற்பத்தி செய்யும் முடியும். முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பில் இந்த கவச வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. தவிர, பாதுகாப்பு துறைக்காக தனியார் நிறுவனம் தயாரித்த முதல் கவச வாகனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக