மொத்தப் பக்கக்காட்சிகள்

10/01/2024

வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ...!!


 1) பெற்றோர்களை நோகடிக்காதே... நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்...!!

✅ 2) பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே... வாழ்க்கை போய் விடும்...
வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ...!!

✅ 3) நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதே... நேர்மையாக இருப்பதே ஒரு சாதனை தான்...!!

✅ 4) நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே, அதற்காக நேர்மையை கை விட்டு விடாதே...அந்த நேர்மையே உன்னை காப்பாற்றும். ..!!

✅5)வாழ்வில் சின்ன சின்ன விஷயத்திற் கெல்லாம் கோபப்படாதே... சந்தோஷம் குறைவதற்கும், பிரிவினைக்கும் இதுவே முதல் காரணம்...!!

✅ 6) உன் அம்மாவிற்காக ஒரு போதும் மனைவியை  விட்டு கொடுக்காதே... அவள் உனக்காக அப்பா அம்மாவையே விட்டு வந்தவள்...!!

✅ 7) உனக்கு உண்மையாக இருப்பவர்களிடம்... நீயும் உண்மையாய் இரு...!!

✅ 8)அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யும் போது இனிமையாகத்தான் இருக்கும்...அதுவே உனக்கு
வரும் போது தான், அதன் வலியும் வேதனையும்
புரியும்...!!

✅ 9) உன் மனைவி உண்மையாக இருக்க வேண்டும் என்று, நீ நினைப்பது போல்... நீயும் உண் மனைவிக்கு உண்மையாய் இரு, எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதே, அதுவே உன் மனைவிக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு...!!

✅ 10) ஒருவன் துரோகி என்று தெரிந்து விட்டால்... அவனை விட்டு விலகியே இரு...!!

✅ 11) எல்லோரிடமும் நட்பாய் இரு... நமக்கும் நாலு பேர் தேவை...!!

✅ 12) நீ கோவிலுக்கு சென்று தான் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்பதில்லை  யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே...நீ கோவில் சென்றதற்கு சமம்...!!

✅ 13) நிறை குறை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை... அதில் நிறையை மட்டும் நினை... நீ வாழ்க்கையை வென்று விடலாம்...!!

✅ 14) எவன் உனக்கு உதவி செய்கிறானோ, அவனுக்கு மட்டும் ஒரு நாளும் துரோகம் செய்யாதே... அந்த பாவத்தை நீ எங்கு போனாலும் கழுவ முடியாது...!!

✅ 15) அடுத்தவர்களைப் போல் வசதியாக வாழ முடியவில்லை என்று நினைக்காதே... நம்மை விட
வசதியற்றவர்கள் கோடி பேர் இருக்கிறார்கள்
என்பதை மனதில் கொள்...!!

✅ 16) பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்,நீ செய்யும் பாவம் புண்ணியம் மட்டுமே உனக்கு மிஞ்சும்...உன்னுடன் கடைசி வரை வருவதும் இதுவே...!!✍🏼🌹

9/30/2024

பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம் !

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்



உடனே மனது ஏற்காது. ஆனால் ண்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை. ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள்.

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்! எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? 

வருவது வந்தே தீரும்!

நாம் இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப் போவதில்லை. நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும். உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை! சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.

பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது! ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்! ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?

ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். பணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்! யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.

அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.