மொத்தப் பக்கக்காட்சிகள்

8/09/2012

கிருஷ்ண ஜெயந்தி - கொண்டாடப்படுவதன் விளக்கம்


மஹா விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி)  பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர் இந்திய மனங்களில் பல்வேறு விதங்களில் குடிகொண்டிருப்பவன். மீராவுக்கோ காதலன், ராதாவுக்கும் அவ்வாறே. அர்ஜுனனுக்கோ நண்பன், தத்துவ ஞானி, வழிகாட்டி.

நாம் என்னவாக இருக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்தான் கிருஷ்ணர்.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்த போது அவருக்கும் ஒரு தரிசனம் கொடுக்கிறார். ஆனால் முழு ஆயுதபாணியாகக் காட்சி தருகிறார். ஏனெனில் பீஷ்மர் ஒரு போர் வீரர். அவருக்கு போர் வீரராகவே காட்சியளிக்கிறார்.

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் வனமாலி கதீ சாங்கி சங்கீ சக்ரீச்ச நந்தகீ என்ற ஸ்லோகம் பீஷ்மருக்கு கிருஷ்ணர் கொடுத்த போர்வீரன் தரிசனத்தைக் குறிப்பதாகும்.

இந்துக் கடவுளர்களில் பக்தர்கள் மனதில் தனது தீராத விளையாட்டுத் தனத்தினால் அதிகம் குடிகொண்டிருப்பவர் கிருஷ்ண பகவான்தான்.

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி. ராமர் பிறந்த தினம் நவமி.

கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல் பகவத் கீதையாகும்.

இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டு

Thanks to Web Dunia.com