மொத்தப் பக்கக்காட்சிகள்

3/23/2013

பயந்தா ஜெயிக்கிறது எப்படி? - ரஜினி

ந்தக் கதை சந்திரமுகி படத்தின் 800வது நாள் விழாவில் ரஜினி சொன்னது. அதற்கு முன்பும் கூட அவரது நண்பர் ஹரிக்கு இந்தக் கதையைச் சொன்னாராம், பாபா குகைக்கு செல்லும் வழியில்…

இனி கதை…
Photo

மூணு தவளைகள் இருந்ததாம். ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம்.


மலைக்கு மேல இருக்கற கோயிலுக்குப் போக முடிவெடுத்ததாம். ஆனா, அது ரொம்ப ஆபத்தான மலை. பாம்பு, மிருகங்கள் என்று கொடூர ஜந்துக்கள் உலவும் இடம். போதாக்குறைக்கு, தவளைகள் மலைக்கு மேல் போய்விடக்கூடாது என்று வேறு சில சக்திகளும் முடிவு செய்தது.


முதலில் ஒரு தவளை மலை மேல் ஏற ஆரம்பித்த உடனேயே, ‘போகாதே போகாதே செத்துடுவே… பின்னால் பார்… பாம்பு படமெடுக்குது’ என்று குரல் கேட்டது. தவளை திரும்பி வந்துவிட்டது. அடுத்த தவளை ஏறியது.


அதே குரல், ஆனா தவளை கண்டுக்கவில்லை. தொடர்ந்து பயமுறுத்தல் குரல் கேட்டுக்கொண்டேதான் இருந்தது. ஒரு கட்டத்தில் ரெண்டாம் தவளையும் கீழே வந்துவிட்டது. இப்போது மூன்றாம் தவளை ஏற ஆரம்பித்தது.


அதே மிரட்டல் குரல்கள்… இப்போது சில மிருகங் களின் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தது. ஆனால் தவளை எதற்குமே ரியாக்ட் பண்ணவில்லை. நேராக மலை உச்சியில் இருந்த கோயிலை அடைந்த பிறகுதான் நின்றது!


இந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய ரஜினி. ‘அந்த மூணாவது தவளை மட்டும் இதை சாதிக்க என்ன காரணம் தெரியுமா? அதுக்குக் காது கேட்காது. அதனால் எந்த பயமுறுத்தலும் காதில் விழாமல், தன் லட்சியம் மட்டுமே மனதில் இருக்க… அது சாதிக்க முடிந்தது.


நாமளும் அப்படித்தான்… பக்தியாகட்டும், எடுத்த காரியமாகட்டும்! மனசுல ஒரு முடிவு எடுத்த பிறகு வேண்டாத மிரட்டல்களை காதுல போட்டுக்கவே கூடாது. காது கேட்காத தவளைகளாகவே முன்னேறணும். பயந்தா ஜெயிக்கிறது எப்படி?,’ என்றார்.


-தலைவர் ரஜினி