மொத்தப் பக்கக்காட்சிகள்

6/21/2012

சித்தர்கள் என்பவர் யார்?

சித்தர்கள்-சித்தர் ரகசியம் வரலாறு வசியங்கள் பாடல்கள் விஞ்ஞானம் மந்திரம் ராஜ்யம் சமாதி 

 சித்தர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.சித்தர்கள் என்பவர்கள் யார்? மனிதன் சித்தனாக முடியுமா?சித்தி பெற்றவர்கள் அனைவரும் சித்தர்களா? சித்தர்களின் சித்து வேலைகள் என்ன? சித்தர்களின் வசிய செயல்கள் என்ன?  என ஏராளமான கேள்விகள் மனதில்!!


இணையத்தில் தேடி நான் அறிந்து கொண்டதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்:) முதலில் சித்தர்கள் வரலாற்றைவிக்கிபீடியாவில் இருந்து பார்ப்போம்.அப்டியே சித்தர்களின் பட்டியல் பாருங்கள்.


சித்தர்கள் பற்றிய ஏராளமான விடயங்களை தருகிறது இந்தசித்தர்கள் இராச்சியம் என்ற தளம்.

 பதினெட்டு சித்தர்களின் பெயர்கள் மற்றும் கோயில்அமைந்துள்ள இடத்தை இங்கு காணலாம். 

சித்தர்கள் சொல்லி சென்ற வசியங்கள் 

சித்தர்கள் யார் என இவர் மொழியில் சொல்லியிருக்கிறார்.

சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை 

சித்தர்களை நேரில் சந்திக்க ஒரு வழிமுறை சொல்கிறார் இவர்.


மேலும் தகவலுக்கு கூகிளாரிடம் கேளுங்கள் அள்ளி கொடுப்பார்:))

Thanks to Mazhi

மழை

திருவள்ளுவர்-Thiruvalluvar


திருவள்ளுவர், தெய்வப்புலவர் , பொய்யாமொழிப் புலவர் .திருக்குறள் எனும் வாழ்வியல் நூலை உலகுக்கு தந்தவர்.தமிழ் இலக்கியங்களிலேயே மிகச்சிறந்த, உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட  உலகின் பொதுமறை நூலை இயற்றியவர்.


மனிதகுலம் என்றென்றும் ஒழுக்க நெறிகளுடன் சிறப்பாய் வாழ்ந்திட வழி சொல்லும் இரண்டடி தத்துவத்தை மானுடர்களுக்கு அளித்தவர்.


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
திருவள்ளுவர் பற்றி தமிழ் விக்கிபீடியாவிலிருந்து.திருக்குறள் படிக்க இந்த வலைத்தளம் பார்க்கலாம்.

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரி பாடல் இங்கு காணலாம்.

யார் இந்த வள்ளுவன் படியுங்கள்.திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் சிலை.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.

திருவள்ளுவர் பற்றி மேலும் சில தகவல்கள்.

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு 

திருக்குறள் புகழ் 

வள்ளுவர் வாசுகி


 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
 நிலமிசை நீடுவாழ் வார்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
 யாண்டும் இடும்பை இல.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
 நெறிநின்றார் நீடுவாழ் வார்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
Thanks to Mazhai

மழை

ஜூன் 20 சர்வதேச அகதிகள்



இன்று சர்வதேச அகதிகள் (ஜூன் 20) தினமாகும். அரசியல், சமூக, சமய சூழ்நிலைகள் காரணமாக ஓர் நாட்டிலிருந்து மற்றுமொரு நாட்டிற்கு பாதுகாப்பு தேடி மக்கள் தஞ்சமடையும் போது அவர்கள் அகதிகளாகின்றனர்.
அகதிகள் தினத்தையொட்டி ஐ.நா விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2011 ஆண்டு உலக முழுவதும் 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் இலங்கை, திபெத் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறுபவர்கள் மாத்திரம் இரண்டு இலட்சத்தை தாண்டுகிறது. இதேவேளை பாகிஸ்தானில் அகதிகளாக தஞ்சம் கோரிய 150,000 ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு உதவ போவதாக UNHCR அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க படைகளின் ஆக்ரமிப்பால், இதுவரை 1.7 மில்லியனுக்கு அதிகமானோர் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்க்ளில் 70,000 பேர் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் புகலிடம் கோரியுள்ள வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை அரசு திருப்பி அனுப்ப கூடாது எனவும் UNHCR அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இலங்கையில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் முறைப்படி ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிலையத்தில் தங்களை பதிவு செய்து கொண்டவர்கள். எனினும் ஐ.நா அகதிகள் தொடர்பான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த அகதிகளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அவர்களை திருப்பி அனுப்பும் பட்சத்தில் இலங்கை பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவு UNHCR எச்சரித்துள்ளது.

இம்முறை அகதிகள் தினத்திற்கான Refugees have No Choice. You do எனும் Theme ஐ ஐ.நா அறிவித்துள்ளது. 1951ம் ஆண்டு அகதிகள் தொடர்பான முதலாவது சர்வதேச பிரகடனம் உத்தியோகபூர்வமாக அமலுக்கு வந்தது. அகதிகள் தினத்தை முன்னிட்டு UNHCR அகதிகள் தொடர்பில் பொதுமக்களிடம் சில கேள்விகளை முன்னெடுத்துள்ளது. இவற்றில் நீங்களும் பங்குபெறலாம். இணைப்பு :

<http://takeaction.unhcr.org/>

thanks to tamilmedia
 

6/18/2012

பணச்சுரண்டல்

மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை

அதிகாரம் உள்ளவன் அதட்டியும் ...
ஆணவம் பிடித்தவன் மிரட்டியும் ...
இதயமில்லாதவன் பறித்தும்
ஈனமானவன் இழித்தும்
உணர்வற்றவன் ஏய்த்தும்
ஊக்கமானவன் அடித்தும்
எமாளியனவன் அழித்தும்
ஏடானவன் பொய்யுரைத்தும்
ஐயம்கொண்டவர் மாய்த்தும்
ஒடுங்கியவன் எதிர்த்தும்
ஓங்கிநிற்பவர் ஒடுக்கியும்
ஔரங்கசீப் போல மிரட்டியும் ....
அஃறிணை என்பவர் பேசியும்

பதவியில் இருப்பவன் பயந்தும் ...
வெறி பிடித்தவன்
செயல் ஜாலத்திலும் ...
சுயநலமிக்கவன்
சுரண்டுவதிலும் ...
சுக போக வாழ்விற்காய்
இயற்கையை காயப்படுத்தியும் .

மனச்சுரண்டல்
பணச்சுரண்டல்
பதவிச்சுரண்டல்
வியாபாரச்சுரண்டல்
கல்விச்சுரண்டல்
மருத்துவச் சுரண்டல்
ஜனனத்தில் சுரண்டல்
மரணத்திலும் சுரண்டல்

அடுத்தவரை சுரண்டும் நாம்

நம்மை அடுத்தவர்
சுரண்டுவதறியாமல்
உலகை, ஊரை
உறவை ,இனிமையை
பசுமையை, பண்பை ,அன்பை
வாழ்கையை சுரண்டும தீமையாய்!

Thanks to Sasikala

தந்தையர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது.



ஆண்டு தோறும் ஜீன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை 52 நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது. வேறு நாடுகளில் வேறு தினங்களில் இந்த தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது.
 
தந்தையரை பெருமைப்படுத்தும் விதமாகவும் நன்றி கூறும் விதமாகவும் 1910ம் ஆண்டு முதல் தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது.
 
பாசத்துக்கு எப்போதும் தாய் தான் உதாரணம் ஆனால் குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்கு முக்கியமானது.
 
தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழகாட்டியாக இருக்கின்றார்.
 
பத்து மாதம் சுமக்க முடியவில்லையாயினும் அவை அனைத்தையும் சேர்த்து வைத்து இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமப்பவர்கள் தந்தையர்கள்.
 
அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின  வாழ்த்துக்கள்