மொத்தப் பக்கக்காட்சிகள்

Digital Clock + Date

8/24/2016

சிந்திக்க வேண்டிய விஷயங்கள்..."

சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்..."
*********************


🌝 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்..

image not displayed🌝 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்...." வெட்டுங்கள் - மழை நீரை சேமிப்பேன் என்கிறது "குளம்..........."

🌝 ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை..

🌝 தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது

🌝 கல்வி கற்க புத்தகங்களை விட 'நோட்டுக்களே' அதிகம் தேவைப்படுகின்றன.!

🌝 வாழ்க்கை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி! ஒவ்வொருத்தர் கண்ணுக்கு ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும்! ஒரு சிலருக்கு புரியாம கூட போகும்..!!!

🌝 மதிப்பே இல்லாத பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி தன் மதிப்பை கூட்டியவன் தான் இந்தியன்!!

🌝 பாம்புக்கு காது கிடையாது எனில், தவளை எப்படி தன் வாயால் கெடும்? சொல்லுங்க.??

🌝 சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே இவ்வுலகம் நலம் விசாரிக்கும்! கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசி எண் கண்டிப்பாக பழைய செல்போனோட தொலைஞ்சு போயிருக்கும்...

🌝 நாம் நிராகரிக்கப்படும் இடத்தில்.. நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி....

🌝 பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இருப்பதில்லை!

🌝 வாழத் தெரியாம சாமியாரா போனவங்கிட்ட, எப்படி வாழறதுன்னு கேக்க போவுது ஒரு மூடர் கூட்டம்...!!!!!

🌝 காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.

🌝 திருக்குறளை, வாழ்றதுக்காக படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்கதான் அதிகம் பேரு...!!!!!

🌝 அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை...!!!!

🌝 Money மட்டுமே மதிக்கப்படுகிறது... மனிதம் பலரால் மிதிக்கப்படுகிறது..

🌝 நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :- 


நம்மகிட்ட ஒன்னும் இல்லாம இருக்கும் போது..... நம்மோட பொறுமை..!
 
நம்மகிட்ட எல்லாம் இருக்கும் போது..... நம்மோட நடத்தை..!

🌝 5000 ரூவா சம்பளம் வாங்கும்போது இருந்த பற்றாக்குறை, லட்ச ரூவா வாங்கும்போது வந்தா நாமதான் வாழ தெரியாம வாழ்றோம்னு அர்த்தம்....!!!!

🌝 எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை  உண்டு...!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்...!!!

🌝 எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள். ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.

🌝 கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!!

🌝 நேர்மையாக சம்பாரித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை...!!!!

🌝 போக்குவரத்து விதிகளை சாகசமாய் மீறும் எமக்கு... அடுத்தவர் மீறுவதைக் கண்டதும் உடனே கோபம் வருகிறதே.... ஊருக்கு தான் உபதேசமோ????

🌝 பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!!

🌝 பணம் மரத்தில் காய்க்குமானால், மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்...

🌝 நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், 'தன்னடக்கம்' என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். இதை உணர்ந்தவன் கண்டிப்பாக உயர்வான்!!

🌝 லாரியில அழுது கொண்டே செல்கிறது..... ஆற்றிடமிருந்து பிரித்து அள்ளப்பட்ட மணல்.......!!!!

8/23/2016

முகம் பொலிவாக இருக்க வேண்டுமா?

 
உடல் அழகு பெற,

சில வித்தியாசமான டிப்ஸ்கள்
======================

கண்கள் அழகாக இருக்க வேண்டுமா?
சுற்றியுள்ளோரின் நல்லவற்றை மட்டுமே
காணப் பழகுங்கள்.

முகம் பொலிவாக இருக்க வேண்டுமா?

புன்னகையோடு மனிதர்களுக்கு தினமும்
முகமன் கூறிப் பாருங்கள்.

மெல்லிய உடல் வேண்டுமா?
உங்களது உணவை, பசித்த ஏழைகளுடன்
பகிர்ந்துண்டு பாருங்கள்.

உடை அலங்காரம் பெற வேண்டுமா?
அரை நிர்வாணிகளுக்கும் உடை உடுத்த
உதவி செய்து பாருங்கள்.

அழகான கூந்தல் வேண்டுமா?
அனாதைக் குழந்தைகளின் தலையை
இரக்கமுடன் தடவிப் பாருங்கள்.

கைகள் அழகு பெற வேண்டுமா?
இல்லாத எளிய மக்களுக்கு ஈந்துதவி
செய்து பாருங்கள்.

கால்கள் உறுதி பெற வேண்டுமா?
அன்றாடம்
நடந்து பழகிப் பாருங்கள்.

● வெறும் ஒப்பனைகளால் உங்கள் முகம் மட்டுமே அழகு பெறும். ஆனால், இவற்றைக் கடை பிடித்துப் பாருங்கள். உங்கள் அகமும் அழகு பெறும்.

● படைத்த இறைவன் நமக்கு இரண்டு கைகளை வழங்கியுள்ளான். அதில் ஒன்று, நமக்கு. இன்னொன்று, இன்னொருவருக்கு உதவுவதற்கு என்பதை மறந்து விட வேண்டாம்.