மொத்தப் பக்கக்காட்சிகள்

12/26/2011

யார் பணக்காரன்

 
 
இன்று புலம் பெயர்ந்து வாழும் நம்மவரில் சிலர் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை நன்றாகக் கற்றுள்ளனர்.
 
ஆனால் ,எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை கற்றுக் கொள்ள வில்லை .
 
வாழ்வதற்காகப் பொருள் வேண்டும் .ஆனால் ,இவர்களோ பொருளீட்டுவதிலேயே வாழ்க்கையை இழந்து விட்டனர், அல்லது  இழந்துகொண்டிருக்கின்றனர்.
 
வாழ்க்கையை அனுபவிப்பதற்காகத் தான் பணம் .ஆனால்  இவர்களோ பணத்திற்காக வாழ்க்கையை விற்றுவிட்டார்கள்.
 
ஒருவன் எப்போது பார்த்தாலும் சிள்ளி பொறுக்கிக் கொண்டேயிருந்தான் .அவனைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் 'நீ எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருக்கின்றாயே எதற்கு?' என்று கேட்டான் .
 
அவன் "'குளிர் காய்வதற்கு" என்றான்.
 
கேட்டவனோ நீ குளிர் காய்வதை நான் பார்த்ததில்லையே?'என்றான்.
 
அவனோ "சுள்ளி பொறுக்கவே நேரம் சரியாக இருக்கின்றது .குளிர் காய நேரமில்லை"' என்றான் .
 
நம்மில் பெரும்பாலோர் இப்படித் தான் இருக்கின்றோம் .
 
பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற்கு .ஆனால் ,சிலர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள் .அந்தப் பணத்தால் பெறக் கூடிய சுகங்களை அனுபவிப்பதில்லை .கேட்டால் அதற்கு எல்லாம் நேரம் இல்லை என்கிறார்கள் .இதென்ன பைத்தியக்காரத்தனம்?
 
பணம் சம்பாரிப்பது சிலருக்கு போதைபழக்கம் போல ஆகிவிட்டது.
 
குடும்பத்திற்காக சம்பாதிக்கின்றேன் என்கிறார்கள் ஆனால் ,அவர்கள் குடும்ப வாழ்வை அனுபவிப்பதில்லை .மனைவியிடமோ குழந்தைகளிடமோ சிரித்துப் பேசி மகிழ்வதற்கு நேரம் இல்லை என்கிறார்கள் .
 
இந்த இன்பங்களை அனுபவிக்கத்தானே பணம் .இந்த இன்பங்களை அனுபவிக்கத் தடையாக இருக்கின்றது என்றால் பின் எதற்குப் பணம்  ?
 
ஒருவன் பெட்ரோல் வாங்கி சேமித்துக் கொண்டேயிருக்கின்றான்  .காரில் செல்வதில்லை என்றால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?
 
எவனொருவன் தூங்க வேண்டிய நேரத்தில் ,எந்தக் கவலையும் இல்லாமல் ஆனந்தமாக உறங்குகின்றானோ
 
அவன் தான் உண்மையில் பணக்காரன் . எனவே அன்பான
சொந்தங்களே வாருங்கள் .இனியாவது அளவோடு உழைத்து

ஆனந்தமாக வாழப் பழகிக் கொள்வோம்

பணம்

இருந்தால் தூக்கமில்லை

இல்லாவிட்டால் சொந்தமில்லை

இரண்டும் இல்லாமல்

இளமையை தொலைத்து

சேர்த்து அனுப்பியும்

தேவையில் பூர்த்தியில்லை...
தேவைகள் துரத்த

தேடல்கள் தொடர

காலம் நொடிகளை

கழித்துவிட்டு

நரைகளை பதிலளிக்க

சாய்வு நாற்காலியில்

சாய்ந்தும்

மகன் இன்று அனுப்பியிருப்பானா?

நினைவுகள் துரத்துகிறது

என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே - ஆன்மீகத் துறவி விவேகானந்தர்



ஒருவன் சில பரீட்சைகளில் தேர்வு பெற்று, சொற்பொழிவு செய்யும் திறன் உள்ளவனாக இருந்தால்தான், அம் மனிதனைப் படித்தவன் என்று கருதுவீர்களா? வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் தகுதியைப் பெறுவதில் பாமர மகளுக்கு உதவி புரியாத கல்வியை, அவர்களது குணநலன்களைக் கட்டி வளர்க்காத கல்வியை, அதே போல் அம்மக்களிடம் ஈகைக் குணத்தையும்,சிங்கத்திற்குள்ளது போன்ற தைரியத்தையும் ஊட்டி வளர்க்காத கல்வியை, கல்வி என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா?



 எவனொருவன் தன் அறிவைக் கொண்டே தன்னைக் காத்துக் கொள்ளத் திறன் உடையவனோ, அவனே உண்மையான கல்வியை அடைந்த வனாவான்.”

இப்படி ஒரு காவியுடை அணிந்த ஒரு சாமியார் சொன்னார் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இதைவிட வேகமான, விவேகமான கருத்துக்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார் விவேகானந்தர்.


‘செங்காவிச் சிங்கம்’ என்று சொல்லும் அளவுக்கு விவேகானந்தரின் சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன.


இந்து மத மேன்மை, இந்தியாவின் வலிமை, மூடத்தனத்தின் ஒழிப்பு, பகுத்தறிவின் தேவை, மெய்யான கல்வியாளர்கள், ஏழைகளின் நிலைமை என பல்வேறு பொருள்கள் பற்றி விவேகானந்தர் கூறிய கருத்துகள் மனித குல வளர்ச்சிக்கு மாமருந்தாகும்.


விசுவநாதர் – புவனேஸ்வரி தம்பதிக்கு 1863 ஜனவரி 12 அன்று பிறந்த விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாதர்.


சிறு வயதிலிருந்தே எது பற்றியும் ஆய்ந்து அறிகின்ற போக்கு நரேந்திர நாதருக்கு இருந்தது. ராமகிருஷ்ணரின் சீடராகச் சேர்ந்தார் நரேந்திரர். மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக நரேந்தர் திகழ்ந்தார். அதனால் நரேந்திர நாதருக்கு ‘விவேகானந்தர்’ என்று ராமகிருஷ்ணர் பெயர் சூட்டினார். இந்தப் பெயரே நிலை பெற்றுவிட்டது.


1885 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணர் மறைந்ததும், விவேகானந்தர் யாத்திரையை மேற்கொண்டார். காசி, லக்னோ, ஆக்ரா, பிருந்தாவனம், ஹத்ராஸ், ரிஷிகேஷ், பிரானாகோர் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
மற்றொரு முறை விவேகானந்தர் யாத்திரை புறப்பட்ட போது ராமேஸ்வரத்திற்கு வந்தார். இந்த யாத்திரைதான் விவேகானந்தரின் அறிவாற்றலை வெளிப்படுத்துவதற்கும்,


 உலக மேதைகள் இந்திய தேசத்தின் வலிமையைப் புரிந்து கொள்வதற்கும், இந்து மத்த்தின் மேன்மையை உலக மதவாதிகள் தெரிந்து கொள்வதற்கும் காரணமாயின.
அப்போது இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.


இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது.


விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த பார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது. அதனால் தம்மைவிடச் சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார். முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடம் விடைபெற்றார்.


அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து அறிவித்தார். அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.


1893 மே 31 அன்று அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார்.


உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் ‘மெட்காப்’ என்ற நகரில் மகளிர் மன்றக் கூட்டத்தில் ‘இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் விவேகானந்தருக்குப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான் அமெரிக்க மண்ணில் ஒலித்த விவேகானந்தரின் முதல் முழக்கமாகும்.


பெண்கள் நிறைந்த அந்த மாநாட்டில் விவேகானந்தரின் முழக்கம் எழுச்சியோடு வரவேற்கப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண் விவேகானந்தரின் மீது அளவற்ற அன்பு கொண்டாள். அதனால் அமெரிக்காவில் விவேகானந்தரின் ஒவ்வொரு காலடியையும் இந்த இளம் பெண் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினாள்.


இந்த மாநாட்டிற்குப் பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்ட விவேகானந்தர், அனைத்துச் சமயத்தைச் சார்ந்தவர்கள் பேசுவதையும் கவனித்தார். அங்கு பேசிய மேலைநாட்டு மத போதகர் அனைவரும் “ஜென்டில்மேன்” என்று தங்களின் பேச்சைத் தொடங்கினர். இந்த வார்த்தை கூடியிருப்போருக்கும்,சொற் பொழிவாளருக்கும் இடைவெளி ஏற்படுத்துவதாக விவேகானந்தர் எண்ணினார்.


செப்டம்பர் 1-ம்தேதி விவேகானந்தர் பேச வேண்டிய முறை வந்தது. அவர் மேடை ஏறியதும், வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் அனைவரும் விவேகானந்தரைப் பார்த்தனர்.


 அவருடைய காவி உடையும், தலைப்பாகையும் மேலை நாட்டவர்களுக்குச் சிரிப்பை உருவாக்கியது. பேண்ட், கோர்ட், டை என் மேடையில் பேசியவர்கள் மத்தியில் இப்படியொரு கோலத்தில் விவேகானந்தர் மேடையில் தோன்றியதும், கூடியிருந்தோரில் பலர் முகம் சுளித்தனர். இதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை; கண்டு கொள்ளவும் இல்லை.
எடுத்த எடுப்பிலேயே ‘சகோதர சகோதரிகளே!’ என்று தமது சொற் பொழிவைக் கம்பீரமாக விவேகானந்தர் தொடங்கினார். ஏளனம் செய்தவர்கள் வாய் மூடினர். ஆடையைக் கண்டு அறுவறுப்டைந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.


சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் விவேகானந்தர் தமது பேச்சைத் தொடங்கினார். அரங்கம் முழுவதம் அவரையே பார்த்தது; அவர் பேச்சை மட்டுமே கேட்டது;


அவர் சொல்வதைத் தங்கள் மனதில் பதிந்து கொண்டது. இந்தக் கூட்டத்தில ஆடையிலும், தோற்றத்திலும் அவர் தனித்து நின்றார் மேடை முழக்கத்திலும் அவரே தனித்து வென்றார். பேசி முடித்த பின் அவரைத் தொடர்ந்து ஒரு கூட்டமே வந்தது.


அந்தக் கூட்டத்தில் ‘மெட்காப்’ நகர் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசிய போது மனதைப் பறிகொடுத்த அந்த இளம் பெண்ணும் இருந்தாள்.
இந்த மாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார். அப்போது, “அளவுக்கு மீறிய மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி,இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் இறுகப் பற்றியுள்ளன;வன்முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து,
 நாகரீகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டன.அந்தப் பயங்கரப் பைசாக் கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர் நிலை எய்திருக்கும்” என்று விவேகானந்தர் முழங்கினார்.


விவேகானந்தர் பேசிவிட்டு வெளியில் வந்ததும் ஒரு பெரும் கூட்டம், அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகக் காத்திருந்தது….அவற்றில் அந்தப் பெண்ணும் இருந்தாள்.. அந்தப் பெண் யார்?


மெட்காப் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசியதைக் கேட்டு, அவரைத் தனிமையில் சந்திக்க முயன்றாள். அது முடியாமல் போயிற்று!
சிகாகோவில் விவேகானந்தர் நான்கு நாட்கள் முழங்கிய போதும், வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு விவேகானந்தரைத் தனிமையில் சந்தித்து விட வேண்டும் என்று விரும்பினாள்;அப்போதும் அதற்கு வாய்ப்புக் கிட்டவில்லை!


அதன்பின் விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள், அயோவா, செயிண்ட் லூயிஸ், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் எல்லாம் விவேகானந்தரைப் பேச வைத்து மகிழ்ந்தனர்.


அத்தனை இடங்களுக்கும் அந்தப் பெண் வந்தாள்; விவேகானந்தரின் முழக்கத்தைக் கேட்டாள்;அப்போதும் அவளுக்கு விவேகானந்தரைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை.
 


‘செயின்ட் லாரன்ஸ்’ என்ற நகரில் உள்ள தீவுப் பூங்காவில் விவேகானந்தர் ஐம்பது நாட்கள் ஓய்வெடுத்தார் அப்போதும அந்தப் பெண் அந்தத் தீவுப் பூங்காவிற்கு ஒவ்வொரு நாளும் வந்தாள்.இருப்பினும் விவேகானந்தரை அவளால் தனிமையில் சந்திக்க இயலவில்லை.
விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோதே அவருடைய சொற்பொழிவுகள் நூல்வடிவம் பெற்று அமெரிக்க மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன.


அந்தப் புத்தகங்களைக் கையில் ஏந்தியபடி விவேகானந்தர் தங்கியிருக்கும் இடத்திற்குச்சென்று தனிமையில் அவரைச்சந்திக்க அந்தப் பெண் முயன்றாள். இருப்பினும் அவளுடைய முயற்சி பயன் தரவில்லை!


அமெரிக்காவிலிருந்து விவேகானந்தர் பாரீசுக்கு புறப்பட்டார். அமெரிக்க விமானத்தளத்தில் வைத்து ந்தப் பெண் விவேகானந்தரை மடக்கி விட்டாள்!


“தங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்” என்றாள்.

கூட்டத்திலிருந்து விலகிய விவேகானந்தர், “சொல்லு! தாயே! என்றார்.
அந்தப் பெண்ணுக்கோ இருபது வயது இருக்கும்…
அப்போது விவேகானந்தருக்கு முப்பது வயது…
அந்தப்பெண்ணோ நவ நாகரீக மங்கை…
விவேகானந்தரோ முற்றும் துறந்த முனிவர்…


எதற்காக விவேகானந்தரை விரட்டி விரட்டி அந்தப் பெண் பின் தொடர்கிறாள்?


மீண்டும், “சொல்லு தாயே!” என்றார் விவேகானந்தர்.


“நான் மெட்காப் நகரில் நடந்த மகளிர் மாநாட்டில் இருந்து உங்களைக் கவனித்து வருகிறேன்.. தனிமையில் சந்தித்துப் பேச பலமுறை மயன்றும் முடியாமல் போயிற்று..இனியும் காலம் தாழ்த்தினால் காரியம் கெட்டுவிடும் என்பதனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டேன்.


அமெரிக்க இளைஞர் பலர் என் அழகில் மயங்கி, என்னை அன்றாடம் சுற்றி வருகின்றனர. ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச்சுற்றி வருகிறேன்..” என்று தயங்கினாள்.


“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தாயே” என்றார் விவேகானந்தர்.
“என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் திருமணம் செய்து கொண்டால் எனது அழகோடும் உங்கள் அறிவோடும் நமக்கு குழந்தை பிறக்கும்.. அதற்காகத்தான் நான் உங்களிடம் தனியாகப் பேசுவதற்கு அலைந்து கொண்டிருந்தேன்” என்றாள் அந்தப் பெண்!


“தாயே! எனக்கு முப்பது வயது! உனக்கோ சுமார் இருபது வயது இருக்கலாம். நாம் திருமணம் செய்து, நமக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தை வளர்ந்து, இருபது வயதைத் தொடுகின்றபோதுதான் அந்தக் குழந்தை அறிவு மிக்கதா? இல்லையா? என்பது தெரியும். அதற்குப் பதிலாக நீ என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே!” என்றார் விவேகானந்தர்.


இந்தப் பதிலைக் கேட்டு அந்தப் பெண் விக்கித்துவிட்டாள்.


ஆம்! காணுகின்ற பெண்களை எல்லாம் தாயாக்க் கருதியவர் விவேகானந்தர் என்பது அப்போதுதான் அந்தப் பெண்ணிற்குப் புரிந்தது!


1893-ல் விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள் இப்போதும் நினைவுபடுத்த வேண்டிய நிலையில்தான் உலகமும், இந்தியாவும், தமிழகமும் இருக்கிறது.
சிகாகோவிலிருந்து உலகில் பல நாடுகளுக்கு விவேகானந்தர் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, 1897 ஜனவரியில் இராமேஸ்வரத்தில் உள்ள குந்தக்கல்லுக்கு வந்தார். அவர் வருவதை அறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி குந்தக்கல் வந்து காத்திருந்தார்.


கப்பலில் வந்து இறங்கிய விவேகானந்தர் தம் பாதங்களை முதன்முதலில் தம் தலையில் வைத்து விட்டுத்தான் மண் மீது பட வேண்டும் என்றார் மன்னர். ஆனால் மனித நேயம் கொண்ட விவேகானந்தர் அதற்கு இணங்கவில்லை.


உலக முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்து மத்ததன் மேம்னையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஜூலை 4 அன்று மறைந்தார்.


கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம் ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படுகிறது.


சிகாகோவில் பேசிவிட்டு விவேகானந்தர் முதன் முதலில் தமிழகத்தில் வந்த இறங்கினார். அதுவும் எந்த மன்னர் தமது அமெரிக்கப் பயணத்திறகுக் காரணமாக இருந்தாரோ, அந்த மன்னர் வாழுகின்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில்தான் விவேகானந்தர் இறங்கினார்.


விவேகானந்தர் ஒரு காலைப் பதித்து மற்றொரு காலை மண்ணில் வைத்த அந்த இடம் இன்றும் ‘குந்துக்கால்’ என்று அழைக்கப்படுகிறது.
சென்னையில் விவேகானந்தர் தங்கிய இடம் ‘விவேகானந்தர் இல்ல’மாகக் காட்சியளிக்கிறது.


இவை எல்லாவற்றையும் விட,விவேகானந்தரின் சீடராக நிவேதிதா இருந்ததும்.


நிவேதிதா –தேவியின் சீடராக மகாகவி பாரதியார் வாழ்ந்ததும் சிறப்பு
மிக்கவைகளாகும்.