மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

ரயில்களுக்கு தானியங்கி பிரேக் சிஸ்டம்


விபத்துக்களை தடுக்க ரயில்களுக்கு தானியங்கி பிரேக் சிஸ்டம்: ரயில்வேத்துறை விபத்துக்களை தடுக்கும் வகையில் ரயில்களில் தானியங்கி பிரேக் சிஸ்டத்தை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ரயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அரக்கோணம் அருகே சித்தேரி என்ற இடத்தில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த ரயில் மீது பின்னால் சென்ற ரயில் மோதியதில் 10 உயரிழந்தனர...். ஏராளமானோர் காயமடைந்தனர்.

சிக்னலில் சிவப்பு விளக்கை எரிந்ததை பொருட்படுத்தாமல், பின்னால் சென்ற ரயில் எஞ்சின் டிரைவர் தொடர்ந்து ரயிலை வேகமாக ஓட்டியதால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுபோன்று அதிகரித்து வரும் ரயில் விபத்துக்களை தடுக்கும் வகையில், ரயில்களில் தானியங்கி பிரேக் சிஸ்டத்தை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, ரயில் எஞ்சின்கள், தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் கம்பங்களில் பிரத்யேக கருவிகள் பொருத்தப்படும்.

சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது டிரைவர் ரயிலை தொடர்ந்து செலுத்த முற்பட்டாலும் அல்லது கவனக்குறைவாக சென்றாலும் ரயில் எஞ்சினில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி ரயிலின் அவசரகால பிரேக் மூலம் ரயிலை நிறுத்திவிடும்.

இந்த தானியங்கி பிரேக் சிஸ்டத்தை அமைக்க ஒரு கிலோமீட்டருக்கு ரூ.50 லட்சம் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.250 கோடி செலவில் டெல்லி-ஆக்ரா இடையிலான 200கிமீ தூரத்துக்கும், சென்னை-கும்முடிப்பூண்டி இடையிலான 60கிமீ தூரத்துக்கும் இந்த தானியங்கி பிரேக் சிஸ்டத்தை பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

சோதனை அடிப்படையில் பொருத்தப்படும் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால் முதல்கட்டமாக டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-கோல்கட்டா ஆகிய வழித்தடங்களில் பொருத்தப்படும் என்று ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய ரயில் தானியங்கி பிரேக் சிஸ்டம் மூலம் ரயில் விபத்துக்களை முற்றிலும் தடுக்க முடியும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக