மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

சகிப்புத்தன்மை பழகிப்போய்விட்டது


குறுகலான சாலையில்
ஒரு வாகனத்தின்
தவறான நிறுத்தத்தினால்
ஏற்பட்டது போக்குவரத்து நெரிசல்
இருப்பினும் கடந்து செல்லும்
வாகன ஓட்டிகள் திட்டிக்கொண்டும்
அந்த வாகனத்தை
முறைத்து கொண்டும் செல்கின்றனர்
ஆனாலும் எவரும்
அந்த வாகனத்தை சேதப்படுத்தவில்லை
சகிப்புத்தன்மை பழகிப்போய்விட்டது
முன்பெல்லாம்
பெட்ரோல் டீசல் விலையேற்றம்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
தற்போது வாரம் இருமுறை
சகிப்புத்தன்மை பழகிப்போய்விட்டது

இலங்கை கடற்படையால்
மீனவர் கொல்லப்படுவதும்
சிறைபிடிக்கப்படுவதும்
தினசரி செய்திகளில்
படித்துப் படித்து
சகிப்புத்தன்மை பழகிப்போய்விட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக