மொத்தப் பக்கக்காட்சிகள்

Digital Clock + Date

11/08/2011

பெட்ரோல் விலை ஏற்றம், கொஞ்சம் கொஞ்சமாக லிட்டருக்கு நூறு ரூபாயை தொட்டு விடும்

நம் நாட்டை ஆண்டு வரும் ஏழை பங்காளர்களுக்கு நாட்டை ஆள காசு வேண்டும் என்றால் அவர்கள் செய்யும் ஒரே காரியம் பெட்ரோலின் மீது விலையை உயர்த்துவது மட்டுமே... பெட்ரோலின் விலை சர்வதேச சந்தையில் உயருவது என்னவோ உண்மை தான், ஆனால் சில பதில் வராத கேள்விகள் இந்த நாட்டில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது... அவற்றில் சில இதோ...
*நம் நாட்டில் உற்பத்தி ஆகும் பெட்ரோலை என்ன விலை கொடுத்து வாங்குகிறார்கள்?
*அரசு எரிவாயு நிறுவனங்கள் விளம்பரத்திற்காக ஏன் செலவு செய்கிறார்கள்?
*கிரிக்கெட் போட்டி நடத்துவதால் இவர்கள் என்ன லாபத்தை எதிர் பார்க்கிறார்கள்?
*நம் அண்டை தேசமான பாகிஸ்தானில் பெட்ரோலின் விலை என்ன?
*பாகிஸ்தானில் நாம் வாங்குவதை விட குறைந்த விலைக்கா வாங்குகிறார்கள்?
*அவர்கள் நாட்டு எண்ணெய் நிறுவனங்களக்கு நம்மை விட அதிக நஷ்டம் வருகிறதா?
*கடைசியாய், பெட்ரோலின் மீது இவ்வளவு அதிகமான வரி விதிப்பதற்கு காரணம் அது என்ன சொகுசு பொருளா?
நம் நாட்டு ஒரு நாள் உற்பத்தி 8,80,000 பேரல்கள் இறக்குமதி 21,00,000 பேரல்கள். கூட்டி கழித்து பார்த்தால் 30% உள்நாட்டு உற்பத்தி என்று வரும்
ஒரு பேரல் [158 லிட்டர்] கச்சா எண்ணெய் விலை, 97 டாலர்
அதாவது 4365 ரூபாய்..
ஆக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 27.35 ரூபாய்..
அதில் 500 ml பெட்ரோல் மட்டுமே எடுக்கப் படுவதால் அதன் விலை 14 ரூபாய்..
ஆக ஒரு லிட்டர் பெட்ரோல் 28 ரூபாய்...
அதனுடன் சுத்திகரிப்பு செலவு, போக்குவரத்து செலவையும் இணைத்தால் இப்பொழுது எண்ணெய் நிறுவனங்கள் வாங்குவதை விட குறைவாக வாங்குவதில்லை...
மேலும் பெட்ரோல் விலை வாசி குறித்த கட்டுரைகளை படிக்க..
என்ன கொடுமை சார் இது?
பெட்ரோல் விலை ஏற்றம், கொஞ்சம் கொஞ்சமாக லிட்டருக்கு நூறு ரூபாயை தொட்டு விடும் போலிருக்கிறது...
என்ன தான் விலை ஏறினாலும், விலை ஏற்றத்திற்கு முதல் நாளே பத்து லிட்டர் பெட்ரோல் போட்டு ஐம்பது ரூபாயை சேமித்து விட்டேன் என்று கூப்பாடு போடுகிறான் நம் தமிழன்...
நமது பெட்ரோல் ஐந்து ரூபாய் ஏறி விட்டது..
flight petrol 1.70 பைசா லிட்டருக்கு குறைந்து விட்டது...
ஏற்கனவே கூறியது போல் வானத்தில் பறப்பவர்கள் ஏழைகளே...
ஏனென்றால் விண்ணை முட்டும் விலை ஏற்றத்தை அவர்களால் எப்படி தொட முடியும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக