மொத்தப் பக்கக்காட்சிகள்

12/01/2011

விழிப்புணர்வு என்பது

 
தனித்திரு.... விழித்திரு.... பசித்திரு.... இது விவேகானந்தர் முழக்கம்.

ஞானிகள், அறிஞர்கள், சித்தர்கள், முன்னோர்கள் அறிவித்த அந்த விழிப்புணர்வு தான் என்ன?
ஆதிநாட்களில் மனிதன் குகைகளில் வாழ்ந்தான். விலங்குகளை வேட்டையாடி உண்டான். விலங்குகளின் குகைகளை ஆக்ரமித்தான். விலங்குகள் மனிதனை எதிரியாக பார்த்தன. மனிதனுக்கு ஆபத்து எப்போதுமிருந்தது. குகை பாதுகாபபனதாக இல்லை. இரவில் விலங்குகள் மனிதனை வேட்டையாடின. பகலிலும் பயம், இடி, மின்னல், மழை, வெய்யில் எதுவும் என்னவென்று தெரியாத காலம். எதன்மூலமும் ஆபத்து வரலாம் என்ற பயம். எனவே எந்த நேரத்திலும் விழிப்புடன் இருந்தான்.
ஒவ்வொன்றாக புரிந்து கொண்டான். இயற்கையை புரிந்தான். விலங்குகளின் தாக்குதல் முறைகளை அறிந்தான். இருந்தாலும் விழிப்புடன் இருந்தான். இப்போது இருப்பவனை அடுத்த நிமிடம் ஏதோ ஒரு விலங்கு அடித்துக் கொன்று விடுகிறது. பயம்.... பயம் காரணமாக வந்த விழிப்புணர்வு.
எச்சரிக்கையாக இருந்தான். அவன் ஒவ்வொரு செல்லும் எச்சரிககையாக இருந்தது. கால்கள், கைகள் எல்லாம் உணர்வுடன் இருந்தது. ஒரு இலை பட்டாலும் அது இலையென்று கண் பார்க்கும் முன் மூளை தெரிந்து கொண்டது. ஒவ்வொரு செல்லும் கண்ணாக எல்லாவற்றையும் மூளைக்கு காட்டிக் கொடுத்தது. மூளை யோசித்து செயல்பட்டது. அதிரும் பூமியை, திடீர் வெளளத்தை, கொளுத்தும் வெயிலை, புயல் மழையை எல்லாவற்றையும் கவனித்தான். சூரியன், சந்திரன், அமாவாசை, பௌர்ணமி எனப் பிரித்தான். தீயின் பயன் உணர்ந்தான், சக்கரத்தை கண்டறிந்தான். அறிவு வளர்ந்த்து மனிதன் பெருகினான். மற்றவை சிறுகத் தொடங்கின.
காலங்கள் சென்றன...........................................................
இன்று..................................
பதினெட்டு x பதினாறு என்ன என்று கணக்கிட கால்குலேட்டர், கம்ப்யூட்டர், என்று பல கருவிகள் வந்து விட்டன. நடக்க வேண்டியதில்லை சைக்கிள் பைக்காகி, பைக் காராகி, கார் விமானமாகி, விமானம் ராக்கெட்டாகி விட்டது. துவைக்க, சமைக்க எல்லாம் கருவிகள். வீடுகள், அலுவலகங்கள், நடைபாதைகள் எல்லாம் இயந்திரமயமாகி விட்டது.
அறிவியல் பல மடங்கு முன்னேறி விட்டது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை இன்னும் எங்கெங்கு வேண்டுமோ எல்லா இடங்களிலும் அறிவியல் முன்னேறி விட்டது.
ஆனால் எல்லாம் சரியான திசை நோக்கி செல்கிறதா?
என் வீட்டில் இருக்கும் அறிவியல் சாதனங்கள் டீ.வி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ், நான் ஓட்டும் பைக் ஏதேனும் பழதாகிவிட்டால் எனக்கு சரி செய்யத் தெரியாது. அவை எந்த முறையில் இயங்குகின்றன தெரியாது. அதற்கு மின்சாரம் எந்த ஏரியாவிலிருந்து நம் வீட்டிற்கு வருகிறது தெரியாது. நம் வீட்டிற்கு வரும் மின்சாரம் எப்படித் தயாரிக்கிறார்கள் என்று தெரியாது. வீடு கட்டும் போது பயன்படுத்தும் செங்கல், சிமெண்ட், கம்பி எங்கு தயாரிக்கிறார்கள், அதன் மூலப்பொருள் என்ன, எப்படித் தயாரிக்கிறார்கள் தெரியாது. பேனாவில் ஊற்றும் மை எதிலிருந்து தயாரிக்கிறார்கள், தெரியாது. என் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் கேஸ் என்ன, அது எதிலிருந்து தயாரிக்கிறார்கள், அதன் அதிகபட்ச அபாய அளவு என்ன.......தெரியாது. நம் பார்க்கும் தொலைக்காட்சியில் காட்சிகள் எந்த அலைவரிசையில் எங்கிருந்து எப்படி வருகின்றன, அலைவரிசை என்றால் என்ன...... தெரியாது. நாம் துவைக்கும் துணிக்கு, உடலுக்குப்போட பயன்படுத்தும் சோப்பில் என்ன என்ன கெமிக்கல் கலக்கிறார்கள், அதனால் அதிகபட்சம் நம் உடலுக்கு என்ன தீங்கு விளையும்..... தெரியாது.
எவருக்குமே எதுவுமே தெரியாது.................. இருப்பதை பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் வெறும் முட்டாள்களாக.....
ஆனால் கேளுங்கள்........ அறிவியலில் மனிதன் கொடிகட்டி பறக்கிறான்.
ஆதி நாட்களில் இருந்த விழிப்புணர்வு இப்போது இல்லவே இல்லை.
ஏன் கால், கை, முகம் எல்லாஇடத்திலும் இருக்கும் செல்கள் செத்தே இருக்கின்றன. பக்கத்தில் ஒருவர் தொட்டால் கூட உணர 5 நிமிடம் ஆகிறது.
எங்கே போயிற்று அந்த விழிப்புணர்வு.
ஒட்டு மொத்தமாய் ஒரு பேரழிவு ஏற்பட்டால் மனித குலம் இருக்குமா? அப்படி இருக்கும் மனிதரிடத்தில் ஏற்கனவே இருந்த அறிவியலைப் பற்றி என்ன பேச முடியும்?.
ஆதி நாட்களில் மனிதன் தான் கற்றுணர்ந்த எல்லாவற்றையும் அனுபவமாய் அடுத்தவருக்கு புரிய வைத்தான்.
இன்று கல்வி என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டு இருக்கிறோம். நியூட்டனின் விதிகள் எங்கெல்லாம் பயன்படுகிறது என்று தெரியாமல் மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கிறோம்.
அறிஞர்கள் மூத்தோர் சொன்ன விழிப்புணர்வு, நம் ஒவ்வொரு செல்லையும் தயாராய் வைத்திருக்கும் விழிப்புணர்வு, ஆதி மனிதனிடம் இருந்த பயம் நீக்கிய விழிப்புணர்வு, நம் முன்னே, பின்னே, மேலே எங்கும் அசையும் ஒவ்வொரு மிக மெல்லிய அசவையும், சத்தத்தையும் உணரும் விழிப்புணர்வு, நம் மனித இனம் தழைக்க வழிவகுத்த அந்த விழிப்புணர்வு, விவேகானந்தர்,வள்ளலார் போன்றோர் நம்மிடம் தேடிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா?.
இல்லை இயல்பாக நம்மால் பழக, உணர முடிந்த அந்த விழிப்புணர்வை ஒரு மந்திரச் சொல்லாக மட்டுமே பயன்படுத்துவோமா?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக