மொத்தப் பக்கக்காட்சிகள்

Digital Clock + Date

11/30/2011

மது அருந்தாமல் இருப்பது அவசியம்ஒருவர் ஒரு நாள் அதிகமாக மது அருந்திவிட்டால் அடுத்த இரண்டு மூன்று நாளைக்கு அவர் மது அருந்தாமல் இருப்பது அவசியம் என பிரிட்டனின் ராயல் காலெஜ் ஒஃப் சர்ஜன்ஸ் மருத்துவர் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு நாளும் சிறிய அளவில் மது அருந்துவதால் உடல் நலத்துக்கு கேடு விளையும் என்று தோன்றவில்லை என்று கூறிய இந்த அமைப்பின் முன்னாள் தலைவரான இயன் கில்மோர், ஆனால் அதிகமாக குடித்துவிட்டால் அதிலிருந்து அவர்களது கல்லீரல் இயல்பு நிலைக்குத் திரும்ப அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது தெரிவித்தார்.
ஒரு நாள் அளவுக்கு அதிகமாக ஒருவர் குடித்துவிட நேர்கிறது என்றால், குறைந்தது அடுத்த நாற்பத்து எட்டு மணி நேரத்துக்கு அவர் மது அருந்தாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக