மொத்தப் பக்கக்காட்சிகள்

11/30/2011

குழந்தைகளுக்கான இணையதளங்கள்



தங்களது குழந்தைகளை நல்ல பண்புகளுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் சிறந்த கனவாக உள்ளது.
நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கணணியும், இணையமும் இதற்குப் பல வழிகளைத் தருகிறது. ஒரு நல்ல கணணியும், அதற்கான பிராட்பேண்ட் இணைப்பும் இருந்தால் குழந்தைகள் தங்கள் நேரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் துணைபுரியலாம்.
குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மன வளர்ச்சியை நல்ல முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென உள்ள பல இணையதளங்கள் உள்ளன.
1. கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் தரவிறக்கம் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது http://www.links4kids.co.uk/ என்ற முகவரியில் உள்ள தளம்.
2. நூற்றுக்கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற்பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது http://alfy.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம்.
3. http://www.surfnetkids.com/ என்ற தளத்தில் பல்வேறு வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தைகளுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல வகைகளில் குழந்தகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.
4.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது http://www.coolmath4kids.com/ உலக அளவில் இது சிறந தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது.
குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தலில் தொடங்கி அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் என கணக்கின் அடிப்படையையும் அதன் தொடர்பான பிறவற்றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. இவை அனைத்தும் கணககியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன.

எப்படி எனக்கு கண்ணு தெரியும்?


மனோதத்துவ டாக்டர் ஒருவரிடம் அறுபது வயதான பெரியவர் தன் மன நிலை சரியாத தான் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ள சென்றார்.

அவரை பரிசோதித்த டாக்டர் அவரிடம் மனநிலை சரியாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்..
டாக்டர்:- நான் உங்களோட வலது காதை வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- சத்தம் கேட்பது கொஞ்சம் சிரமமா இருக்கும்..
டாக்டர்:- வெரி குட்.. (தெளிவா தானே பதில் சொல்றார்)

பெரியவர்:- தேங்க்ஸ் டாக்டர்..

டாக்டர்:- ம்.. இப்போ உங்களோட இடது காதையும் வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- என்னால பார்க்க முடியாது சார்..

டாக்டர்:- (குழப்பத்துடன்...) என்ன சொல்றீங்க? ரெண்டு காதையும் வெட்டிட்டா பார்க்க முடியாதா?
பெரியவர்:- கண்டிப்பா டாக்டர்.
டாக்டர்:- (மனநிலை சரியில்ல தான் போலிருக்கு..) எப்படி சொல்றீங்க?

பெரியவர்:- என் மூக்கு கண்ணாடி காதுல தானே மாட்டி இருக்கேன், காதை வெட்டிடீங்கனா கண்ணாடி கழண்டு விழுந்துடுமே சார், அப்புறம் எப்படி எனக்கு கண்ணு தெரியும்?

நரை ஏற்படுவதை தடுக்க முடியும்


நரைத்த முடி என்பது உலகம் முழுதும் பெரிய சவாலக இருக்கிறது. இதனால் "ஹேரடை" தொழிற்சாலை இன்று உலக அளவில் மிகப்பெரிய சந்தையை உருவாக்கியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம், இன்னும் 4 ஆண்டுகளில் வெளிவரும் ஒரு மாத்திரை நரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று விஞ்ஞானிகள் சிலர் கோரியுள்ளனர்.

பெயரிடப்படாத பழம் ஒன்றின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் மாத்திரஇன்னும் 4 ஆண்டுகளில் விற்பனைக்கு வந்து விடும் என்று இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காஸ்மெடிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் முதன்மை நிறுவனமான ஓரியல் (L'Oreal) இந்த புதிய மாத்திரையை கண்டுபிடித்துள்ளது. 10 ஆண்டுகள் இடைவிடாத ஆராய்ச்சிக்குப் பிறகு இப்போது நரை முடிக்கு டாடா என்று இவர்கள் குதூகலத்துடன் தெரிவிக்கிறார்கள்.

800கோடி பவுண்டுகள் தொகை கொண்ட உலகின் "டை" சந்தைக்கு ஆப்பு வைத்துள்ளதாக ஓரியல் நிறுவனம் பெருமை பட்டுக் கொண்டுள்ளது.

ஆய்வில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தின் உயிரியல் துறை தலைவர் புரூனோ பெர்னர்ட், "இந்த புதிய நரைதடுப்பு மாத்திரைக்கு ஆண்கள் முதல் பெண்கள் வரை உலகம் நெடுகிலும் மிகப்பெரிய சந்தை இருக்குமென்று எதிர்பார்க்கிறோம். இது விலை அதிகமில்லை என்றும் தினசரி உணவு எடுத்துக் கொள்வது போல் இதனை எடுத்துக் கொண்டால் போதுமானது" என்றார்.

உடலில் உள்ள தீங்கான புரோட்டின்களுடன் முடி செல்கள் வினையாற்றும்போது நரைத்த முடி தோன்றுகிறது. தற்போது அடையாளம் தெரியாத இந்தப் பழத்திலிருந்து எடுக்கப்படும் சாறில் உள்ள ஒரு சத்து முடி நரையை தூண்டிவிடும் சுரப்பியை ஒத்ததாக இருப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

"நரை முடி தோன்றுவதற்கு முன்னால் இந்த மாத்திரையை தினமும் எடுத்துக் கொண்டால் நரை ஏற்படுவதை தடுக்க முடியும். ஆனால் முடி நரைத்த பிறகு அதனை மீண்டும் கறுப்பாக இந்த மாத்திரை ஆக்குமா என்பது சந்தேகமே" என்கிறார் பெர்னர்ட்.

10 ஆண்டுகள் இந்த மாத்திரை சந்தையில் புழங்கிய பிறகே இதன் சக்தி பற்றி தெரியவரும் என்று இவர்கள் கூறுகின்றனர்.

2013ஆம் ஆண்டு மே மாதம் விஞ்ஞான மாநாட்டில் இது எப்படி தயாரிக்கப்பட்டது, இந்த விஞ்ஞானிகளின் கோரலில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது தெரியவரும்.

பிராட்ஃபோர்ட் பலகலையில் பணியாற்றி வரும் பேராசிரியர் டெஸ் டாபின் என்ற தோல்நோய் நிபுணர் இது பற்றி கூறுகையில், "சுரப்பியை மாற்றினால் நரை நின்று விடும் என்பது பற்றி தெளிவாக இல்லை. ஆனால் இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டர் பெர்னட் குழுவினருக்கு இது பற்றிய அறிவு அதிகம், மயிர்க்கால்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதில் இவர்களநிபுணர்கள்" என்றார்

மருத்துவர்கள் கமிஷன்


எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ஒரு தொகை, யூரின், ரத்தப் பரிசோதனை மற்றும் மலப்பரிசோதனை என்று பரிசோதனைக்குத் தக்க கமிஷன் தொகையை மருத்துவர்கள் பெற்று வருகின்றனர்.

ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர் அதாவது காது, மூக்கு, தொண்டை நிபுணர், சிறுநீரக நிபுணர், கிட்னி சிறப்பு மருத்துவர், நரம்பியல் நிபுணர் என்று ஒரு பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மாதமொன்றுக்கு இது போண்று டெஸ்ட்களை எழுதிக் கொடுப்பதன் மூலமே ரூ.1 லட்சம் வரை வருவாய் பெறுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் வேடிக்கை என்னவெனில் ஒரு சில மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை மையங்களிலிருந்து 'அட்வான்ஸ்' பெறுவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்களைத் தேர்வு செய்து குடும்பத்துடன் துபாய், சிங்கப்பூர், தாய்லாந்து என்று அனுப்பி வைக்கும் பழக்கமும் நீண்ட நாட்களாக இருக்கிறது.

அனைத்து பிரபல நிறுவனங்களின் பிரபல பிராண்டுகளும் இம்மாதிரி மருத்துவர்களை 'சிறப்புக் கவனிப்பு' செய்து இன்று பெரிய பிராண்டுகளாக வளர்ந்தவையே.

மொத்தத்தில் பாதிக்கப்படுவது யார்? அப்பாவி நோயாளிகள்! கல்விக்கொள்ளை, மருத்துவக் கொள்ளை ஆகியவற்றை எந்த ஒரு அரசு தடுக்கிறதோ அந்த அரசுதான் சிறந்த அரசு.

இவ்விடயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத எவ்வளவு பெரிய ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் புறப்பட்டாலும் அதனால் மக்களுக்கு எந்த விதப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பது உறுதி.

மது அருந்தாமல் இருப்பது அவசியம்



ஒருவர் ஒரு நாள் அதிகமாக மது அருந்திவிட்டால் அடுத்த இரண்டு மூன்று நாளைக்கு அவர் மது அருந்தாமல் இருப்பது அவசியம் என பிரிட்டனின் ராயல் காலெஜ் ஒஃப் சர்ஜன்ஸ் மருத்துவர் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு நாளும் சிறிய அளவில் மது அருந்துவதால் உடல் நலத்துக்கு கேடு விளையும் என்று தோன்றவில்லை என்று கூறிய இந்த அமைப்பின் முன்னாள் தலைவரான இயன் கில்மோர், ஆனால் அதிகமாக குடித்துவிட்டால் அதிலிருந்து அவர்களது கல்லீரல் இயல்பு நிலைக்குத் திரும்ப அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது தெரிவித்தார்.
ஒரு நாள் அளவுக்கு அதிகமாக ஒருவர் குடித்துவிட நேர்கிறது என்றால், குறைந்தது அடுத்த நாற்பத்து எட்டு மணி நேரத்துக்கு அவர் மது அருந்தாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.